2021.06.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் மஸ்ஜித் பரிபாலன சபையுடனான அவசர கலந்துரையாடல் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.06.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா பட்டாணிச்சூர் கிளை மற்றும் அதற்குட்பட்ட பள்ளிவாசல் சம்மேளனத்தினால் நிவாரணப் பொதிகள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. முடக்கம் செய்யப்பட்ட பட்டாணிச்சூர், பட்டகாடு, வேப்பங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இனங்காணப்பட்ட பயனாளிகள் பட்டியலிலுள்ள சுமார் 500 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக, ஒரு குடும்பத்திற்கு 900 ரூபாய் பெறுமதியான 450,000 (நான்கு இலட்சத்து ஜம்பதாயிரம்) ரூபாய் நிவாரணப் பொதிகள் பட்டாணிச்சூர் மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாசல் (மர்கஸ்), பட்டகாடு இலாஹிய்யா ஜுமுஆ பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பட்டாணிச்சூர் ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்கள் ஆகியோர் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 255 குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்துக்கு 900 ரூபாய் பெறுமதியான 229,500 ரூபாய் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

2021.06.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் சிலாபம் மற்றும் மாதம்பை பிரதேசக் கிளையின் மாதாந்த கூட்டம் Zoom மூலம் நடைபெற்றது.

2021.06.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்குக் கிளையின் மாதாந்த மஷூரா கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.என். அப்துர் ரஹ்மான் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.06.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் அஷ்-ஷைக் எம்.இஸெட்.எம். நுஹ்மான் (இன்ஆமி) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.06.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்டம் திவுரும்பொல பிரதேசக் கிளையின் 2021 ஜுன் மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் கிளையின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் புஹாரி அவர்களின் தலைமையில் சுகாதார வழிமுறைகளுடன் நடைபெற்றது.

2021.06.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் மௌலவி என். இஸ்மத் (ஷர்கி) அவர்களின் தலைமையில் ஜூமுஆப் பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை பிரதேசக் கிளையின் தலைமையில் ஜம்இய்யத்துல் உலமா சபை, ஸகாத் சங்கம், பள்ளி நிர்வாகிகள் சங்கம், களுத்துறை அபிவிருத்திச் சங்கம் (முனுஊ), களுத்துறை வெளிநாட்டவர்கள் சங்கம் மற்றும் ஊரின் நலன் விரும்பிகள் என அனைவரும் இணைந்து ஊரில் கொவிட் 19 மூலம் பாதிக்கப்பட்ட சுமார் 2800 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 2500 ரூபாய் பணம் வீதம் ஒப்படைத்தனர். மேலும், அவர்களுடன் சேர்ந்து வசிக்கும் சுமார் 40 பிற சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கும் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

2021.06.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையினால் எதிர்வரும் 13.06.2021 தொடக்கம் 15.06.2021ம் திகதி வரை கொவிட் 19 விழிப்புணர்வு பற்றி பள்ளிவாயல்களில் சுழற்சி முறையில் இடம்பெறவுள்ள மார்க்க சொற்பொழிவு சம்பந்தமான தெளிவூட்டும் கலந்துரையாடல், சொற்பொழிவாற்றும் உலமாக்களுக்கு ஜூமுஆப் பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

2021.06.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவல பிரதேசக் கிளையின் சீனன் கோட்டை, மருதானை, மஹகொடை, மக்கொன போன்ற இடங்களில் கொவிட்-19 மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது

2021.06.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இக்கிரிகொள்ளாவ கிளையும் இக்கிரிகொள்ளாவ பள்ளி நிர்வாக சபையும் இணைந்து ஒரு அவசர ஒன்றுகூடலை மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாசீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் நடாத்தியது.

