2024.02.01ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருநாகல் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் ஹலால் சான்றுறுதிப் பேரவையினால் ஹலால் தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு 'ரிச்வின் ரிசப்ஷன்' மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஹலால் சான்றுறுதிப் பேரவையின் தலைமை அதிகாரி சகோதரர் ஆகிப், அதன் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சகோதரர் ஸைத் மற்றும் அஷ்-ஷைக் இருபான் முபீன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

2024.02.03ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் செயற்குழு கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் இர்ஸான் முப்தி அவர்களின் தலைமையில் மாத்தளை டவுன் மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.02.03ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கம்பளை கிளையின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு கிளையின் இளைஞர்கள் விவாகரத்திற்கான பொறுப்பாளர் அஷ்-ஷைக் சுஹைல் (மிஸ்பாஹி) அவர்களின் தலைமையில் கம்பளை ஆண்டியகடவத்தை அப்ரார் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இதில் வளவாளராக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப்பிரிவின் துணை இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

 

2024.02.04ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் கிளையினால் இலங்கைத் திருநாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பட்டாணிச்சூர் மக்பறா பள்ளிவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிரமதான நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஜம்இய்யாவின் பட்டாணிச்சூர் கிளையின் உறுப்பினர்கள் மற்றும் மர்கஸ் பள்ளிவாசல் நிர்வாகிகள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

2024.02.04ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அடுலுகம கிளையின் ஒன்றுகூடல் ‘அன்மா’ மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கிளையின் செயலாளர் அஷ்-ஷைக் ஸில்மி (இன்ஆமி) அவர்களினால் கடந்த மூன்று வருடங்களின் செயற்பாட்டறிக்கை முன்வைக்கப்பட்டதோடு அஷ்-ஷைக் பாஹிம் முப்தி (இன்ஆமி) அவர்களால் விஷேட தர்பியாவும் நடாத்தப்பட்டது.

 

2024.02.08ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டி நகர கிளையின் செயற்குழு கூட்டம் கிளைக் காரியாலயத்தில் தலைவர் அஷ்-ஷைக் பீ.எம். பாயிஸ் (பாஸி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

2024.02.09ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை பிரதேசக் கிளையின் ஒன்றுகூடல் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் பாரிஸ் (அர்கமி) அவர்களின் தலைமையில் இறக்குவானை முஹியத்தீன் பெரிய ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது. இதில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல் தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

 

2024.02.10ஆம் திகதி கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவின் மாதாந்த கூட்டம் உப தலைவர் அஷ்-ஷைக் ழபீர் முர்ஸி அவர்களின் தலைமையில் மாவட்ட கிளை காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு 08 பிரதேசக் கிளைகளில் இருந்து 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

2024.02.10ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் நகர் கிளையின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று குழுவின் முதலாவது ஒன்றுகூடல் குருநாகல் மலாய் (ஜாவா) பள்ளியில் நடைபெற்றது.

 

2024.02.10, 11 ஆகிய திகதிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளை மற்றும் 20 பிராந்திய கிளைகள் ஆகியவற்றின் நிர்வாகத் தெரிவும் மாவட்டத்தின் ஐந்து பிரதான மத்திய நிலையங்களில் நடைபெற்றது.

 

2024.02.10ஆம் திகதி ஜம்இய்யாவின் பொலன்னறுவை மாவட்டக் கிளையின் பெப்ரவரி மாதத்திற்கான கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.எம். அலாஉதீன் பலாஹி அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2024.02.11ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - நிந்தவூர் கிளையின் சமூக சேவைப் பிரிவினால் உலமாக்களின் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு கிளையின் சமூகசேவைப் பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச் ஹிதாயத்துல்லாஹ் (காஷிபி) அவர்களின் தலைமையில் நிந்தவூர் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. Google Form ஊடாக விண்ணப்பித்திருந்த 25 உலமாக்களின் குழந்தைகளுக்கே இவ்வாறு பாடசாலை உபகரணங்கள் மற்றும் குர்ஆன்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 

2024.02.11ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எட்டாவது கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஜம்இய்யாவின் இறக்குவானை கிளையின் பூரண ஒத்துழைப்புடன் இறக்குவானை முஹியத்தீன் ஜுமுஆப் பள்ளிவாயலில் மிக சிறப்பாக நடைபெற்றது.

