01) 2024.09.01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ரிதீகம கிளையின் நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஸைத் (ஹஸனி) அவர்களின் தலைமையில் பானகமுவ முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், ஊரிலுள்ள பாடசாலைகள் மற்றும் மத்ரஸாக்களின் தரவுகளை சேகரித்து அவற்றின் குறைகளை நிவர்த்தி செய்யும் முகமாக கருத்தரங்குகளை நடாத்தல், குத்பாக்களில் தேர்தல் கால விழிப்புணர்வுகளை வழங்குதல், ஷாமஇலுத் திர்மிதியினை மஸ்ஜிதுகளில் வாசித்தல், கிளைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆலிம்களை ஒன்றுசேர்த்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
02) 2024.09.01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முசலிப் பிரதேசக் கிளையின் நிர்வாகக்குழு ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வான் (காஸிமி) அவர்களின் தலைமையில் புதுவெளி தக்வா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், கிளை நிர்வாகிகளுக்கான சில அறிவுரைகள் வழங்கப்பட்டதோடு பிரதேசத்திலுள்ள ஆலிம்களின் தரவுகளை ஒன்றுதிரட்டல், ஜம்இய்யாவின் அங்கத்துவ அடையாள அட்டை, கிளைக்கான காரியாலயம் அமைத்தல், சமூக சேவைகளை வீரியப்படுத்தல், ரபீவுல் அவ்வலை முன்னிட்டு ஷமாஇலுத் திர்மிதியினை மஸ்ஜிதுகளில் நடைமுறைப்படுத்தல், கதீப்மார்களின் மேம்பாடு தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
03) 2024.09.01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வில்பொல பிரதேசக் கிளையின் மாதந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் நஸீர் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில், இஸ்லாத்தை ஏற்றவர்கள் விவகாரம், வாலிபர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றை நடாத்துதல், பிரதேசத்திலுள்ள ஆலிம்கள், ஆலிமாக்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள பாடசாலைகள், அல்-குர்ஆன் மத்ரஸாக்கள் ஆகியவற்றின் தகவல்களை திரட்டுதல், ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு மஸ்ஜிதுகளில் ஷாமஇலுத் திர்மிதியை பிரச்சாரம் செய்தல் மற்றும் குத்பாக்களை நடாத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன. மேலும் தகவல்களை திரட்டும் பணிகளுக்காக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
04) 2024.09.03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு கிழக்கு கிளையின் மாதாந்தக்கூட்டம் உப தலைவர் அஷ்-ஷைக் ஜப்ரிஸ் இஹ்ஸானி அவர்களது தலைமையில் பிரண்டியாவத்தை மஸ்ஜிதுல் உமரில் நடைபெற்றது.
இதில், ரபீஉனில் அவ்வலை முன்னிட்டு கிளைக்குட்பட்ட மஸ்ஜிதுகளில் ஷமாஇலுத் திர்மிதியினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்கள் எட்டப்பட்டதோடு கிளை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
05) 2024.09.04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர்s கிளையின் ஏற்பாட்டில் ஷமாஇலுத் திர்மிதியை வாசித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வர்ணனைகளை மக்கள் மையப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் மஸ்ஜிதுல் அப்ரார் மற்றும் மஸ்ஜிதுந் நயீம் பள்ளிவாயில்களில் ஆரம்பிக்கப்பட்டன.
இவ் விஷேட நிகழ்வுகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செப்டம்பர் 14ஆம் திகதி வரை இரு பள்ளிவாயில்களிலும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
06) 2024.09.04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எஹலியகொட பிரதேசக் கிளையின் நிர்வாகக்குழு ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் கலீலுர் ரஹ்மான் (நத்வி) அவர்களின் தலைமையில் மோரகலை அந்-நூர் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், ரபீஉனில் அவ்வல் மாதத்தையிட்டு ஷமாஇலுத் திர்மிதியை மக்கள் மயப்படுத்தல், மாணவர்களின் அல்-குர்ஆன் மத்ரஸாவுக்கான நேர முகாமைத்துவம் தொடர்பில் பிரதேச பாடசாலை அதிபர்களை சந்தித்தல், அப்பகுதி மஸ்ஜிதுகளில் கடமைபுரியும் இமாம்கள் மற்றும் முஅத்தின்களின் நலன்கருதி ETF பைத்துல்மால் திட்டத்தை ஆரம்பித்தல், அரசினால் வழங்கப்படும் மதகுரு அடையாள அட்டை, மற்றும் ஜம்இய்யாவின் அடையாள அட்டை, தர்மாச்சார்ய தீனிய்யாத் பரீட்சைக்கு விண்ணப்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
மேலும், அரபுக் கல்லூரிகளிலிருந்து புதிதாக பட்டம்பெற்று வெளியாகிய பிரதேசத்தின் இளம் ஆலிம்கள், ஊருக்கு புதிதாக வருகை தந்துள்ள பள்ளிவாயல் இமாம்கள் மற்றும் சவூதி அரேபியாவில் இயங்கி வரும் ராபிதா ஆலமில் இஸ்லாமி முஸ்லிம் உலக லீக்கின் அல்-குர்ஆனில் இஜாஸா பெறுவதற்காக கென்யா சென்று வந்த அஷ்-ஷைக் காரி வஸீம்கான் (ஷாபிஈ) ஆகியோர் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
07) 2024.09.04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எம். ஷிப்லி (மீஸானி) அவர்களது தலைமையில் பட்டாணிச்சூர் மொஹிதீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், இவ்வருடம் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வினை நடாத்துதல், மஸ்ஜிதுகளில் அர்-ரஹீக்குல் மக்தூம் மற்றும் ஷமாஇலுத் திர்மிதி ஆகிய நூல்களை வாசித்து மக்கள் மயப்படுத்தல், ஜம்இய்யாவின் மாதாந்த உதவிக் கொடுப்பனவுக்கான தெரிவு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
08) 2024.09.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு ஷமாஇலுத் திர்மிதி கிரந்தத்தை மக்கள் மயப்படுத்தும் சிறப்பு சொற்பொழிவுகள் மஸ்ஜிதுல் அப்ரார், மஸ்ஜிதுந் நயீம் ஆகிய பள்ளிவாயல்களில் நடாத்தப்பட்டன.