2021.06.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளை கௌரவ தவிசாளர் முன்னிலையில் நிவாரண உதவித் திட்டத்தை ஆரம்பித்து நியமிக்கப்பட்ட குழுவினரின் முயற்சியால் வறுமையால் வாடும் குடும்பங்களை மஸ்ஜித் நிருவாகிகளினூடாக இனம் கண்டு 2000 ரூபா பெறுமதியான அத்தியவசிய பொருட்கள் உள்ளடங்கிய 310 பொதிகள் மேற்படி தேவையுடையோர்களுக்கு வழங்குவதற்கு பிரதேச மஸ்ஜித் நிருவாகிகளிடம் கையளித்து நிவாரணப்பணியின் முதற் கட்டத்தை நிறைவு செய்தார்கள்.

2021.06.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் மௌலவி என். இஸ்மத் (ஷர்கி) அவர்களின் தலைமையில் ஜூமுஆப் பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளைப் பேணி இடம்பெற்றது.

2021.05.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசக் கிளையின் நிர்வாகக் கூட்டம் உபதலைவர் அஷ்-ஷைக் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.05.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்டக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம்; அக்கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஷஐப் (தீனி) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.05.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரக்கியால பிரதேசக் கிளையின் மாதாந்த மஷூரா நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

1. 2021.05.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய பிரதேசக் கிளையின் மாதாந்த மஷூரா அதன் தலைவர் அஷ் ஷைக் எம். ஷுகுர்தீன் (இஹ்ஸானி) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.05.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.05.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர பிரதேசக் கிளையின் நிறைவேற்று குழுக் கூட்டம்; அதன் தலைவர் அஷ்-ஷைக் பீ.எம். பாயிஸ் (பாஸி) அவர்களின் தலைமையில் ணுழழஅ ஊடாக நடைபெற்றது.

2. 2021.05.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான விஷேட தர்பியா நிகழ்ச்சியொன்று ணுழழஅ ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 100 உலமாக்கள் கலந்து சிறப்பித்தனர். மேலும், இந்நிகழ்ச்சி இப்னு உமர் இஸ்லாமிய உயர் கல்வி கலாபீடத்தின் விரிவுரையாளர் அஷ்-ஷைக் முப்தி ரியாஸ் (ரஷாதி) அவர்களினால் நடாத்தப்பட்டது.

2021.05.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளை பிரதேசக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் பௌஸூல் அலவி அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.05.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் விஷேட கூட்டமொன்று அதன் தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

3. 2021.05.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி மாவட்டக் கிளையின் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் முப்தி தாரிக் (ரவ்ழி) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

4. 2021.05.30,31 மற்றும் ஜுன் 1 ஆம் திகதிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தர்கா நகர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் தர்கா நகர் தனவந்தர்கள், பரோபகாரிகளின் அனுசரணையுடன் கொவிட் - 19 காரணமாக வீடுகளில் முடங்கிக் கிடக்கின்ற வறிய மக்களுக்கு உதவும் நோக்கில் 4000 குடும்பங்களுக்கு 80லட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. தர்ஹா நகரிலுள்ள 3000 குடும்பங்களுக்கும், காலி மாவட்டத்திலுள்ள துந்துவை கிராமம் மற்றும் களுத்துறை மாவட்டத்திலுள்ள வெலிபென்ன, பெலந்தை ஆகிய ஊர்களிலுள்ள 1000 குடும்பங்களுக்கும் இப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

2021.05.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர பிரதேசக் கிளையின் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் பீ.எம். பாயிஸ் (பாஸி) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021-04-01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பண்ணவ கிளையின் மாதாந்த ஒன்று கூடல் தலைவர் அஷ்-ஷைக் ஷுஐப் (தீனி) தலைமையில் பண்ணவ தஃவா மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

2021-04-02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ உப தலைவர் அஷ்-ஷைக் உமர்தீன் றஹ்மானி அவர்களின் வேண்டுகோளுக்கமைய குருணாகல் மாவட்ட ஜம்இய்யாவின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் குருணாகல் நகர் வலய மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் பிரதேச பொறுப்புதாரிகளுடனான ஒன்றுகூடல் மல்லவ பிடிய அல்ஹஸனாத் பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது ஜம்இய்யாவின் மூலம் வழங்கப்பட்ட அன்றாட அமல்களின் வழிகாட்டல் அட்டவணை பற்றிய தெளிவு முன் வைக்கப்பட்டது.

