மார்ச் மாதத்திற்கான கிளைச் செய்திகள்


2021-03-03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் உப குழுவான சமூக சேவை மற்றும் மகளிர் விவகாரக் குழுவின் கூட்டம் நீர் கொழும்பு ஜம்இய்யாக் காரியாலயத்தில் நடைபெற்றது.

2021-03-03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்குக் கிளை ஜம்இய்யதுல் உலமா வாலிபர் குழு மற்றும் வாலிபர்களுக்கிடையிலான முதலாவது கூட்டம் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் இர்பான் முபீன் (ரஹ்மானி) அவர்களுடைய தலைமையில் ஸாராஸ் கார்டனில் அமைந்துள்ள மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜ§முஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

2021-03-03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் உப பிறைக் குழு மடூ6ரா உம்மிட்சி ஜ§முஆ மஸ்ஜிதில் செயலாளர் அஷ்-ஷைக் சல்மான் (ஹாஷிமீ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021-03-04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் பதவி தாங்குனர்களின் வாராந்தக் கலந்துரையாடல் ஜம்இய்யாவின் காரியாலயத்தில் நடைபெற்றது.

2021-03-05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் உப குழுவான கல்வி, மக்தப் மற்றும் இளைஞர் விவகார குழுவின் கூட்டம் நீர் கொழும்பு ஜம்இய்யா காரியாலயத்தில் நடைபெற்றது.

2021-03-05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிருங்கதெனிய பிரதேசக் கிளைக்குட்பட்ட மஸ்ஜித் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடும் தொடரில்
கிரிங்கதெனிய கிளையின் கொடவத்த ஜ§ம்ஆப் பள்ளி நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடப்பட்டது.

2021-03-05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்குக் கிளை ஜம்இய்யதுல் உலமா ஆஜிலா குழு மற்றும் சஹஜீவன குழுக்கிடையிலான முதலாவது கூட்டம் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் இர்பான் முபீன் (ரஹ்மானி) அவர்களுடைய தலைமையில் கொலொன்னாவையில் அமைந்துள்ள அஷ்-ஷைக் உமர் மௌலவியுடைய வீட்டில் நடைபெற்றது.

2021-03-06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்தியக் கிளை அவசர மஷூரா முஹம்மதியா ஜ§முஆ மஸ்ஜிதில் தலைவர் அஷ்-ஷைக் டூ6குர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021-03-03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்குக் கிளையின் மாதாந்த கூட்டம் அஷ்ஷைக் எம்.என். அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021-03-05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் திவுரும்பொல பிராந்தியக் கிளையின் 2021 மார்ச் மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் கிளையின் உப தலைவர் அஷ்-ஷைக் ஷாம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021-03-07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் தெல்கஹகொட கிளை ஜம்இய்யாவின் மார்ச் மாதக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் முப்தி லியாவுத்தீன் தலைமையில் நடைபெற்றது.

2021-03-07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவெந்தபுலவு பிரதேச ஜம்இய்யதுல் உலமாவின் மாதாந்த ஒன்று கூடல் பிரதான காரியாலயத்தில் அதன் தலைவர் அஷ்-ஷைக் கே.எம். நபீஸ் (நஜாஹி) தலைமையில் நடைபெற்றது.

2021-03-11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் ஜம்இய்யாவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அல் இஸ்ராஃ வல் மிஃராஜ் சம்பந்தமான நிகழ்வு கண்டி கட்டுக்கல ஜ§முஆ பள்ளியில் நடைபெற்றது.

2021-03-08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நுவரெலிய கிளையின் மாதாந்த மஷூரா ஹாவெலிய ஜ§முஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2021-03-12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளை மற்றும் நியாஸ் மௌலவி நிறுவனம் இணைந்து பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சியொன்று நியாஸ் மௌலவி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 85 பெண்கள் கலந்து கொண்டார்கள்.

