பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்-குர்ஆன் ஓதுவது பற்றிய மார்க்க விளக்கம்

ஏப் 24, 2018

ACJU/FTW/2018/10-331
2018.04.24 (1439.08.07)

 

கேள்வி: பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்-குர்ஆன் ஓதலாமா வது பற்றிய மார்க்க விளக்கம்

பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்-குர்ஆன் ஓதும் விடயத்தில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் மற்றும் அவர்களைச் சார்ந்த அறிஞர்கள் ஒரு பெண் மாதவிடாயின் போது அல்-குர்ஆன் ஓத முடியும் என்றும், அதேநேரத்தில், அப்பெண்ணுக்கு மாதவிடாய் நின்று விட்டால் குளித்து சுத்தமாகும் வரை அல்-குர்ஆன் ஓதுவது கூடாது என்றும் கூறுகின்றனர்.1

இமாம் அபூ ஹனீபா, இமாம் ஷாபிஈ மற்றும் இமாம் அஹ்மத், ரஹிமஹுமுல்லாஹ் உள்ளிட்ட பெரும்பான்மையான அறிஞர்கள் பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது ஹராம் என்று கூறுகின்றனர்.2

இது பற்றி இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.3

"ஜனாபத்துடையவர் மற்றும் மாதவிடாய் உடைய பெண் அல்-குர்ஆன் வசனத்தின் சில வார்த்தைகள் மற்றும் எழுத்துக்களை அன்றி, வேறெதையும் ஓதமுடியாது என்பது சுப்யான் அல்-தௌரி, அப்துல்லாஹ் இப்னு முபாரக், ஷாபிஈ, அஹ்மத் மற்றும் இஸ்ஹாக் ரஹிமஹுமுல்லாஹ் போன்ற அதிகமான அறிஞர்களின் கருத்தாகும்." (நூல்: அத்-திர்மிதி)

ஜனாபத் உடையவர் குர்ஆனை ஓதுவது ஹராம் என்பதே நான்கு இமாம்களினதும் கருத்தாகும். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். (ஜனாபத்) எனும் பெருந்தொடக்கைத் தவிர, வேறு காரணங்கள் எதுவும் அல்-குர்ஆன் ஓதுவதை விட்டும் அவர்களைத் தடுக்காது' என்று அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.

ஸுனன் அபீ தாவுத்-229, ஸுனன் அல்-திர்மிதி-131, ஸுனன் அந்-நஸாயி 257, ஸுனன் இப்னி மாஜஹ் 597, முஸ்னத் அஹ்மத், ஸஹீஹ் இப்னி குஸைமஹ்)

இந்த ஹதீஸ் ஆதாரமாக எடுப்பதற்கு தகுதியானது என ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.4

ஜனாபத் உடையவருக்கு அல்-குர்ஆன் ஓதும் விடயத்தில் உள்ள சட்டமே மாதவிடாய் ஏற்படும் பெண்ணுக்குமாகும் என்று மேற்குறித்த அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில், குளிப்பது கடமை எனும் விடயத்தில் ஜனாபத் உடையவரும் மாதவிடாய் உடைய பெண்ணும் ஒன்றாவர்.

மேலும், 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லா நிலமைகளிலும் அல்லாஹ்வை திக்ர் செய்வார்கள்', என்ற ஸஹீஹுல் புகாரியில் பதிவாகியுள்ள ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியுள்ள ஹதீஸை ஆதாரமாக வைத்து சிலர், குர்ஆனும் திக்ரில் உள்ளடங்கும் என்பதால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஜனாபத் உடைய நிலையிலும் குர்ஆனை ஓதியுள்ளார்கள் என்று கூறுகின்றனர்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடைய ஹதீஸில் நாடப்படுவது, அல்-குர்ஆன் அல்லாத பொதுவான திக்ர்களேயாகும் என்ற இக்கருத்தை ஜனாபத் உடைய நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குர்ஆனை ஓதமாட்டார்கள் என்ற ஹதீஸ் உறுதி செய்கின்றது என்று இப்னு ஹிப்பான் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.5

அதேவேளை, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் 'ஜனாபத் உடையவர் குர்ஆனை ஓதுவது பரவாயில்லை' என்று கூறியுள்ள விடயம் ஸஹீஹுல் புகாரியில் பதிவாகியுள்ளது. அவர்கள் இக்கூற்றின் மூலம் தேவையேற்படும் பொழுது குர்ஆனின் ஓரிரு ஆயத்துக்கள் ஓதுவதையே நாடியுள்ளார்கள். ஏனெனில், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஓரிரு ஆயத்துக்களை ஜனாபத்துடையவர் ஓதலாம் என்று கூறியது முஸன்னப் இப்னி அபீ ஷைபா மற்றும் இப்னு முன்திர் ரஹிமஹுல்லாஹ் உடைய அல்-அவ்ஸத் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.6

மேற்கண்ட விடயங்களிலிருந்து மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அல்-குர்ஆன் ஓதுவது கூடாது என்பது தெளிவாகின்றது.

