2024.06.01ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மாத்தளை நகர் கிளையின் காரியக்குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் இர்ஸான் முஃப்தி அவர்களது தலைமையில் மாத்தளை டவுன் மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

 

2024.06.01ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் ஜூன் மாதத்திற்கான ஒன்றுகூடல் உபதலைவர் அஷ்-ஷைக் பாயிஸ் (அப்பாஸி) அவர்களின் தலைமையில் பானுவல மர்கஸ் மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

 

2024.06.01ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-கொழும்பு தெற்கு கிளையின் ஜூன் மாதத்திற்கான கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் ஹலீம் (ஷர்க்கி) அவர்களின் தலைமையில் வெள்ளவத்தை ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் கொழும்பு தெற்கு பகுதிக்குரிய காதி நீதவான் விவகாரம், தஃவா பணி, ஆலிம்கள் மேம்பாடு, மஸ்ஜிதுகள் விவகாரம், அரபு மத்ரஸாக்கள் விவகாரம், முஅத்தின்மார்களுக்கான பயிற்சிநெறிகள் போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு முடிவில் தீர்மானங்களும் எட்டப்பட்டன.

----------------

2024.06.01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மட்டக்களப்பு மாவட்டக் கிளையினால் 'மாவட்டத்திலுள்ள கிளைகளை சந்தித்தல்' எனும் நடவடிக்கையின் முதற்கட்டமாக காத்தான்குடி கிளையுடனான சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதில் கல்குடா, ஏறாவூர் கிளைகளிலிருந்து மாவட்டக் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் காத்தான்குடி கிளையின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

 

2024.06.02ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அம்பாறை மாவட்ட கிளையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் மாவட்டத் தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி மதனி அவர்களின் தலைமையில் பாலமுனை தானாபுஸைரி ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 

2024.06.02ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அநுராதபுர மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாஸின் ரஹ்மானி அவர்களின் தலைமையில் அநுராதபுர டவுன் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

இதில் பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு அநுராதபுர மாவட்டக்கிளையினது நிர்வாகத் தெரிவினை நடத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

2024.06.02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கம்பஹா மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஸைபுல்லாஹ் இஹ்ஸானி அவர்களது தலைமையில் திஹாரிய - ஈமானிய்யா அரபுக்கல்லூரியில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு கம்பஹா மாவட்ட மூத்த ஆலிம்களை கௌரவிக்கும் நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய நலன்விரும்பிகள் மற்றும் கிளை உறுப்பினர்கள் நினைவுகூரப்பட்டனர்.

 

2024.06.03ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மருதமுனை பிரதேசக் கிளையின் ஒன்றுகூடல் கிளை நிர்வாகிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இதில் உழ்ஹிய்யஹ் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் விடயங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

 

2024.06.04ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா-பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் ஜூன் மாத ஒன்று கூடல் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம். றமீஸ் (ஹாஷிமி) அவர்களது தலைமையில் மர்கஸ் பள்ளிவாசலில் நடைபெற்றது.

 

2024.06.05ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய  கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் உப தலைவர் அஷ்-ஷைக் நபீல் மபாஸ் (ஃபாருகி) அவர்களின் தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில் ஈதுல் அழ்ஹாவை முன்னிட்டு குர்பானி திட்டம் மற்றும் குறித்த கிளைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள ஆலிம்களது தகவல்களை திரட்டுதல் போன்ற பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

 

2024.06.06ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ரிதீகம கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் செயலாளர் அஷ்-ஷைக் ஷானாஸ் அவர்களது நெறிப்படுத்தலில் ரிதீகம பிர்தவ்ஸ் தக்கியாவில் நடைபெற்றது.

 

2024.06.07ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் வழிகாட்டலுக்கு அமைய அல்-குர்ஆன் விளக்கவுரை அம்ம ஜுஸ்உ தப்ஸீர் வகுப்பு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொழும்பு-12 மஸ்ஜித் அந்-நஜ்மி பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2024.06.07ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அபுக்காகம கிளையின் நிர்வாகக்குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஹாஜா முஹிதீன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

 

2024.06.07ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்ட மஸ்ஜித் நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையினால் நடாத்தப்பட்ட Smart Village தொடர்பான கூட்டம் ஆலிம்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டிருந்தார்கள்.

 

சீரற்ற வானிலையினால் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா களுத்துறை மாவட்ட ஜம்இய்யாவினால் சேகரிக்கப்பட்ட சுமார் இருபது லட்சம் ரூபா பெறுமதியான வெள்ள நிவாரண உதவிகள், ஜம்இய்யாவின் தர்கா நகர் கிளையினால் மாத்தறை மாவட்ட ஜம்இய்யாவின் பிரதிநிதிகளிடம் 2024.06.08ஆம் திகதி உலர் உணவுப் பொருட்களாகவும் பணமாகவும் ஒப்படைக்கப்பட்டன.

