01) 2024.10.01ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அனீஸ் யூசுபி அவர்களின் தலைமையில் அஷ்-ஷைக் பாரிஸ் ரஷாதி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், புதிதாக அல்-குர்ஆன் மத்ரஸாக்களை ஆரம்பித்தல், கிளையின் பதவி தாங்குனர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சியினை நடாத்துதல் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
02) 2024.10.02ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - தெல்கஹகொட கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ரியாஸ் (ஸஹ்ரி) அவர்களது தலைமையில் மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி, மக்தப் மாணவர்களுக்கான விழா, கிளை நிர்வாகத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு விஷேட நிகழ்வு, கேகாலை மாவட்ட ஜம்இய்யாவின் ஆலிம்கள் ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
03) 2024.10.04 ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - நொச்சியாகம கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஷம்ஸுல் ஹுதா அவர்களின் தலைமையில் நொச்சியாகம ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், பெண்களுக்கான மாதாந்த பயான் நிகழ்ச்சி வேலைத்திட்டம், பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்களை சந்தித்தல், பாராளுமன்ற தேர்தல் விவகாரம், ஜம்இய்யாவின் அங்கத்துவம் பெறாத ஆலிம்கள் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
04) 2024.10.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - மாத்தளை மாவட்டக் கிளையின் நிர்வாகக் குழு ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் என்.எம். இர்ஸான் முஃப்தி அவர்களின் தலைமையில் மாத்தளை கொங்கஹவெல ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், தலைமையகத்தினால் நடாத்தப்படும் பயிற்சி நெறிக்கு கிளைகள் வாரியாக ஆலிம்கள் தெரிவுசெய்யப்பட்டதோடு மாவட்டத்திலுள்ள ஆலிம்களின் தகவல்களை திரட்டல், அல்-குர்ஆன் மத்ரஸா மேம்பாட்டுத்திட்டம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
05) 2024.10.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - மாத்தளை நகர் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் இர்ஸான் முஃப்தி அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் 'பயிற்சி மற்றும் மேம்பாடு' செயலமர்விற்கு கிளை சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதோடு பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர் சங்கங்களை சந்தித்து இளைஞர்கள் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல், ஒவ்வொரு மஹல்லாக்களிலும் நடைபெறும் அல்-குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அவற்றை நடாத்துபவர்களின் தகவல்களை திரட்டல், கிளைக்குட்பட்ட ஆலிம்களின் தரவுகளை திரட்டல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எட்டப்பட்டன.
06) 2024.10.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - முசலி கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வான் (காஸிமி) அவர்களது தலைமையில் வேப்பங்குளம் தக்கியா பள்ளிவாசலில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில், கிளை நிர்வாகிகளின் பதவி விபரங்களை பிரதேசத்தின் அனைத்து மஸ்ஜிதுகளிலும் காட்சிப்படுத்துவதோடு அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது நிர்வாக கட்டமைப்பு தொடர்பில் தெளிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு, கிளைக்கான காணி விவகாரம், வெளிப் பிரதேசங்களில் வசிக்கும் கிளை அங்கத்தவர்கள் விவகாரம், பிரதேசத்தில் இயங்கிவரும் தஃவா அமைப்புக்கள் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.