இருப்பினும் பெண்கள் தாம் குர்ஆனில் மனனம் செய்த பகுதி மறந்து போகும் என்பதைப் பயந்தால் மாதவிடாயுடைய காலத்தில் குர்ஆனை மீட்டிக்கொள்வதற்கு பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம்.7

1. குர்ஆனை அதிகமாகச் செவிசாய்த்தல்.

2. தான் ஓதும் சப்தம் தன் காதுகளுக்குக் கேட்காத விதத்தில் உதடுகளை மாத்திரம் அசைத்து ஓதுதல்.

3. மனதால் ஓதுதல்.

4. குர்ஆனுடைய நிய்யத்திலன்றி, துஆ மற்றும் திக்ருடைய நிய்யத்தில் ஓதுதல்

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர் - ஃத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி

மேற்பார்வையாளர் - ஃபத்வாப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா



அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி)

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

-----------------------------------------------------------------------

 

[1] قال العلامة الصاوي من المالكية" وَيَحْرُمُ عَلَى الْحَائِضِ أَيْضًا دُخُولُ مَسْجِدٍ وَمَسُّ مُصْحَفٍ وَلَا يَحْرُمُ عَلَيْهَا قِرَاءَةُ الْقُرْآنِ إلَّا بَعْدَ انْقِطَاعِهِ وَقَبْلَ غُسْلِهَا،  سَوَاءٌ كَانَتْ جُنُبًا حَالَ حَيْضِهَا أَمْ لَا ، فَلَا تَقْرَأُ بَعْدَ انْقِطَاعِهِ مُطْلَقًا حَتَّى تَغْتَسِلَ .هَذَا هُوَ الْمُعْتَمَدُ" (فصل في الحيض - بلغة السالك لأقرب المسالك (حاشية الصاوي على الشرح الصغير(

وقال العلامة الدسوقي من المالكية" كَمَا أَنَّ الْمُعْتَمَدَ أَنَّهُ يَجُوزُ لَهَا الْقِرَاءَةُ حَالَ اسْتِرْسَالِ الدَّمِ عَلَيْهَا" (موانع الحيض – باب أحكام الطهارة – حاشية الدسوقي على الشرح الكبير)

 

[2] مَذْهَبُنَا أَنَّهُ يَحْرُمُ عَلَى الْجُنُبِ وَالْحَائِضِ قِرَاءَةُ الْقُرْآنِ قَلِيلُهَا وَكَثِيرُهَا حَتَّى بَعْضُ آيَةٍ وَبِهَذَا قَالَ أَكْثَرُ الْعُلَمَاءِ  (باب ما يوجب الغسل - المجموع شرح المهذب)

 

[3] قال الإمام الترمذي رحمه الله: " وَهُوَ قَوْلُ أَكْثَرِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالتَّابِعِينَ ، وَمَنْ بَعْدَهُمْ مِثْلِ: سُفْيَانَ الثَّوْرِيِّ ، وَابْنِ المُبَارَكِ ، وَالشَّافِعِيِّ ، وَأَحْمَدَ ، وَإِسْحَاقَ ، قَالُوا : لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا، إِلَّا طَرَفَ الآيَةِ ، وَالحَرْفَ ، وَنَحْوَ ذَلِكَ "جامع الترمذي) (1/236)

 

[4] عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ قَالَ: دَخَلْتُ عَلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَأْتِي الْخَلَاءَ، فَيَقْضِي الْحَاجَةَ، ثُمَّ يَخْرُجُ فَيَأْكُلُ مَعَنَا الْخُبْزَ وَاللَّحْمَ وَيَقْرَأُ الْقُرْآنَ، وَلَا يَحْجُبُهُ -وَرُبَّمَا قَالَ: ولَا يَحْجُزُهُ- عَنْ الْقُرْآنِ شَيْءٌ إِلَّا الْجَنَابَةُ " رواه ابن ماجة.

