2024.08.02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அபுக்காகம கிளையின் நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஹாஜா முஹிதீன் அவர்களது தலைமையில் ஸைத் பின் ஸாபித் அரபுக் கல்லூரி காரியாலயத்தில் நடைபெற்றது.
கூட்டு ஸகாத் பற்றி மக்களுக்கு தெளிவூட்டி ஸகாத் குழு ஒன்றை அமைத்தல், கிளைக்கான காரியாலயம் நிர்மாணித்தல் மற்றும் பொதுக்கூட்டம் நடாத்தல் போன்ற பல முக்கிய விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.08.03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முசலி பிரதேசக் கிளையின் நிர்வாகிகளுக்கான முதலாவது குழுக்கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வான் அவர்களது தலைமையில் சிலாவத்துறை நகர் பள்ளிவாயலில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் ஆலிம்கள் விவகாரம், சமூக சேவைகள், பிறை விவகாரம் ஆகிய முக்கிய மூன்று உப குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
2024.08.03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். சலீம் (ஷர்க்கி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், உப தலைவர் வெற்றிடத்திற்கு ஒருவரை தெரிவு செய்தல், கிளையின் புதிய காரியாலய திறப்பு விழாவிற்கான நிதி திரட்டல் பணி, 2025ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியினை தயாரித்தல் ஆகியவற்றுடன் மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.08.03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹிங்குலோயா கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் அன்பfஸ் (தீனி) அவர்களது தலைமையில் மஹவத்த மஸ்ஜிதுல் ஜன்னாஹ்வில் நடைபெற்றது.
இதில் ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழு மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுகள் வழங்கப்பட்டதோடு ஹிங்குலோயா கிளைக்குட்பட்ட மஸ்ஜிதுகளில் ஜம்இய்யாவின் பணிகளை முன்னெடுக்க தலா ஒவ்வொரு மஸ்ஜிதுக்கும் ஒரு பொறுப்பாளரும் நியமிக்கப்பட்டனர்.
2024.08.03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மாத்தளை நகர் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் இர்ஸான் முஃப்தி அவர்களின் தலைமையில் கொங்காவெல மஸ்ஜிதில் அமைந்துள்ள புதிய காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், கிளையின் புதிய காரியாலயம் மற்றும் Harmony Hub வடிவமைப்பிற்கான திட்டம் முன்வைக்கப்பட்டதுடன் பைத்துல் மால் அமைத்தல், மாத்தளை நகர் கிளைக்குட்பட்ட சகல ஆலிம்களை ஒன்று சேர்த்து கலந்துரையாடுதல் போன்ற பல விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
2024.08.03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனைக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் முஃப்தி முர்ஷித் அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், ஆலிம்கள் மேம்பாடு மற்றும் ஊருடைய முன்னேற்றம் சம்பந்தமாக பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு ஏனைய சில விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
2024.08.04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு கிழக்குக் கிளை மற்றும் கொலன்னாவை மஸ்ஜிதுகள் சம்மேளனம் ஆகியவற்றின் நிர்வாகிகளிடையேயான விஷேட கலந்துரையாடலொன்று கொலன்னாவை ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
'காத்திரமான மஸ்ஜித் நிர்வாகத்தினூடாக சமூகத்தை வலுவூட்டல்' எனும் தொனிப்பொருளில் ஜம்இய்யாவின் கொழும்பு கிழக்குக் கிளை, கொலன்னாவை மஸ்ஜித் சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான செயலமர்வு தொடர்பில் கலந்துரையாடவே குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
2024 ஆகஸ்ட் 25ஆம் திகதி, கொதடுவ நாஸ் கலாச்சார நிலையத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த செயலமர்வானது முஸ்லிம் சமய பண்பட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்ப் சபை ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்போடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024.08.04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் கிளை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கமு / லாபிர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தொழுகையின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் விதத்தில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு அவற்றை பிரதேசத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் விநியோகிப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டது.