2021-03-11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்யால கிளையின் மாதாந்த கூட்டம் செயலாளர் அஷ்-ஷைக் ஸம்ரிகான் அவர்களின் வீட்டில் அஷ்-ஷைக் றிபாஸ்டீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021-03-13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுவிக்கும் மாணவர்களுக்கான ஆலோசனை மற்றும் உயர் தரப் பாடத்தெரிவுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று மாளிகாவத்தை மஸ்ஜிதுல் பிலாலில் நடைபெற்றது. இதில் சுமார் 50 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

2021.03.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் காரியாலயத்தில் கௌரவ தலைவர் அஷ்ஷைக் எச். உமர்தீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.03.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளை கண்டி மாவட்ட பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுடன் ஆலிம்களினதும், பொது மக்களினதும் அமல்களை அதிகரிப்பது தொடர்பான விஷேட கலந்துரையாடலொன்று கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் காரியாலயத்தில் நடைபெற்றது.

2021.03.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை வெலிகந்த கிளைக்கான கூட்டம் கட்டுவன்வில முஹைதீன் பெரிய ஜ§முஆப் பள்ளியில் கௌரவ தலைவர் அஷ்-ஷைக் என்.டீ.ஏ. ஹதாதி (மஜீதி)யின் தலைமையில் நடைபெற்றது.

2021.03.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை மாவட்டம் தமன் கடுவ பிரதேச கிளை கதுருவெல மர்க்கஸ் பள்ளிவாயலில் தமன்கடுவ பிரதேச தலைவர் அஷ்-ஷைக் பீ.எம். ரபீக் நஹ்ஜீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.03.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் இளைஞர்கள் விவகார பிரிவின் காமச்சோடை குழுவின் கூட்டம் மிகவும் சிறப்பாக காமச்சோடை பள்ளி வாசலில் நடைப்பெற்றது.

2021.03.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் வழிகாட்டுதலில் திஹாரி ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் வாலிபர்களுக்கான வாழ்க்கைத் திறன் வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று திஹாரி மஸ்ஜிதுர் ரவ்ழா பெரிய பள்ளிவாயலில் நடைபெற்றது.

2021.03.11 ஆம் திகதி அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை நகரக் கிளையின் மாதாந்தக் கூட்டம்; கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.பரீத் (நஜ்மி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.03.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திவுரும்பொல பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விஷேட தொழில் துறை வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று திவுரும்பொல குளி காஷிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

2021.03.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட விஷேட ஒன்றுகூடல் கௌரவத் தலைவர் ஷஐப் தீனி அவர்களின் தலைமையில் மாவட்டக் காரியாலயத்தில் நடைபெற்றது.

2021.03.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்தியக் கிளையின் உப பிறைக் குழுவினால் பிறை சம்பந்தமான நிகழ்ச்சியொன்று தலைமையகத்தில் நடைபெற்றது.

2021.03.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சிலாபக் கிளையின் மாதாந்தக் கூட்டம் மாதம்பையில் நடைபெற்றது.

2021.03.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா,பட்டாணிச்சுசூர் கிளையின் ஒன்று கூடல் பட்டானிச்சூர் (மர்கஸ்) மொஹிதீன் ஜ§முஆ பள்ளிவாசலில் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.எம். இல்யாஸ் (மனாரி) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி பல செயற்றிட்டங்கள், திட்டமிடல்கள் ஆலோசனை செய்யப்பட்டது.

2021.03.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்குக் கிளையின் மார்ச் மாத மூன்றாவது கூட்டம் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் இர்பான் முபீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் பிரென்டியாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிது உமர் ஜ§முஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

2021.03.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உருப்பினர்கள் வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் செய்து நாட்டின் தேவை கருதி விசேட கழந்துரையாடலொன்றை மேற்கொண்டனர். இதில் வவுனியா மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உருப்பினர்கள், பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் மற்றும் மர்கஸ் பள்ளியின் முக்கிய உறுப்பினர்களுக்கான சில புத்திமதிகளும் வழிகாட்டுதல்களும் வழங்கிவைக்கப்பட்டன.