09) 2024.09.04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம்-அக்கரைப்பற்று கிளையின் நிர்வாகக்குழு கூட்டமானது குழு உறுப்பினர்களது பங்கேற்புடன் கனமூலை மஸ்ஜித் ஆயிஷாவில் நடைபெற்றது.
இதில், பிரதேசத்தின் 33 மஸ்ஜித்களின் நிர்வாகங்களை சந்தித்து ஷமாஇலுத் திர்மிதியை மக்கள் மயப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், கொத்தாந் தீவு, பெறுக்குவட்டான், சமீரகம, கனமூலை, கடையாமோட்டை, நள்ளாந்தளுவை போன்ற பகுதிகளில் உள்ள ஆலிம்களுடன் விஷேட சந்திப்பொன்றினை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
10) 2024.09.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் சமூக வலைத்தள ஊடக துறையில் பணிகளை மேற்கொள்ளும் சகோதரர்களுக்கான 'இஸ்லாமும் ஊடகமும்' எனும் தலைப்பிலான விஷேட கருத்தரங்கு கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், இஸ்லாமிய வரம்புக்குட்பட்டு ஊடக செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு சில வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இக்கருத்தரங்கில் வளவாளராக காத்தான்குடி Mind Zone Institute நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷைக் இஹ்ஸான் றஹீம் (ஹாஷிமி) அவர்கள் கலந்துகொண்டதோடு நிந்தவூரில் செயற்படும் Citizen Media, Nintavur Today, Asian News ஆகியவற்றின் பிரதானிகள் கலந்து பயன்பெற்றனர்.
11) 2024.09.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் அதன் இளைஞர் விவகாரப் பிரிவில் செயற்படும் இளம் ஆலிம்களுக்கான விஷேட கருத்தரங்கொன்று கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில், ஊரிலுள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு எதிர்காலத்தில் நிந்தவூரிலுள்ள அனைத்து ஆலிம்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு மற்றும் பிரதேச இளைஞர்களுக்கான ஒரு மாத தலைமைத்துவ பயிற்சியினை நடாத்துவது தொடர்பிலும் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இக்கருத்தரங்கில் வளவாளராக காத்தான்குடி Mind Zone Institute நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷைக் இஹ்ஸான் றஹீம் (ஹாஷிமி) அவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
12) 2024.09.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நற்பிட்டிமுனை கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல். நாஸிர் கனி அவர்களின் தலைமையில் கமு /நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில், ஊரில் உள்ள ஆலிமாக்களுக்கு தர்பியா நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல், மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பொருத்தமான தலைப்பில் துண்டு பிரசுரங்களை வெளியிடுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
13) 2024.09.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிககொள்ள கிளையின் ஏற்பாட்டில் நிககொள்ள ஜுமுஆ மஸ்ஜிதில் 30 தினங்களுக்கு ஷமாஇலுத் திர்மிதி - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்முக வர்ணனைகளை மக்கள் மயப்படுத்தும் சிறப்பு சொற்பொழிவுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், முதலாவது நிகழ்ச்சி நிககொள்ள ஜுமுஆ மஸ்ஜிதின் இமாம் அஷ்-ஷைக் யூஸுப் (ஸலீமி) அவர்களினால் சிறப்பாக நடாத்தப்பட்டது.
14) 2024.09.06ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொத்துவில் கிளையின் ஏற்பாட்டில் பொத்துவில் பெரிய ஜுமுஆ மஸ்ஜிதில் ரபீஉனில் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு ஷமாஇலுத் திர்மிதி கிரந்தத்தை மக்கள் மயப்படுத்தும் முகமாக சிறப்பு சொற்பொழிவுகள் நடாத்தப்பட்டன.
15) 2024.09.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எலபடகம பிரதேசக் கிளையின் மாதாந்த நிர்வாகக்குழு ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் எம்.என்.எம். நஸ்ரின் (ரஷாதி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், ஊரிலிருந்து உம்ரா செல்வோருக்கான வழிகாட்டல்களை வழங்குதல், ஒவ்வொரு மஸ்ஜித்களிலும் ஷமாஇலுத் திர்மிதி வாசித்தல், ரபிஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொது பயான் நிகழ்வொன்றை நடாத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
16) 2024.09.06ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எஹலியகொட கிளையின் ஏற்பாட்டில் விலேகொட தக்வா ஜுமுஆ மஸ்ஜிதில் ஷமாஇலுத் திர்மிதி - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்முக வர்ணனைகளை மக்கள் மயப்படுத்தும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு மற்றும் சிறுபிராயம்' எனும் தலைப்பில் முதலாவது நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனை எஹலியகொடை பஸார் ஜுமுஆப் பள்ளிவாயலின் பிரதான இமாம் அஷ்-ஷைக் ஹில்மி (அய்னி) அவர்கள் நடாத்தினார்கள்.