2024.08.04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் நிர்வாகக் குழுக் கூட்டம் கிளையின் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.ரீ. ரஹ்மான் அலி அவர்கள் தலைமையில் ஹிஜ்ராபுரம் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், இஸ்லாத்தினை ஏற்றவர்களது விபரங்களை திரட்டுதல், ரபீஉனில் அவ்வல் மாதத்தினையிட்டு மாவட்டத்தின் அனைத்து மஸ்ஜிதுகளுக்கும் குத்பாக்கள் வழங்குதல், அஹதிய்யா பாடசாலை தொடங்குதல், மாவட்டத்தின் அனைத்து மஸ்ஜிதுகளிலும் அல்-குர்ஆன் மத்ரஸாக்களை ஆரம்பிப்பது தொடர்பில் நிர்வாகங்களோடு கலந்துரையாடுதல் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.
2024.08.04ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிர்வாகத் தெரிவின் பின்னரான முதலாவது கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஸுஃப்யான் தலைமையில் கே.கே.எஸ். வீதி, மஹ்மூதிய்யா மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், தலைமையகத்தினால் நடாத்தப்படும் பயிற்சி மற்றும் மேம்பாடு குறித்தான செயலமர்வுகளுக்கு கிளையின் 05 ஆலிம்கள் தெரிவு செய்யப்பட்டதோடு கல்வி, பிறைக் குழு, பிரச்சாரக் குழு, ஹலால் குழு, ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு, நிதி நிறுவனங்களுக்கான குழு, இளைஞர் விவகாரம், மகளிர் விவகாரம், சமூக சேவை ஆகிய உப குழுக்கள் அமைக்கப்பட்டு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்தோடு, பிறமத பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாம் பாடத்தை கற்றுக் கொடுத்தல், ஊர் விவகாரங்களை கண்காணித்தல், ரபீஉனில் அவ்வலை முன்னிட்டு விஷேட நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் கிளைக்கான உத்தியோகபூர்வ முகநூல் பக்கமொன்றை உருவாக்குதல் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
2024.08.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அநுராதபுரம் நகர் கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் நிஹார் முஃப்தி அவர்களது தலைமையில் கட்டுகலியாவ ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், புதிதாக நிர்வாகிகளை இணைத்தல், ஜம்இய்யாவின் அடையாள அட்டை பெறுதல், தலைமையகத்தினால் நடாத்தப்படும் பயிற்சி மற்றும் மேம்பாட்டு செயலமர்வுகளில் கலந்துகொள்ள உறுப்பினர்களை தெரிவு செய்தல், பைத்துல் மால் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.08.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருவிட்ட கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வான் அவர்களின் தலைமையில் அஷ்-ஷைக் ரிப்தி இஹ்ஸானி அவர்களுடைய வீட்டில் நடைபெற்றது.
இதில், மாவட்ட மற்றும் பிராந்தியக் கிளைகளுக்கான தெரிவு மற்றும் அஹதிய்யா பாடசாலை விவகாரம் போன்ற பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு கூட்டத்திற்கு புதிதாக வருகை தந்திருந்த ஹாபிழ்களும் கௌரவிக்கப்பட்டனர்.
2024.08.09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்ட அக்கரைப்பற்று கிளையின் ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் மிஹ்லார் நளீமி அவர்களின் தலைமையில் புழுதிவயல் மஸ்ஜிதுல் அபவைனில் நடைபெற்றது.
இதில், கல்விக் குழு, சமூக சேவை மற்றும் தகவல் குழு, ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு, ஆலிம்கள் விவகாரக் குழு, இளைஞர் விவகாரக் குழு, பிரச்சாரக் குழு, மஸ்ஜித் விவகாரம் மற்றும் சம்மேளனம், ஊடகம் மற்றும் வெளியீட்டுக் குழு, பிறைக் குழு போன்ற உப குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
2024.08.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்குடா கிளையின் ஏற்பாட்டில், 2023ஆம் கல்வி ஆண்டில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெற்று பல்கலைக்கழக நுழைவை எதிர்பார்த்திருக்கும் 54 மாணவ, மாணவியர்களை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி அந்-நூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
தாருஸ் ஸலாம் அரபுக் கல்லூரி, அந்-நூர் அகடமி, சிறாஜிய்யா அரபுக் கல்லூரி, நஹ்ஜா அரபுக் கல்லூரி, உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரி, ஸஹ்றா மகளிர் அரபுக் கல்லூரி ஆகியவற்றிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
2024.08.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக் கூட்டம் உப தலைவர் அஷ்-ஷைக் ஷியாம் யூசுபி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், சிறார்களுக்கான அல்-குர்ஆன் மத்ரஸா, ரபீஉனில் அவ்வல் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி சமூகத்துக்கு எடுத்துரைத்தல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
2024.08.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அம்பாறை மாவட்ட ஜம்இய்யாவின் நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி அவர்களின் தலைமையில் நிந்தவூர் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஜம்இய்யாவுக்கான நிதியைத் திரட்டல், அரபுக் கல்லூரிகளின் மேம்பாடு, தஃவா பணி, பிறை விவகாரம், ஜுமுஆ குத்பாக்கள் விவகாரம் போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.08.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இப்பாகமுவ பிராந்திய கிளையின் ஒன்றுகூடலொன்று தலைவர் அஷ்-ஷைக் ஹபீழ் ரவ்ழீ அவர்களின் தலைமையில் தம்புள்ளை வீதி-பன்னல ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், இளைஞர்களுக்கான ஆன்மீக வழிகாட்டல் நிகழ்வொன்றை மெல்சிரிபுர மாய்வள ஜுமுஆ மஸ்ஜிதில் நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
2024.08.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மன்னார், சூடுவெந்தபுலவு கிளையின் நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் கே. நபீஸ் நஜாஹி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலத்தில் நடைபெற்றது.
