அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடைய வேண்டுகோளுக்கு அமைவாக கொழும்பு மாவட்டத்தில் கொவிட் 19 தொற்று காரணமாக நிர்க்கதியான சூழலில் வாழும் சகோதரர்களுக்காக கற்பிட்டி பிரதேசத்தில் ( முகத்துவாரம் முதல் நரக்களி வரை ) கிளை ஜம்இய்யா அதன் தலைவர் அஷ்-ஷைக் ஏ. டபிள்யூ. எம். ஜமீல் கான் ரஹ்மானி அவர்களின் தலைமையில் நிவாரண சேகரிப்பை முன்னெடுத்தது. அதில் முதற்கட்டமாக 2020.12.30 ஆம் திகதி புதன்கிழமை சுமார் 9.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை கற்பிட்டி ஸக்காத் ஒன்றியத்துடன் இணைத்து தலைமையகத்தின் வேண்டுகோளின் பேரில் கொழும்பு கொம்பனித்தெரு மஸ்ஜித் சம்மேளனத்தில் நேரில் சென்று ஒப்படைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 2021.01.02 ஆம் திகதி 7 இலட்சத்து 36 ஆயிரத்து 70 ரூபாய் காசோலை வெள்ளவத்தையில் இயங்கி வரும் தற்காலிக தலைமையகத்தில் அங்கு சென்று ஒப்படைக்கப்பட்டது.


2021.01.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவெந்தபுலவு கிளையின் மாதாந்த ஒன்று கூடல் சூடுவெந்தபுலவு பிரதேச கிளை காரியாலயத்தில் தலைவர் கே.நபீஸ் (நஜாஹி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


2021.01.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொட கிளையின் ஏற்பாட்டில் அப்பிரதேசத்தில் சேகரிக்கப்பட்ட 557,270.00 ரூபா நிவாரண நிதியை இரத்தினபுரி மாவட்டத்துடன் இணைந்து கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கொவிட்-19 மூலம் முடக்கப்பட்டு கஷ்டப்படக்கூடிய மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமா மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் (பாஸி) ஹஸரத் அவர்களிடமும் மற்றும் களுத்துறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது.

 

2021.01.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த மஷூரா மருதானை கலந்தர் சாஹிப் ஜும்ஆ மஸ்ஜிதில் தலைவர் அஷ்-ஷைக் சுகூர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2021.01.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இரத்தினபுரி மாவட்டத்தின் பிரதேசக் கிளைகளில் சேகரிக்கப்பட்ட மொத்த ரூபா 1,873,080.00 நிவாரண நிதியை இரத்தினபுரி மாவட்ட ஜம்இய்யா கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கொவிட்-19 மூலம் முடக்கப்பட்டு கஷ்டப்படக்கூடிய மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமா மற்றும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் (பாஸி) அவர்களிடமும் மற்றும் களுத்துறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது.


2021.01.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் எலபடகமா கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் என்.எம்.நஸ்ரின் அவர்களின் தலைமையில் ஜம்இய்யாவின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் 9 உலமாக்கள் கலந்து கொண்டதோடு இக்கூட்டத்தில் விசேடமாக பாடசாலையின் புதிய அதிபர் அவர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடன் பாடசாலையில் அஹதியா பாடசாலையை ஜம்இய்யா முன்னின்று நடாத்துவது தொடர்பாகவும், மேலும், பாடசாலையில் மாணவர்களுக்கான வழிகாட்டல்கள் வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது.


கொவிட் 19 பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்டம் மற்றும் குருணாகல் மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவியாக குருணாகல் மாவட்ட மஸ்ஜித் நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் சேகரிக்கப்பட்ட நிதியை கடந்த 2021.01.07 ஆம் திகதி குருணாகல் மாவட்ட கிளையின் மூலம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.