2021-04-03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரமழானை முன்னிட்டு பெண்களுக்கான பொது பயான் நிகழ்ச்சியொன்று புதுக்கடை மஸ்ஜிதுல் புகாரியில் நடைபெற்றது. இந்நிகழ்வை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளை உப தலைவர் அஷ்-ஷைக் இர்ஷாத் உவைஸ் (இன்ஆமி) அவர்களினால் நடாத்தப்பட்டது.

2021-04-01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் லங்காபுர பிரதேசக் கிளையின் அன்றாட அமல்களின் தொகுப்பு வழங்கும் நிகழ்வு அஷ்-ஷைக் எம்.ஐ.இர்ராக் நஹ்ஜி தலைமையில் இடம்பெற்றது.

2021.04.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திவுரும்பொல பிராந்திய கிளையின் 2021 ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் புஹாரி ஹஸ்ரத் அவர்களின் தலைமையில் ஆரிஹாமம் பாதிமா பெண்கள் கலாபீடத்தில் நடைபெற்றது.

2021.04.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் காரியாலயத்யில்
நடைபெற்றது. இந்த தெரிவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

2021.04.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவெந்தபுலவு பிரதேச கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் பிரதான காரியாலயத்தில் அதன் தலைவர் அஷ்-ஷைக் கே.எம். நபீஸ் (நஜாஹி) தலைமையில் நடைபெற்றது.

2021.04.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திவுரும்பொல பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுக்கான புனித ரமலான் மாதம் தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்வொன்று திவுரும்பொல மஸ்ஜிதுல் ஹுதா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இதன் போது ரமலான் மாதத்தில் மஸ்ஜித்கள் மேற்கொள்ள வேண்டிய ஆன்மீக, சமூக மற்றும் சுகாதார ரீதியான விடயங்கள் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது.

2021.04.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் இலவச கத்நா வைபவம் மருதானை பிச்சஸ் லேனில் அமைந்திருக்கும் அபூபக்கர் மத்ரஸாவில் நடைபெற்றது. இதற்கு வருகை வந்தவர்களுக்கு இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2021.04.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொட பிரதேசக் கிளையின் ஒன்றுகூடல் எஹலியகொட பதுவத்த முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2021.04.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் பாணந்துறை பள்ளிமுல்லை ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2021.04.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னருவை மாவட்டக் கிளை தமண்கடுவை பிரதேச ஜும்ஆப் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கான ரமழான் மாத வழிகாட்டல் நிகழ்ச்சியினை நடாத்தியது. இதில் ஒன்பது ஜும்ஆப் பள்ளிகளின் நிர்வாகிகள் சுமார் 25 பேர் பங்குபற்றினர்.

2021.04.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தர்கா நகர் கிளையின் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும் கிளை அங்கத்தவர்களுக்கும் இடையிலான ஒன்றுகூடல் வெலிபிடி ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்றது.

2021.04.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர கிளையினால் 'ரமலான் வசந்தம்' என்ற தொனிப்பொருளில் மஹய்யாவ காட்டுப் பள்ளி வாசலில் உலமாக்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. கூட்டத்திற்கு கண்டி நகர ஜம்இய்யாவின் உறுப்பினர்கள் கணிசமான அளவு கலந்து சிறப்பித்தனர். வளவாளராக அஷ்-ஷைக் பர்ஹான் அல் பாஸி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

2021.04.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் அனைத்து உலமாக்களுக்கான கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் என். இஸ்மத் ஷர்கி அவர்களின் தலைமையில் மஸ்ஜிதுல் மினன் பள்ளிவாயிலில் நடைபெற்றது.

