2021 ஜூன் மாதத்திற்கான கிளைச் செய்திகள்

ஆக 06, 2021

2021.06.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் மஸ்ஜித் பரிபாலன சபையுடனான அவசர கலந்துரையாடல் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.06.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா பட்டாணிச்சூர் கிளை மற்றும் அதற்குட்பட்ட பள்ளிவாசல் சம்மேளனத்தினால் நிவாரணப் பொதிகள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. முடக்கம் செய்யப்பட்ட பட்டாணிச்சூர், பட்டகாடு, வேப்பங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இனங்காணப்பட்ட பயனாளிகள் பட்டியலிலுள்ள சுமார் 500 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக, ஒரு குடும்பத்திற்கு 900 ரூபாய் பெறுமதியான 450,000 (நான்கு இலட்சத்து ஜம்பதாயிரம்) ரூபாய் நிவாரணப் பொதிகள் பட்டாணிச்சூர் மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாசல் (மர்கஸ்), பட்டகாடு இலாஹிய்யா ஜுமுஆ பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பட்டாணிச்சூர் ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்கள் ஆகியோர் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 255 குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்துக்கு 900 ரூபாய் பெறுமதியான 229,500 ரூபாய் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

2021.06.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் சிலாபம் மற்றும் மாதம்பை பிரதேசக் கிளையின் மாதாந்த கூட்டம் Zoom மூலம் நடைபெற்றது.

2021.06.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்குக் கிளையின் மாதாந்த மஷூரா கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.என். அப்துர் ரஹ்மான் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.06.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் அஷ்-ஷைக் எம்.இஸெட்.எம். நுஹ்மான் (இன்ஆமி) அவர்களின் தலைமையில் Zoom ஊடாக நடைபெற்றது.

2021.06.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்டம் திவுரும்பொல பிரதேசக் கிளையின் 2021 ஜுன் மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் கிளையின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் புஹாரி அவர்களின் தலைமையில் சுகாதார வழிமுறைகளுடன் நடைபெற்றது.

2021.06.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் மௌலவி என். இஸ்மத் (ஷர்கி) அவர்களின் தலைமையில் ஜூமுஆப் பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை பிரதேசக் கிளையின் தலைமையில் ஜம்இய்யத்துல் உலமா சபை, ஸகாத் சங்கம், பள்ளி நிர்வாகிகள் சங்கம், களுத்துறை அபிவிருத்திச் சங்கம் (முனுஊ), களுத்துறை வெளிநாட்டவர்கள் சங்கம் மற்றும் ஊரின் நலன் விரும்பிகள் என அனைவரும் இணைந்து ஊரில் கொவிட் 19 மூலம் பாதிக்கப்பட்ட சுமார் 2800 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 2500 ரூபாய் பணம் வீதம் ஒப்படைத்தனர். மேலும், அவர்களுடன் சேர்ந்து வசிக்கும் சுமார் 40 பிற சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கும் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

2021.06.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையினால் எதிர்வரும் 13.06.2021 தொடக்கம் 15.06.2021ம் திகதி வரை கொவிட் 19 விழிப்புணர்வு பற்றி பள்ளிவாயல்களில் சுழற்சி முறையில் இடம்பெறவுள்ள மார்க்க சொற்பொழிவு சம்பந்தமான தெளிவூட்டும் கலந்துரையாடல், சொற்பொழிவாற்றும் உலமாக்களுக்கு ஜூமுஆப் பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

2021.06.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவல பிரதேசக் கிளையின் சீனன் கோட்டை, மருதானை, மஹகொடை, மக்கொன போன்ற இடங்களில் கொவிட்-19 மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது

2021.06.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இக்கிரிகொள்ளாவ கிளையும் இக்கிரிகொள்ளாவ பள்ளி நிர்வாக சபையும் இணைந்து ஒரு அவசர ஒன்றுகூடலை மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாசீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் நடாத்தியது.

2021.06.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளை கௌரவ தவிசாளர் முன்னிலையில் நிவாரண உதவித் திட்டத்தை ஆரம்பித்து நியமிக்கப்பட்ட குழுவினரின் முயற்சியால் வறுமையால் வாடும் குடும்பங்களை மஸ்ஜித் நிருவாகிகளினூடாக இனம் கண்டு 2000 ரூபா பெறுமதியான அத்தியவசிய பொருட்கள் உள்ளடங்கிய 310 பொதிகள் மேற்படி தேவையுடையோர்களுக்கு வழங்குவதற்கு பிரதேச மஸ்ஜித் நிருவாகிகளிடம் கையளித்து நிவாரணப்பணியின் முதற் கட்டத்தை நிறைவு செய்தார்கள்.

2021.06.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் மௌலவி என். இஸ்மத் (ஷர்கி) அவர்களின் தலைமையில் ஜூமுஆப் பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளைப் பேணி இடம்பெற்றது.

Last modified onவெள்ளிக்கிழமை, 06 ஆகஸ்ட் 2021 09:31

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.