2023.12.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் ஜுமாதல் ஊலா மாதத்திற்கான ஒன்று கூடல் பானுவல மர்கஸ் மஸ்ஜிதில் தலைவர் அஷ்-ஷைக் பர்ஹத் மெளலவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2023.12.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்ட கிளையின் பொதுக்கூட்டமானது அஷ்-ஷைக் இன்ஸாப் (இன்ஆமி) அவர்களின் தலைமையில் தோப்பூர் மர்கஸ் மஸ்ஜிதில் நடைபெற்றது.
2023.12.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எஹலியகொடை பிரதேசக் கிளையின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஹமீம்போர்ட் அல்-ஹுதா அஹதிய்யா பாடசாலையின் பரிசளிப்பு விழா ஹமீம்போர்ட் முஹிதீன் ஜுமுஆப் பள்ளிவாயலில் அஹதிய்யா பாடசாலையின் அதிபர் அஷ்-ஷைக் ஷாகிர் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2023.12.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வவுனியா பட்டாணிச்சூர் கிளையின் ஏற்பாட்டில் இம்முறை அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு அஷ்-ஷைக் அல்-ஹாபிழ் ஈ.எல். றதீம் (மீஸானி) அவர்களால் பட்டாணிச்சூர் அல்-மீரானிய்யாஹ் பெண்கள் அரபுக் கல்லூரியில் நடாத்தப்பட்டது.
2023.12.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எஹலியகொடை பிரதேசக் கிளையின் மூலம் ஹமீம்போர்ட் அஹதிய்யா விவகாரங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உலமாக்கள் குழு பரக்கடுவ பம்பேகம கிராம மஹல்லாவுக்கு சென்று பள்ளிவாயலின் தற்போதைய நிலைமைகளை அவதானித்தனர். மேலும் குறித்த பள்ளியின் கூரைகள், சுவர்கள் இடிந்து விழுந்து காடுகள் வளர்ந்து காணப்படுகின்றமை கவலையளிப்பதாக தெரிவித்தனர்.
2023.12.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வவுனியா பட்டாணிச்சூர் கிளையின் ஏற்பாட்டில் பட்டாணிச்சூர் உஸ்மானிய்யாஹ் மஸ்ஜிதினால் நடாத்தப்பட்டு வரும் குர்ஆன் மத்ரஸாவில் கற்கின்ற மாணவர்களின் நலன்கருதி புனித அல்-குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
உஸ்மானிய்யாஹ் மஸ்ஜித் நிர்வாகிள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
2023.12.03 மற்றும் 06 ஆகிய திகதிகளில் ஜம்இய்யாவின் பொலன்னறுவை மாவட்டக் கிளையின் கல்விக் குழுவினால் வட மத்திய மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்குகள் பொலன்னறுவை முஸ்லிம் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.
நடைபெற்ற இக்கருத்தரங்குகளில் அஷ்-ஷைக் ஏ. முஸ்லிமீன் நளீமி (SLEAS -1), பீ. உமாசங்கர் (M.Com) ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதோடு 112 பட்டதாரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
2023.12.05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் காரியக்குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் இஸ்மத் (ஷர்கி) அவர்களின் தலைமையில் மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாயலில் நடைபெற்றது.
2023.12.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் ஆலிம்கள் விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் நிந்தவூரிலுள்ள மஸ்ஜித்களின் இமாம்களுக்கான "பள்ளிவாயல்களினூடாக உயரிய சமூகத்தை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கு நிந்தவூர் ஜூமுஆப் பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் வெலிகம ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரியின் அதிபர் முப்தி எம். நஜிமுத்தீன் (ஹிழ்ரி) அவர்களால் நடாத்தப்பட்டது.