2021.03.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் இளைஞர் விவகாரப் பிரிவினால் இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் நிகழ்வை செய்வதற்கான வழிகாட்டல் நிகழ்வு காமச்சோடை ஜ§முஆ மஸ்ஜிதில் சிறப்பாக நடைபெற்றது.

2021.03.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் லங்காபுர பிரதேசக் கிளைக் கூட்டம் தம்பாளை ஜாமிஉல் ஹிலால் மஸ்ஜிதில் அஷ்-ஷைக் ஐ.எம். இர்ராக் நஹ்ஜியின் தலைமையில் நடைபெற்றது.

2021.03.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் 2021 ஆன்டு மத்ரஸாக்களில் வெளியாக இருக்கின்ற மாணவர்
களுக்கான ஆலோசனை மற்றும் உயர் தரப் பாடத்தெரிவுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று பெட்டா நியாஸ் மௌலவி பவுன்டேஷனில் நடைபெற்றது.

2021.03.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திவுரும்பொல பிராந்திய கிளையின் அவசர ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் புஹாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.03.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வரக்காமுறை பிராந்திய கிளையின் முதலாவது செயற்குழு கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நஸ்மி (ஹலீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.03.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகர் கிளையின் முதலாவது செயற்குழு கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் இர்ஸான் முப்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

2021.03.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டம் மடவளை பிராந்திய கிளையின் தர்பிய்யா தஸ்கிய்யா நிகழ்வு உலமாக்களுக்கும் ஊர் நிர்வாகிகளுக்கும், முக்கியஸ்தர்களுக்கும் என இரு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஜம்இய்யாவிலிருந்து அப்துல் கப்பார் (அர்ரவாஹி) அவர்களின் தலைமையில் சமூகமளித்த கௌரவ உலமாக்கள் நடாத்தி வைத்தார்கள்.

2021.03.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எலபடகம கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் என்.எம். நஸ்ரின் (ரஷாதி) அவர்களின் தலைமையில் ஜம்இய்யாவின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் 10 உலமாக்கள் கலந்து கொண்டனர்.

2021.03.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்ட நிககொள்ள கிளையின் முதலாவது கூட்டம் கிளை தலைவர் அஷ்-ஷைக் நாகூர் ளரீஃப் அவர்களது தலைமையில் ஜாமிஉல் அன்வர் ஜ§ம்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2021.03.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் தர்பியா பிரிவின் பிரதேசக் கிளைகளின் சந்திப்பின் தொடராக மடவல பிரதேசக் கிளை ஆலிம்களையும், மடவலைப் பிரதேச மஸ்ஜித் நிர்வாகிகளை ஒரு குழுவும், அன்றைய தினமே நாவலப்பிடிய பிரதேச ஆலிம்களையும், தஃவத்துடைய வேலையில் முன்னிலை வகிப்பவர்களை மற்றொரு குழுவினராலும் சந்திக்கப்பட்டது. இச்சந்திப்புக்களில் ஆலிம்களினதும், பொது மக்களினதும் அமல்களை அதிகரிப்பது தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

2021.03.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டத்தின் மினுவன்கொட கிளையின் மாதாந்த கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் பாஹிர்தீன் (தீனி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.03.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கம்பஹா மாவட்டத்தின் பூகொடை கிளையின் மாதாந்தக் கூட்டம் அஷ்-ஷைக் ஜிப்ரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021.03.21 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் புளிச்சாக்குளம் கிளை ஜம்இய்யா நிர்வாகக் கூட்டம் பிரதேசத்தில் உள்ள முஸ்அப் இப்னு உமைர் பள்ளியில் நடைபெற்றது.

