அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைச் செய்திகள் - மே - 2024

ஜூன் 10, 2024

2024.05.04ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுஹர கிளையினால் க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதக்கூடிய மாணவர்களுக்கான துஆ மஜ்லிஸ் அஷ்-ஷைக் அப்துல் சத்தார் (தீனி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

2024.05.05ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திலுள்ள ஜம்இய்யாவின் கிளைகளின் நிர்வாகிகளுக்கான கூட்டம் அஷ்-ஷைக் நதீர் (ஷர்கி) அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட கிளைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.

 

2024.05.06ஆம் திகதி கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் பதவிதாங்குனர்கள் கூட்டம் மாவாட்டக் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் உமர்தீன் ரஹ்மானி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அபிவிருத்தி சங்கம், மக்தப் மற்றும் கண்டி மாவட்ட அரபு மதரஸாக்களின் உஸ்தாத்மார்களுக்கான செயலமர்வு ஆகியவற்றை நடாத்துதல் பற்றி தீர்மானிக்கப்பட்டது.

 

2024.05.07ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளைக்குட்பட்ட SLS (மஸ்ஜிதுல் ஜன்னஹ்) நிர்வாக சபையானது தமது மஸ்ஜித் இமாம் அவர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சேவையிலிருந்து இடைநிறுத்த முற்பட்ட பொழுது மாவட்ட ஆலிம்கள் விவகாரக் குழுவானது குறித்த நிர்வாக சபையுடன் கலந்துரையாடி இமாம் அவர்களுக்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

 

2024.05.08ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு மத்திய கிளை மற்றும் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரியின் அதிபர் சகோதரர் அஹ்மத் நிப்ராஸ் அவர்களுடனான சந்திப்பு அதிபர் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் பிரதேச மாணவர்களது கல்வி செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு நடைபெறும் காலை ஆராதனைகளில் மாதமொருமுறை கொழும்பு மத்தியகிளை ஜம்இய்யாவுக்கு நேரம் வழங்கப்படுவது தொடர்பிலும் உறுதியளிக்கப்பட்டது.

 

2024.05.09ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா திவுரும்பொல பிராந்தியக் கிளையின் மாதாந்த செயற்குழுக்கூட்டம் ஆரிகாமம் ஜுமுஆ பள்ளிவாசலில் தலைவர் அஷ்-ஷைக் எம்.பி.எம். பாஸி (மனாரி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

2024.05.10ஆம் திகதி, குருநாகல் மாவட்டம் எலபடகம கிளையின் மாதாந்தக் நிர்வாகக்கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.என்.எம். நஸ்ரின் (ரஷாதி) அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் குறித்த உழ்ஹிய்யா தொடர்பான வழிகாட்டல்கள் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

 

2024.05.10ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாரம்மல பிராந்திய கிளைக்குட்பட்ட ஆலிம்களுக்கான ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் அல் ஹாபிழ் ரியாஸ் (ஜவாதி) அவர்களின் தலைமையில் கடஹபொல ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2024.05.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி கிளையின் நிர்வாகக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர். ரியால் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இதில் குச்சவெளி கிளையினால் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

 

2024.05.11ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் அரபுக் கல்லூரிகளின் நிருவாகிகள் மற்றும் அதிபர்களுக்கான கல்வி உளவியல் செயலமர்வு தலைமை ஜம்இய்யாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி அவர்களது தலைமையில் அட்டாளைச்சேனை ஷர்கிய்யா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.

 

2024.05.11ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் உமர்தீன் ரஹ்மானி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் கண்டி மாவட்ட பிரதேசக் கிளைகளில் இருந்து 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

2024.05.11ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் மே மாத ஒன்று கூடல் அஷ்-ஷைக் பர்ஹத் அவர்களின் தலைமையின் கீழ் பானுவல மர்கஸ் மஸ்ஜிதில் தலைவர் நடைபெற்றது.

 

2024.05.12ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டி நகர கிளையின் ஏற்பாட்டில் இம்முறை ஹஜ்ஜுக்கு செல்லக்கூடிய ஹாஜிகளுக்கான வழிகாட்டல் செயலமர்வு கிளைத் தலைவர் அஷ்-ஷைக் பீ.எம்.பாயிஸ் (ஃபாஸி) அவர்களின் தலைமையில் கண்டி மீரான் மகாம் ஜுமுஆ பள்ளியில் இடம்பெற்றது.

 

2024.05.12ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-குருநாகல் நகர் கிளையின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஆர். நூர் முஹம்மத் அவர்களது தலைமையில் மகாம் (ஸாஹிரா) பள்ளியில் நடைபெற்றது.

