2024.04.01ஆம் திகதி மருதமுனை ஜம்இய்யத்துல் உலமாவின் வருடாந்த இப்தார் நிகழ்வு கிளைத் தலைவர் அஷ்-ஷைக் அன்ஸார் நளீமி அவர்களின் தலைமையில் தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. இதில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் தாருல் ஹுதா அரபிக்கல்லூரியின் பணிப்பாளருமான அஷ்-ஷைக் முபாறக் மதனி, அஷ்-ஷைக் முஜீப் ஸலபி, மப்ராஸ் நளீமி  ஆகியோருடன் கிளையின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

2024.04.02ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முல்லைத்தீவு மாவட்ட கிளையினால் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அவர்களுக்கு அல்-குர்ஆன் தமிழாக்கம் (ஜுஸ்உ அம்ம) வழங்கி வைக்கப்பட்டதோடு அல்-குர்ஆன் பற்றிய தெளிவுகளும் வழங்கப்பட்டன. மேலும் ரமழான் மாதத்தின் சிறப்புகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

 

2024.04.02ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரக்குழுவின் வழிகாட்டலில் கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான ரமழான் தர்பிய்யாஹ் நிகழ்வு கொழும்பு, மருதானை சின்ன ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2024.04.03ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-வவுனியா பட்டாணிச்சூர் கிளையின் ஏற்பாட்டில் கூட்டு ஸகாதுல் பித்ரா விநியோக நிலையமொன்று பட்டாணிச்சூர் மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் கிளை உறுப்பினர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

2024.04.04ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹெம்மாதகமை கிளையின் ஏற்பாட்டில் கிளையிலுள்ள உலமாக்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோருக்கான இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

 

2024.04.05ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வில்பொல கிளையினால் 'முஸாபகது றமழான்' போட்டி நிகழ்ச்சி மிக சிறப்பாக நடாத்தப்பட்டது.

 

2024.04.05ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா திஹாரி கிளையின் வருடாந்த இப்தார் நிகழ்வு அஷ்-ஷைக் ஸைபுல்லாஹ் இஹ்ஸானி தலைமையில் ஹிமா இஸ்லாமிய நிறுவனத்தின் அனுசரனையுடன் ஈமானிய்யா அரபுக்கல்லூரியில் நடைபெற்றது.

 

2024.04.06ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையினால் அல்-குர்ஆன் விளக்கவுரை அம்ம ஜுஸ்உ தப்ஸீர் வகுப்பு அங்குரார்பன நிகழ்வு அஷ்-ஷைக் இர்ஷாத் இன்ஆமி அவர்களினால் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து மருதானை சின்னப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2024.04.07ஆம் திகதி மாத்தறை மாவட்ட ஜம்இய்யாவினால் 'ரமழான் காலத்தில் பிறமதத் தலைவர்களைச் சந்தித்தல்' என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் வெலிகம புத்த சாசன பாதுகாப்பு சபையின் செயலாளர் இந்திரசிறி தேரர் அவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றதோடு கற்றல் பயிற்சி புத்தகங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டன. மேலும், நோன்பு மற்றும் அல்-குர்ஆன் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டன.

 

2024.04.08ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா-தெல்கஹகொட கிளையின் உலமாக்கள், ஹாபிழ்கள் மற்றும் மத்ரஸா மாணவர்களுக்கான இப்தார் நிகழ்வு கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.என்.எம். றியாஸ் (ஸஹ்ரி) அவர்களது இல்லத்தில் இடம்பெற்றது.

 

2024.04.10ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பேருவளை கிளையினால் ரமழான் மாதத்தில் அல்-குர்ஆன் ஹிஸ்பு மஜ்லிஸில் தொடர்ச்சியாக கலந்துகொண்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு தர்கா நகர், மஸ்ஜிதுல் fபலாஹில் நடைபெற்றது.