 وقال الارناؤوط معلقا لهذا الحديث : إسناده حسن، عبد الله بن سَلِمة -وهو المرادي الكوفي- وثقه يعقوب بن شيبة وابن حبان والعجلي، وقال ابن عدي: أرجو أنه لا بأس به. وصحح حديثه هذا ابن خزيمة وابن حبان والحاكم، ووافقه الذهبي. وقال شعبة: هذا الحديث ثُلث رأس مالي، وقال: لا أروي أحسن منه عن عمرو بن مرة. وقال الحافظ في "الفتح" 1/ 408: والحق أنه من قبيل الحسن يصلُح للحجة، وقال الترمذي: حسن صحيح. وأخرجه بنحوه أبو داود (229)، والنسائي 1/ 144 من طريق شعبة، بهذا الإسناد. وأخرجه الترمذي (146)، والنسائي 1/ 144 من طريق الأعمش- وقرن الترمذي به ابن أبي ليلى- عن عمرو بن مرة، به بلفظ: كان رسول الله - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يقرئنا القرآن على كل حال ما لم يكن جنبا. لفظ الترمذي، ولفظ النسائي: كان يقرأ القرآن على كل حال ليس الجنابة.

 

[5] وقال ابن حبان رحمه الله : " وقد توهم غير المتبحِّر في الحديث أنّ حديث عائشة : ( كان النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يذكر الله على كل أحيانه ) يعارض هذا ، وليس كذلك ؛ لأنها أرادت الذكر الذي هو غير القرآن ، إذ القرآن يجوز أن يُسمى ذكرا ، وكان لا يقرأ وهو جنب ويقرأ في سائر الأحوال " انتهى ، نقلا من " شرح سنن ابن ماجه " لمغلطاي (ص/755) ، وينظر : صحيح ابن حبان (3/81).

 

[6] قال الحافظ ابن حجر رحمه الله - مخرِّجاً أثر ابن عباس الذي ذكره البخاري - : " وَأما قَول ابْن عَبَّاس ، فَقَالَ ابْن أبي شيبَة فِي المُصَنّف : حَدَّثنا الثَّقَفِيّ عَن خَالِد عَن عِكْرِمَة عَن ابْن عَبَّاس : أَنه كَانَ لَا يرى بَأْسا أَن يقْرَأ الْجنب الْآيَة والآيتين " بَاب تقضي الْحَائِض الْمَنَاسِك كلهَا إِلَّا الطّواف بِالْبَيْتِ وَقَالَ إِبْرَاهِيم لَا بَأْس أَن تقْرَأ الْآيَة وَلم ير ابْن عَبَّاس بِالْقِرَاءَةِ من " تغليق التعليق " (2/171) .ورواه ابن المنذر في " الأوسط " (2/ 98) من طريق الزُّهْرِيِّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُكْمِلٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما ، قَالَ : " لَا بَأْسَ أَنْ يَقْرَأَ الْجُنُبُ الْآيَةَ وَنَحْوَهَا."

 

[7] (قَوْلُهُ وَأَحْكَامُهُ) وَجُمْلَةُ الْقُرْآنِ لَا تَخْرُجُ عَمَّا ذُكِرَ فَكَأَنَّهُ قَالَ تَحِلُّ قِرَاءَةُ جَمِيعِهِ حَيْثُ لَمْ يَقْصِدْ الْقُرْآنِيَّةَ (باب الغسل – كتاب أحكام الطهارة - حاشية الشرواني لتحفة المحتاج)

وَتحل أذكار الْقُرْآن لَا بِقصد قُرْآن يفهم مِنْهُ مَسْأَلَة نفيسة أَنه إِذا أَتَى بِهِ وَلم يقْصد قُرْآنًا وَلَا ذكرا حل صرح بِهِ إِمَام الْحَرَمَيْنِ وَغَيره (دقائق المنهاج للإمام النووي رحمه الله)

(وَتَحِلُّ) لِجُنُبٍ وَحَائِضٍ وَنُفَسَاءَ (أَذْكَارُهُ) وَمَوَاعِظُهُ وَقَصَصُهُ وَأَحْكَامُهُ (لَا بِقَصْدِ قُرْآنٍ) سَوَاءٌ أَقَصَدَ الذِّكْرَ وَحْدَهُ أَمْ أَطْلَقَ؛ لِأَنَّهُ أَيْ عِنْدَ وُجُودِ قَرِينَةٍ تَقْتَضِي صَرْفَهُ عَنْ مَوْضُوعِهِ كَالْجَنَابَةِ هُنَا لَا يَكُونُ قُرْآنًا إلَّا بِالْقَصْدِ.(باب الغسل – كتاب أحكام الطهارة - تحفة المحتاج في شرح المنهاج)

أَفْتَى شَيْخِي أَيْ الشِّهَابُ الرَّمْلِيُّ بِأَنَّهُ إنْ قَرَأَ الْقُرْآنَ جَمِيعَهُ لَا بِقَصْدِ الْقُرْآنِ جَازَ (باب الغسل – كتاب أحكام الطهارة - حاشية الشرواني لتحفة المحتاج)

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.