2024.07.01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒலுவில் கிளைக்குட்பட்ட ஒலுவில் பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றுவரும் தாருத் தலபா அல்-குர்ஆன் மனன கலாபீடத்திற்கு அக்கிராமத்தினை சேர்ந்த எம்.எஸ். சுல்தான் மற்றும் அவரது பிள்ளைகள் மூலமாக மேசைகள் மற்றும் அலுமாரி போன்ற மாணவர் தளபாடங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

அண்மையில் மரணித்த அவரது மனைவி மர்ஹூமா இப்ராலெவ்வை பரீதா உம்மா அவர்களின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக இந்த அன்பளிப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

2024.07.01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் வழிகாட்டலுக்கமைய அல்-குர்ஆன் விளக்கவுரை - ஜுஸ்உ அம்ம தப்ஸீர் வகுப்பு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொழும்பு தெமட்டகொட மினன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டிருந்ததோடு ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

 

2024.07.04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ரக்வானை கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் பாரிஸ் அவர்களின் தலைமையில் ரக்வானை 'ஒரேன்ஞ்பீல்ட்' மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆப் பள்ளிவாயலில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

 

2024.07.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கம்பளை கிளையின் வருடாந்த ஒன்றுகூடல் புஸ்ஸல்லாவ Delta Farm இல் நடைபெற்றது. இதில் கம்பளை கிளையின் உறுப்பினர்களான ஆலிம்கள் பலர் கலந்து கொண்டதோடு இவ்வருடத்திற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

2024.07.06ஆம் திகதி, அ‌கில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பு வடக்குக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் கிளையின் தலைமையில் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் கிரேன்ட்பாஸ் ரஹ்மானிய்யா மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

 

2024.07.07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நீர்கொழும்பு மாவட்டக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஆலிம்கள் கௌரவிப்பு நிகழ்வும் தலைவர் அஷ்-ஷைக் அனீஸ் யூசுபி அவர்களது தலைமையில் நீர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில்  இரண்டு அமர்வுகளாக சிறப்பாக நடைபெற்றது.

இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் என்.எம். ஷைபுல்லாஹ், அஷ்-ஷைக் எம்.எப்.எம். ஃபரூத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

2024.07.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருவிட்ட கிளை மற்றும் குருவிட்ட மஸ்ஜித் நிர்வாகம் ஆகியவற்றின் தீர்மானத்தின் படி அப்பிரதேசத்தில் உள்ள நான்கு மஹல்லாக்களிலும் நடைபெற்றுவரும் அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் மாணவர்கள் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு குருவிட்ட ஹிக்கஸ்ஹேன ஜுமுஆ மஸ்ஜிதில் புதிய மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த மத்ரஸாவில் ஒட்டுமொத்த மாணவர்களும் 05 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

2024.07.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொத்துவில் கிளையின் நிர்வாகக்கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஏ. முஹைதீன் பாவா (ஷர்க்கி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் கிளையோடு தொடர்புபட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

 

2024.07.12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொத்துவில் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் ஹிஜ்ரி 1446 முஹர்ரம் மாதத்தினை முன்னிட்டு பொத்துவில் அல்-பத்தாஹ் ஜுமுஆ மஸ்ஜிதில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

 

2024.07.12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக்குழுவின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் ஹெம்மாதகம கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான 'சிறந்த பிரஜையை உருவாக்குதல்' எனும் தொனிப்பொருளிலான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வுகள் ஹெம்மாதகம பிரதேசத்தின் மஸ்ஜிதுகள், பாடசாலைகள், அரபிக் கல்லூரிகளில் மிக சிறப்பாக நடைபெற்றன.

மேற்படி, ஹெம்மாதகம பிரதேசத்தில் மொத்தமாக 26 செயலமர்வுகள் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டதோடு குறித்த செயலமர்வுகளில் சுமார் 4,500 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இதில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன், இளைஞர் விவகாரக்குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் ரிபாஹ் ஹஸன்  ஆகியோருடன் ஜம்இய்யாவின் ஆலிம்கள் சிலரும் சிலரும் கலந்துகொண்டனர்.