இதில், கிளை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு கிளையினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாப்பட்டது.
2024.08.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் 'இன்றைய புத்தளம், தன் இளைய தலைமுறையை முதலீடு செய்யவேண்டியது உயர் கல்வியிலா? அல்லது தொழில் முயற்சியிலா?' எனும் தலைப்பிலான சிறப்புப் பட்டிமன்றமானது 'ஸாஹிரா க்ரீன்' திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.
2024.08.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முள்ளிப்பொத்தானை கிளையின் நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் முனவ்வர் ஹுஸைன் பின் அப்துல் லதீப் ஹிழ்ரீ அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், அனைவருக்கும் குர்ஆன், வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான சமூகம், அனைவருக்கும் தரமான கல்வி, குடும்பங்களுக்கிடையில் அன்பான உறவு, பெண்கள் மேம்பாடு, சுத்தம் சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, சமூக கட்டமைப்பு, நாட்டுப்பற்று ஆகிய முக்கிய 10 அம்சங்கள் அடங்கிய மஹல்லாவை கட்டமைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
மேலும், அல்-குர்ஆன் மத்ரஸாக்களை மேம்படுத்துவது தொடர்பிலும் இதில் கலந்துரையாடப்பட்டது.
2024.08.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு வடக்குக் கிளையின் மாதந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் அவர்களது தலைமையில் கிரேன்ட்பாஸ், மஸ்ஜித் உமர் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் முஅல்லிம்களுக்கான ஒருநாள் பயிற்சி செயலமர்வினை நடாத்துதல் மற்றும் கிளைக்குட்பட்ட ஆலிம்களுக்கான ஒருநாள் வழிகாட்டல் நிகழ்ச்சியினை நடாத்துதல் போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
----------
2024.08.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கம்பஹா மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் நுஃமான் இன்ஆமி அவர்களது தலைமையில் திஹாரிய கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள விஷேட சந்திப்புக்கள் குறித்து கலந்துரையாடி தீர்மானிக்கப்பட்டதோடு ஜம்இய்யாவின் ஆலிம்கள் விவகாரக் குழுவினால் நடாத்தப்படவுள்ள கதீப்மார்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சிக்காக ஆலிம்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
2024.08.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அஷ்-ஷைக் எஸ்.எம். ஷிப்லி மீஸானி அவர்களது தலைமையில் சூடுவெந்தபுலவு கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், கிளை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளது அதிபர்கள், பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், திருமணப் பதிவாளர்கள், காதி நீதிபதிகள் ஆகியோரை சந்திப்பதாகவும் தீர்மானம் எட்டப்பட்டது.
2024.08.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெல்கஹகொட கிளையின் நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ரியாஸ் ஸஹ்ரி அவர்களது தலைமையில் மஸ்ஜிதுல் அப்ராரில் நடைபெற்றது.
