புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவ அமைச்சர் விதுர விக்ரமநாயக அவர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பு

ஜூன் 26, 2022

2022.06.23 ஆம் திகதி வியாழக்கிழமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவ அமைச்சர் விதுர விக்ரமநாயக அவர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்று மிகச்சிறப்பாக அமைச்சு அலுவலகத்தில் நடைப்பெற்றது.

 

இச்சந்திப்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உற்பட முஸ்லிம் சமுகத்தை பிரதிநிதித்துவபடுத்தும் பல அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளாக கௌரவ பொதுச் செயலாளர் அஷ் - ஷைக் அர்கம் நூரமித் மற்றும் ஒற்றுமைக்கும் ஒருங்கினைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ் - ஷைக் சல்மான் கலந்து கொண்டு, ஒற்றுமை சகவாழ்வை கட்டியெழுப்புவதினூடக இந்நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் அதற்கான முழு ஒத்துளைப்பையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்து கொண்டனர்.

 

மேலும் ,அதன் போது மஸ்ஜித்களினூடாக மரம் நடுகையை மக்களுக்கு ஊக்குவிக்குமாறும் கௌரவ அமைச்சர் அவர்கள் வருகை தந்திருந்த சகலரிடமும் வேண்டிக் கொண்டார்கள்.

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.