2020.12.20 ஆம் திகதி புத்தளம் ஜம்இய்யா நகரக்கிளை மற்றும் பெரிய பள்ளி இணைந்து புத்தளம் நகரக்கிளைக்குட்பட்ட அனைத்து மஸ்ஜித்களிலும் மஹல்லா ரீதியாக அல்லாஹ்வின் உதவியால் அனைவரது முயற்சியின் பலனாக கொவிட் 19 நோயினால் பாதிக்கப்பட்ட எமது சகோதர உறவுகளுக்கு 2,733,000 ரூபாய் நிதி சேகரிக்கப்பட்டது. மேற்படி சேகரிக்கப்பட்ட நிதியை புத்தளம் நகர ஜம்இய்யா மற்றும் புத்தளம் பெரிய பள்ளி, தில்லையடி மஸ்ஜித்களின் சம்மேளனம் மற்றும் தொண்டர் அமைப்புக்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் ஒன்றிணைந்து புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை கௌரவ தலைவர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களிடம் ஒப்படைத்தனர். அப்பணம், காசோலையாக 2021.01.09 ஆம் திகதி ஜம்இய்யாவின் உயர்மட்டத்தனினரிடம் கையளிக்கப்பட்டது.


2021.01.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனுராதபுர மாவட்ட கிளையின் மாதாந்தக் கூட்டம் ஜம்இய்யாவின் காரியாலயத்தில் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாசீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.


2021.01.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட கற்பிட்டி பிரதேச கிளையின் மாதாந்த செயற்குழு ஒன்று கூடல் தலைவர் அஷ்-ஷைக் ஏ.டபிள்யூ.எம். ஜெமீல்கான் (ரஹ்மானி ) தலைமையில் கண்டல்குழி கொலனி மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலில் நடைபெற்றது.


2021.01.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் பதவி தாங்குனர்கள் மக்தப், குர்ஆன் மத்ரஸாக்கள் சம்பந்தமாக கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளை சந்திக்க முடிவு செய்து நாவலப்பிடிய பிரதேசக் கிளை ஆலிம்களை நாவலப்பிடிய யூசுபிய்யா மஸ்ஜிதிலும், கம்பலை பிரதேசக் கிளை ஆலிம்களை கம்பலை கிளையின் காரியாலயத்திலும், உடுநுவர பிரதேசக் கிளை ஆலிம்களை உடுநுவர கிளையின் காரியாலயத்திலும் சந்தித்தது. இச்சந்திப்புகளில் பிரதேசக் கிளைகளுடைய செயற்பாடுகள் தொடர்பாக விசாரிக்கப்பட்துடன் இதுவரை மக்தப், குர்ஆன் மத்ரஸாக்கள் சம்பந்தமாக கண்டி மாவட்ட ஜம்இய்யா மேற்கொண்ட முயற்சிகள் முன்வைக்கப்பட்டது.


2021.01.16 ஆம் திகதி வவுனியா, பட்டாணிச்சூர் கிளையின் கொவிட்-19 நிவாரண சேகரிப்பு விநியோகம் சம்பந்தமான ஒன்று கூடல் வவுனியா, வேப்பங்குளம் ஹுதா பள்ளிவாசலில் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம். றமீஸ் (ஹாஷிமி) தலைமையில் இடம் பெற்றது. இதில் எமது பட்டாணிச்சூர் ஜம்இய்யதுல் உலமாவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


2021.01.14 ஆம் திகதி கண்டி நகர ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்று குழு ஒன்று கூடல் கண்டி ஹனபி பள்ளிவாசலில் தலைவர் அஷ்ஷேக் பீ.எம். பாயிஸ் (பாஸி) தலைமையில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் ஜம்இய்யாவின் இவ்வருடத்திற்கான செயற்பாடுகள் மற்றும் வாலிபர்களுக்கான செயற்பாடுகள் மற்றும் எமது புதிய தெரிவு சம்பந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.


20213.01.17 ஆம் திகதி வவுனியா மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியிலிருந்து பிரதேச கிளைக்குட்பட்ட கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 35 குடும்பங்களுக்கு 1462 ரூபாய் பெருமதியான உலர் உணவு பொருட்கள் அவர்களது இல்லங்களுக்கு சென்று கையளிக்கப்பட்டது.


