அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைச் செய்திகள் - ஒக்டோபர் - 2023

நவ 08, 2023

2023.10.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையினருக்கும் பட்டாணிச்சூர் ஜனாஸா கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விஷேட ஒன்றுகூடல் தலைவர் அஷ்ஷைக் ஏ.ஆர்.எம். றமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் உஸ்மானிய்யா பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2023.10.05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொடை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் ஹமீம்போர்ட் முஹியத்தீன் ஜுமுஆ பள்ளிவாயல் நிர்வாக சபை மற்றும் புதிய பேஷ் இமாம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அல்-ஹுதா அஹதிய்யா பாடசாலையின் முன்னேற்றம் மற்றும் அல்குர்ஆன் மத்ரஸாவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

 

2023.10.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டானிச்சூர் பிரதேசக் கிளை மற்றும் பட்டாணிச்சூர் ஜனாஸா நலன்புரி கூட்டுறவுச் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவச முன்னோடிக் கருத்தரங்கு வவுனியா முஸ்லிம் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

 

2023.10.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இக்கிரிகொல்லாவ பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அஷ்ஷைக் ஆதம் யாஸீம் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் இக்கிரிகொல்லாவ முஹியத்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2023.10.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகரக் கிளையின் மாதாந்த செயற்குழுக் கூட்டம் அஷ்ஷைக் இர்ஸான் முப்தி அவர்களின் தலைமையில் மாத்தளை டவுன் மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2023.10.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிரிங்கதெனிய பிரதேசக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுக்கான கூட்டம் தலைவர் அஷ்ஷைக் அல்-ஹாபிள் அஹ்மத் ஹுஸைன் அவர்களின் தலைமையில் கிரிங்கதெனிய மஸ்ஜித் அந்நூர் பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2023.10.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மூதூர் பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்ஷைக் அப்துஸ் ஸபூர் (பத்தாஹி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

2023.10.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்குக் கிளையின் புதிய நிர்வாக சபைத் தெரிவு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷைக் உமர்தீன் அவர்களின் தலைமையில் ஹிதாயத் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இதில் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கான 15 செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

 

2023.10.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டம் வில்பொல பிரதேசக் கிளையின் மாதாந்த செயற்குழுக் கூட்டம் தலைவர் அஷ்ஷைக் நஸீர் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

2023.10.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட மத்திய கிளையின் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவுக் கூட்டம் பொரளை ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. இதில் ஜம்இய்யாவின் தலைமையகம் சார்பாக உப தலைவர்களான அஷ்ஷைக் அப்துல் ஹாலிக் மற்றும் அஷ்ஷைக் கலீல் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் நௌபர், அஷ்ஷைக் ழரீப், அஷ்ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

2023.10.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் பிரதேசக் கிளை மற்றும் பட்டாணிச்சூர் ஜனாஸா நலன்புரி கூட்டுறவுச் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட இலவச முன்னோடிக் கருத்தரங்கு வவுனியா, பாவற்குளம் அல்-அமீன் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

 

2023.10.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் உபதலைவர் அஷ்ஷைக் ஏ. ஸம்ஸுத்தீன் (ஹாமி) அவர்களின் தலைமையில் மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2023.10.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகரக் கிளைக்கும் மாத்தளை மாநகர வைத்தியர்கள் குழுவிற்குமிடையிலான கலந்துரையாடல் ஜம்இய்யாவின் மாத்தளை கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் மாத்தளை நகர்ப்புற சுற்றுச்சூழல், வைத்தியசாலைகளில் எமது சமூகம் நடந்து கொள்ளும் முறைமைகள் மற்றும் சுகாதாரம் சம்பந்தமாக கலந்துரையாடப்பப்டதுடன் இது சம்மந்தமாக மக்களுக்கு தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்படவேண்டுமெனவும் அதற்கான ஏற்பாடுகளை இரு தரப்பினரும் இணைந்து மேற்கொள்ளவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டன.

 

2023.10.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு தெற்கு கிளையின் மாதாந்த செயற்குழுக் கூட்டம் தலைவர் அஷ்ஷைக் அப்துல் ஹலீம் (ஷர்கி) அவர்களின் தலைமையில் வெள்ளவத்த ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2023.10.11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் வழிகாட்டலில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள தரம் 5 மாணவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வுகள் அந்தந்தப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டன.

 

2023.10.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மள்வானை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் செயலாளர் அஷ்ஷைக் ஷாபி ஹுஸைன் அவர்களது தலைமையில் அஹதியா பணிமனையில் இடம்பெற்றது.

 

2023.10.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கட்டுவன்வில் மொஹிதீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2023.10.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சாய்ந்தமருது, மாளிகைகாடு பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்ஷைக் எம்.எம்.எம். ஸலீம் (ஷர்க்கி) அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்றது.

 

2023.10.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்கு கிளையின் புதிய தெரிவின் பின்னரான மாதாந்த மஷூரா தலைவர் அஷ்ஷைக் ஏ.என்.எப். பிர்தௌஸ் அவர்களின் தலைமையில் கொலன்னாவ ‘லால் கிலா’ உணவகத்தில் நடைபெற்றது.