2023.12.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் தஃவாப் பிரிவின் ஏற்பாட்டில் நிந்தவூரிலுள்ள அனைத்து பள்ளிவாயல் முஅத்தின்மார்களுக்குமான "முஅத்தின்களின் மாண்புகள்" எனும் தலைப்பிலான தர்பிய்யா நிகழ்வு நிந்தவூர் ஜூமுஆப் பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
2023.12.09 ஆம் திகதி, ஜம்இய்யாவின் ஹம்பந்தோட்டை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜனவரி 27 இல் நடைபெறவுள்ள உலமாக்களுக்கான கௌரவிப்பு விழா சம்பந்தமான இடைக்கால முதலாவது கூட்டம் பானுவல புதிய பள்ளியில் தலைவர் அஷ்-ஷைக் பர்ஹத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2023.12.09 ஆம் திகதி கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்களின் தலைமையில் தாருல் உலூம் புர்கானிய்யாஹ் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு 07 பிரதேசக் கிளைகளில் இருந்து 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
2023.12.09 ஆம் திகதி ஜம்இய்யாவின் அரபு கல்லூரிகள் விவகாரப் பிரிவின் ஒத்துழைப்புடன் கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்ட அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட உஸ்தாத்மார்களுக்கான பயிற்சிநெறி தாருல் உலூம் புர்கானிய்யாஹ் அரபுக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் 31 அரபு கல்லூரிகளில் இருந்து 55 சிரேஷ்ட ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர்.
2023.12.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவு மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் கல்விப் பிரிவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ. ஜஃபர் பலாஹி அவர்களின் தலைமையில் நிந்தவூரிலுள்ள உயர்தரம் மற்றும் சாதாரண தர பாடசாலை அதிபர்களுடனான கூட்டம் நிந்தவூர் ஜூம்ஆப் பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2023.12.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் எலபடகம கிளையின் மாதாந்தக் கூட்டம் நீண்ட இடைவெளிக்குப் பின் அஷ்-ஷைக் எம்.என்.எம். நஸ்ரின் ரஷாதி அவர்களது தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
2023.12.10 ஆம் திகதி ஜம்இய்யாவின் கொழும்பு வடக்கு கிளையின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக்குழுவின் வழிகாட்டலில் இளைஞர்களுக்கான மார்க்க வழிகாட்டல் செயலமர்வு கிரேன்ட்பாஸ் அவ்வல் ஸாவியா மஸ்ஜிதில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக்குழுவின் இணைப்பாளரும் உளவளத்துறை ஆலோசகருமான சகோதரர் ரம்ஸி அவர்கள் கலந்துகொண்டதோடு கொழும்பு தெற்கு கிளையின் செயலாளரும் உளவளத்துறை ஆலோசகருமான அஷ்-ஷைக் அர்ஷத் புர்கானி அவர்களும் பங்கேற்றிருந்தார்கள்.
2023.12.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் இளைஞர் விவகாரப் பிரிவின் விஷேட ஒன்று கூடல் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
2023.12.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிரிங்கதெனிய கிளையின் அனைத்து அங்கத்தவர்களுக்குமான ஒன்று கூடல் அஷ்-ஷைக் பவ்ஹான் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் அஹ்மத் ஹுசைன் தலைமையில் நடைபெற்றது.
2023.12.11 ஆம் திகதி கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்திலுள்ள அரபு மத்ரஸாக்களில் இருந்து இம்முறை க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அரபு பாடத்திற்கான கருத்தரங்கு கண்டி மீரா மகாம் மஸ்ஜிதின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதனை அஷ்-ஷைக் ரிபாஸ் ஹக்கானி அவர்கள் நடத்தினார்கள். இக்கருத்தரங்கில் 06 மத்ரஸாக்களில் இருந்து 48 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.
2023.12.14ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையினால் கடந்த சில மாதங்களுக்குள் புதிதாக இலங்கையின் பல மத்ரஸாக்களிலிருந்தும் வெளியாகியுள்ள இளம் உலமாக்களுக்கு ஜம்இய்யாவில் இணைந்து கொள்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
2023.12.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிந்தவூர் கிளையின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் நிந்தவூரில் உயர்தர வகுப்பு பயிலும் பெண் மாணவிகளுக்கான "இலக்குள்ள மாணவிகள்" எனும் தலைப்பிலான வழிகாட்டல் கருத்தரங்கு கமு / மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது.