 

 

2024.02.13ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நீர்கொழும்பு கிளையின் காரியக் குழுக்கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் அனீஸ் யூசுபி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2024.02.14ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் பெப்ரவரி மாத ஒன்றுகூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம். றமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் மர்கஸ் பள்ளிவாசலில் நடைபெற்றது.

 

2024.02.16ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டாணிச்சூர் கிளையினால் மக்பரா பள்ளிவாயலில் புதிதாக மலசலகூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டதற்காகவும் சன்தூக், ஜனாஸா குளிப்பாட்டும் மேசை போன்ற பொருட்களை வழங்கியமைக்காகவும் மர்கஸ் பள்ளிவாசல் நிர்வாகிகளால் ஜம்இய்யாவின் கிளை உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டு ஜுமுஆ தொழுகையைத் தொடர்ந்து பாராட்டி நன்றிக் கடிதமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

2024.02.17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மருதமுனைக் கிளையின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. இது 04 பிரதான தலைப்புக்களில் தரமான வளவாளர்களை கொண்டு நடாத்தப்பட்டது.

 

2024.02.17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேகாலை மாவட்டம் ஹிங்குலோயா கிளையின் மாதாந்த ஒன்று கூடல் தலைவர் அஷ்-ஷைக் அன்பாஸ் தீனி அவர்களின் தலைமையில் பெலிகம்மன இக்ரா மஸ்ஜிதில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரமழான் மாதத்தினையிட்டு முதியவர்களுக்கான மார்க்க தெளிவு வகுப்புகளை நடாத்த முடிவு செய்யப்பட்டது.

 

2024.02.17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மருதமுனை கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜிதுல் கபீர் ஜுமுஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஆதரவுடன் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மற்றும் தோற்றவுள்ள ஆண் மாணவர்களுக்கான 'ஈமானிய அமர்வு' என்ற கருப்பொருளிலான செயலமர்வு கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எப்.எம்.ஏ.எஸ். அன்ஸார் மெளலானா நளீமி அவர்களின் தலைமையில் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜுமுஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது. இதில் சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

2024.02.17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருநாகல் மாவட்ட நாரம்மல ஹொரம்பாவ கிளையின் புதிய நிர்வாக சபைத் தெரிவின் பின்னரான முதலாவது பொதுக்கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஏ.எம். ரியாஸ் (ஜவாதி) அவர்களின் தலைமையில் பெந்தனிகொட அல்-உஸ்வதுல் ஹஸனா ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.

 

2024.02.17ஆம் திகதி அகில இலங்கை ஐம்இய்யதுல் உலமா கொழும்பு வடக்கு கிளையின் பெப்ரவரி மாதத்திற்கான அமர்வு கிளைத் தலைவர் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் அவர்களது தலைமையில் கொழும்பு மாதம்பிடிய ஹிதாயத் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.02.17ஆம் திகதி ஜம்இய்யாவின் மூதூர் கிளையின் மூன்றாவது மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் ஸபூர் (பத்தாஹி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

 

2024.02.17ஆம் திகதி ஜம்இய்யாவின் ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் பெப்ரவரி மாத ஒன்று கூடல் உப தலைவர் அஷ்-ஷைக் பாயிஸ் (அப்பாஸி) அவர்களின் தலைமையில் பானுவல மர்கஸ் மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.02.17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டம் தும்பர பிராந்திய கிளையின் வருடாந்த ஒன்று கூடல் மடவளையில் அமைந்துள்ள ஆர்டின் வில்லாவில் 'முப்பெரும் நிகழ்ச்சி' எனும் தலைப்பில் நடைபெற்றது.

 

2024.02.18ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் மஹல்லா ரீதியான இளைஞர்களுக்கான இஜ்திமா மஸ்ஜிதுன் நயீம் பள்ளிவாயலில் நடைபெற்றது. இதில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி முர்ஷித் (ஸஃதி) மற்றும் செயலாளர் அஷ்-ஷைக் ஆஷிக் அலி (காஷிபி) ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள்.