2021.03.20 ஆம் திகதி கண்டி மாவட்டத்திற்கு புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவ ஸீ.கே. ரத்னாயக அவர்கள் கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் ஆலிம்களை சந்திப்பதற்காக கண்டி மாவட்ட ஜம்இய்யாவிற்கு சமூகம் தந்தார்கள்.
இச்சந்திப்பில் கண்டி மாவட்டத்தில் அவருடைய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமாகவும் ஆலிம்களுடனான தொடர்புகளை பேணுவது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

2021.03.20 ஆம் திகதி கம்பளைப் பிரதேசத்தில் இருக்கின்ற கம்பளை முஸ்லிம்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், கம்பளைப் பிரதேசத்தின் ஜம்இய்யா, மஸ்ஜித் சம்மேளனம், வர்த்தக சங்கம் ஆகிய முக்கிய அனைத்து அமைப்புகளுடனும் இணைந்து அவர்களுடைய வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக கண்டி மாவட்ட ஜம்இய்யாவை சந்திப்பதற்காக சமூகம் தந்தார்கள்.

2021.03.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்ட கிரிங்கதெனிய பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிரிங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் ஜ§முஆ பள்ளியில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் அஹ்மத் ஹ§சைன் நூரி தலைமையில் நடைபெற்றது.

2021.03.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வரக்காப்பொளைக் கிளையின் மார்ச் மாதத்துக்கான கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அக்ரம் ஜ§னைத் அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

2021.03.21 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹெம்மாதகம கிளையின் மார்ச் மாத கூட்டம் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் நஸார் (ரஹ்மானி) தலைமையில் நடைபெற்றது.

2021.03.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்ட ஜம்இய்யாவின் மார்ச் மாதக் கூட்டம் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் அக்ரம் ஜ§னைத் தலைமையில் அஷ்
-ஷிபா பெண்கள் கலாபீடத்தில் நடைபெற்றது.

2021.03.21 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டக் கிளையின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் என்.எம். இர்ஸான் முப்தி அவர்களது தலைமையில் மாத்தளை ஹலீமிய்யா நூலகத்தில் நடைபெற்றது.

2021.03.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த மடூ6ரா தலைவர் அஷ்-ஷைக் கே.எம்.
முக்ஸித் அஹ்மத் அவர்களின் தலைமையில் கொழும்பு கிரேன்ட்பாஸ் லெயாட்ஸ் புறோட்வே ஜ§முஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

2021.03.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை மாவட்டக் கிளை நாட்டின் சமகால நிலைமையைக் கருத்திற் கொண்டு ஏற்பாடு செய்த விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி முஸ்லிம் கொலனி மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் ஜ§முஆ பள்ளியில் உப தலைவர் அஷ்-ஷைக் எம். எம். அலாவுதீன் (பலாஹி) தலைமையில் நடைபெற்றது.

2021.03.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுராதபுர மாவட்டக் கிளை அவசர ஒன்றுகூடல் அஷ்-ஷைக் யாசீன் (ரஹ்மானி) அவரின் தலைமையில் ஆரம்பமானது.

2021.03.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட கற்பிட்டி பிரதேசக் கிளை மாதாந்த செயற்குழு ஒன்று கூடல் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.டப்.எம். ஜெமீல் கான் (ரஹ்மானி) தலைமையில் பூலாச்சேனை அன்நூர் ஜ§ம்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2021.03.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அபுக்காகம கிளையின் மாதாந்த நிர்வாகக் குழு கூட்டம் தலைவர் ஹாஜா மொஹிதீன் தலைமையில் நடைபெற்றது.

2021.03.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட மக்தப் பிரிவின் ஒன்றுகூடல் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக்
எம்.ஐ ஷ§ஐப் (தீனி) அவர்களின் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.