 

2024.05.12ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் ஆலிம்கள் விவகாரக் குழுவுக்கும் ரனசிரிபுர தாருல் ஹுதா ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மத்தியில் நடைபெற்ற கலந்துரையாடலில் மே 20ஆம் திகதி ஜம்இய்யாவின் குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

 

2024.05.13ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-சாய்ந்தமருது, மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடம்  ஹஜ்ஜுக்கு செல்வதற்கு தயாராக இருக்கும் ஹாஜிமார்கள் மற்றும் ஏனையவர்களும் பயன்பெறும் வகையில் நான்கு நாட்கள் கொண்ட 'ஹஜ் வழிகாட்டல்' கருத்தரங்கின் முதலாவது அமர்வு தலைவர் அஷ்-ஷைக் எம்.எம்.எம் சலீம் (ஷர்க்கி) அவர்களது தலைமையில் சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்றது.

 

2024.05.13ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருநாகல் நகர் கிளை உறுப்பினர்களுக்கும் குருநாகல் - கொழும்பு பிரதான வீதியில் பொல்கஹவெல வரை உள்ள பகுதியில் வசிக்கக்கூடிய தெரிவு செய்யப்பட்ட ஐந்து ஆலிம்களுக்கும் இடையிலான சந்திப்பு மடலகம ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. குருநாகல் நகர் கிளைக்குட்பட்ட அனைத்து ஆலிம்களையும் ஜம்இய்யாவுடன் ஒன்று சேர்க்கும் செயற்றிட்டத்தின் ஆரம்பகட்ட முயற்சியாக ஒரு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடவே இக்கூட்டம் நடைபெற்றது.

 

2024.05.15ஆம் திகதி சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் இவ்வருடம்  ஹஜ்ஜுக்கு செல்வதற்கு தயாராக இருக்கும் ஹாஜிமார்கள் மற்றும் ஏனையவர்களுக்குமான நான்கு நாட்கள் கொண்ட ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கின் இரண்டாவது அமர்வு தலைவர் அஷ்-ஷைக் எம்.எம்.எம் சலீம் (ஷர்க்கி) அவர்களது தலைமையில் சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்றது.

 

2024.05.15ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் ஜனாஸா சம்பந்தமான அவசர கலந்துரையாடல் ஒன்று தலைவர் அஷ்-ஷைக் பர்ஹத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

 

2024.05.15ஆம் திகதி கண்டி மலாய் ஜும்ஆ மஸ்ஜிதில் கண்டி மாவட்ட மஸ்ஜித்களின் மக்தப் மற்றும் குர்ஆன் மதரஸா பொறுப்புதாரிகளுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதில் சுமார் 130 இற்கும் மேற்பட்ட பொறுப்புதாரிகள் கலந்து கொண்டனர்.

 

2024.05.16ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பாலமுனை கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் பரிபாலன சபைகளின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்களுக்கான உழ்ஹிய்யா பற்றிய விழிப்புணர்வு கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் அஸீஸ் ஸஹ்வி அவர்களின் தலைமையில் பாலமுனை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

 

2024.05.17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் ஹஜ்ஜுக்கு செல்வதற்கு தயாராக இருக்கும் ஹாஜிமார்களை கௌரவித்து வழி அனுப்பி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஹாஜிமார்களுக்கு ‘ஹஜ் வழிகாட்டல் கையேடு’ ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

 

2024.05.17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் ஹஜ்ஜுடைய கடமையை நிறைவேற்றச் செல்வதற்கு தயாராக இருக்கும் ஹாஜிமார்களை கௌரவித்து வழி அனுப்பி வைக்கின்ற நிகழ்வு கல்முனை நகர ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.

 

 

2024.05.17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நீர்கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடம்  புனித ஹஜ்ஜுடைய கடமையை நிறைவேற்றச் செல்வதற்கு தயாராக இருக்கும் ஹாஜிமார்களுக்கான விஷேட வழிக்காட்டல் நிகழ்வு நீர்கொழும்பு 'கோல்டன் பலஸ்' திருமண மண்டபத்தில் அஸர் தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றது.

 

2024.05.17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒலுவில் கிளையின் ஏற்பாட்டில் ஒலுவில் பிரதேசத்தில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வோருக்கான வழிகாட்டல் செயலமர்வு கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.பைசால் (மதனி) அவர்களது தலைமையில் ஒலுவில் அல்-மத்ரஸதுல் இலாஹிய்யாவில் நடைபெற்றது.

 

2024.05.17ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் கிளையினால் மக்பரா பள்ளிவாசலில் மலசலகூட குழி அமைப்பது தொடர்பான கட்டிடக்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் றமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் மக்பரா பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2024.05.18ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு தெற்கு கிளையின் ஏற்பாட்டில் இம்முறை ஹஜ்ஜுக்கு செல்லக் கூடிய ஹாஜிகளுக்கான வழிகாட்டல் செயலமர்வு கிளைத்தலைவர் அஷ்-ஷைக் அப்துல் ஹலீம் (ஷர்க்கி) அவர்களின் தலைமையில் கொழும்பு-06 மயூரா பிளேஸ் ஜுமுஆ மஸ்ஜிதில் இடம்பெற்றது.