 

2024.07.13ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ரிதீகம கிளையின் மாதந்தக்கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஸைத் ஹஸனி அவர்களது தலைமையில் ரமுகந்தன நிதாஉல் இஸ்லாம் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இவ்வொன்றுகூடலில் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

 

2024.07.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சாய்ந்தமருது மாளிகைக் காடு கிளையின் ஏற்பாட்டில் கீழ் சாய்ந்தமருதினை சேர்ந்த பக்கீர் போடியார் அவர்கள் வக்ப் செய்த நிலத்தில் கிளையின் காரியாலயம், மத்ரஸா மற்றும் அழைப்புப்பணி செய்வதற்கான நோக்கங்களோடு கட்டிடம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நட்டுவைக்கப்பட்டது.

இக்கட்டடம் தனிநபர் ஒருவரின் செலவில் கட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

2024.07.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மன்னார் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஒன்றுகூடலொன்று அஷ்-ஷைக் எம்.ஏ.சீ.எம்.எம். அஸ்லம் இஸ்லாஹி தலைமையில் மன்னார் மூர் வீதி, முஹைதீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

 

2024.07.15ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மாத்தளை நகர் கிளையின் மாதாந்த காரியக் குழுக்கூட்டம் கிளையின் தலைவர்  அஷ்-ஷைக் இர்ஸான் முஃப்தி அவர்களது தலைமையில் கொங்காவெல மஸ்ஜிதில் அமைந்துள்ள புதிய காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்ததோடு பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

2024.07.15ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாரம்மல பிராந்திய கிளைக்குட்பட்ட  ஆலிம்களுக்கான ஒன்று கூடல் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ரியாஸ் (ஜவாதி) அவர்களின் தலைமையில் பெந்தனிகொட அல்-உஸ்வதுல் ஹஸனா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டிருந்த ஆலிம்களினால் கிளையின் எதிர்கால திட்டங்களுக்கான பல முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

2024.07.18ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருநாகல் மாவட்டகிளையின் செயற்குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் சுஐப் தீனி அவர்களது தலைமையில் மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு மாவட்டத்தில் உள்ள 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த ஆலிம்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றினை மிகவிரைவில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 

2024.07.19ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுராதபுர மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாஸீன் (ரஹ்மானி) அவர்களால் அனுராதபுரம், ஹமீதிய்யாஹ் அரபுக் கல்லூரிக்கு வருகை தந்திருந்த ரம்பாவ பிரதேச செயலாளர் மருலகல அவர்களுக்கு அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு கையளிக்கப்பட்டது.

 

2024.07.21ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் அனைத்து ஆலிம்களுக்குமான கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் என். இஸ்மத் (காஷிபி) அவர்களின் தலைமையில் மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாயிலில் இடம்பெற்றது.

இதில் நிந்தவூர் ஜம்இய்யாவின் ஆலிமாக்கள் விவகாரப் பிரிவினை மீள புனர்நிர்மாணம் செய்து அதனூடாக சமூகத்தில் பெண்களுக்கான மார்க்க நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடாத்துதல் மற்றும் கிளையினால் ஹாபிழ்கள் பிரிவொன்றை உருவாக்கி அவர்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல், ஊடகவியலாளர்கள், பிரதேசத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து கலந்துரையாடுதல் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

 

2024.07.21ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருநாகல் மாவட்டம் அரக்கியால பிரதேசக் கிளையின் ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் தய்யிப் முஃப்தி அவர்களது தலைமையில் மடலஸ்ஸ மஸ்ஜிதுல் பலாஹ்  ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில் கிளை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

 

2024.07.21ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருநாகல் நகர் கிளையின் விஷேட நிர்வாகக் குழுக்கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஆர். நூர் முஹம்மத் அவர்களது தலைமையில் தெலியாகொன்ன ஜுமுஆ பள்ளியில் நடைபெற்றது.

