2024.03.01ஆம் திகதி ஜம்இய்யாவின் நிககொள்ள கிளையினால் ரமழானை முன்னிட்டு  ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின் நிககொள்ள ஜும்ஆ மஸ்ஜிதில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதனை அஷ்-ஷைக் யூஸுப் ஸலீமி அவர்கள் நிகழ்த்தினார்கள். குறித்த நிகழ்வில் 45 பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

2024.03.01ஆம் திகதி அ‌கில ஜம்இய்யாவின் குருநாகல் மாவட்ட தம்பிடிய பிராந்திய கிளையின் முதல் மாத ஒன்றுகூடல் தம்பிடிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.03.01ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தை வரவேற்போம் எனும் தொனிப் பொருளில் விஷேட பயான் நிகழ்வு அஷ்-ஷைக் இஹ்சான் ரஷாதி அவர்களினால் கொழும்பு-12 உமிச்சி ஜுமுஆ பள்ளியில் நடாத்தப்பட்டது.

 

2024.03.01ஆம் திகதி பண்ணவ கிளை ஜம்இய்யாவின் முதல் மாத பொதுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஷுஐப் (தீனி) அவர்களின் தலைமையில் மக்தப் வளாகத்தில் நடைபெற்றது.

 

2024.03.02ஆம் திகதி ஜம்இய்யாவின் ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் மார்ச் மாத ஒன்று கூடலானது தலைவர் அஷ்-ஷைக் பர்ஹத் அவர்களின் தலைமையில் பானுவல மர்கஸ் மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.03.02ஆம் திகதி குருநாகல் மாவட்டம் ஜம்இய்யாவின் இப்பாகமுவ பிராந்திய கிளையின் ஒன்று கூடல் தலைவர் அஷ்-ஷைக் ஹபீள் றவ்ழி  அவர்களின் தலைமையில் பன்னல ஜுமுஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

 

2024.03.02ஆம் திகதி ஜம்இய்யாவின் குருநாகல் மாவட்டம் நிகவெரட்டிய கிளையின் செயற்குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஆப்தீன் அவர்களின் தலைமையில்  நம்முவாவ ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வரும் புனித றமழான் மாதத்தை வரவேற்று அம்மாதம் பற்றிய முக்கிய கலந்துரையாடல் இடம் பெற்றது.

 

2024.03.02ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் மார்ச் மாத ஒன்று கூடல் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம். றமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் உஸ்மானியாஹ் உஸ்மானியாஹ் பள்ளிவாசலில் நடைப்பெற்றது.

 

2024.03.02ஆம் திகதி ஜம்இய்யாவின் மாத்தளை நகர் கிளையின் செயற்குழு கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் இர்ஸான் முப்தி அவர்களின் தலைமையில் மாத்தளை டவுன் மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.03.01, 02, 03ஆகிய திகதிகளில் ஜம்இய்யாவின் பொலன்னறுவை மாவட்டக் கிளையினால் புனித ரமழானை முன்னிட்டு மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் உலமாக்களுக்கான விஷேட ரமழான் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் மாவட்ட தலைவர் அஷ்-ஷைக் எம்.எம். அலாவுதீன் பலாஹி அவர்களின் தலைமையில் வெலிகந்த, தமன்கடுவை, லங்காபுர ஆகிய பிரதேசக் கிளைகளில் மிக சிறப்பாக நடைபெற்றன.

 

2024.03.03ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - குருநாகல் நகர் கிளையின் பொதுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஆர். நூர் முஹம்மத் அவர்களது தலைமையில் அஸ்வத்தும ஜுமுஆ பள்ளியில் நடைபெற்றது.

 

2024.03.03ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு-02 வேகந்தை ஜுமுஆ பள்ளியில் இஷா தொழுகையை தொடர்ந்து அஷ்-ஷைக் பஹ்த்  அவர்களினால் புனித ரமழான் மாதத்தை வரவேற்போம் தொனிப் பொருளில் விஷேட பயான் நிகழ்வு நடாத்தப்பட்டது.

 

2024.03.03ஆம் திகதி ஜம்இய்யாவின் நிககொள்ள கிளையின் மாதாந்த செயற்குழு கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வான் அவர்களின் தலைமையில் நிககொள்ள ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.03.04ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒலுவில் கிளையின் நிர்வாக கூட்டம்  கிளைத் தலைவர் ஏ.எல்.பைஸல் (மதனி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

 

2024.03.05ஆம் திகதி அடுலுகம கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக்குழுவின் வழிகாட்டலில் வாலிபர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு கிளைத் தலைவர் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி அவர்களின் தலைமையில் அல்-மஸ்ஜிதுல் பத்ஹ் மஹல்லாவில் நடைபெற்றது.