இதில், வாராந்தம் தப்ஸீர் வகுப்பினை நடாத்துதல், கிளை நிர்வாகத்தின் ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு விஷேட ஒன்றுகூடலொன்றை ஏற்பாடு செய்தல் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.08.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருநாகல் மாவட்ட நிர்வாகக் குழு ஒன்றுகூடல் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். சுஐப் தீனி அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்டத்திலுள்ள ஆலிம்களை ஒன்றிணைத்து சந்திப்பொன்றினை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு அந்நிகழ்விற்கு வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நஸீர் அவர்களையும் அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு, குருநாகல் மாவட்டத்திலுள்ள 70 வயதிற்கு மேற்பட்ட ஆலிம்களை கௌரவிக்கும் வகையில் நிகழ்வொன்றினை நடாத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
2024.08.12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர் கிளையின் காரியாலயம், தலைவர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதில், பிரதேசத்தின் ஆலிம்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
2024.08.14ஆம் திகதி, ஒலுவில் பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் கன்னி குத்பா உரையினை நடாத்திய அஷ்-ஷைக் ஏ.எம். முபாஸித் அல்-பத்தாஹ் (நளீமி) அவர்களை பாராட்டும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒலுவில் கிளையின் நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு சென்று பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இதில், ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.08.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பங்கரகம்மன கிளையின் அவசர ஒன்றுகூடலொன்று தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எல். ஹாலித் ஷரபி அவர்களது தலைமையில் பங்கரகம்மன மஸ்ஜிதுன் நூரானியாவில் நடைபெற்றது.
இதில், பிரதேசத்தில் நீண்ட காலம் திருமணப் பதிவாளராக சேவையாற்றிய சகோதரர் அப்துல் ரஹீம், நீண்ட காலம் ஜுமுஆ மஸ்ஜிதில் முஅத்தினாக கடமையாற்றிய சகோதரர் ஷாஹுல் ஹமீத் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்க தீர்மானிக்கப்பட்டதோடு சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி சித்திபெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வினை நடாத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டது.
2024.08.17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிககொள்ள கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்வான் அவர்களது தலைமையில் நிககொள்ள ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், கிளையின் அங்கத்தவர் விவகாரம், நிதிவிவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டதோடு, வாராந்த தப்ஸீர் மற்றும் பிக்ஹ் வகுப்பு, மாதாந்த பெண்கள் தர்பியா போன்றவற்றை தொடர்ச்சியாக நடாத்துவது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.
----------
2024.08.17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மன்னார் நகர் கிளையின் மாதாந்தக்கூட்டம் குழு உறுப்பினர்களது பங்குபற்றலுடன் மூர் வீதி, ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், கிளை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.08.17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சாளம்பைக்குளம் பிரதேசக் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் என்.பீ. ஜுனைத் காஸிமி அவர்களின் தலைமையில் சாளம்பைக்குளம், மஸ்ஜிதுல் அக்ஸா ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், கிளைக்குட்பட்ட ஆலிம்களை ஜம்இய்யாவின் அங்கத்துவம் பெற வைத்தல், சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகளை நடாத்தல், கிளையின் ஆலிம்களது தகவல்களை திரட்டி நூலாக வெளியிடல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.08.21ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முள்ளிப்பொத்தானை கிளையின் தீர்மானத்தின் படி, 10 அம்சங்களை கொண்ட மஹல்லாவை கட்டமைத்தல் எனும் செயற்றிட்டத்தின் முதலாவது நகர்வாக 'அனைவருக்கும் அல்-குர்ஆன்' திட்டத்தினை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கூட்டம் புஹாரி ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், பிரதேசத்திலுள்ள ஆண்கள், பெண்களை மையப்படுத்தி செயற்றிட்டத்தினை ஆரம்பிப்பதற்கு 07 மஸ்ஜிதுகள் தெரிவு செய்யப்பட்டதோடு அதற்கான கால, நேரங்களும் வகுக்கப்பட்டன.
2024.08.22ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் காரியக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அனீஸ் யூசுபி அவர்களின் தலைமையில் அஷ்-ஷைக் உமர் பாரிஸ் நிழாமி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
இதில், போதை ஒழிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதோடு, பிரதேசத்தில் அல்-குர்ஆன் மத்ரஸாக்களை புதிதாக ஆரம்பித்தல், அழைப்புப் பணியினை வீரியப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டன.
2024.08.23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இப்பாகமுவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வொன்று மெல்சிரிபுர மாய்வல ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது.
இதில், தலைமை ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் நுஸ்ரத் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார்கள்.