மேலும், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குதல், சிரமப்படும் கதீப்மார்கள் மற்றும் முஅத்தின்மார்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்குதல், சிலாவத்துறை வைத்தியசாலையில் சிரமதானம் செய்தல், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உதவித்திட்டம் வழங்குதல், பிரதேச பாடசாலைகளின் காலைக் கூட்டங்களில் மாணவர்களுக்கு நற்சிந்தனை வழங்குதல் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
பிரதேசத்தில் இயங்கும் சிறுவர்களுக்கான அல்-குர்ஆன் மத்ரஸாக்களை மேம்படுத்துவது தொடர்பிலும் இதில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
07) 2024.10.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - கெக்கிராவ கிளையின் மாதந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஸாபிர் (இன்ஆமி) அவர்களது தலைமையில் கெக்கிராவ முஹ்யித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், கிளை நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்றை நடாத்தல், தலைமையகத்தினால் நடாத்தப்படும் பயிற்சி மற்றும் மேம்பாட்டு செயலமர்விற்கு செல்லுதல், புதிய அங்கத்தவர்களுக்கான ACJU அடையாள அட்டை விண்ணப்பித்தல், கிளைக்கான காரியாலயம் நிர்மாணித்தல் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
08) 2024.10.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை - சூடுவெந்தபுலவு கிளையின் கல்விக் குழு உறுப்பினர்களிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று கிளைத் தலைவர் அஷ்-ஷைக் கே. நபீஸ் (நஜாஹி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில், மாணவர்களது ஒழுக்க விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் நடைபெறும் காலைக் கூட்டங்களில் மாணவர்களுக்கான தர்பிய்யா நிகழ்வுகளை நடாத்துதல் தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம சேவகர்கள், கல்விக் குழு ஆலிம்கள், துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
09) 2024.10.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை - குருநாகல் நகர் கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஆர். நூர் முஹம்மத் அவர்களது தலைமையில் குருநாகல் மர்கஸ் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், கிளைக்குட்பட்ட ஆலிம்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சியினை நடாத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
10) 2024.10.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - திவுரும்பொல கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.பீ.எம். பாஸி (மனாரி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு பிரதேசத்தில் உள்ள வீடுகளில் ஜனாஸா ஏற்பட்டால் தேவையேற்படும் பட்சத்தில் உணவு ஏற்பாடுகளை செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
11) 2024.10.06ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - லங்காபுர கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஐ.எம். இர்ஷாத் (நஹ்ஜி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில், தலைமையகத்தினால் நடாத்தப்படும் பயிற்சி மற்றும் மேம்பாட்டு செயலமர்வு குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
12) 2024.10.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - ஹொரவப்பொத்தானை கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் என்.பி. நிலாம்தீன் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பைத்துஸ் ஸகாதின் வரவு செலவு கணக்கறிக்கையை காட்சிப்படுத்தல், தலைமையகத்தில் நடாத்தப்படும் பயிற்சி மற்றும் நியமன செயலமர்வில் கலந்துகொள்ளுதல், 2025க்கான நாட்காட்டி வெளியிடுதல், பாடசாலை மட்டத்தில் கட்டுரைப் போட்டி நடாத்தல், பாராளுமன்ற பொதுத் தேர்தல் விவகாரம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
13) 2024.10.09ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - இக்கிரிகொல்லாவ கிளையினால் முன்னெடுக்கப்பட்ட 'ஷமாஇலுத் திர்மிதி' செயற்றிட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டமையினையிட்டு சிறப்பு நிகழ்வொன்று கிளை தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாஸீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் இக்கிரிகொல்லாவ ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
கிளைக்குட்பட்ட 07 பள்ளிவாயல்களிலும் 'ஷமாஇலுத் திர்மிதி' செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்த கதீப்மார்கள் இதன்போது பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஊர் மக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், நலன் விரும்பிகள், ஹமீதிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஜம்இய்யாவின் ஆலிம்கள், பாடசாலை ஆசிரியர்கள் என அநேகமானோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
14) 2024.10.12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - அம்பாறை மாவட்டக் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி (மதனி) அவர்களது தலைமையில் கல்முனை கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில், மாவட்டக் கிளையின் நிதி மூலங்களை வலுப்படுத்தல், வழி தவறிய கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி தஃவா செய்தல், பாராளுமன்ற தேர்தல் வழிகாட்டல் அறிக்கை வெளியிடுதல், குத்பா சொற்பொழிவுகளின் தர மேம்பாட்டை கருத்திற் கொண்டு கதீப்மார்களுக்கான செயலமர்வொன்றை ஏற்பாடு செய்து நடாத்தல் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
15) 2024.10.12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் மாதாந்தக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் பர்ஹத் (உஸ்வி) அவர்களின் தலைமையில் பானுவல மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், கிளையின் நிதி மூலங்களை பலப்படுத்தல், க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
16) 2024.10.12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - பன்னவ கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஸுஐப் (தீனி) அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இதில், ஆலிம்களை ஒன்று சேர்த்தல், மஹல்லாக்களை ஒன்று சேர்த்து ஜம்இய்யா பற்றிய தெளிவூட்டல் நிகழ்வொன்றை நடாத்துதல், வாலிபர்களை ஒன்று சேர்த்து மார்க்கத் தெளிவூட்டல் வகுப்பு நடாத்தல் போன்ற பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
17) 2024.10.12ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - பொலன்னறுவை மாவட்டக் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.எம். அலாவுதீன் அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில் தலைமையக்கத்தினால் நடாத்தப்படும் பயிற்சி மேம்பாடு செயலமர்வு, மூத்த ஆலிம்களை கௌரவிக்கும் நிகழ்வு, காரியாலயத்திற்கான வரவு செலவு விபரம், பொ/ முஸ்லிம் தேசிய பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க காலைக் கூட்டத்தில் நற்சிந்தனை வழங்கல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
18) 2024.10.13ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - குருநாகல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஸுஐப் (தீனி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்டத்தில் உள்ள 20 பிரதேசக் கிளைகளினதும் பதவிதாங்குனர்கள் அழைக்கப்பட்டு கிளைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன் பொதுத்தேர்தல் வேட்பாளர்களான முஸம்மில் ஆசிரியர் மற்றும் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா ஆகியோர்களுடனான சிநேகபூர்வமான சந்திப்பும் நடைபெற்றது.
