2021.09.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி பிரதேசக் கிளையின் மாதாந்த விஷேட கூட்டம் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் ஐ.எஸ். அப்துல் அஸீஸ் (சஹ்தி) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.09.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள உலமாக்களுக்கான ஒன்று கூடல் ணுழுழுஆ ஊடாக நடைபெற்றது. இதில் ஆஆனுயு சம்பந்தமாகவும், தற்போதைய அதன் நிலைமைகள் தொடர்பாகவும், உலமாக்கள் செய்ய வேண்டிய பங்களிப்புக்கள் பற்றியும் இரத்தினபுரி மாவட்ட காழி நீதவான் அல்ஹாஜ் இப்ஹாம் யஹ்யா அவர்களால் தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

2021.09.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொட கிளையின் மாதாந்த கலந்துரையாடல் அஷ்-ஷைக் ஸல்மான் (மழாஹிரி) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.09.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொட கிளையின் வழிகாட்டலுக்கு அமைய எஹலியகொட முஸ்லிம் ஜனாஸா சங்கத்தினூடாக 160,000 ரூபா செலவில் Medical Oxygen Regulator பத்து உபகரணங்கள் எஹலியகொட பொது வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

2021.09.05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவ மாவட்ட தமன்கடுவ பிரதேசக் கிளையின் பொதுக்கூட்டம் அஷ்-ஷைக் பீ.எம். ரபீக் (நஹ்ஜீ) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக இடம்பெற்றது.

2021.09.05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட கற்பிட்டி பிரதேசக் கிளையின் மாதாந்த செயற்குழு ஒன்று கூடல் அஷ்-ஷைக் ஏ.டப்லியு.எம். ஜெமீல் கான் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.09.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரக்குவான பிரதேசக் கிளையின் ஒன்று கூடல் அஷ்-ஷைக் ஹாஷிம் (மதனி) அவர்களின் தலைமையில் Zoom  ஊடாக நடைபெற்றது.

2021.09.20 ஆம் திகதி அகில இலங்கை ஜமஇய்யத்துல் உலமா கம்பஹா மாவட்டத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் அஷ்-ஷைக் நுஹ்மான் (இன்ஆமி) அவர்களின் தலைமையில் Zoom  ஊடாக நடைபெற்றது.

2021.09.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் மூலம் கஹவத்த ஆதார வைத்திய சாலையின் பிரதான வைத்தியரின் அவசர வேண்டுகோளுக்கு இணங்க தனவந்தர்களின் நிதியுதவியுடன் Spinal Board கஹவத்த ஆதார வைத்தியசாலைக்கு உத்தியோகப் பூர்வமாக கையளிக்கப்பட்டது.

2021.09.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிலாபம், மாதம்பை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அஷ்-ஷைக் ரகீப் (மனாரி) அவர்களின் தலைமையில் Zoom  ஊடாக நடைபெற்றது.

2021.09.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு கிளையின் செயற்குழுக் கூட்டம் அஷ்-ஷைக் பர்ஸான் (ஈமானி) அவர்களின் தலைமையில் மௌலவி தம்ஸீர் அவர்களின் வீட்டில் நடைபெற்றது.

2021.09.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் Zoom  ஊடாக நடைபெற்றது.