2024.08.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மன்னார் மாவட்ட நிர்வாகிகளுக்கான மாதாந்தக் கூட்டம் அஷ்-ஷைக் எம்.ஏ.சீ.எம். அஸ்லம் இஸ்லாஹி அவர்களின் தலைமையில் மன்னார் பெரிய கடை, முஹைதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
ஆலிம்கள் விவகாரம், சமூக சேவைகள் மற்றும் பிரச்சாரம், பிறை விவகாரம், குர்ஆன் மத்ரஸா விவகாரம், 2024ஆம் ஆண்டுக்கான காலாண்டுத் திட்டம், காணி விவகாரம், சந்தாப் பணம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.08.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பசறை பிரதேசக் கிளையின் நிர்வாகக் குழு ஒன்றுகூடலொன்று தலைவர் அஷ்-ஷைக் அப்துஸ் ஸலாம் ஷர்கி அவர்களது தலைமையில் பசறை மஸ்ஜிதுல் இக்ராவில் நடைபெற்றது.
இதில், கிளை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.08.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் செயற்குழுக் கூட்டம் தலைவர் எம்.எம். மீராஸாஹிப் சலீம் ஷர்க்கி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது, புதிய உப தலைவராக அஷ்-ஷைக் ஏ. கலீலுர் ரஹ்மான் ஸலபி அவர்களும் புதிய செயற்குழு உறுப்பினராக எம்.ஏ.ஆர்.எம். றிஸ்கான் ஹாமி அவர்களும் சபையோரினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு கிளை தொடர்பிலான ஏனைய சில விவகாரங்களும் கலந்துரையாடப்பட்டன.
2024.08.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொலன்னறுவை மாவட்டக்கிளை நிர்வாகிகள் மற்றும் ஜம்இய்யாவின் பயிற்சி மேம்பாட்டுக்குக் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடையிலான விஷேட சந்திப்பொன்று பொலன்னறுவை மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் அலாவுதீன் பலாஹி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், பயிற்சி மற்றும் மேம்பாட்டுக் குழு பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதோடு குறித்த குழுவினால் நடாத்தப்படவுள்ள பயிற்சிநெறிகளில் கலந்துகொள்ளவிருக்கும் ஆலிம்களின் விபரங்களும் கோரப்பட்டன.
2024.08.25ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அம்பாறை மாவட்டக் கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேசக் கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோரிடையிலான விஷேட ஒன்றுகூடலொன்று மாவட்டத் தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி அவர்களின் தலைமையில் நிந்தவூர் ஜுமுஆப் பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், தலைமை ஜம்இய்யாவின் பயிற்சி மட்டும் மேம்பாட்டுக் குழுவினால் நடாத்தப்படும் ஆலிம்கள் விவகாரம், இளைஞர் விவகாரம், சகவாழ்வு, மத்ரஸா கல்வி ஆகிய 04 முக்கிய விடயங்களை மையப்படுத்திய பயிற்சிநெறிகளை வழங்குவது தொடர்பில் தெளிவுகள் வழங்கப்பட்டன.
2024.08.25ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இக்கிரிகொள்ளாவ கிளை மற்றும் இக்கிரிகொள்ளாவ மொஹிதீன் பெரிய ஜுமுஆ மஸ்ஜித் பரிபாலன சபை ஆகியன இணைந்து நடாத்திய ஆலிமாக்களுக்கான ஜனாஸா பற்றிய செயன்முறைப் பயிற்சி இக்கிரிகொள்ளாவ மொஹிதீன் பெரிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், சுமார் 50க்கும் மேற்பட்ட ஆலிமாக்கள் கலந்து பயன்பெற்றதோடு, குறித்த செயலமர்வில் ஜம்இய்யாவின் இக்கிரிகெள்ளாவ கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாஸீம் ரஹ்மானி அவர்கள் வளவாளராக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.08.26ஆம் திகதி, அட்டப்பள்ளத்திலுள்ள மஸ்ஜிதுல் ஹுதா ஜுமுஆப் பள்ளிவாயல், ரஷாதிய்யா பள்ளிவாயல், பக்ரு பள்ளிவாயல் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாயல் ஆகியவற்றில் காணப்படும் முஅல்லபா குடும்பங்களை பராமரித்தல் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல்கள் வழங்குதல் சம்பந்தமான கலந்துரையாடல் பள்ளிவாயல் நிர்வாகிகளுடன் இடம்பெற்றது.