19) 2024.10.13ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - அக்கரைப்பற்று கிளையின் உப குழுக்களை ஒன்று சேர்ப்பதற்கான விஷேட ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் மிஹலார் (நளீமி) அவர்களது தலைமையில் கணமூலை, லத்தீப் மாவத்தை - ஆயிஷா மஸ்ஜிதில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கிளையின் உப குழுக்களுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, உப குழுக்களின் பொறுப்புகள் மற்றும் அமானிதங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு ஜம்இய்யாவின் அங்கத்துவ அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
20) 2024.10.13ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - வவுனியா பட்டாணிச்சூர் கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எம். ஷிப்லி (மீஸானி) அவர்களது தலைமையில் பட்டாணிச்சூர், மொஹிதீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், ஷமாஇலுத் திர்மிதியை மக்கள் மயப்படுத்தும் செயற்றிட்டத்தில் பங்களிப்புச் செய்த அனைத்து ஆலிம்களும் பாராட்டப்பட்டதுடன் இவ்வருடம் உயர் தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இஸ்லாமிய நாகரீக செயலமர்வு நடாத்துதல், பைத்துஸ் ஸகாத் திட்டம் ஆரம்பித்தல், ஜம்இய்யாவின் மாதாந்த உதவித் திட்டம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
21) 2024 நவம்பர் 13, 15, 18 ஆகிய திகதிகளில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - புத்தளம் நகர கிளையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான துஆப் பிராத்தனை நிகழ்வுகள் நடைபெற்றன.
22) 2024.10.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - வத்தளை கிளையின் நிர்வாகிகளிடையே 'வெள்ள நிவாரணம்' தொடர்பில் கலந்துரையாடுவதற்கான அவசர ஒன்றுகூடலொன்று கிளைத் தலைவர் அஷ்-ஷைக் அனஸ் (ஹாஷிமி) அவர்கள் தலைமையில் திப்பிடிகொட ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்கள் இனங்காணப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட ஆலிம்களின் தரவுகளும் திரட்டப்பட்டன. மேலும் உடனடியாக மஸ்ஜித் நிர்வாகங்கள், நலன்புரிச் சங்கங்கள் ஆகியவற்றுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு நிவாரணப் பணியை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
23) 2024.10.14ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - பொத்துவில் கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஏ. முஹைதீன் பாவா (ஷர்க்கி) அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இதில், பொத்துவில் பிரதேசத்தில் அண்மையில் மதுபானசாலை திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி நடாத்துதல், பிரதேசத்தின் கரைவலை மீன்பிடி முதலாளிமார் மற்றும் இறைச்சி கடை உரிமையாளர்கள் ஆகியோரை சந்தித்து 'இஸ்லாத்தின் பார்வையில் உழைப்பு' எனும் தலைப்பில் வழிகாட்டல் நிகழ்வொன்றை நடாத்துதல், ‘பொத்துவில் ஜெயிக்கா-50’ வீட்டுத்திட்ட மஸ்ஜித் நிர்வாகிகளை சந்தித்தல் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
24) 2024.10.17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - மாத்தறை மாவட்டக் கிளையின் பதவி தாங்குனர்களுக்கான கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அல்-ஹாபிழ் அப்துர் ரஹ்மான் (மழாஹிரி) அவர்களது தலைமையில் பாரி அரபுக் கல்லூரி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், வாலிபர்களுக்கான வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவப் பயிற்சி நடாத்தல், ஜம்இய்யாவுக்கு அச்சுறுத்தலாக செயற்படுவோர்க்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல், முஸ்லிம் ஊடகவியலாளர் சங்கத்துடனான சந்திப்பினை மேற்கொள்ளல், பள்ளிவாசல் சம்மேளனத்துடனான சந்திப்பினை நடாத்தல், விளையாட்டுக் கழகங்கள், சமூக சேவை இயக்கங்கள் மற்றும் தனவந்தர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்ச்சியினை நடாத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