17) 2024.09.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முசலிக் கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு ஷமாஇலுத் திர்மிதி கிரந்தத்தை மக்கள் மயப்படுத்தும் செயற்றிட்டத்திற்கமைய முதலாவது வகுப்பு அஷ்-ஷைக் எஸ். முஜீபுர் ரஹ்மான் (பின்னூரி) அவர்களால் பொற்கேணி , ஹைராத் தக்கிய்யா (டவுன்) மஸ்ஜிதில் நடத்தப்பட்டது.
18) 2024.09.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அநுராதபுரம் நகர் கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம், தலைவர் அஷ்-ஷைக் வை. நிஹார் முஃப்தி அவர்களது தலைமையில் அளுத்கம ஜுமுஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.
இதில், ஜம்இய்யாவின் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், பயிற்சி மற்றும் மேம்பாட்டு செயலமர்வு, மஸ்ஜித் இமாம்களுக்கான நிகழ்ச்சி போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
19) 2024.09.06ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எஹலியகொட கிளையின் ஏற்பாட்டில் விலேகொட தக்வா ஜுமுஆ மஸ்ஜிதில் ஷமாஇலுத் திர்மிதி - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்முக வர்ணனைகளை மக்கள் மயப்படுத்தும் சிறப்பு சொற்பொழிவுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
20) 2024.09.06ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தம்பிடிய கிளையின் ஏற்பாட்டில் ஷமாஇலுத் திர்மிதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்முக வர்ணனைகளை மக்கள் மயப்படுத்தும் செயற்றிட்டத்தின் முதலாவது வகுப்பு தம்பிடிய மிஸ்பாஹியா மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதனை அஷ்-ஷைக் இனாமுல் ஹஸன் (இனாமி) அவர்கள் நடாத்தினார்கள்.
21) 2024.09.07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மன்னார் நகர் கிளையின் ஏற்பாட்டில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகள், பண்புகள், வர்ணனைகள் போன்ற விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அஷ்-ஷைக் நூருல்லாஹ் (ஹஸனி) அவர்களினால் மன்னார் பெரிய கடை முஹைதீன் ஜும்மா மஸ்ஜிதில் ஷமாயிலுத் திர்மிதி வாசிக்கப்பட்டது.
22) 2024.09.07ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருநாகல் நகர் கிளையின் ஏற்பாட்டில் தித்தவல்காலை ஜாமிஉ மஸ்ஜிதின் நூர் பள்ளிவாயலில் ஷமாஇலுத் திர்மிதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்முக வர்ணனைகளை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதற்கமைய, 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடட்கட்டமைப்பு' எனும் தலைப்பில் முதலாவது சொற்பொழிவை கிளையின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ. இர்ஷான் அஹ்மத் (ஜமாலி) அவர்கள் நடாத்தினார்கள்.
23) 2024.09.07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா திவுரும்பொல பிராந்திய கிளையினால் அப்பகுதியிலுள்ள பள்ளிவாசல்களான திவுரும்பொல மஸ்ஜிதுல் ஹுதா, ஆரிஹாமம் மஸ்ஜிதுல் அக்பர், அஹதியா நகர் மஸ்ஜிதுத் தக்வா, ஹபராவ மஸ்ஜிதுல் ஹைராத், எதுன்கஹகொடுவ மஸ்ஜிதுஸ் ஸலாம் ஆகிய ஜுமுஆ பள்ளிவாயல்களுக்கு ஷமாஇலுத் திர்மிதி தமிழாக்கம் அன்பளிப்பு செய்துவைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக கிளையின் தலைவர் மற்றும் நிர்வாகிகளாகவுள்ள ஆலிம்கள் சிலர் நிதியுதவி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
24) 2024.09.07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான 'ஒரு மாத கால தலைமைத்துவ சான்றிதழ் பயிற்சி நெறியில்' 02ஆம் தொகுதியினருக்கான அமர்வு கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில் கிளையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஜவாஹிர் (பலாஹி) அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு 'தலைமைத்துவமும் அதன் சவால்களும்' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
25) 2024.09.07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தம்பிட்டிய கிளை ஜம்இய்யாவின் மாதாந்தக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ராஸிக் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இதில், ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு மஸ்ஜிதுகளில் ஷாமாஇலுத் திர்மிதியை மக்கள்மயப்படுத்தும் திட்டத்தினை தம்பிட்டிய ஜுமுஆ மஸ்ஜிதில் ஏனைய மஹல்லாக்களையும் ஒன்றிணைத்து நடாத்துதல், கிளை உறுப்பினர்கள் சமூக சேவைகளை முன்னெடுக்க ஆர்வமூட்டல், ஆலிம்களின் ஆளுமைகளை மேம்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
அதனடிப்படையில், 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூக உறவுகளும் பண்பாடுகளும்' எனும் தலைப்பில் இரண்டாவது நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனை எஹலியகொடை கலவிடிகொட முத்தகீன் பள்ளிவாயலின் இமாம் அஷ்-ஷைக் ஸமீர் (மதனி) அவர்கள் நடாத்தினார்கள்.
26) 2024.09.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சாய்ந்தமருது-மாளிகைக்காடு கிளையின் உறுப்பினர்கள் மற்றும் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை கிளைகளின் உறுப்பினர்கள் ஆகியோரிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், குறித்த பிரதேசங்களின் கல்வி, கலை, கலாச்சார விழுமியங்களின் வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு அதற்காக நான்கு கிளைகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது .
27) 2024.09.08ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெல்கஹகொட கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ரியாஸ் ஸஹ்ரி அவர்களது தலைமையில் மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், கிளையின் உபகுழுக்களின் செயற்பாடுகள் பொறுப்புக்கள் நினைவூட்டப்பட்டதோடு பயான் நிகழ்ச்சியினை நடாத்தல், கிளையின் ஒருவருட பூர்த்தியினையிட்டு நிகழ்ச்சி நடாத்தல், ரபீஉனில் அவ்வலை முன்னிட்டு ஷமாஇலுத் திர்மிதியினை மஸ்ஜிதுகளில் நடைமுறைப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
28) 2024.09.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சூடுவெந்தபுலவு கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் கே.எம். நபீஸ் (நஜாஹி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், கிளை விவகாரம், பிரதேசத்தின் கல்வி, கிளைக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்தல், ஷமாஇலுத் திர்மிதி நிகழ்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
29) 2024.09.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் கிளையின் ஏற்பாட்டில் 1994 புலமை பரிசில் பரீட்சை வகுப்பினரின் அனுசரணையில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச செயலமர்வொன்று வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
30) 2024.09.09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஏ.எம். ஹாரூன் (ரஷாதி) அவர்கள் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில், அல்-குர்ஆன் மத்ரஸாக்களுக்கான வரைபு, ஜுமுஆ குத்பா வழிகாட்டல், முன்பள்ளிப் பாடத்திட்டம், ஆலிமாக்களுடனான ஒன்றுகூடல், பெண்களுக்கான தர்பிய்யா நிகழ்வுகளை நடாத்தல் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாயப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
31) 2024.09.09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு ஷமாஇலுத் திர்மிதி கிரந்தத்தை மக்கள் மயப்படுத்தும் செயற்றிட்டத்தின் 03ஆம் நாள் சிறப்பு சொற்பொழிவு மஸ்ஜிதுன் நயீம் பள்ளிவாயலில் நடைபெற்றது.
32) 2024.09.09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முசலிக் கிளையின் ஏற்பாட்டில் மன்/ பதியுதீன் முஸ்லிம் பாடசாலையின் காலைக் கூட்டத்தில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வான் (காஸிமி) அவர்களினால் 'அகிலத்தாரின் அருட்கொடை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்குணங்கள்' எனும் தலைப்பில் மாணவர்களுக்கு நற்சிந்தனை வழங்கப்பட்டது.
33) 2024.09.06ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எஹலியகொட கிளையின் ஏற்பாட்டில் விலேகொட தக்வா ஜுமுஆ மஸ்ஜிதில் ஷமாஇலுத் திர்மிதி - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்முக வர்ணனைகளை மக்கள் மயப்படுத்தும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், 09ஆம் திகதி ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இஸ்ரா மிஃராஜ் பயணம்' எனும் தலைப்பில் மூன்றாவது நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனை எஹலியகொடை கிளையின் முன்னாள் தலைவர் அஷ்-ஷைக் கலீலுர் ரஹ்மான் (நத்வி) அவர்கள் நடாத்தினார்கள்.
34) 2024.09.09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு கிழக்கு கிளை மற்றும் கொலன்னாவை மஸ்ஜித் சம்மேளம், அப்பகுதியில் உள்ள மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் ஆகியோரிடையிலான விஷேட ஒன்று கூடலொன்று நடைபெற்றது.
இதில், இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் விவாகம், விவாகரத்து பற்றிய தெளிவுகளை மக்கள் மயப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
35) 2024.09.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் ஷமாஇலுத் திர்மிதி 04ஆம் நாள் நிகழ்வு நிந்தவூர் மஸ்ஜிதுல் அப்ரார் மற்றும் மஸ்ஜிதுந் நயீம் ஆகிய பள்ளிவாயல்களில் இடம்பெற்றன.
36) 2024.09.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அக்குரனை கிளையின் ஷமாஇலுத் திர்மிதி-06ஆம் நாள் நிகழ்வு 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதிப் பேருரை' எனும் தலைப்பில் அஷ்-ஷைக் ரிபாய் (ரஹ்மானி) அவர்களினால் பத்ரிய்யீன் மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது. இதில் பிரதேசத்தின் பெண்களும் கலந்து பயன்பெற்றனர்.
37) 2024.09.10ஆம் திகதி, குருநாகல் மாவட்டம் - மடிகேமிதியால கிளையின் நிர்வாகக் குழு ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் வாரிஸ் ரஹ்மானி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில், பிரதேசத்தில் இயங்கும் அல்-குர்ஆன் மத்ரஸாக்களை ஒன்றிணைத்து செயற்படுத்தல் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
38) 2024.09.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முசலிக் கிளையின் ஏற்பாட்டில் ஷமாஇலுத் திர்மிதி தொடர் நிகழ்ச்சியானது 'நபிகள் நாயகம் ﷺ அவர்களின் நற்பண்புகள்' எனும் தலைப்பில் பொற்கேணி, ஹைராத் தக்கிய்யாவில் இமாமாக கடமையாற்றும் அஷ்-ஷைக் ஸப்ரான் (மஜீதி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
39) 2024.09.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - பட்டாணிச்சூர் கிளையின் பதவி தாங்குனர்களுக்கும் பிரதேசத்திலுள்ள மூத்த ஆலிம்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று மஸ்ஜிதுல் உஸ்மானியா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதன்போது, சவால்களை வென்று ஜம்இய்யாவின் பணிகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மூத்த ஆலிம்களிடமிருந்து பெறப்பட்டன.