2021.01.02 ஆம் திகதி அன்று தனிமைபடுத்தப்பட்ட பட்டாணிச்சூர், பட்டகாடு, வேப்பங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1500 குடும்பங்களில் இனம்காணப்பட்ட பயனாளிகள் பட்டியலிலுள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 1850 ரூபாய் பெறுமதியான அத்தியவசிய நிவாரணப் பொதிகள் குறித்த பள்ளிவாசல்களின் நிருவாகிகள் ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர். 2021.01.12 ஆம் திகதி மேலும் புதிதாக இனம்காணப்பட்ட பயனாளிகள் பட்டியலிலுள்ள சுமார் 225 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக 1650 ரூபாய் பெறுமதியான அத்தியவசிய நிவாரணப் பொதிகள் குறித்த பள்ளிவாசல்களின் நிருவாகிகள் ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று நிவாரணப் பொதிகளை வழங்கியதோடு மொத்தமாக 825 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மூன்றாம் கட்டமாக 1850 ரூபாய் பெறுமதியான அத்தியவசிய நிவாரணப் பொதிகள் குறித்த பள்ளிவாசல்களின் நிருவாகிகள் ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று நிவாரணப் பொதிகளை வழங்கியதோடு மொத்தமாக 1245 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.


2021.01.10 ஆம் திகதி கொவிட் 19 பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள களுத்துரை மாவட்ட மக்குனை பிரதேசத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவியாக இரத்தினபுரி மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் மூலம் சேகரிக்கப்பட்டு பேருவலை வளையத்திற்கு வழங்கப்பட்ட நிதியை பேருவலை வளைய ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். றிழ்வான் மற்றும் கௌரவ செயலாளர் அஷ்-ஷைக் முப்தி முர்ஸி அவர்களினால் மக்குனை பள்ளிவாசல் நம்பிக்கை பொறுப்பாளரிடம் 350 குடும்பங்களுக்கான ரூபாய் 445,080 பெருமதியான நிவாரண பொதிகள் கையளிக்கப்பட்டது.


2021.01.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் பதவி தாங்குனர்கள் மக்தப், குர்ஆன் மத்ரஸாக்கள் சம்பந்தமாக கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளுடைய சந்திப்பின் தொடராக தும்பர பிரதேசக் கிளை ஆலிம்களை கும்புக்கந்துர ஜும்ஆ மஸ்ஜிதில் சந்தித்தது. இச்சந்திப்பில் ஆலிம்களின் சிறப்புக்கள் மற்றும் பொறுப்புக்களை ஞாபகமூட்டப்பட்டதுடன், இதுவரை மக்தப், குர்ஆன் மத்ரஸாக்கள் சம்பந்தமாக கண்டி மாவட்ட ஜம்இய்யா மேற்கொண்ட முயற்சிள் முன்வைக்கப்பட்டது.


2021.01.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் பதவி தாங்குனர்கள் மக்தப், குர்ஆன் மத்ரஸாக்கள் சம்பந்தமாக கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளுடைய சந்திப்பின் தொடராக கண்டி நகர பிரதேசக் கிளை ஆலிம்களை கட்டுக்கலை ஜும்ஆ மஸ்ஜிதில் சந்தித்தது. இச்சந்திப்பில் இதுவரை மக்தப், குர்ஆன் மத்ரஸாக்கள் சம்பந்தமாக கண்டி மாவட்ட ஜம்இய்யா மேற்கொண்ட முயற்சிகள் முன்வைக்கப்பட்டது.


2021.01.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் எஹலியகொட பிரதேசக் கிளையின் பதவி தாங்குனர்கள் மற்றும் முன்னாள் பதவிதாங்குனர்கள் மத்தியில் கலந்துரையாடலொன்று செயலாளரின் வீட்டில் நடைபெற்றது.


2021.01.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்ட சாளம்பைக்குளம் பிரதேசக் கிளையின் அவசரக் கூட்டமொன்று அதன் தலைவரும் குவாஸி நீதிபதியுமான அஷ்-ஷைக் எஸ்.எம்.அப்துல் மஜீத் (காஸிமி) அவர்களின் தலைமையில் புதிய சாளம்பைக்குளம் அல்-அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.


2021.01.21 ஆம் திகதி இத்திஹாதுல் மதாரிஸும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையும் இணைந்து, மத்திய மாகாண சபையின் மத்ரஸாக்களின் விடயங்களை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல நியமிக்கப்பட்ட குழுவுடன் மத்திய மாகாண சபையில் இருக்கின்ற மத்ரஸாக்களுடைய உஸ்தாத்மார்களுடனான விஷேட கலந்துரையாடல் நிகழ்வொன்று கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்ரஸாக்களின் தற்போதைய நிலைமைகள், மாணவர்களின் கல்வி, தர்பிய்யாவுடைய விடயங்கள், உஸ்தாத்மார்களின் தஸ்கியா விடயங்கள் மற்றும் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் போன்ற பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.