 

2024.04.12ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பதுளை மாவட்டம், பசறை கிளையின் மாதாந்த காரியக்குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அப்துஸ் ஸலாம் (ஷர்கி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2024.04.14ஆம் திகதி, நோன்பு பெருநாள் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தல்கஸ்பிடிய ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் ஹபலக்காவ-விகாரை விகாராதிபதி ஆகியோரது ஏற்பாட்டில் இன, மத நல்லினக்க ஒன்றுகூடல் ஒன்று தலாவ பத்ர் தக்யா பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2024.04.16ஆம் திகதி, ஜம்இய்யாவின் பசறை கிளையினால் ரமழான் காலத்தில் அல்-குர்ஆனின் ஒரு ஜுஸுஉவை குறுகிய நாட்களுக்குள் மனனம் செய்த றிழ்வானியா-பகுதி நேர ஆண்கள் ஹிப்ழ் பிரிவில் கற்கும் ஏ.பீ. அப்துல்லாஹ் என்ற மாணவருக்கு  கிளைத் தலைவர் மற்றும் ஹிப்ழ் பிரிவின் உஸ்தாத் ஆகியோர் மூலமாக பணப் பரிசு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 

2024.04.21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு வெலிகம சுவஸெவன கத்தோலிக்க தேவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வும் விஷேட பிரார்த்தனையும் நடைபெற்றது.

 

2024.04.21ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் ஏப்ரல் மாத ஒன்று கூடல் தலைவர் அஷ்-ஷைக் றமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் பட்டாணிச்சூர்-மர்கஸ் பள்ளிவாசலில் நடைபெற்றது.

 

2024.04.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-மருதமுனை கிளையின் ஏற்பாட்டில் இம்முறை க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் மருதமுனையின் பிரதான பாடசாலைகளான கமு/கமு/ அல்மனார் மத்திய கல்லூரி, கமு/கமு/ ஷம்ஸ் மத்திய கல்லூரி, கமு/கமு/ புலவர் மனி ஷரிபுத்தீன் பாடசாலை, கமு/கமு/ அல்-ஹம்றா வித்தியாலயம், கமு/கமு/ அல்-மதீனா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் திறமையான வளவாளர்களைக் கொண்டு கருத்தரங்குகள் நடாத்தப்பட்டன.

 

2024.04.26ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கொழும்பு மத்தியில் இருந்து இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான துஆ பிரார்த்தனை மற்றும் அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு கொழும்பு, ஹமீத் அல்-ஹுஸைனிய்யாஹ் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

2024.04.27ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருநாகல் மாவட்ட செயற்குழு ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். சுஐப் தீனி அவர்களின் தலைமையில் மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

 

2024.04.27ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-குருநாகல் மாவட்ட மத்திய சபை ஒன்றுகூடல் மாவட்டத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். சுஐப் தீனி அவர்களது தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.

 

2024.04.27ஆம் திகதி கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்தில் உள்ள அரபு மத்ரஸாக்களில் இருந்து இம்முறை க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அரபு மற்றும் அரபு இலக்கியப் பாடங்களுக்கான கருத்தரங்கு அஷ்-ஷைக் ரிபாஸ் ஹக்கானி அவர்களினால் கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. இதில் 08 மத்ரஸாக்களில் இருந்து 84 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

 

2024.04.28ஆம் திகதி ஜம்இய்யாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட அரபு மத்ரஸாக்களின் அதிபர்மார்களுடனான ஒன்றுகூடலும் மஷூராவும் மாவட்டக்கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் 23 அரபு மத்ரஸாக்களின் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

 

2024.04.29ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய  கிளையின் மாதாந்த மஷுரா உப தலைவர் அஷ்-ஷைக் இர்ஷாத் உவைஸ் (இன்ஆமி) அவர்களின் தலைமையில் கொழும்பு தெமடகொட தக்வா மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.04.30ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் காரியக் குழுக்கூட்டம் தலைவர் அஷ் ஷைக் அனீஸ் யூசுபி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில்  நடைபெற்றது.

 

 

2024.04.28ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டம் கற்பிட்டி கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் பதில் தலைவர் அஷ்-ஷைக் ஜெமீல்கான் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் ஆலங்குடா முஹய்யித்தீன் பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

- ACJU Media -