அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் சமூக சேவை பிரிவினால் நிந்தவூர் ஜம்இய்யாவில் அங்கம் வகிக்கும் உலமாக்களின் கல்வி கற்கும் குழந்தைகளில் ஒருவருக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. 2024.01.30ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
2024.01.06ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மாத்தளை நகர் கிளையின் செயற்குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் இர்ஸான் முஃப்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் 07 பேர் கலந்துகொண்டதோடு சென்ற மாதத்திற்கான கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2024.01.06ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-மூதூர் கிளையின் 2024ஆம் ஆண்டிற்கான முதலாவது கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.எம். அப்துல் ஸபூர் (பத்தாஹி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.01.08ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-நிந்தவூர் கிளையின் நிறைவேற்றுக் குழுவிற்கும் நிந்தவூர் ஜுமுஆப் பள்ளிவாசல் நிர்வாக சபையினருக்கும் இடையிலான சிநேக பூர்வ கலந்துரையாடல் நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.
2024.01.09ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த மஷுரா தலைவர் அஷ்-ஷைக் ஷுகுர்தீன் (இஹ்ஸானி) அவர்களின் தலைமையில் கொம்பனித்தெரு யூனியன் வீதி முஹியத்தீன் மஸ்ஜிதில் நடைபெற்றது.
2024.01.09ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் காரியக் குழுக் கூட்டம் ஹைராத் பள்ளிவாயலில் தலைவர் அஷ்-ஷைக் அனீஸ் யூசுபி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2024.01.10ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இரத்தினபுரி-குருவிட்ட கிளையின் மாதாந்த மஷூரா தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வான் (ஹஸனி) அவர்களின் தலைமையில் குருவிட்ட மர்ஹூம் அல்-ஹாஜ் ஜௌபர் சாதிக் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
2024.01.13ஆம் திகதி ஜம்இய்யாவின் வவுனியா மாவட்ட பட்டாணிச்சூர் கிளையினால் மக்பரா பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்படவுள்ள மலசலகூடக் கட்டடத் தொகுதி தொடர்பிலான கலந்துரையாடல் கிளையின் உபதலைவர் அஷ்-ஷைக் இல்யாஸ் (மனாரி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2024.01.14ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மூதூர் கிளையின் மகளிர் விவகாரப் பிரிவினால் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சிகள் பிரதேசத்தின் மூன்று மஸ்ஜிதுகளை மையப்படுத்தி நடாத்தப்பட்டன.
அதன்படி மூதூர் பெரிய பால பள்ளிவாயிலில் அஷ்-ஷைக் எஸ்.எம். பாஸி (றஷாதி) அவர்களினாலும், மூதூர் பெரிய பள்ளிவாயிலில் அஷ்-ஷைக் றஸா பிர்தௌஸ் (நத்வி) அவர்களினாலும், ஹிழ்ரு பள்ளிவாயிலில் அஷ்-ஷைக் எம். ஸல்மான் பாரிஸ் (றவ்ழி) அவர்களினாலும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.
2024.01.15ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மூதூர் கிளையின் சமூக சேவைப் பிரிவினால் குறிப்பிட்ட சில பிரதேசங்களை இனம்கண்டு வருமானம் குறைந்த சுமார் 90 குடும்பங்களுக்கு இறைச்சிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
2024.01.16ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மூதூர் கிளையின் சமூக சேவைப் பிரிவினால் பிரதேசத்திலுள்ள வருமானம் குறைந்த சுமார் 150 குடும்பங்களுக்கு 400 இறாத்தல் பாண்கள் இராப் போசனமாக வழங்கி வைக்கப்பட்டன.
2024.01.19ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பசறை கிளையின் மாதாந்த காரியக் குழுக்கூட்டம் அஷ்-ஷைக் அப்துஸ் சலாம் (ஷர்கி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
2024.01.19 மற்றும் 20ஆம் திகதிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மூதூர் கிளையின் சமூக சேவைக் குழுவினால் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
2024.01.20ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக் குழுவின் ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஷுஐப் தீனி அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
2024.01.20ஆம் திகதி ஜம்இய்யாவின் கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக்கூட்டமும் பிரதேச ஜம்இய்யாக்களின் பதவி தாங்குனர்களின் ஒன்று கூடலும் அஷ்-ஷைக் உமர்தீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் மாவட்ட ஜம்இய்யா காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் 12 பிரதேசக் கிளைகளில் இருந்து 33 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
2024.01.20ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கம்பஹா மாவட்ட கிளையின் செயற்குழுக் கூட்டம் திஹாரி-ஈமானிய்யா அரபுக் கல்லூரியில் தலைவர் அஷ்-ஷைக் நுஹ்மான் இன்ஆமி தலையில் நடைப்பெற்றது.
2024.01.20ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இரத்தினபுரி மாவட்ட கிளையின் நிர்வாக கூட்டம் குருவிட்ட ஜஃபர் ஸாதிக் ஹாஜியார் அவர்களின் வீட்டில் மாவட்ட கிளை தலைவர் அஷ்-ஷைக் முப்தி தாரிக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2024.01.21ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை பிரதேசக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் பாரிஸ் (அர்கமி) அவர்களின் தலைமையில் இறக்குவானை கங்கொடை முத்தகீன் ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.
