தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நம் மக்களின் பாதுகாப்பிற்கும் தேசத்தின் பாதுகாப்பிற்கும் நாளை வியாழக்கிழமை (26.11.2020) நோன்பு நோற்று பிரார்த்திப்போம். அத்துடன் துஆ, இஸ்திஃபார், ஸதகா போன்ற நல்லமல்களில் தொடர்ந்தும் ஈடுபடுவோம்.

 

25.05.2017 / 28.08.1438

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

பத்வாப் பிரிவின் ரமழான் மாத விஷேட சேவை          

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கீழ் இயங்கி வரும் 15 பிரிவுகளில் பத்வாப் பிரிவு முக்கிய இடத்தை வகிக்கின்றது. இப்பிரிவின் மூலம் மக்களுக்கு நாளாந்தம் ஏற்படும் மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களுக்கான தெளிவுகள் எழுத்து மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். சிலர் நேரடியாக சமுகமளித்து தமக்கு ஏற்படுகின்ற மார்க்க சம்பந்தமான பிரச்சினைகளுக்கான தெளிவுகளைக் கேட்டறிந்து கொள்கின்றனர்.

கடந்த இரு வருடங்களைப் போன்று புனித ரமழானை முன்னிட்டு ஸகாத் மற்றும் நோன்பு சம்பந்தமான தெளிவுகளை மக்களுக்கு வழங்குவதற்கான விசேட பத்வா சேவையை ஜம்இய்யாவின் பத்வாப் பிரிவு இவ்வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சேவை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

துரித இலக்கம் :  0117 490 420

மின் அஞ்ஞல் :   இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

அஷ்-ஷைக் எம்.எம். எம். இல்யாஸ்                                                                                                    

செயலாளர் – பத்வாக்குழு                                                                                                                           

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தொழுகையில் குர்ஆனை மனனமாக ஒதுவதே சிறந்தது. அப்படிச் செய்வது உள்ளச்சத்துடன், உடல் அமைதியுடன் தொழுவதற்கு உகந்ததாகும். அல்-குர்ஆனிலிருந்து ஒரு சில சிறிய ஸூராக்களே மனனம் உள்ள ஒருவர் தனக்கு மனனமில்லாத சிறிய, பெரிய ஸூராக்களை ஓதி நீண்ட நேரம் நின்று தொழ வேண்டும் என விரும்புகிறார் என்றால் அவர் தொழுகையில் அல்-குர்ஆனை பார்த்து ஓதுவது தொடர்பில் இமாம்களிடம் அபிப்பிராயப் பேதங்கள் உள்ளன.

அதிகமான அறிஞர்களின் கருத்துப்படி தொழுகையில் அல்-குர்ஆன் பிரதிiயை பார்த்து ஓதுவது ஆகும். இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) தனது அல்-மஜ்மூஃ எனும் கிரந்தத்தில் இவ்வாறு கூறுகிறார்கள்;.

'அல்-குர்ஆன் பிரதியிலிருந்து அவர் அல்-குர்ஆனை பார்த்து ஓதினால் அவரின் தொழுகை முறிந்து போகாது. அவர் அதனை மனனமிட்டவராக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் சரியே. பாத்திஹா அவருக்கு மனனமில்லை என்றிருந்தால் அது (பார்த்து ஓதுவது) அவர் மீது கடமையாகும்.'

(நூல்: அல்-மஜ்மூஃ - பாகம்: 04, பக்கம்: 22, பதிப்பு : தார் இஹ்யாஃ அல்-துராஸ் அல்-அரபி, 2001)

 பின்வரும் அறிவிப்பு மேற்படி கருத்துக்கு ஆதாராமாக அமைகிறது:

'ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை அவர்களது அடிமை தக்வான்  குர்ஆனைப் பார்த்து ஓதி தொழுகை நடாத்துபவராக இருந்தார்கள்.'

(நூல்: பத்ஹ் அல்-பாரி, அறிவிப்பவர்: இப்னு அபீ முலைகஹ் (ரஹிமஹுல்லாஹ்), பாடம்: அடிமை மற்றும் உரிமை இடப்பட்ட அடிமை தொழுகை நடத்தல்)

 

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.