 

2023.10.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் புதிய தெரிவின் பின்னரான முதலாவது மஷூரா தலைவர் அஷ்ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்களின் தலைமையில் கொழும்பு தெமட்டகொட ஙனீமத்துல் காஸிமிய்யா ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2023.10.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒலுவில் பிரதேசக் கிளையின் சமூக சேவை மற்றும் நலன்பேணல் குழுவுக்கும் ஒலுவில் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜம்இய்யாவின் ஒலுவில் கிளையின் உதவித் தலைவர் அஷ்ஷைக் ஐ.எல்.எம். யாசீன் (காஷிபி) அவர்களது தலைமையில் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

 

2023.10.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளை தெரிவுக்குப் பின்னரான முதலாவது அமர்வு தலைவர் அஷ்ஷைக் அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் கிரேன்ட்பாஸ், லெயாட்ஸ்புரோட்வே ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2023.10.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை பிரதேசக் கிளையின் சிறார்களுக்கான மார்க்கக் கல்வி மையத்தின் வேண்டுகோளிற்கிணங்க அல்ஹாஜ் பஸ்லான் பாரூக் நிதியத்தினால் முன்பள்ளி முதல் தரம் ஆறு வரையிலான வகுப்புகளுக்குத் தேவையான மஆரிபுல் வஹீ பாடப்புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இந்நிகழ்வு ஜம்இய்யாவின் கம்பளை கிளைக் காரியாலயத்தில் தலைவர் அஷ்ஷைக் ரியாஸ் முஹம்மத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

 

2023.10.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் கல்விக் குழுக் கூட்டம் கல்வி பிரிவின் தலைவர் அஷ்ஷைக் எம்.ஐ. ஜஃபர் (பலாஹி) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2023.10.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் இளைஞர் விவகாரக் குழுவின் குழுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்ஷைக் ஏ.கே.எம். ஆஷிக் (காஷிபி)) அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2023.10.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையினருக்கும் பட்டாணிச்சூர் ஜனாஸா கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விஷேட ஒன்றுகூடல் தலைவர் அஷ்ஷைக் ஏ.ஆர்.எம். றமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2023.10.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் தலைவர் அஷ்ஷைக் ஏ.ஆர்.எம். றமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2023.10.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிககொள்ள பிரதேசக் கிளையின் மாதாந்த செயற்குழுக் கூட்டம் உபதலைவர் அஷ்ஷைக் லபீர் அவர்களின் தலைமையில் நிககொள்ள ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

 

2023.10.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அழைப்பின் பேரில் மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. உனைஸ் ஆரிஃப் மற்றும் கண்டி வலய தமிழ் மொழி பாடசாலைகளுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. அமீன் ஆகியோர் ஜம்இய்யாவின் கண்டி மாவட்டக் கிளைக்கு வருகை தந்தனர்.

 

2023.10.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிககொள்ள பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் பெண்களுக்கான மாதாந்த தர்பியா நிகழ்ச்சி நிககொள்ள ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பதின்கஸ்கொடுவ ஜுமுஆ மஸ்ஜிதின் இமாம் அஷ்ஷைக் ரிஹாஸ் (நூரி) அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார்கள்.

 

2023.10.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை மாவட்டம் பசறை பிரதேசக் கிளையின் பிரதேச காரியக் குழு ஒன்றுகூடல் தலைவர் அஷ்ஷைக் அப்துஸ் ஸலாம் (ஷர்கி) அவர்களின் தலைமையில் கிளைக்காரியாலயத்தில் நடைபெற்றது.

 

2023.10.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் இளைஞர் விவகாரக் குழுவின்; ஏற்பாட்டில் விளையாட்டுக் கழக வீரர்களுக்கான தர்பிய்யா நிகழ்வு மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாயலில் இடம்பெற்றது. இதில் குறித்த பிரதேசத்திலுள்ள கழகங்களிலிருந்து சுமார் 8 வீரர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் ‘இளைஞர்களை ஆன்மிக ரீதியாக மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் அஷ்ஷைக் ஐ. இம்ரான் (காஷிபி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

 

2023.10.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிரிங்கதெனிய பிரதேசக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுக்கான கூட்டமும் ஹமீதிய்யா தைக்காவின் நிர்வாகிகள் சந்திப்பும் கிளைத் தலைவர் அஷ்ஷைக் எம்.ஜே.எம். ஹுஸைன் ஹாபிழ் அவர்களது தலைமையில் கல்லம்வத்தை ஹமீதிய்யா தைக்காவில் நடைபெற்றது.

 

2023.10.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை தெற்குக் கிளையின் நிர்வாகக் கூட்டம் தலைவர் அஷ்ஷைக் ஷம்ஸுல் ஹுதா அவர்களின் தலைமையில் தெஹியோவிட்ட ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

 

2023.10.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் நிந்தவூர் ஜுமுஆ பள்ளிவாயல் தலைவரினால் ஏற்பாடு செய்யப்பட்ட குத்பா சம்பந்தமான தீர்மானக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் இனிவரும் காலங்களில் நிந்தவூர் ஜுமுஆ பள்ளிவாயல் நிர்வாக சபையும் ஜம்இய்யாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையும் இணைந்து குத்பாக்கள் தொடர்பாக விடயங்களை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

Last modified onபுதன்கிழமை, 08 நவம்பர் 2023 09:40

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.