2021.04.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா, பட்டாணிச்சூர் கிளையின் 2021 ஏப்ரல் மாத ஒன்று கூடல் வவுனியா பட்டானிச்சூர் (மர்கஸ்) மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாசலில் தலைவர் அஷ்-ஷைக் ஏ. ஆர். எம். றமீஸ் (ஹாஷிமி) தலைமையில் நடைபெற்றது.

2021.04.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் 'ரமழானை வரவேற்போம்' எனும் தலைப்பில் பயான் நிகழ்ச்சியொன்று மருதானை சின்ன பள்ளி ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வு கொழும்பு தெற்கு கிளையின் தலைவர் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் பாயிஸ் (ரஷாதி) அவர்களினால் நடாத்தப்பட்டது.

2021.04.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரமழானை வரவேற்போம் எனும் தலைப்பில் பெண்களுக்கான விஷேட தர்பியா நிகழ்ச்சியொன்று அல்-புஷ்ரா பெண்கள் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வு தாரு ஆயிஷா மற்றும் தாருல் ஜன்னாஹ் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்-ஷைக் ஜவாஹிர் (ஹாஷிமி) அவர்களினால் நடாத்தப்பட்டது.

2021.04.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருக்கோணமலை நகரக்கிளையின் மாதாந்தக்கூட்டம் கிளையின் தலைவர் மௌலவி ஏ.ஆர்.பரீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.04.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளையின் ஏற்பாட்டில் 'ரமழானை வரவேற்போம்' எனும் தலைப்பில் பெண்களுக்கான விஷேட தர்பியா நிகழ்ச்சியொன்று ஸாவியா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வு புஷ்ரா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்-ஷைக் நவ்ஃபல் ரஷாதி அவர்களின் மூலம் நடாத்தப்பட்டது.

2021.04.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரமழான் பற்றிய வழிகாட்டல்களும் தர்பியா நிகழ்ச்சியும் எனும் தலைப்பில் உலமாக்களும்கான விஷேட நிகழ்ச்சியொன்று புதுக்கடை மீரானியா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வா குழு உறுப்பினர் அஷ்-ஷைக் யஹ்யா (பலாஹி) அவர்களினால் நடாத்தப்பட்டது.

2021.04.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அபுக்காகம கிளையின் ஏப்ரல் மாத நிர்வாக குழு கூட்டம் தலைவர் அஷ்ஷைக் ஹாஜா முஹிதீன் தலைமையில் நிர்வாக உறுப்பினர்கள் 10 பேர் கலந்துகொணடு நடைபெற்றது.

2021.04.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளை மற்றும் மஸ்ஜிதுன் நஜ்மியின் ஏற்பாட்டில் 'ரமழானை வரவேற்போம்' எனும் தலைப்பில் பயான் நிகழ்ச்சியொன்று பெட்டா மஸ்ஜிதுன் நஜ்மி ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மாவட்ட கிளையின் செயலாளர் அஷ்-ஷைக் இர்பான் முபீன் (ரஹ்மானி) அவர்களினால் நடாத்தப்பட்டது.

2021.04.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வரக்காப்பொளைக் கிளையின் ஏற்பாட்டில் இளைஞர் சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் வாலிபர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தினால் அனுப்பப்பட்ட வளவாளர் மூலமாக சிறப்பாக நடைபெற்றது. அதில் கிளைக்குற்பட்ட பல ஊர்களைச் சேர்ந்த வாலிபர்கள் கலந்து பயன்பெற்றார்கள்.

2021.04.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா, பட்டாணிச்சூர் கிளையின் ஏற்பாட்டில் அதனது உறுப்பினர்களுக்கும் பட்டாணிச்சூர் ஜம்இய்யதுல் உலமாவிற்குட்பட்ட அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடனான
ஒன்றுகூடல் பட்டானிச்சூர் (மர்கஸ்) மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம் றமீஸ் (ஹாஷிமி) தலைமையில் இடம் பெற்றது.