2021.01.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளை, சாளம்பைக்குளம் பிரதேசக் கிளையினால் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த புதிய சாளம்பைக்குளம் கிராமத்திலுள்ள 325 குடும்பங்களுக்கு கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எம்.அப்துல் மஜீத் (காஸிமி) அவர்களின் தலைமையில் சென்ற குழுவினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


2021.01.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குருநாகல் மாவட்டம் திவுரும்பொல பிராந்திய கிளையின் ஜனவரி மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் கிளையின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் புஹாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கண்டி மாவட்டக் கிளையின் பதவி தாங்குனர்கள் மக்தப், குர்ஆன் மத்ரஸாக்கள் சம்பந்தமாக கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகளுடைய சந்திப்பின் தொடராக 2021.01.24ம் திகதி கண்டி மாவட்டத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட ஹபுகஸ்தலாவ பிரதேசக் கிளை ஆலிம்களை ஹபுகஸ்தலாவ ஜும்ஆ மஸ்ஜிதிலும், தெல்தோட்டை பிரதேசக் கிளை ஆலிம்களை தெல்தோட்டை நூர் தக்கியாவிலும், தும்பர பிரதேச மஸ்ஜித் நிர்வாக உறுப்பினர்களை கும்புக்கந்துர ஜும்ஆ மஸ்ஜிதிலும் சந்திக்கப்பட்டது. இச்சந்திப்புகளில் பிரதேசக் கிளைகளின் தற்போதைய செயற்பாடுகள் சம்பந்தமாக விசாரிக்கப்பட்டது.


2021.01.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த மஷூரா மருதானை கலந்தர் சாஹிப் ஜும்ஆ மஸ்ஜிதில் தலைவர் அஷ்-ஷைக் சுகூர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2021.01.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மாவட்ட கிளையின் மாதாந்த மஷுரா தலைவர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்களின் தலைமையில் கொழும்பு மருதானை சின்ன பள்ளிவாயலில் நடைபெற்றது.


2021.01.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தம் மாவட்ட பிரதேசங்களில் சிலாபம் மற்றும் மாதம்ப பகுதிகளை இணைத்து புதிதாக நிறுவப்பட்ட சிலாபம் பிரதேசக் கிளையின் தெரிவு கடந்த சனிக்கிழமை சிலாபம், சோனகத் தெரு ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. அதில் மாதம்பை மற்றும் சிலாபம் பிரதேசங்களிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அங்கத்துவம் பெற்ற 30 ஆலிம்கள் கலந்துகொண்டனர்.


2021.01.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கண்டி நகர கிளையின் செயற்குழு கூட்டம் கண்டி கடுகலை ஜுமுஆ பள்ளிவாயலில் கிளைத் தலைவர் கௌரவ பீ.எம். பாயிஸ் பாஸி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2021.01.23 ஆம் திகதி வவுனியா,பட்டாணிச்சூர் நிவாரண குழு மற்றும் பட்டாணிச்சூர் ஜம்இய்யதுல் உலமாவுக்குட்பட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்ட நான்காம் கட்ட கொரோனா நிவாரண விநியோகம் சம்பந்தமான ஒன்று கூடல் பட்டகாடு இலாஹிய்யாஹ் ஜும்ஆ பள்ளிவாசலில் தலைவர் அல்ஹாஜ் சலா{ஹத்தீன் (சாபு) அவர்களின் இல்லத்தில் பட்டாணிச்சூர் ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம். றமீஸ் (ஹாஷிமி) தலைமையில் இடம் பெற்றது.


2021.01.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குருணாகல் மாவட்ட நாரம்மல பிராந்திய கிளைக் கூட்டம் கடஹபொல ஜும்ஆபள்ளிவாசலில் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஜெஸீம் (பலாஹி) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021ம் ஆண்டு தமது பிராந்தியத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் 15க்கும் மேற்பட்ட உலமாக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


2021.01.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குருநாகல் மாவட்ட கினியம பிராந்திய ஜம்இய்யாவின் 2021 ஆம் ஆண்டிற்கான முதல் கலந்துரையாடல் கினியம பிராந்திய தலைவர் அஷ்-ஷைக் நிஹ்மதுல்லாஹ் (நூரி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கினியம மஸ்ஜித் அல் அப்ரார் பள்ளிவாயலில் நடைபெற்றது.