 

2024.02.18ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-எலபடகம கிளையின் புதிய நிர்வாகத் தெரிவின் பின்னரான முதலாவது பொதுக்கூட்டம் உப தலைவர் அஷ்-ஷைக் ஏ.எஸ்.எம். நவ்ஷாத் (நளீமி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2024.02.23ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையில் புதிதாக இணைந்து கொண்ட 07 உலமாக்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு கிளையின் தலைவர் அஷ்-ஷைக் இஸ்மத் (ஷர்க்கி) அவர்களின் தலைமையில் ஜுமுஆத் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.

 

 

2024.02.23ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மூதூர் கிளையின் மகளிர் விவகாரக் குழு மற்றும் பிரச்சாரக் குழு ஆகியவற்றினுடனான கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் ஸபூர் (பத்தாஹி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2024.02.22ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா திஹாரிய கிளையின் நிர்வாக செயற்குழு கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஸைபுல்லாஹ் இஹ்ஸானியின் தலைமையில் ஈமானிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

 

2024.02.23ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திவுரும்மபொல பிராந்திய கிளையின் மாதாந்த பொதுக்கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் அல்-ஹாஜ் எம்.பி.எம் பாசி மணாரி தலைமையில் மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.

 

2024.02.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு தெற்கு கிளையின் உலமாக்களுக்கான விசேட நிகழ்வு கிளையின் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் ஹலீம் (ஷர்க்கி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் ஜம்இய்யாவின் துணைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜெ. அப்துல் ஹாலிக் மற்றும் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

 

2024.02.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு தெற்கு கிளையின் ஏற்பாட்டில் 'அருள்மிகு ரமழானை வரவேற்போம்' எனும் தொனிப்பொருளில் விசேட நிகழ்ச்சிகள் கொழும்பு தெற்கு பிராந்திய பள்ளிவாயல்களில் நடைபெற்றது.

 

2024.02.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குருநாகல் மாவட்டத்தின் புதிய நிருவாகத் தெரிவின் பின்னரான முதலாவது நிறைவேற்றுக்குழு ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். சுஐப் தீனி அவர்களின் தலைமையில் மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

 

2024.02.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு 12 மகாமு செய்புதீன் ஜுமுஆ பள்ளியில் இஷா தொழுகையை தொடர்ந்து அஷ்-ஷைக் ஷுகுர்தீன் இஹ்சானி அவர்களினால் புனித ரமழான் மாதத்தை வரவேற்போம் எனும் தொனிப்பொருளில் விஷேட பயான் நிகழ்வு நடைபெற்றது.

 

2024.02.25ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் புதிய உலமாக்களை வரவேற்றல் மற்றும் அனைத்து உலமாக்களுக்கான கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் என். இஸ்மத் (ஷர்க்கி) அவர்களின் தலைமையில் அழகாபுரி உணவகத்தில் நடைபெற்றது.

 

2024.02.27ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பு கிழக்குக் கிளையின் பெப்ரவரி மாதத்திற்கான மஷூரா கிளையின் தலைவர் அஷ்-ஷைக் பிர்தௌஸ் அவர்களின் தலைமையில் மீத்தொட்டமுள்ள மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலில் நடைபெற்றது.

 

2024.02.27ஆம் திகதி ஜம்இய்யத்துல் உலமா-பம்மன்ன கிளையின் பொதுக் கூட்டம் ஹொரவடுன்னகம மஸ்ஜிதுல் ஹுதா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.02.29ஆம் திகதி ஜம்இய்யாவின் கிண்ணியா கிளையின் ஸகாத் பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான ஸகாத் வழங்கும் நிகழ்வு செயலாளர் அஷ்-ஷைக் அஸ்ரத் (நஜ்மி) தலைமையில் கிளைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது ஸகாத் பயனாளிகள் 19 பேருக்கான வாழ்வாதாரம் மற்றும் மருத்துவத்திற்கான  உதவிகளும்  வழங்கப்பட்டன.

 

- ACJU Media -