2024.08.26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் தீர்மானத்தின்படி மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் பாடசாலையின் காலைக் கூட்டத்தின்போது விஷேட உரையொன்று நிகழ்த்தப்பட்டது. இவ்வுரையினை, ஜம்இய்யாவின் கொழும்பு மத்திய கிளையின் உறுப்பினர் அஷ்-ஷைக் யுஸ்ரி அஹ்ஸன் ஹாஷிமி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
2024.08.26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் தீர்மானத்தின்படி கொ/ அல்-ஹிக்மா பாடசாலையின் காலைக் கூட்டத்தின்போது விஷேட உரையொன்று நிகழ்த்தப்பட்டது. இவ்வுரையினை, ஜம்இய்யாவின் கொழும்பு மத்திய கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஷுகுர்தீன் இஹ்ஸானி அவர்கள் நிகழ்த்தினார்கள்.
2024.08.26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு கிழக்குக் கிளை மற்றும் கொலன்னாவை மஸ்ஜித்கள் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 'காத்திரமான மஸ்ஜித் நிர்வாகத்தினூடாக சமூகத்தை வலுவூட்டல்' எனும் தொனிப் பொருளிலான மாபெரும் கருத்தரங்கு கொழும்பு கிழக்குக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் என்.எம். பிர்தெளஸ் மன்பஈ மற்றும் சம்மேளன தலைவர் அல்-ஹாஜ் பெரோஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மாவட்டக்கிளை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், கொலன்னாவை மஸ்ஜிதுகள் சம்மேளன உறுப்பினர்கள், ஆலிம்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கருத்தரங்கில், மஸ்ஜிதை நிர்வகிப்பதற்கு அவசியமான சட்ட ரீதியான ஆவணங்கள் மற்றும் ஜம்இய்யாவினால் இதுவரை மஸ்ஜித்கள் சம்பந்தமாக வழங்கப்பட்ட ஃபத்வாக்கள் அடங்கிய பெறுமதியான கோப்பு ஒவ்வொரு மஸ்ஜிதுகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2024.08.27ஆம் திகதி, ரபீஉனில் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளையின் விஷேட ஒன்றுகூடல் செயலாளர் எம்.எச்.எப்.எம். ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் நெறிப்படுத்தலில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், ரபீஉனில் அவ்வல் முதல் 15 நாட்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சீராவை பொருத்தமான ஆலிம்களைக் கொண்டு பிரச்சாரம் செய்வதாக தீர்மானிக்கப்பட்டதோடு அதற்கான தலைப்புக்கள் மற்றும் ஆலிம்களை தெரிவு செய்வதற்கு 08 பேர் கொண்ட ஒரு குழுவும் தெரிவுசெய்யப்பட்டது.
2024.08.28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் இளைஞர் விவகாரப் பிரிவின் குழுக்கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஏ.கே.எம். ஆஷிக் காஷிபி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியினை நடாத்தல், ஊடகங்களுக்கான வழிகாட்டல் செயலமர்வை நடாத்தல், ரபீஉனில் அவ்வல் மாதத்தினையிட்டு மஸ்ஜித்களில் ஷாமஇலுத் திர்மிதியினை வாசித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.08.29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொத்துவில் கிளையின் நிர்வாகக் குழுக் கூட்டம் அஷ்-ஷைக் ஏ. முஹைதீன் பாவா ஷர்க்கி அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இதில், ரபீஉனில் அவ்வலை முன்னிட்டு பிரதேசத்தின் அனைத்து மஸ்ஜிதுகளிலும் ஷமாஇலுத் திர்மிதியினை வாசிப்பதாக தீர்மானிக்கப்பட்டு, அதற்கு பொறுப்பாக ஒரு குழு நியமிக்கப்பட்டதோடு 'மஸ்ஜித்களினூடாக சமூகத்தினை வலுப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் ஆண்கள், பெண்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடாத்துவது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.
2024.08.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொத்துவில் கிளையினால் 'மஸ்ஜித்களினூடாக சமூகத்தினை வலுப்படுத்துவோம்' எனும் தொனிப் பொருளிலான விஷேட வழிகாட்டல் நிகழ்வு செங்காமம் மஸ்ஜிதுல் இலாஹியில் நடைபெற்றது.