25) 2024.10.17ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - நிந்தவூர் கிளையின் ஆலிம்கள் விவகாரக் குழுவினால் பிரதேச ஆலிம்களுக்கான ஒருநாள் இலவச தலைமைத்துவப் பயிற்சி செயலமர்வு நிந்தவூர் ஜுமுஆ பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
'ஆளுமைகளை மேம்படுத்துதல்' எனும் நோக்கில் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில், கலந்துகொண்ட ஆலிம்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில், வளவாளராக காத்தான்குடி 'Mind Zone' நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷைக் இஹ்ஸான் ரஹீம் (ஹாஸிமி) அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
26) 2024.10.18ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - பசறை கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அப்துஸ் ஸலாம் (ஷர்கி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பான செயலமர்வினை நடாத்துதல், தலைமையகத்தினால் நடாத்தப்படும் பயிற்சி மற்றும் மேம்பாட்டு செயலமர்வுக்கு ஆலிம்களை அனுப்புதல், தேர்தல் காலங்களில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
27) 2024.10.19ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - புத்தளம் நகர் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஜிப்னாஸ் (மிஸ்பாஹி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், ஊரில் உள்ள அமைப்புக்கள் மற்றும் சங்கங்கள் இணைந்து ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம் நடாத்தல், சிறார்களுக்கான இஸ்லாமிய போட்டிகள் நடாத்தல், வர்த்தக சங்கத்துடனான சிநேகபூர்வ சந்திப்பை நடாத்தல், மஸ்ஜிதுல் பகா நிர்வாகத்துடன் சிநேகபூர்வ சந்திப்பை நடாத்தல், முஅத்தின்மார்களுக்கான அதான் பயிற்சி நடாத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
28) 2024.10.19ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - ஏறாவூர் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல். ஸாஜித் ஹுஸைன் பாகவி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், தேர்தல் விடயங்களில் இஸ்லாமிய விழுமியங்களைக் கடைப்பிடிப்பது தொடர்பாக ஜும்ஆ பிரசங்கங்களில் வழிகாட்டல்களை வழங்குதல், கிளையின் அடுத்த 03 மாதங்களுக்கான திட்டமிடல்களை மேற்கொள்வதற்கான ஒரு நாள் செயலமர்வொன்றை நடாத்தல், கிளைக்கு கிடைக்கப் பெறுகின்ற சமுகம் சார்ந்த முறைப்பாடுகளை விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
29) 2024.10.19ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - முள்ளிப்பொத்தானை கிளையின் ஏற்பாட்டில் 'இன நல்லிணக்கமும் சகவாழ்வும்' எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்வொன்று கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ஹுஸைன் (ஹிழ்ரி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், SFCG, ADR Forum, SEDR குழுக்களின் பிரதிநிதிகள் வளவாளர்களாக கலந்துகொண்டிருந்ததோடு மாற்று வழியில் பிணக்குத் தீர்த்தல், பிணக்கை தீர்க்க ஆதரவளித்தல் போன்ற பல்வேறு விடயப் பரப்புகளை தெளிவுபடுத்தினர்.