40) 2024.09.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அக்குரனை கிளையின் ஷமாஇலுத் திர்மிதி-07ஆம் நாள் நிகழ்வு 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்பண்புகள்' எனும் தலைப்பில் அஷ்-ஷைக் ஹாஷிம் (நத்வி) அவர்களினால் பத்ரிய்யீன் மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது. இதில் பிரதேசத்தின் பெண்களும் கலந்து பயன்பெற்றனர்.
41) 2024.09.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பாணந்துறை கிளையின் நிர்வாகக் குழுக் கூட்டம் குழு உறுப்பினர்களது பங்குபற்றுதலுடன் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
42) 2024.09.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எஹலியகொடை பிரதேசக் கிளையின் உறுப்பினர்கள் மற்றும் எஹலியகொடை அல்-ஹிக்மா ஆரம்ப பாடசாலையின் கெளரவ அதிபர் ஆகியோரிடையிலான சந்திப்பு பாடசாலையின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில், பல்வேறு ஆக்கபூர்வமான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு எதிர்காலங்களில் நடைபெறவுள்ள பெற்றோர் சந்திப்பில் பெற்றோர்களுக்கான தர்பிய்யத் வழங்குவது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.
43) 2024.09.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சூடுவெந்தபுலவு பிரதேச கிளையின் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், பிரதேசத்திலுள்ள அல்-மதீனா சிறுவர் பாடசாலையின் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்ச்சியில் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இதில், பிரதேசத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்ததுடன் கிளையின் பங்களிப்பில் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
44) 2024.09.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முசலிக் கிளையின் ஏற்பாட்டில் ஷமாஇலுத் திர்மிதி தொடர் நிகழ்ச்சியானது 'நபிகள் நாயகம் ﷺ அவர்களின் நற்பண்புகள்' எனும் தலைப்பில் அஷ்-ஷைக் எம். நாஸிக் (நூரி) அவர்களால் பொற்கேணி, ஹைராத் தக்கிய்யாவில் நடாத்தப்பட்டது.
45) 2024.09.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வர்ணனைகளை மக்கள் மயப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய குணம் - அஷ்-ஷைக் மபாஹிம் (அஹ்ஸனி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அங்க அமைப்புகள் - அஷ்-ஷைக் இஹ்ஸான் (ரஷாதி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பணிவு: அஷ்-ஷைக் யுஸ்ரி அஹ்ஸன் (ஹாஷிமி)
46) 2024.09.12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முசலிக் கிளையின் ஏற்பாட்டில் ஷமாஇலுத் திர்மிதி தொடர் நிகழ்ச்சியானது 'நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அழகிய முன்மாதிரிகள்' எனும் தலைப்பில், அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வான் (காஸிமி) அவர்களால் வெள்ளிமலை, ஹுதா ஜுமுஆ மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது.
47) 2024.09.13ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையினால் மாவட்ட மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் இமாம்களுக்கு வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைவாக மாவட்ட பிரதான மஸ்ஜித்களில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வுகள் நடைபெற்றன.
48) 2024.09.13ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முசலிக் கிளையின் ஏற்பாட்டில் நபி ﷺ அவர்களின் நேர்முக வர்ணனைகளை மாணவர்கள் மயப்படுத்துதல் எனும் திட்டத்திற்கமைய மன்/ முசலி தேசியப் பாடசாலையின் காலைக் கூட்டத்தில், கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வான் (காஸிமி) அவர்களால் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு அகிலத்தாரின் அருட்கொடை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்குணங்கள் எனும் தொனிப் பொருளில் நற்சிந்தனை வழங்கப்பட்டது.
49) 2024.09.13ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வர்ணனைகளை மக்கள் மயப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வம்சாவளி - அஷ்-ஷைக் ழுப்ரத் முஃப்தி (ஹிழ்ரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளை கற்றுக் கொள்வதன் அவசியம் - அஷ்-ஷைக் மகாரிம் (ஹாஷிமி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு வைப்போம் - அஷ்-ஷைக் ஸல்மான் (ஹாஷிமி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்ப வாழ்க்கை - அஷ் ஷைக் ஷுகுர்தீன் (இஹ்ஸானி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய குணம் - அஷ்-ஷைக் இர்ஷாத் உவைஸ் (இன்ஆமி)
50) 2024.09.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மாத்தளை மாவட்டம் கலேவெல கிளையின் மாதாந்த நிர்வாகக் குழு கூட்டம், தலைவர் அஷ்-ஷைக் ஜே.அலி (ரஹ்மானி) தலைமையில் நடைபெற்றது.
இதில், சிங்கள தர்ஜுமா வழங்குதல், ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் மேம்பாடு செயலமர்வுக்கு கிளை உறுப்பினர்களை அனுப்புதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
51) 2024.09.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வர்ணனைகளை மக்கள் மயப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது அன்பு வைத்தல் - அஷ்-ஷைக் ஸியாத் (ரிழ்வானி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்ப வாழ்க்கை - அஷ்-ஷைக் ஷுகுர்தீன் (இஹ்சானி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வாலிப ஸஹாபாக்களும் - அஷ்-ஷைக் இர்ஷாத் ஹில்மி (இன்ஆமி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பணிவு - அஷ்-ஷைக் யுஸ்ரி அஹ்ஸன் (ஹாஷிமி)
52) 2024.09.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முசலிக் கிளையின் ஏற்பாட்டில் ஷமாஇலுத் திர்மிதி தொடர் நிகழ்ச்சியானது 'நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அழகிய முன்மாதிரிகள்' எனும் தலைப்பில், அஷ்-ஷைக் எஸ். முஜீபுர் ரஹ்மான் (பின்னூரி) அவர்களால் பொற்கேணி, ஹைராத் தக்கிய்யா டவுன் மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது.