இதில், அப்பகுதியிலுள்ள ஆண்கள், பெண்கள் பலர் கலந்து பயன்பெற்றனர்.
2024.08.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் வழிகாட்டலுக்கமைய அல்-குர்ஆன் விளக்கவுரை ஜுஸ்உ அம்ம தப்ஸீர் வகுப்பு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொழும்பு கொம்பனிதெரு ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதன்போது, அஷ்-ஷைக் இர்ஷாத் இன்ஆமி அவர்கள் ஜுஸ்உ அம்ம தப்ஸீர் நூல் பற்றிய அறிமுகத்கை முன்வைத்தார்கள்.
இதில், ஜம்இய்யாவின் கொழும்பு மத்திய கிளையின் உறுப்பினர்கள் பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
2024.08.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் உப தலைவர் அஷ்-ஷைக் இர்ஷாத் இன்ஆமி அவர்களின் தலைமையில் கொழும்பு கொம்பனித்தெரு ஹனபி ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு கொழும்பு மத்திய கிளையின் 3 பகுதிகளில் ஷமாஇலுத் திர்மிதி நிகழ்ச்சிகளை நடாத்தல் மற்றும் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியொன்றினை நடாத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.08.31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நற்பிட்டிமுனை கிளையினால் 'தினமும் தொழுகையை பேணி ஓர் ஆன்மீக வாழ்வை நோக்கி..' எனும் தொனிப்பொருளில் சுமார் 2,000 துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு ஊர் முழுவதும் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யப்பட்டன.
ஆகஸ்ட் 4ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின்போது எட்டப்பட்ட தீர்மானித்தின் படி இத்திட்டம் முதற்கட்டமாக நடைபெற்றது.
துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதற்கான களப்பணிகளில் சுமார் 25 பாடசாலை மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
2024.08.31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹொரவப்பொத்தானை கிளையின் பைத்துஸ் ஸகாத் நிதியத்தின் இவ்வருடத்திற்கான ஸகாத் விநியோக நிகழ்வு கிளையின் தலைவர் அஷ்-ஷைக் என்.பீ. நிலாப்தீன் பஹ்ஜி அவர்களின் தலைமையில் மன்பஉல் ஹஸனாத் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், பிரதேசத்திற்கு உட்பட்ட 23 கிராமங்களில் இருந்து 38 பேர் வாழ்வாதாரம், கட்டுமானம், கல்வி, நோய் போன்ற அடிப்படைகளில் தெரிவு செய்யப்பட்டதோடு அவர்களுக்கு பணம், இயந்திரங்கள், கருவிகள் போன்ற பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், பிரதேச மஸ்ஜித்களின் நம்பிக்கையாளர் சபையினர், இமாம்கள், ஆலிம்கள், பாடசாலைகள் மற்றும் அரபுக் கலாசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தனவந்தர்கள், சமூக சேவையாளர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
2024.08.31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் இளைஞர் மற்றும் யுவதிகள் விவகாரப் பிரிவினால் இளைஞர்களுக்கான ஒரு மாத கால 'தலைமைத்துவ சான்றிதழ் பயிற்சி நெறியில்' 02 ஆம் தொகுதியினருக்கான அறிமுக நிகழ்வு தலைவர் அஷ்-ஷைக் ஏ.எம். ஹாரூன் ரஷாதி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாயத்தில் நடைபெற்றது.
இதில், ஜம்இய்யாவின் செயற்பாடுகள், இளைஞர்களின் சமூக பங்களிப்பு என பல தலைப்புக்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு குறித்த பயிற்சி நெறியின் 02ஆம் தொகுதிக்காக சுமார் 20 இளைஞர்கள் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2024.08.31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா களுத்துறை மாவட்டக் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் பஹ்ஜீ அவர்களின் தலைமையில் களுத்துறை நஸ்ருல் ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில், கிளையினால் முன்னெடுக்கப்பட்ட, படவுள்ள பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
2024.08.31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்களின் தலைமையில் கொம்பனித்தெரு ரிழ்வானிய்யா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில், ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு ஷமாஇலுத் திர்மிதியை கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களில் மக்கள் மயப்படுத்துதல், கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஆலிம்களை மையப்படுத்தி 'கதீப்மார்கள் வலுவூட்டல் கருத்தரங்கொன்றினை' நடாத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
- ACJU Media -