இந்நிகழ்வில், தம்பலகாம பிரதேசத்தின் அனைத்து ஜுமுஆ மஸ்ஜிதுகளின் தலைவர்கள், செயலாளர்கள், இமாம்கள் ஆகியோருடன் ஊர் நலன் விரும்பிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
30) 2024.10.20ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - சூடுவெந்தபுலவு கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் கே.எம். நபீஸ் (நஜாஹி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், கிளை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
31) 2024.10.20ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - சாளம்பைக்குளம் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் என்.பீ. ஜுனைத் (மதனி) அவர்களின் தலைமையில் சாளம்பைக்குளம், மஸ்ஜிதுல் ஹுதாவில் நடைபெற்றது.
இதில், உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பொது அறிவு மற்றும் நுண்ணறிவு பாடத்திற்கான கருத்தரங்கு நடாத்துதல், இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடாத்துதல், பிரதேசத்தில் அஹதிய்யாப் பாடசாலை ஆரம்பித்தல், ஷமாஇலுத் திர்மிதி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டமைக்கு நன்றி தெரிவித்தல், கிளைக்கான மாதாந்த சந்தா வசூலித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
32) 2024.10.20ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - மன்னார் நகர் கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அஸீம் (அத்லி) அவர்களின் தலைமையில் மன்னார், பெரிய கடை முஹைதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், கிளையினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால திட்டங்கள், ஜம்இய்யாவின் அங்கத்துவ அடையாள அட்டை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
33) 2024.10.20ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - அரக்கியாள கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் தய்யிப் முஃப்தி அவர்களின் தலைமையில் அரக்கியாள, மடலஸ்ஸ மஸ்ஜிதுல் பலாஹ் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், நிர்வாக பயிற்சி கூட்டத்தில் பதவி தாங்குனர்கள் கலந்து கொள்ளல், தேர்தல் காலகட்டத்தில் ஆலிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைமையகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டலை அனைவரும் ஏற்றுநடத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
34) 2024.10.22ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - வவுனியா பட்டாணிச்சூர் கிளையினால் மாதாந்தம் முன்னெடுக்கப்படும் உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு கிளை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இதில், ஒக்டோபர் மாதத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
35) 2024.10.22ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - குரீகொட்டுவ கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் குழு உறுப்பினர்களது பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இதில், ஒவ்வொரு மஸ்ஜித்களிலும் மாதம் இருமுறை தப்ஸீர் வகுப்பு நடத்தல், வாரம் ஒருமுறை பிக்ஹு வகுப்பு மற்றும் மாணவர் தர்பியா நடத்தல், தேர்தல் காலத்தில் மக்கள் நடந்துகொள்ளும் முறை பற்றி தெளிவூட்டல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.
36) 2024.10.23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - குருவிட்ட கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் றிஸ்வான் (ஹஸனி) அவர்களின் தலைமையில் குருவிட்ட டவுன் மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், பிரதேசத்தில் வசிக்கும் புதிதாக இஸ்லாத்தினை ஏற்ற சகோதரர்களின் தகவல்களை திரட்டல், ஆண்கள் பெண்களுக்கான விசேட பயான் நிகழ்ச்சிகள் நடாத்தல், பிரதேசத்தில் உள்ள சிறைக் கைதிகளுக்கு ஜுமுஆ குத்பா நிகழ்த்தல், பிரதேசத்தின் சீர்திருத்தப் பள்ளிகளில் உள்ளவர்களை சந்தித்து நல்லுபதேசம் செய்தல், ஜம்இய்யாவின் அங்கத்துவ அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், அஹதிய்யா பாடசாலை விவகாரம், ஊரில் இயங்கும் பகுதிநேர ஹிப்ழ் மத்ரஸா மற்றும் குர்ஆன் மத்ரஸா விவகாரம் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
37) 2024.10.23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - நிந்தவூர் கிளையின் நிர்வாகக் குழு ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் என். இஸ்மத் (ஷர்கி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், ஆலிமாக்கள் பிரிவினுடைய செயற்திட்டங்களை மேலும் வலுப்படுத்தல், ஹாபிழ்களை அறிமுகப்படுத்தும் விழா நடாத்தல், பிரதேசத்தின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை சந்தித்தல், ஜம்இய்யாவின் செயற்றிட்டங்களுக்கான நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய திட்டங்களை வகுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
38) 2024.10.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - நிந்தவூர் கிளை ஆரம்பிக்கப்பட்டு 86 வருடங்கள் பூர்த்தியாகின்றது.
