2022.04.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்ஸற பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் அதன் காரியக் குழுக் கூட்டம் பஸ்ஸற ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2022.04.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்ட தும்பர பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் உப தலைவர் அஷ்-ஷைக் முர்ஷித் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் அம்பகஹலந்த குபாதைக்காவில் நடைபெற்றது.

2022.04.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்ட திவுரும்பொல பிராந்தியக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் புகாரி அவர்களின் தலைமையில் ஆரிகாமம் பாதிமா முஸ்லிம் மகளிர் இஸ்லாமிய கற்கை நிறுவனத்தில் நடைபெற்றது.

2022.04.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் (வுழபநவாநச றந டிரடைவ வாந ளுழஉநைவல) ஒன்றாக சேர்ந்து நாம் சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தலைப்பிலான இஃப்தார் நிகழ்ச்சி மாளிகாவத்தை செரண்டிப் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகம், கொழும்பு மாவட்ட கிளை, கொழும்பு மாவட்டத்தின் 12 மஸ்ஜித் சம்மேளனங்கள், ஜே.ஜே பௌன்டேஷன், எச்.ஆர். பௌன்டேஷன், நியாஸ் மௌலவி பௌன்டேஷன் மற்றும் நிதா பௌன்டேஷன் ஆகிய நிறுவனங்கள் அழைக்கப்பட்டு கொழும்பு மத்திய கிளை ஜம்இய்யாவின் மூலம் கடந்த ஒன்றரை வருட காலம் உலமாக்கள் மற்றும் பொதுமக்களுக்கு செய்யப்பட்ட சேவைகளை காணொளி மூலம் முன்வைக்கப்பட்டு அவர்கள் சமூகத்திற்காக செய்த சேவைசளை பாராட்டி அவர்களுக்காக ஒரு நினைவுச்சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது. இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ தேசியத் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களும் கலந்து கொண்டனர்.

2022.04.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை மாவட்ட லங்காபுர பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் இர்ராக் நஹ்ஜி அவர்களின் தலைமையில் தம்பாளை ஜாமிஉல் ஹிலால் மஸ்ஜிதில் நடைபெற்றது.

2022.04.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அட்டாளைச்சேனை பிரதேசக் கிளையின் மாதாந்தக் நிர்வாகக் கூட்டம் இஃப்தாருடன் சிறப்பாக நடைபெற்றது.

2022.04.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி மாவட்டம் எஹலியகொட பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கான விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி எஹலியகொட மோரகல அந்நூர் ஜுமுஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விஷேட வளவாளராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் பயிற்றுவிப்பாளர் சகோதரர் ரம்ஸி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

2022.04.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை மாவட்டக் கிளையின் நிறைவேற்றுக் குழு மாவட்டத்திலுள்ள ஜுமுஆப் பள்ளிகளுக்காக நடாத்திய விஷேட கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் எம்.எம். அலாப்தீன் பலாஹி அவர்களின் தலைமையில் முஸ்லிம் கொலனி மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2022.04.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கு ஹிலால் சம்பந்தமான ஒரு தெளிவூட்டல் நிகழ்ச்சி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு ஜம்இய்யாப் பிறைக் குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் அப்துல் வஹ்ஹாப் (ஹுமைதி) அவர்களினால் நிகழ்த்தப்பட்டதோடு இதில் கொழும்பு மத்திய கிளையின் 40 உலமாக்கள் கலந்து கொண்டார்கள்.

2022.04.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்ட பட்டாணிச்சூர் கிளையின் ஏப்ரல் மாதத்திற்கான ஒன்று கூடல் பட்டாணிச்சூர் மொஹிதீன் ஜுமுஆப் பள்ளிவாசலில் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம். றமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கியமாக இம்முறை கூட்டாக ஸகாத்துல் பித்ர் வழங்குவது சம்பந்தமாகவும் ஏனைய முக்கிய விடயங்களும் ஆராயப்பட்டதோடு சமூக நலன் கருதி பல செயற்றிட்டங்கள் மற்றும் திட்டமிடல்கள் தொடர்பில் ஆலோசனையும் செய்யப்பட்டது.

2022.04.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை மாவட்டக் கிளையின் உலமாக்களுக்கான விஷேட ஒன்று கூடல் மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் ஜும்ஆ பள்ளிவாசலில் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.எம். அலாவுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.04.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்கரகம பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் பங்கரகமையைச் சேர்ந்த ஷரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவு மாணவர்களுக்கான தர்பியா கருத்தரங்கும் விஷேட இப்தார் நிகழ்வும் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஹாலித் ஷரபி அவர்களின் தலைமையில் கிளையின் அனைத்து உலமாக்களின் ஒத்துழைப்புடன் மிக விமரிசையாக நடைபெற்றது.

2022.04.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்ட பட்டாணிச்சூர் கிளையின் ஏற்பாட்டில் உறுப்பினர்களுக்கான இஃப்தார் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.