 

2024.05.20ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்திலுள்ள அரபுக் கல்லூரிகளின் உஸ்தாத்மார்களுக்கான கருத்தரங்கு கண்டி, மீராம் மகாம் ஜும்ஆ மஸ்ஜிதின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் வளவாளர்களாக அஷ்-ஷைக் அப்துந் நாஸர் ரஹ்மானி மற்றும் அஷ்-ஷைக் ஹாஷிம் நத்வி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

2024.05.23ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நூற்றாண்டு நிறைவினையொட்டி கம்பஹா மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்ட மூத்த ஆலிம்களை கௌரவிக்கும் நிகழ்வானது ஹுணுப்பிட்டிய, ஹெவன் கேட் பென்கட் ஹோல் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

கம்பஹா மாவட்டத்தில் இயங்கும் ஜம்இய்யாவின் கிளைகளான மினுவாங்கொடை, நீர்கொழும்பு, திஹாரிய, கஹட்டோவிட்ட, பஸ்யாலை, மல்வானை, பூகொடை, வத்தளை ஆகிய எட்டு கிளைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த ஆலிம்கள் 56 பேர், இம்மாபெரும் சிறப்பு நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கம்பஹா மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் நுஹ்மான் இன்ஆமி, செயலாளர் அஷ்-ஷைக் ஸைபுல்லாஹ் இஹ்ஸானி, பொருளாளர் அஷ்-ஷைக் ஷாபி ஹுஸைன் நழீமி ஆகியோர் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்களின் அயராத உழைப்பின் விளைவாக மூத்த ஆலிம்களுக்கான சிறப்பு கௌரவ நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜம்இய்யாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக் அவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.எல்.எம். றிழா அவர்களும் விஷேட அதிதியாக கலந்துகொண்டிருந்தார்கள்.

மேலும் ஜம்இய்யாவின் செயற்குழு உறுப்பினரும் பேருவளை ஜாமிஆ நழீமிய்யாவின் முதல்வருமான அஷ்-ஷைக் அகார் மொஹமத் அவர்கள் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள்.

இதில் கௌரவ அதிதிகளாக , ஷ்-ஷைக் எம்.ரீ.எம். தௌஸீர், அல்-ஹாஜ் மொஹமத் பாயிஸ் ஆப்தீன், அல்-ஹாஜ் எம்.எச்‌.இஸட்.எம். மர்சூக், அல்-ஹாஜ் எல்.ஐ.ஏ.எம். ஸப்வான், அல்-ஹாஜ் அஹமட் இஸ்மாயீல் மொஹமத் அஷ்கர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் பல மூத்த ஆலிம்களும், இளம் ஆலிம்களும் இம்மாபெரும் பொன்னான நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

 

2024.05.24ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அம்பாறை மாவட்டக் கிளையின் ஒத்துழைப்புடன் ஹலால் சான்றுறுதிப் பேரவையின் அனுசரணையில் ஹலால்பற்றிய விழிப்பூட்டல் கருத்தரங்கு மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யாவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.எல். நாஸிர் கனி ஹாமி அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அம்பாறை மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி மதனி, முன்னாள் தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம்பாவா மதனி மற்றும் மாவட்ட சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கிளைகளின் செயலாளர்கள், உலமாக்கள், கல்விமான்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், வர்த்தகர்கள், வியாபாரிகள்,அரச உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள் என சமூகத்திலுள்ள 170க்கும் மேற்பட்ட பல்வேறு மட்டத்தினர் கலந்து பயன்பெற்றதோடு சந்தேகங்களுக்கான தீர்வுகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

 

2024.05.25ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மாத்தறை மாவட்ட கிளையின் பதவி தாங்குனர்களுக்கான கூட்டம் மாவட்டத் தலைவர் அஷ்-ஷைக் அல்-ஹாபிழ் அப்துர் ரகுமான் (மழாஹிரி) அவர்களின் தலைமையில் மாத்தறை பாரி அரபுக் கல்லூரி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

 

2024.05.25ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொலன்னறுவை மாவட்டக் கிளையின் மே மாதத்திற்கான ஒன்றுகூடல் அஷ்-ஷைக் எம்.எம்.அலாவுதீன் பலாஹி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2024.05.31ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குருணாகல் மாவட்டம்  மடிகேமிதியால பிரதேசக் கிளையின் காரியக் குழுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் வாரிஸ் ரஹ்மானி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

 

- ACJU Media -

Last modified onவியாழக் கிழமை, 13 ஜூன் 2024 04:53

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.