2021.01.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பம்மன்ன பிராந்திய கிளையின் 2021 ஜனவரி மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் கிளையின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் ரமலான் அவர்களின் தலைமையில் பம்மன்ன ஜாமிஉல் ஹைராத் ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்றது.


2021.01.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நொச்சியாகம கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் நொச்சியாகம ஜும்ஆ பள்ளியிள் மதிப்பற்குரிய தலைவர் அஷ்-ஷைக் ரியாஸ்தீன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.


2021.01.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்ட இப்பாகமுவ பிராந்திய கிளையின் ஒன்றுகூடல் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் ஹபீழ் (றவ்ழி) அவர்களின் தலைமையில் பன்னல ஜூம்மா பள்ளிவாயலில் நடைபெற்றது.


2021.01.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கொழும்பு வடக்குக் கிளையின் மாதாந்த மஷுரா லெயாட்ஸ் பொரோட்வே ஜும்ஆ பள்ளி வாயளில் கொழும்பு வடக்குக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2021.01.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நொச்சியாகம கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் நொச்சியாகம ஜும்ஆ பள்ளியிள் தலைவர் அஷ்-ஷைக் ரியாஸ்தீன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.


2021.01.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் களுத்துறை மாவட்ட கிளையின் நிர்வாகக் குழுக் கூட்டம் ணுழழஅ மூலமாக தலைவர் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2021.01.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் மாதாந்த காரியக் குழு கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் என்.இஸ்மத் (ஷர்கி) அவர்களின் தலைமையில் ஜும்ஆப் பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.


2021.01.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அனுராதபுர இகிரிகொல்லாவ கிளையின் மாதாந்த செயற்குழு ஒன்றுகூடல் கிளை செயலாளரின் காரியாலயத்தில் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாஸீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.


2021.01.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கேகாலை மாவட்டம் ஹெம்மாதகம பிதேசக் கிளையின் மாதாந்த கூட்டம் அஷ்-ஷைக் நஸார் ரஹ்மானி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2021.01.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சிலாபம் பிரதேசக் கிளையின் முதல் மாதாந்த காரியக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ரகீப் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.


வருமானம் குறைந்த உலமாக்களின் பிள்ளைகள் 2021 புதிய கல்வி ஆண்டுக்கான தமது கல்வி நடவடிக்கைகளை சிரமமில்லாது தொடர்வதற்காக மடவளை 'ஆயுனுஐNஐழுN ஆயுளுவுநுசுளு' அமைப்பின் அனுசரணையில் மடவளை கிளையூடாக 2021.01.17 அன்று கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.


2021.01.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் திஹாரி பிரதேசக் கிளைக் காரியக் குழு மௌலவி ஸைபுல்லாஹ் இஹ்ஸானியின் தலைமையில் மஸ்ஜிதுர் ரவ்ழா பெரிய பள்ளிவாயலில் கூடியது.


2021.01.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அபுக்காகம கிளையின் 2021 ஆம் ஆண்டிற்கான பொதுக்கூட்டம் உப தலைவர் அஷ்-ஷைக் அபூதாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் சுமார் 18 உலமாக்கள் கலந்து கொண்டனர். இதில் 2021 ஆம் ஆண்டில் கிளையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


2021.01.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் அஷ்-ஷைக் சுஐப் (தீனி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2021.01.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புளிச்சாக்குளம் கிளை தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலர் உட்பட சில முக்கியஸ்தர்கள் ஆராச்சிக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள கௌரவத்துக்குரிய நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா அவர்களின் வீட்டுக்குச் சென்று அமைச்சரின் துனைவியாரும் பிரத்தியேக செயலாளருமான கௌரவ சட்டத்தரனி சாமரி அவர்களை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டனர்.


2021.01.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் அஷ்ஷேக் சுஐப் (தீனி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2021.01.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கூட்டம் கே. கே. எஸ். வீதியில் அமைந்துள்ள மஹ்மூதியா பள்ளிவாயலில் கௌரவ தலைவர் எம்.என்.எம். இர்பான் நூரி அவர்களின் தலைமையில் நடை பெற்றது.


2021.01.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டத்தின் நிர்வாகக் குழு கூட்டம் அஷ்-ஷைக் நுஹ்மான் (இன்ஆமி) அவர்களின் தலைமையில் நீர்கொழும்பு கிளை ஜம்இய்யாவின் காரியாலயத்தில் நடைபெற்றது.