 

2024.03.06ஆம் திகதி ஜம்இய்யாவின் இறக்குவானை பிரதேசக் கிளைக்கு வழங்கப்பட்ட மூக்குக் கண்ணாடிகள் அனைத்தும் உரியவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அதேபோல் மாற்று மதத்தவர்களுக்கான மூக்கு கண்ணாடிகளும் அவர்களது மதஸ்தலங்களுக்குச் நேரடியாக சென்று சர்வ மத  தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்தோடு வைத்தியசாலையின் ஊழியர்கள், பொலீஸ் அதிகாரிகள், அரச ஊழியர்கள் ஆகியோரது மூக்கு கண்ணாடிகளும் அவர்களது அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று ஒப்படைக்கப்பட்டது.

 

2024.03.06ஆம் திகதி ஜம்இய்யாவின் கேகாலை மாவட்டம் ஹிங்குலோயா கிளையின் அவசர ஒன்றுகூடலானது கிளை தலைவர் அஷ்-ஷைக் அன்பாஸ் தீனி அவர்களின் தலைமையில் மஹவத்த மஸ்ஜிதுல் ஜன்னாவில் ஆரம்பமானது.

 

2024.03.07ஆம் திகதி ஜம்இய்யாவின் நிந்தவூர் கிளையினால் "ரமழானை வரவேற்போம்" தொனிப்பொருளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சிகள் மஸ்ஜிதுல் காஸிமியில் இடம்பெற்றது.

 

2024.03.08ஆம் திகதி ஜம்இய்யாவின் நிந்தவூர் கிளையினால் "ரமழானை வரவேற்போம்" தொனிப்பொருளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சிகள் மஸ்ஜிதுல் ஹிதாயாவில் இடம்பெற்றது.

 

2024.03.08ஆம் திகதி ஜம்இய்யாவின் பதுளை மாவட்டம் பசறை கிளையின் மாதாந்த காரியக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அப்துஸ் சலாம் (ஷர்கி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2024.03.08ஆம் திகதி ஐம்இய்யாவின் அடுலுகம கிளையின் ஏற்பாட்டில் 'பைத்துஸ் ஸகாத்' அமைப்புடைய வருடாந்த பொதுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி அவர்களுடைய தலைமையில் தைபா வரவேற்பு மண்டபத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

2024.03.08ஆம் திகதி ஜம்இய்யாவின் சியம்பலாகஸ்கொட்டுவ கிளையின் பொதுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். மாஹிர் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் ஜலாலுல்லாஹ் ஜுமுஆ மஸ்ஜிதில்  நடைபெற்றது.

 

2024.03.09ஆம் திகதி ஜம்இய்யாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மத்தியிலுள்ள ஒன்பது ஜுமுஆ மஸ்ஜிதுகளில் 'புனித ரமழான் மாதத்தை வரவேற்போம்' எனும் தொனிப்பொருளில்  விஷேட பயான் நிகழ்சிகள் நடைபெற்றன.

 

2024.03.09ஆம் திகதி ஜம்இய்யாவின் குருநாகல் மாவட்டம்-எலபடகம கிளையின் அவசரக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.என்.எம். நஸ்ரின் (ரஷாதி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2024.03.09ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். சுஐப் தீனி அவர்களின் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.

 

2024.03.10ஆம் திகதி ஜம்இய்யாவின் நிந்தவூர் கிளையினால் 'ரமழானை வரவேற்போம்' எனும் தொனிப்பொருளில் விஷேட பயான் நிகழ்ச்சிகள் மஸ்ஜிதுல் ஜன்னாவில் இடம் பெற்றது.

 

2024.03.10ஆம் திகதி ஜம்இய்யாவின் மாத்தறை மாவட்ட கிளையின் பதவி தாங்குனர்களுக்கான கூட்டம் மாவட்டத் தலைவர் அஷ்-ஷைக் அல்-ஹாபிழ் அப்துர் ரகுமான் (மழாஹிரி) அவர்களின் தலைமையில் பாரி அரபுக் கல்லூரி மசூரா மண்டபத்தில் நடைபெற்றது.

 

2024.03.10ஆம் திகதி ஜம்இய்யாவின் மூதூர் கிளையின் ஆலிம்கள் விவகாரக் குழு கூட்டமானது அஷ்-ஷைக் சஃதீஸ் முப்தி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2024.03.10ஆம் திகதி குருநாகல் மாவட்டம் மாஹோ-கல்கமுவ கிளையின் 2024 புதிய நிர்வாக சபையின் முதலாவது ஒன்று கூடல் தலைவர் அஷ்-ஷைக் எம்.எப்.எம்.நளீம் (தீனி) அவர்களது தலைமையில் கல்கமுவ அல்-அஸ்ஹர் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.03.10ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மொனராகலை மாவட்ட கொடிகமுவ கிளையின் மாதாந்த காரியக்குழு ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் அரபாத் (தப்லீகி) அவர்களது தலைமையில் கொடிகமுவ ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.03.10ஆம் திகதி ஜம்இய்யாவின் மாத்தளை நகர் கிளையினால் மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் இமாம்களுக்கான  ரமழான் மாத வழிகாட்டல் நிகழ்வு தலைவர் அஷ்-ஷைக் இர்ஸான் முப்தி அவர்களின் தலைமையில் மாத்தளை டவுன் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.03.11ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மத்தி பகுதியை சேர்ந்த உலமாக்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு சுமார் 5,000 ரூபாய் பெறுமதியான 125 பாடசாலைப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு-10, மாளிகாவத்தை பிலால் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.03.13ஆம் திகதி ஜம்இய்யாவின் ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் வழிகாட்டலுக்கு அமைவாக அம்பலாந்தோட்டையிலுள்ள உச்சவாலிக விகாரையின் விகாராதிபதி நந்தசிரி நாயக தேரருடைய சகோதரியின் சடலம் வைக்கப்பட்ட வீட்டுக்கு முஸ்லிம்களில் பலர் சென்று ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து வந்தனர்.