1938.10.24 ஆம் திகதி, ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் ஜம்இய்யா ஆன்மீகத் துறையில் தவிர்க்க முடியாத ஒரு கட்டமைப்பாக உருவாகியுள்ளதுடன் இன்று சுமார் 220 ஆலிம்களோடு பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
39) 2024.10.24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - மருதமுனை கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எப்.எம்.ஏ.எஸ். அன்ஸார் மெளலானா (நளீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில், இம்முறை A/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நடாத்துதல், மருதமுனை-மேற்கு மையவாடியில் மண் நிரப்புதல், பிரதேசத்தில் பின்னேர வகுப்புக்கள், அஹதிய்யா, அல்-குர்ஆன் மதரஸாக்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தல், தஃவா செயற்பாடுகள், கிளை அங்கத்தவர்களுக்கான நலன்புரித் திட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
40) 2024.10.26ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - குருநாகல் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளை ஜம்இய்யாக்களின் புதிய நிர்வாகிகளுக்கான பயிற்சி மற்றும் பதவி நியமனங்கள் வழங்கும் விஷேட செயலமர்வுகள் குருநாகல் நகர் மலாய் ஜுமுஆ மஸ்ஜித் மற்றும் சியபலாகஸ்கொடுவ ஜலாலிய்யா மஸ்ஜித் ஆகிய பள்ளிவாயல்களில் இரு அமர்வுகளாக நடைபெற்றன.
குறித்த இரு நிகழ்வுகளிலும், 'ஜம்இய்யா கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான பொறுப்புக்கள், கடமைகள் தொடர்பில் தெளிவுகள் வழங்கப்பட்டதோடு பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கான சில ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
குருநாகல் நகர் மலாய் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம்பெற்ற செயலமர்வில் குருநாகல் மாவட்டக் கிளை மற்றும் அதன் 07 பிரதேசக் கிளைகளில் இருந்து 15 ஆலிம்களும், சியபலாகஸ்கொடுவ ஜலாலிய்யா மஸ்ஜிதில் இடம்பெற்ற செயலமர்வில் மாவட்டம் மற்றும் 13 பிரதேசக் கிளைகளிலிருந்து 49 ஆலிம்களும் கலந்து பயன்பெற்றதோடு உறுதிமொழியளித்து பதவிப் பிரமாணமும் செய்துகொண்டனர்.
41) 2024.10.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - தம்பிட்டிய கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ராஸிக் அவர்களின் தலைமையில் குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதில், ஷமாஇலுத் திர்மிதியினுடைய வரவு செலவு விபரம், சமூக சேவைகளை முன்னெடுத்தல், தலைமையகத்தினால் நடாத்தப்படும் பயிற்சி மற்றும் மேம்பாடு செயலமர்விற்கு ஆலிம்களை அனுப்புதல், கிளைக்கான நிதிமூலங்களை வளப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
42) 2024.10.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - கேகாலை மாவட்டக் கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் நஸார் (ரஹ்மானி) அவர்களது தலைமையில் கிருங்கதெனிய, மஸ்ஜிதுன் நூர் ஜுமுஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இதில், ஆலிம்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு நடாத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
43) 2024.10.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - ஹெம்மாதகம கிளையின் நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் நஸார் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதில், ஆலிம்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு நடாத்தல், பிரதேச இளைஞர்களுக்கான தொடர் வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடாத்தல், அதற்கு தலைமையகத்தின் வழிகாட்டல்களைப் பெறல் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
44) 2024.10.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - மதவாக்குளம் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஏ.எம்.எம். ரமீஸ் (ரவாஹி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில், கடந்த கூட்டத்தில் பொறுப்புக் கொடுக்கப்பட்ட விடயங்கள், கிளையின் உப குழுக்களின் செயற்பாடுகள், வருடாந்த சந்தா போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
45) 2024.10.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - புத்தளம் நகர் கிளைக்கு சமூக நலன் விரும்பி ஒருவரால் ஒரு தொகை உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த பொதிகள் அனைத்தும் கிளையின் சமூக சேவைக் குழு மற்றும் ஆலிம்கள் விவகாரக் குழுவின் ஊடாக தேவையுடையவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
46) 2024.10.27ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - குருநாகல் நகர் கிளையின் ஏற்பாட்டில் 'வலுவான ஆலிம்கள் - வளமான சமூகம்' எனும் தொனிப்பொருளில் பிரதேசத்திலுள்ள ஆலிம்களுக்கான வலுவூட்டல் மாநாடொன்று கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஆர். நூர் முஹம்மத் (நூரி) அவர்களது தலைமையில் குருநாகல் கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், ஆலிம்களின் முன்னேற்றம், ஆளுமை விருத்தி போன்றவற்றை மேம்படுத்தும் முகமாக தலைசிறந்த ஆலிம்களால் பல முக்கிய தலைப்புக்களில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இம்மாநாட்டில் குருநாகல் நகர் கிளையைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட ஆலிம்கள் கலந்து சிறப்பித்தனர்.