 

2024.06.08ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு பள்ளிகளிலும் உழ்ஹிய்யஹ் வழிகாட்டல்களை வழங்குதல், ஜுமுஆவுடைய நேரத்தில் வர்த்தக நிலையங்களை மூடுதல் மற்றும் பின்னேர நேர வகுப்புக்களை மாலை 06 மணியுடன் நிறைவு செய்தல் போன்ற இன்னும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

 

2024.06.09ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் அல்-குர்ஆன் மத்ரஸா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கொழும்பு மத்திய பகுதிக்கு உட்பட்ட அல்-குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பிக்கும் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான தர்பிய்யாஹ் செயலமர்வு மருதானை கலந்தர் சாஹிப் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

ந்நிகழ்வில் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில் ஹுமைதி மற்றும் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஸித் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.

 

2024.06.09ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ரிதீகம கிளையினால் உழ்ஹிய்யா சம்பந்தமான விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி பானகமுவ முஹியத்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

இதில் தலைமை ஜம்இய்யாவின் ஃபத்வா குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் மபாஹிம் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார்கள்.

 

2024.06.09ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இக்கிரிகொல்லாவ பிரதேசக்கிளையின் ஆலிம்களுக்கான ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாஸீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் இக்கிரிகொல்லாவ முஹியித்தீன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில் ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்களுடனான கலந்துரையாடல், மத்ரஸா மாணவர்களுக்கான தர்பிய்யாஹ் நிகழ்வு, பிரதேச மக்களுக்கு  உழ்ஹிய்யஹ் வழிகாட்டல்களை வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 

2024.06.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கம்பஹா மாவட்டம், திஹாரிய கிளையின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் திஹாரிய பள்ளிவாயல்கள் நிர்வாகிகள் ஆகியோரிடையிலான கலந்துரையாடல் அஷ்-ஷைக் ஷைஃபுல்லாஹ் அவர்களின் தலைமையில் திஹாரிய பெரிய பள்ளிவாயலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 

2024.06.11ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நீர்கொழும்பு பிரதேசக்கிளையின் காரியக்குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அனீஸ் யூஸுபி அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

----------------

2024.06.13ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் மாதாந்தக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். சலீம் (ஷர்க்கி) அவர்களது தலைமையில் சாய்ந்தமருது ஷுஹதா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

 

2024.06.14ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர் கிளையின் ஏற்பாட்டில் உழ்ஹிய்யஹ் வழிகாட்டல் கருத்தரங்கு தலைவர் அஷ்-ஷைக் ஜிப்னால் மிஸ்பாஹி தலைமையில் புத்தளம் பெரிய பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில் நகரசபை உயர் அதிகாரி எம். நெளஷாத் (A.O), அப்துல் மஜீத் எகடமி அதிபர் அஷ்-ஷைக் எம். நஜிப்தீன் (ஹஸனி), ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விடயம் தொடர்பில் தெளிவுகளை வழங்கினர்.

 

2024.06.15ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் கிளையின் வேண்டுகோளுக்கிணங்க மக்பரா பள்ளிவாயலின் முக்கியத் தேவையாக காணப்பட்ட சந்தூக் பெட்டி மற்றும் ஜனாஸா குளிப்பாட்டும் மேசை ஆகியன அக்கிராமத்தினை சேர்ந்த கலாநிதி அனீஸ் அவர்களின் 02 லட்சம் ரூபாய்கள் நிதி ஒதுக்கீட்டில் செய்துமுடிக்கப்பட்டு கிளை உறுப்பினர்கள் மற்றும் மக்பரா பள்ளிவாயல் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் கையளித்து வைக்கப்பட்டது.

 

2024.06.15ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் பிரதேசக்கிளையின் முக்கிய ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம். ரமீஸ் (ஹாஷிமி) அவர்களது தலைமையில் மக்பரா பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2024.06.21ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இக்கிரிகொல்லாவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதியிலுள்ள ஆலிம்கள், முஅல்லிமாக்கள் மற்றும் மத்ரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆகியோருக்கான விஷேட ஒன்றுகூடலொன்று கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாஸீன் ரஹ்மானி அவர்களது தலைமையில் இக்கிரிகொல்லாவ ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.06.23ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் கிளையின் பொதுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம். ரமீஸ் ஹாஷிமி அவர்களது தலைமையில் மன்பஉல் உலூம் ஹிப்ழ் மத்ரஸாவில் நடைபெற்றது.

 

2024.06.28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பதுளை மாவட்டம் - பசறை பிரதேசக் கிளையின் காரியக்குழுக்கூட்டம் உப தலைவர் அஷ்-ஷைக் முஹம்மது ஆஸிக் (பலாஹி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

 

2024.06.29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருநாகல் மாவட்டம் - எலபடகம கிளையின் மாதாந்தக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.என்.எம். நஸ்ரின் (ரஷாதி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2024.06.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் உபதலைவர் அஷ்-ஷைக் ஷுகுர்தீன் அவர்களின் தலைமையில் கொழும்பு தெஹிவளை பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2024.06.30ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சூடுவெந்தபுலவு பிரதேசக்கிளையின் காரியக்குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் கே.எம். நபீஸ் (நஜாஹி) அவர்கள் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

- ACJU Media -