53) 2024.09.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் பிரதேசத்திலுள்ள ஆலிம்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வொன்று தலைவர் அஷ்-ஷைக் ஏ.எம். ஹாரூன் (ரஷாதி) அவர்களின் தலைமையில் புதிய காத்தான்குடி, அல்-மனார் அர்-ராஷித் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் சில முக்கிய தீர்மானங்களும் எட்டப்பட்டன.
54) 2024.09.15 ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சூடுவெந்தபுலவு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் பிரதேசத்திலுள்ள கல்விமான்களுடனான சிநேகபூர்வ சந்திப்பொன்று கிளைத் தலைவர் அஷ்-ஷைக் கே. நபீஸ் (நஜாஹி) அவர்கள் தலைமையில் கிளைக் காரியலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதேசத்தின் ஆலிம்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கிராம சேவையாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்ததோடு பிரதேசத்தின் கலைக் கலாசார மற்றும் கல்வி விடயங்களின் மேம்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது.
55) 2024.09.16ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முசலிக் கிளையின் ஏற்பாட்டில் ஷமாஇலுத் திர்மிதி தொடர் நிகழ்ச்சியானது 'நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அழகிய முன்மாதிரிகள்' எனும் தலைப்பில், அஷ்-ஷைக் ஸப்ரான் (மஜீதி) அவர்களால் பொற்கேணி, ஹைராத் தக்கிய்யா டவுன் மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது.
56) 2024.09.16 மற்றும் 17, 18ஆகிய திகதிகளில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அடுலுகம கிளையின் ஏற்பாட்டில், கிராமத்தில் உள்ள 14 மஹல்லாக்களையும் இணைத்து, ஷமாஇலுத் திர்மிதி நிகழ்ச்சிகள் அடுலுகம பெரிய பள்ளிவாயலில் தொடர்ச்சியாக நடைபெற்றன.
இதில், மூன்று நாட்களும் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்பெற்றதுடன் 'தாரு ஆயிஷா' பெண்கள் அரபுக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கிராமத்தின் 2,800க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டார்கள்.
இந்நிகழ்வில் வளவாளராக வெலிகம மத்ரதுல் பாரி அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷைக் இல்மான் (இன்ஆமி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
57) 2024 ரபீஉனில் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அக்குரனை கிளையினால் நடாத்தப்பட்ட ஷமாஇலுத் திர்மிதி நிகழ்வுகளின் முழுத் தொகுப்பு
தலைப்பு 02:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வெட்கமும் நகைச்சுவையும்
உரையாற்றியவர் : அஷ்-ஷைக் மாஹிர் ஹாஷிமி - https://fb.watch/uFgdfxZNTk/
தலைப்பு 03 :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சு
உரையாற்றியவர் : அஷ்-ஷைக் ஸியாம் (யூசுபி) - https://fb.watch/uFgzi2_APG/
தலைப்பு 04 :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உணவு முறைகள்.
உரையாற்றியவர்: அஷ்-ஷைக் அன்வர்தீன் (பாரி) - https://fb.watch/uFgOI3nsDw/
தலைப்பு 05 :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்க வழிபாடுகள்.
உரையாற்றியவர் : அஷ்-ஷைக் இஸ்மத் (தீனி) - https://fb.watch/uFgZXU757o/
தலைப்பு 06 :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதிப் பேருரை
உரையாற்றியவர்: அஷ்-ஷைக் ரிபாய் (ரஹ்மானி) - https://fb.watch/uFh6ePYdPg/
தலைப்பு 07 :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்பண்புகள்.
உரையாற்றியவர்: அஷ்-ஷைக் ஹாஷிம் (நத்வி) - https://fb.watch/uFhc7NuLEf/
தலைப்பு 08:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிரிப்பும் புன்னகையும்.
உரையாற்றியவர்: அஷ்-ஷைக் முஃப்தி: அப்துல்லாஹ் (ஹாஷிமி) - https://fb.watch/uFhipkYUK1/
தலைப்பு 09 :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமண வாழ்வு.
உரையாற்றியவர் : அஷ்-ஷைக் ருஸ்னி (ரஹ்மானி) - https://fb.watch/uFjduo_zn8/
தலைப்பு 10 :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோற்றமும் ஆடை அணிகளும்.
உரையாற்றியவர்: அஷ்-ஷைக் யாஸீம் (ஸஃதி) - https://fb.watch/uFjsroK4qF/
தலைப்பு 11 :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதி நாட்கள்
உரையாற்றியவர்: அஷ்-ஷைக் நஜீம் (ஹாஷிமி) - https://fb.watch/uFjwBneYbb/
தலைப்பு 12 :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துதல்
உரையாற்றியவர்: அஷ்-ஷைக் அப்துல் காதர் (மழாஹிரி) - https://fb.watch/uFjAfzPBPU/
கேள்வி பதில் நிகழ்ச்சி:
அஷ்-ஷைக் ஹாஷிம் நத்வி மற்றும் அஷ்-ஷைக் இஸ்மத் தீனி - https://fb.watch/uFkLFoEZKQ/
58) 2024.09.18ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முசலிக் கிளையின் ஏற்பாட்டில் ஷமாஇலுத் திர்மிதி தொடர் நிகழ்ச்சியானது 'நபிகள் நாயகம் ﷺ அவர்களின் நற்பண்புகள்' எனும் தலைப்பில் அஷ்-ஷைக் எஸ். முஜீபுர் ரஹ்மான் (பின்னூரி) அவர்களால் பொற்கேணி, ஹைராத் தக்கிய்யாவில் நடாத்தப்பட்டது.