2024.01.21ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெல்தோட்டை கிளை நிர்வாகம் மற்றும் ஜம்இய்யாவின் அக்குரனை கிளை நிர்வாகம் ஆகியவற்றிற்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று அக்குரனை கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
2024.01.21ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் ஜனவரி மாத ஒன்றுகூடல் சிப்பிக்குளம் அந்-நூர் ஜுமுமா மஸ்ஜிதில் தலைவர் அஷ்-ஷைக் பர்ஹத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 23 உலமாக்கள் கலந்துக் கொண்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மூதூர் கிளையினால் மூதூர் பிரதேசத்திலுள்ள தந்தை மரணித்த 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உதவி திட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தகவல்கள் கோரப்பட்டன.
இத்திட்டத்தின் இறுதித் திகதியான 2024.01.22 வரையில் உதவி பெறத் தகுதியான சுமார் 83 குழந்தைகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
2024.01.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பொல கிளையின் ஏற்பாட்டில் கம்பொல நகரிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களின் இமாம்களுக்குமான தர்பியாஹ் நிகழ்வு கம்பொல ஆண்டியகடவத்த ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
2024.01.25ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக் குழுவின் வழிகாட்டலில் எஹலியகொடை கலவிட்டிகொடை முத்தகீன் மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் முத்தகீன் வாலிபர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் எஹலியகொடைப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கான உளவியல் மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு கலவிட்டிகொடை முத்தகீன் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து பயன்பெற்றனர்.
2024.01.26ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-கண்டி நகர கிளையின் நிர்வாகக் குழுக் கூட்டம் கண்டி-ஹனபி பள்ளியில் தலைவர் அஷ்-ஷைக் பி.எம். பாயிஸ் ஃபாஸி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
2024.01.26ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிககொள்ள கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான மாதாந்த தர்பியா நிகழ்ச்சி நிககொள்ள ஜுமுஆ மஸ்ஜிதில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முன்மாதிரியான பரம்பரையை உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் நடாத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நிககொள்ள ஜுமுஆ மஸ்ஜிதின் இமாம் அஷ்-ஷைக் யூஸுப் (ஸலீமி) அவர்கள் வளவாளராக கலந்து கொண்டார்.
2024.01.27ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் இவ்வாண்டுக்கான திட்டமிடல் கல்விக் குழுக் கூட்டம் குழுத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ. ஜஃபர் (பலாஹி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
2024.01.27ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் இவ்வாண்டுக்கான திட்டமிடல் கூட்டம் குழுத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஏ.சி.எம். அப்துர் ரஹ்மான் (ஸஃதி) தலைமையில் இடம்பெற்றது.
2024.01.27ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மூதூர் கிளையின், ஆண்டிற்கான 02 வது மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். அப்துல் ஸபூர் (பத்தாஹி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
2024.01.29ஆம் திகதி ஜம்இய்யாவின் இரத்தினபுரி மாவட்ட நிறைவேற்றுக் குழு மற்றும் ஜம்இய்யாவின் சமூக சேவைப் பிரிவின் உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ZOOM தொழிநுட்பம் வாயிலாக நடைபெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவினால் பெப்ரவரி மாதம் இரத்தினபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் மூக்குக் கண்ணாடி வழங்கல் செயற்திட்டத்தை நேர்த்தியாக அமைத்துக் கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
2024.01.27ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு கால சேவையை முன்னிட்டு ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கௌரவிப்பு விழா சிப்பிக்குளம் அந்-நூர் ஜும்மா மஸ்ஜிதில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பிரதம அதிதிகளாக ஜம்இய்யாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் ஜம்இய்யாவின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
2024.01.30ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டி நகர கிளை உறுப்பினர்களுக்கு அஸீஸா பௌன்டேசன் ஏற்பாட்டில் ஜெர்மன் முஸ்லிம் ஹெல்ஃபன் அமைப்பின் மூலம் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கண்டி மீரா மகாம் பள்ளி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2024.01.30ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் 2024ஆம் ஆண்டுக்கான திட்டமிடல் நிதிக் குழுக் கூட்டம் குழுத்தலைவரும் கிளைப் பொருளாளருமாகிய அஷ்-ஷைக் எம். சாஜுத்தீன் (றியாழி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
2024.01.31ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிககொள்ள கிளையின் மாதாந்த செயற்குழு கூட்டம் உப தலைவர் அஷ்-ஷைக் லபீர் அவர்களின் தலைமையில் நிககொள்ள ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இதில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கிண்ணியா கிளையினால் 2024 ஜனவரி மாதம் வாராந்த நிர்வாக கூட்டங்கள் நான்கும் விஷேட கூட்டங்கள் மூன்றும் கலாநிதி அஷ்-ஷைக் ஏ.ஆர். நஸார் (பலாஹி) அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
இக்கூட்டங்களில் கிண்ணியா பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
2024.01.31ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட கிளையின் மாதாந்த கூட்டம் அஷ்-ஷைக் ரிஸ்வான் (ஹஸனி) அவர்களின் தலைமையில் குருவிட்ட புஸ்ஸல்ல ஜுமுஆ பள்ளிவாயிலில் நடைபெற்றது.
2024.01.13ஆம் திகதி ஜம்இய்யாவின் குருநாகல் மாவட்டம் எலபடகம கிளையின் மாதாந்தக் கூட்டம் அஷ்-ஷைக் எம்.என்.எம். நஸ்ரின் (ரஷாதி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
- ACJU Media -