 

2024.03.18ஆம் திகதி ஜம்இய்யா தலைமையகத்தின் வழிகாட்டலுக்கமைய ஹம்பாந்தோட்டை மாவட்ட ஜம்இய்யாவினால் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை மக்கள் மயப்படுத்தும் முகமாக மாவட்ட மஸ்ஜித் நிர்வாகங்களின் உதவியுடன் ஹிஜ்ரி நாட்காட்டி வடிவமைக்கப்பட்டது. இது ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களினால் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது அனைத்து மஸ்ஜித்களிலும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

 

2024.03.20ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் கொழும்பு வடக்கு கிளையின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான ரமழான் கால தர்பிய்யாஹ் நிகழ்வு கொழும்பு-நவகம்புர மஸ்ஜிதுல் உமரில் நடைபெற்றது.

 

2024.03.21ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருநாகல் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் பைத்துல் மால் மற்றும் ஸகாத் தொடர்பான விசேட வழிகாட்டல் நிகழ்வு தலைவர் அஷ்-ஷைக் சுஐப் (தீனி) அவர்களின் தலைமையில் சியம்பலாகஸ்கொடுவ ரிச்வின் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

 

2024.03.23ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான ரமழான் கால தர்பிய்யாஹ் நிகழ்ச்சி புதுக்கடை, மீரானிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2024.03.23ஆம் திகதி ஜம்இய்யாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் அல்-குர்ஆன் விளக்கவுரை 'ஜுஸ்உ-அம்ம' தப்ஸீர் வகுப்பு அங்குரார்ப்பண நிகழ்வு கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஷுகுர்தீன் அவர்களின் தலைமையில் ஆமர் வீதி முனவ்வரா ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2024.03.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் கொழும்பு வடக்கு கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான ரமழான் தர்பிய்யாஹ் நிகழ்வு கொழும்பு-ஸ்மித் புரம் பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2024.03.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திவுரும்பொல பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில் பிராந்திய பள்ளிவாசல் நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள், ஆகியோருக்கிடையில் சினேகபூர்வ சந்திப்பும் ஜம்இய்யாவின் அறிமுகம் மற்றும் இப்தார் நிகழ்வும் தலைவர் அஷ்-ஷைக் எம்.பீ.எம். பாஸி மனாரி அவர்களது தலைமையில் மனாருல் ஹுதா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

 

2024.03.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் கிளையின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் சம்மேளன உறுப்பினர்களுக்கான இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

 

2024.03.25ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் அனைத்து உறுப்பினர்களுக்கான வருடாந்த இப்தார் நிகழ்வு கிளைத் தலைவர் அஷ்-ஷைக் என். இஸ்மத் ஷர்க்கி அவர்களின் தலைமையில் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

 

2024.03.26ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்களது நலன்கருதி 'NEST CAFE' தேநீர் தயாரிக்கும் இயந்திரம் கையளிக்கப்பட்டது.

 

2024.03.26ஆம் திகதி ஜம்இய்யாவின் கொழும்பு வடக்கு கிளை மற்றும் கிரேன்ட்பாஸ் மஸ்ஜித் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கிரேன்ட்பாஸ் புனித ஜோசப் கல்லூரியின் தரம் ஆறு தொடக்கம் எட்டு வரை கற்கும் மாணவர்களுக்கு ரமழான் தர்பிய்யாஹ் நிகழ்வு நடாத்தப்பட்டது.

 

2024.03.27ஆம் திகதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் அல்-குர்ஆன் விளக்கவுரை 'ஜுஸ்உ-அம்ம' தப்ஸீர் வகுப்பு அங்குரார்ப்பண நிகழ்வு கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஷுகுர்தீன் அவர்களின் தலைமையில் பெட்டா உம்மிச்சி ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2024.03.31ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் இப்தார் ஒன்று கூடல் நிகழ்ச்சி கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஷுகுர்தீன் அவர்களின் தலைமையில் கொழும்பு-01 கோட்டை ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

- ACJU Media -