59) 2024.09.18ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மட்டக்களப்பு மாவட்டக் கிளை மற்றும் மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸலாம் மஸ்ஜித் நிர்வாகம் ஆகியவற்றிற்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று ஜாமிஉஸ் ஸலாம் மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், சமூகத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டக் கிளைகளையும் இத்திட்டத்தில் இணைப்பதாகவும், வலயக்கல்வி பணிப்பாளரை சந்தித்து பாடசாலைகளில் கல்வி மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
60) 2024.09.19ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா திஹாரி கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஸைபுல்லாஹ் இஹ்ஸானி அவர்களின் தலைமையில் திஹாரிய, ஈமானிய்யா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில், ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் மூலமாக நடாத்தப்பட்ட கம்பஹா மாவட்டத்திற்கான செயலமர்வு பற்றிய தெளிவு அனைவருக்கும் வழங்கப்பட்டதோடு ஆலிம்கள் விவகாரம், அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரம், ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு விவகாரம், இளைஞர் விவகாரம் ஆகிய முக்கிய நான்கு பிரிவுகளுக்கு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
61) 2024.09.20ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிக்ககொல்ல கிளையின் ஏற்பாட்டில் பிரதேசத்திலுள்ள ஆலிம்களுடனான விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதில், ஊரில் உள்ள ஆலிம்களை தனிப்பட்ட முறையில் நேரடியாக சந்தித்தல், சந்தா சேகரிப்பு, வெளிநாடுகளில் உள்ள ஆலிம்களைகளை WhatsApp குழுமத்தில் இணைத்தல் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
62) 2024.09.21ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சாளம்பைக் குளம் பிரதேசக் கிளையின் மாதாந்த நிர்வாககுழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் என்.பீ. ஜுனைத் (மதனி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில், வெற்றிகரமாக ஷமாஇலுத் திர்மிதி நிகழ்ச்சி நடாத்தப்பட்டமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான விஷேட கருத்தரங்குகளை நடாத்தல், கிளைக்கான கட்டடம் அமைப்பதற்கான காணி விவகாரம் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
63) 2024.09.24ஆம் திகதி, ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு எஹலியகொட கிளையினால், விலேகொட தக்வா ஜுமுஆப் பள்ளிவாயலில் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவந்த ஷமாஇலுத் திர்மிதியை மக்கள் மயப்படுத்தும் செயற்றிட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
முதலாவது நாள்
நபி ﷺ அவர்களின் பிறப்பு மற்றும் சிறுபிராயம் எனும் தலைப்பில் அஷ்-ஷைக் ஹில்மி (அய்னி) அவர்கள் நடாத்தினார்கள்.
இரண்டாவது நாள்
நபி ﷺ அவர்களின் சமூக உறவுகளும் பண்பாடுகளும் எனும் தலைப்பில் அஷ்-ஷைக் ஸமீர் (மதனி) அவர்கள் நடாத்தினார்கள்.
மூன்றாவது நாள்
நபி ﷺ அவர்களின் இஸ்ரா மிஃராஜ் பயணம் எனும் தலைப்பில் அஷ்-ஷைக் கலீலுர் ரஹ்மான் (நத்வி) அவர்கள் நடாத்தினார்கள்.
நான்காவது நாள்
நபி ﷺ அவர்களின் பலதார திருமணங்கள் எனும் தலைப்பில் அஷ்-ஷைக் காரி வஸீம்கான் (ஷாபிஈ) அவர்கள் நடாத்தினார்கள்.
ஐந்தாவது நாள்
நபி ﷺ அவர்களின் மக்கா வாழ்கை எனும் தலைப்பில் அஷ்-ஷைக் அப்துல் காதிர் (பெளஸி) அவர்கள் நடாத்தினார்கள்.
ஆறாவது நாள்
நபி ﷺ அவர்கள் தீனை நிலைநாட்டுவதற்காக பட்ட கஷ்டங்கள் எனும் தலைப்பில் அஷ்-ஷைக் அஸீம் (ஹகீமி) அவர்கள் நடாத்தினார்கள்.
ஏழாவது நாள்
நபி ﷺ அவர்களின் தாயிப் பயணம் எனும் தலைப்பில் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் (இர்ஷாதி) அவர்கள் நடாத்தினார்கள்.
எட்டாவது நாள்
நபி ﷺ அவர்களின் மதீனா வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் எனும் தலைப்பில் அஷ்-ஷைக் நஸ்ரின் (ரவ்ழி) அவர்கள் நடாத்தினார்கள்.
ஒன்பதாவது நாள்
நபி ﷺ அவர்களின் இறுதிப் பேருரை எனும் தலைப்பில் அஷ்-ஷைக் இல்ஹாம் (ஹாபிழி) அவர்கள் நடாத்தினார்கள்.
பத்தாவது நாள்
நபி ﷺ அவர்களின் இறுதி நாட்களும் வபாத்தும் எனும் தலைப்பில் அஷ்-ஷைக் ஸல்மான் (மழாஹிரி) அவர்கள் நடாத்தினார்கள்.