47) 2024.10.28ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - ஏறாவூர் கிளை பதவி தாங்குனர்கள் மற்றும் ஆற்றங்கரை முஹைதீன் ஜுமுஆ பள்ளிவாயல் நிர்வாகிகள் ஆகியோரிடையிலான விஷேட சந்திப்பொன்று தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல். ஸாஜித் ஹுஸைன் பாகவி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
48) 2024.10.29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - அட்டாளைச்சேனை கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் யூ.எம். நியாஸ் (ஷர்கி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், பிரதேச ஆலிமாக்களுக்கான மார்க்க வலுவூட்டல் நிகழ்ச்சி நடாத்தல், கடந்த ஓரிரு ஆண்டுகளில் பட்டம் பெற்று வெளியேறிய புதிய ஆலிம்கள் மற்றும் ஹாஃபிழ்களின் தகவல்களை சேகரித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
49) 2024.10.29ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்களின் தலைமையில் தெஹிவளை, கவுடான ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில், கொழும்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச கிளைகளுடைய செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
50) 2024.10.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - எலபடகம கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.என்.எம். நஸ்ரின் (ரஷாதி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், மாணவர்களுக்கான ஆன்மீக வழிகாட்டல் நிகழ்வுகளை நடாத்துதல், ஊரில் உள்ள ஆலிமாக்களுடைய விபரங்களை திரட்டுதல், மாத சந்தா விடயம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
51) 2024.10.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - பங்கரகம்மன கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எல். ஹாலித் (ஷரஃபி) அவர்களது தலைமையில் தம்பகொல்ல மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில், தரம் 10 ,11இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி, பெண்களுக்கான இரண்டு பயான் நிகழ்ச்சிகள், பிரதேச பாலர் பாடசாலைகளில் நடக்கக்கூடிய கலை விழா மார்க்கத்திற்கு உட்பட்ட விதத்தில் நடாத்தல், க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவ மாணவிகளை கௌரவித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
52) 2024.10.30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - புத்தளம் நகரக் கிளை மற்றும் பகா மஸ்ஜித் நிர்வாகம் ஆகியவையிடையிலான விஷேட சந்திப்பு கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், அல்-குர்ஆன் மத்ரஸாவின் முக்கியத்துவம், பெரியவர்களுக்கான வாராந்த அல்-குர்ஆன் வகுப்பு ஆரம்பித்தல், வயது வந்த ஆண்கள், பெண்களுக்கான மார்க்கம் சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடாத்தல், புத்தளத்தில் மஸ்ஜித் சம்மேளனம் ஆரம்பித்தல் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
53) 2024.10.31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - களுத்துறை மாவட்ட கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பர்ஹான் (நளீமி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில், வாலிபர்களை வழிநடாத்த ஆலிம்களை பயிற்றுவித்தல், பொதுத் தேர்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு வழிகாட்டல், வெள்ள நிவாரணத்திற்கு சேகரித்த பண மிகுதியை வங்கியில் வைப்பிலிடல், கிளையின் மத்திய சபை கூட்டம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எட்டப்பட்டன.
54) 2024.10.31ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை - ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் மாதாந்த நிர்வாகக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் பர்ஹத் (உஸ்வி) அவர்களின் தலைமையில் கடலோர ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
- ACJU Media -