2021-03-27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளை ஏற்பாட்டில், சம்மாந்துறை கிளை ஜம்இய்யாவின் காரியாலய கட்டிடத்தில் அதனது நிர்வாகம் முன்னிலையில், கொழும்பு மாவட்ட ஜம்இய்யாவின் முன்னாள் செயலாளர் கண்ணியத்திற்குரிய அஷ்-ஷைக் அப்துல் அஸீஸ் அவர்களின் கொழும்பு மாவட்டத்திற்கான 30 வருட சேவையை பாராட்டி கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

2021-03-28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளை, பெட்டா உம்மிட்சி ஜ§முஆ மஸ்ஜிதுடன் இணைந்து பெண்களுக்கான திருமண வழிகாட்டல் மற்றும் தர்பியா நிகழ்ச்சியொன்று உம்மிட்சி ஜ§முஆ மஸ்ஜிதில் ஏற்பாடு செய்தது. இதில் சுமார் 60 பெண்கள் கலந்து கொண்டார்கள்.

2021-03-28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹிங்குலோயா கிளையின் மார்ச் மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் கோட்டை தக்கியாவில் நடைபெற்றது.

2021.03.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்குக் கிளையினால் 'போதைப் பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்குவோம்' எனும் தொனிப் பொருளில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான ஒரு நிகழ்வு மோதர அல்ஹம்ஸா வித்தியாலய லத்தீப் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கொழும்பு வடக்குக் கிளைக்குட்பட்ட சுமார் 70 நிர்வாகிகள் சமூகம் தந்தனர்.

2021-03-27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உடுநுவர கிளை மாதாந்தக் கூட்டம் மற்றும் தர்பிய்யா நிகழ்ச்சி வெலம்பொட ஜ§ம்மா மஸ்ஜிதில் அஷ்-ஷைக் லபீர்
(முர்ஸி) தலைமையில் நடைபெற்றது.

2021-03-27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நுவரெலியா கிளை நுவரெலியா ஜ§ம்ஆ மஸ்ஜிதுடன் இணைந்து பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சியொன்றை நுவரெலியா ஜம்ஆ மஸ்ஜிதில் நடாத்தியது. அதில் சுமார் 40 பெண்கள் கலந்துக் கொன்டனர். இந்நிகழ்வை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தற்போதய பதில் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் காலிக் அவர்களினால் நடாத்தப்பட்டது.

2021-03-21 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்ட வில்பொல கிளை ஜம்இய்யாவின் மார்ச் மாதத்திற்கான கூட்டம் உபதலைவர் அஷ்-ஷைக் முஜாஹித் (மஹ்கமி) அவர்களின் தலைமையில் வில்பொல ஜ§முஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2021-03-28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நொச்சியாகம கிளை ஒன்று கூடல் தலைவர் றியாஸ்தீன் (றஷாதி)யின் தலைமையில் நடைபெற்றது.

2021-03-30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த மஷூரா மாளிகாவத்தை மஸ்ஜிதுல் முனவ்வரா ஜ§முஆ மஸ்ஜிதில் உப தலைவர் அஷ்-ஷைக் இர்ஷாத் (இன்ஆமி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2021-03-28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்டத்தில் சேவை செய்யும் அறபு மத்ரஸாக்களின் நிர்வாகம், அதிபர், உஸ்தாத்மார்களுடனான விஷேட கலந்துரையாடல் திஹாரி ஈமானிய்யா அறபுக் கல்லூரியில் நடைபெற்றது.

2021-03-30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பண்டுவஸ்நுவர கிளையின் மாதாந்த ஒன்று கூடல் தலைவர் அஷ்-ஷைக் சித்தீக் (காஸிமி) தலைமையில் ஹெட்டிபொல ஜ§முஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2021-03-30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்ட நிற்வாகக் குழு மற்றும் தர்கா நகர் கிளை என்பவற்றின் ஏற்பாட்டில் 'மனிதநேய பணிபுரிய ஜம்இய்யாவுடன் கைகோர்ப்போம்' எனும் கருப் பொருளில் தர்கா நகர் 'மெஜஸ்டிக் பென்க்வட்' மண்டபத்தில் தலைமையகத்துக்கு நிதிதிரட்டும் நிகழ்வொன்று நடைபெற்றது.