இதில் குருநாகல் நகர் கிளையினால் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்துரையடடப்பட்டது.

 

2024.07.21ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருவிட்ட கிளை மற்றும் குருவிட்ட மஸ்ஜித் நிர்வாகசபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் பிரதேசத்திலுள்ள வாலிபர்களுடனான விஷேட ஒன்றுகூடலொன்று குருவிட்ட டவுன் மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஆலிம்களால் இளைஞர்களுக்கு உபதேசங்கள் வழங்கப்பட்டதோடு அவர்களைக் கொண்டு பிரதேசத்தில் முதற்கட்டமாக ஜனாஸா நலன்புரிச் சங்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.

 

2024.07.23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெல்கஹகொட கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ரியாஸ் ஸஹ்ரி அவர்களது தலைமையில் மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில் வாராந்த தப்ஸீர் வகுப்பினை ஏற்பாடு நடாத்துதல் உள்ளிட்ட கிளை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

2024.07.23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவின் பின்னரான முதலாவது நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எம். ஷிப்லி (மீஸானி) தலைமையில் வவுனியா மொஹிதீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் வறிய குடும்பங்களுக்கு உதவுதல், பாடசாலை மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியினை போதித்தல், பட்டாணிச்சூர் ஜுமுஆ மஸ்ஜிதில் பெண்கள் தொழுகை அறையை அமைத்தல் போன்ற மற்றும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

 

2024.07.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேகாலை மாவட்டக் கிளையின் மாதந்தக்கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் நாஸர் ரஹ்மானி அவர்களின் தலைமையில் கிருங்கதெனிய மஸ்ஜிதுன்-நூர் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில் கேகாலை மாவட்ட ஜம்இய்யாவினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு விரைவில் மாவட்டத்தில் உள்ள ஆலிம்கள் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகள் ஆகியோருக்கான நிகழ்ச்சிகளை நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, வருகை தந்திருந்த தலைமை ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர்களால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற செயலமர்வுகள் தொடர்பில் தெளிவுகளும் வழங்கப்பட்டன.

 

2024.07.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இக்கிரிகொள்ளாவ கிளையின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான முதலாவது குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாஸீன் ரஹ்மானி அவர்களின் தலைமையில் இக்கிரிகொள்ளாவ மொஹிதீன் பெரிய பள்ளிவாயலின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

 

2024.07.28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனுராதபுரம் மாவட்டக் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவின் பின்னரான முதலாவது கூட்டம், மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாஸீன் (ரஹ்மானி) அவர்களது தலைமையில் அனுராதபுரம் முஹ்யித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் அனுராதபுர மாவட்டத்தில் புதிய பிராந்திய கிளைகளை உருவாக்குதல், அல்-குர்ஆன் மத்ரஸாக்களை நடாத்துதல் போன்ற முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

 

2024.07.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் அனீஸ் யூஸுபி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் கிளை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

 

2024.07.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நொச்சியாகம கிளையின் மாதாந்த நிர்வாக ஒன்றுகூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஷம்சுல் ஹுதா அவர்களின் தலைமையில் நொச்சியாகம ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் கிளை தொடர்பிலான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

 

2024.07.31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு கிழக்கு கிளையின் ஜூலை மாதத்திற்கான ஒன்றுகூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஃபிர்தவ்ஸ் அவர்களின் தலைமையில் பிரண்டியாவத்தை ஹனிபா மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.

 

2024.07.31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கஹட்டகஸ்திகிலிய கிளையின் புதிய நிர்வாகத் தெரிவின் பின்னரான முதலாவது கூட்டம் கிளை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இஹலஹல்மில்லாவ தாருல் ஹிக்ம் அநாதைகள் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு கிளைக்குட்பட்ட ஆலிம்களை ஒன்றுதிரட்டி கிளையின் உபகுழுக்களை ஆரம்பிப்பது தொடர்பிலும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

 

- ACJU Media -