64) 2024.09.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், புத்தளம் பாத்திமா பாலிகா முஸ்லிம் தேசிய பாடசாலை காலைக் கூட்டத்தில் 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் மாணவிகளுக்கு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
இதனை, புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) அவர்கள் நிகழ்த்தினார்கள். அத்தோடு சமூகத்துக்கு பிரயோசனம் உள்ள மாணவிகளை உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இஸ்லாமிய கலாசார கழகம் ஒன்றும் பாடசாலையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
65) 2024.09.24ஆம் திகதி, அல்-இஹ்லாஸ் சனசமூக நிலையம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பாலமுனைக் கிளை ஆகியன இணைந்து நடாத்தும், ஆரம்ப பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களுக்கான ஒரு மாத கால ஆன்மீக பயிற்சிநெறி தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கூட்டம் பாலமுனை பெரிய ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இதில், தரம் ஐந்து மாணவர்களுக்கான ஆன்மீகப் பயிற்சிநெறியில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கியமான தலைப்புகள் மற்றும் நெறியை பூர்த்தி செய்யக்கூடிய மாணவர்களுக்கான பரீட்சை, பாராட்டு நிகழ்வு என்பனவற்றை ஏற்பாடு செய்வது போன்ற பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
66) 2024.09.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த நிர்வாகக் குழு ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் ஷுகுர்தீன் (இஹ்ஸானி) அவர்களின் தலைமையில் கொழும்பு-புதுக்கடை, மஸ்ஜிதுல் புகாரி பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், வருடாந்த திட்டம் சம்பந்தமான கூட்டம், கொழும்பு அல்-ஹிஜ்ரா பாடசாலையின் இஸ்லாமிய தின நிகழ்ச்சி, கொழும்பு மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி நடாத்தல் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
67) 2024.09.25ஆம் திகதி, நிந்தவூர் பொது மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள அரபா சுற்று தொடரின், ஏற்பாட்டுக் குழுவினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டு கலாசார நடைமுறைகளைப் பேணி, தொடரினை சிறப்பாக நடாத்துமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
68) 2024.09.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முசலிக் கிளையின் ஏற்பாட்டில், மன்/பண்டாரவெளி முஸ்லிம் மகா வித்தியாலய காலைக் கூட்டத்தில் 'அகிலத்தாரின் அருட்கொடை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நற்குணங்கள்' எனும் தலைப்பில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வான் (காஸிமி) அவர்களால் மாணவர்களுக்கு நற்சிந்தனை வழங்கப்பட்டது.
69) 2024.09.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் கொ/அல்-ஹிதாயா பாடசாலையில் தரம் 10, 11 இல் கற்கும் மாணவர்களுக்கான ஆன்மீக வழிகாட்டல் நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வை கொழும்பு மத்திய கிளையின் உப செயலாளர் அஷ்-ஷைக் ஸல்மான் (ஹாஷிமி) அவர்கள் நிகழ்த்தினார்கள்.
70) 2024.09.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் வழிகாட்டலுக்கு அமைய அல்-குர்ஆன் விளக்கவுரை அம்ம ஜுஸ்உ தப்ஸீர் வகுப்பு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, கொழும்பு மாளிகாவத்தை அல்-மஸ்ஜிதுல் முனவ்வராவில் நடைபெற்றது.
இதில், கொழும்பு மத்திய கிளையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்ததோடு, அஷ்-ஷைக் இர்ஷாத் இன்ஆமி அவர்கள் அம்ம ஜுஸ்உ தப்ஸீர் நூல் பற்றிய அறிமுகத்கை முன்வைத்தார்கள்.
71) 2024.09.28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அநுராதபுர மாவட்ட கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாஸீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், தலைமையகத்தினால் நடாத்தப்படும் பயிற்சி மற்றும் மேம்பாட்டு குழுவின் பயிற்சி நெறிக்கு ஆலிம்களை அனுப்புதல், ஷமாஇலுத் திர்மிதி நிகழ்ச்சித் திட்டம், மாவட்டத்திலுள்ள பிரதேசக் கிளைகளின் விவகாரம், அநுராதபுரம் டவுன் ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகத்தை சந்தித்தல் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
72) 2024.09.28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கற்பிட்டி கிளையின் நான்காவது நிர்வாகக் குழு ஒன்று கூடல் தலைவர் அஷ்-ஷைக் முபாஸில் உஸ்மானி அவர்களின் தலைமையில் பள்ளிவாசல் துறை முஹைதீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், கிளை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
73) 2024.09.29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பயிற்சி மற்றும் மேம்பாட்டுக்கான குழுவின் அறிமுக நிகழ்வு ஹம்பாந்தோட்டை மாவட்ட பானுவல மஸ்ஜிதில் நடைபெற்றது. இதில், வளவாளராக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
74) 2024.09.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் உப தலைவர் அஷ்-ஷைக் ஷுகுர்தீன் அவர்களின் தலைமையில் தெமட்டகொட கனீமதுல் காஸிமிய்யா ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஆலிம்களை ஒன்றிணைத்து வலுவூட்டல் நிகழ்ச்சி ஒன்றை நடாத்துதல் மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகளின் இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான குத்பா வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றினை நடாத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
75) 2024.09.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அட்டாளைச்சேனை கிளையின் நிர்வாகக் குழு ஒன்றுகூடல் தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஷைக் யூ.எம். நியாஸ் (ஷர்க்கி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில், கிளையின் காரியாலயத்திற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்தல், கடந்த ஓரிரு வருடங்களில் பட்டம் பெற்று வெளியாகிய புதிய ஆலிம்கள், ஆலிமாக்கள் மற்றும் ஹாபிழ்கள் ஹாபிழாக்களின் தகவல்களைத் திரட்டல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு அப்பணிகளுக்கான பொறுப்புதாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
76) 2024.09.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனைக் கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். முர்ஷித் முஃப்தி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், கிளை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
- ACJU Media -