2023.12.15 ஆம் திகதி ஜம்இய்யாவின் தெல்கஹகொட கிளையின் அங்கத்தவர் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.என்.எம். ரியாஸ் ஸஹ்ரி அவர்களது தலைமையில் தெல்கஹகொட மஸ்ஜிதுல் அப்ராரில் நடைபெற்றது.
2023.12.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா - நிந்தவூர் கிளையின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு நிந்தவூர் ஜுமுஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இதில் வளவாளர்களாக ஜம்இய்யா தலைமையகத்தின் இளைஞர் விவகாரப் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
2023.12.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா - வவுனியா பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் டிசம்பர் மாத ஒன்று கூடல் பட்டாணிச்சூர் உஸ்மானிய்யாஹ் பள்ளிவாசலில் நடைபெற்றது.
2023.12.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வவுனியா பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் உறுப்பினர்களுக்கும் மர்கஸ் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களுக்குமிடையில் மக்பரா பள்ளிவாசலில் மலசலகூடம் அமைப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் மர்கஸ் பள்ளிவாசல் தலைவர் மற்றும் கிளைப் பொருளாளர் அஷ்-ஷைக் முஜாஹித் (ரஷாதி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2023.12.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வரக்காபொல கிளை நிர்வாகிகளுக்கிடையிலான ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் அக்ரம் அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் குறித்த கிளையினை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
2023.12.24ஆம் திகதி அகில ஜம்இய்யத்துல் உலமா அம்பாறை மாவட்டக்கிளையின் ஐந்தாவது மாதாந்த கூட்டத் தொடர் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ. ஜஃபர் பலாஹி அவர்களின் தலைமையில் ஜம்இய்யாவின் நிந்தவூர் கிளை காரியாலயத்தில் நடைபெற்றது.
2023.12.24ஆம் திகதி, பொத்துவில் பிரதேசத்தின் பிரதான வீதியில் மதுபானசாலை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதை தடுக்கும் முகமாக நடாத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம் பொத்துவில் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் மதபோதகர்கள் ஊரின் புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டு தங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
2023.12.24ஆம் திகதி இறக்குவானை அந்-நூர் அஹதிய்யா பாடசாலையிலிருந்து இவ்வருடம் இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அஸ்-ஸீரா வத்தாரீஹ் பாடத்தின் செயலமர்வு இறக்குவானை அஸ்-ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் வளவாளராக எஹலியகொட அல்-ஹஸனாத் அஹதிய்யா பாடசாலையின் ஆசிரியரும் ஜம்இய்யாவின் இரத்தினபுரி மாவட்ட கிளையின் உதவிச் செயலாளருமான அஷ்-ஷைக் நஸ்ரின் (ரவ்ழி) அவர்கள் கலந்து கொண்டார்கள்.
2023.12.25ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எஹலியகொட கிளையினால் அப்பிரதேசத்திலுள்ள அஹதிய்யா பாடசாலைகளிலிருந்து இவ்வருடம் அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அஸ்ஸீரா வத்தாரீஹ் பாடத்தின் செயலமர்வு தலாவிடிய அல்-ஹஸனாத் அஹதிய்யா பாடசாலையில் நடைபெற்றது. இதில் வளவாளராக எஹலியகொட கிளையின் செயலாளர் அஷ்-ஷைக் நஸ்ரின் (ரவ்ழி) கலந்துகொண்டார்.
2023.12.26ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் கருத்தரங்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
2023.12.26ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொட பிரதேசக் கிளையின் ஒன்றுகூடல் பதுவத்தை முஹியத்தீன் ஜுமுஆப் பள்ளிவாயலில் அஷ்-ஷைக் கலீலுர் ரஹ்மான் (நத்வி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
- ACJU Media -