2021.04.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம்-அக்கரைப்பற்று கிளையின் ஏற்பாட்டில் பிரதேச மஸ்ஜித்களின் இமாம்களுக்கான ரமழான் முன்னேற்பாட்டு நிகழ்வொன்று கணமூலை ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2021.04.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்ட மினுவண்கொடை கிளையின் வருடாந்த ஒன்று கூடல் தலைவர் அஷ்-ஷைக் பாஹிர்தீன் (தீனி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.04.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிககொள்ளை கிளை செயற்குழு கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ழரீப் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

2021.04.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னருவை மாவட்டக் கிளை வெலிகந்த பிரதேச ஜும்ஆப் பள்ளிகளின் நிர்வாகங்களுக்கு ரமழானை முன்னிட்டு கட்டுவண்வில் ஜும்ஆப் பள்ளியில் விஷேட கூட்டமொன்றினை நடாத்தியது. இதில் அதிகமான நிர்வாகிகளும் உலமாக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

2021.04.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னருவை மாவட்டக் கிளை லங்காபுர பிரதேச ஜும்ஆப் பள்ளிகளின் நிர்வாகங்களுக்கு விஷேட ரமழான் வழிகாட்டல் நிகழ்ச்சியை நடாத்தியது.

2021.04.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னருவை மாவட்டக் கிளை புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான விஷேட வழிகாட்டல் நிகழ்வொன்று கிளையின் உப தலைவர் அஷ்-ஷைக் இர்ஷாத் நஹ்ஜியின் தலைமையில் தம்பாளை ஜாமிஉல் ஹிலால் பள்ளியில் நடைபெற்றது. இதில் நுககஹதமன , றிபாய்புர, அல்ஹிலால்புர, தம்பாளை ஆகிய ஜும்ஆப் பள்ளிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

2021.04.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு பிரதேசக் கிளையின் மாதாந்த கூட்டம் அஷ்-ஷைக் எம்.என். அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நவகம்புர ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2021.04.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திஹாரி கிளையின் ஏற்பாட்டில் திஹாரி மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான ரமழான் வழிகாட்டல் நிகழ்ச்சி அஷ்-ஷைக் ஸைபுல்லாஹ் இஹ்ஸானி அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.

2021.04.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையினால் மஸ்ஜித் இமாம்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ரமழான் வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று மாத்தளை டவுன் மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியானது இவ்வருட ரமழானை பயனுள்ள ரமழானாக கழிப்போம் எனும் தொனிப்பொருளில் அமைந்திருந்தது.

2021.04.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்ட கிளையின் மாதாந்த கூட்டம் சூடுவெந்தபுலவு பிரதேச காரியாலயத்தில் தலைவர் என்.பீ.ஜுனைத் மதனி தலைமையில் நடைபெற்றது.

2021.04.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவலை கிளையின் நிறைவேற்றுக் குழுவின் முதலாவது கூட்டம் மருதானை அரபாத் ஜூமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

2021.04.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த மஷூ புதுக்கடை மத்ரஸதுல் ஹசனாத் குர்ஆன் மத்ரஸாவில் தலைவர் அஷ்-ஷைக் ஷுகூர்தீன் (இஹ்ஸானி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.04.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்ட அறக்கியாளைக் கிளையின் மாதாந்த மஷூரா அறக்கியாளை மஸ்ஜிதுஸ் ஸுலைமானிய்யாவில் நடைபெற்றது.

2021.04.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நாவலப்பிட்டி கிளையின் மாதாந்த மஷுரா நடைபெற்றது.

2021.04.21 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் மாதம்பை பிராந்திய கிளையின் கூட்டம் ஜயபீம மத்ரஸா காறியாலயத்தில் அஷ்-ஷைக் ரகீப் அவர்களின் தலைமையில் சூறா பாத்திஹாவுடன் ஆரம்பமானது.

2021.04.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தர்கா நகர் கிளையின் ஏற்பாட்டில் கிளை உலமாக்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு தர்ஹா நகர் ஹாஜிலேன் பிலால் பள்ளிவாயலில் நடைபெற்றது.

2021.04.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பாணந்துறை ஜம்இய்யதுல் உலமாவின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது.