2022 ஒக்டோபர் மாதத்திற்கான கிளைச் செய்திகள்

டிச 06, 2022

2022.10.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டம் கஹட்டோவிட்ட பிரதேசக் கிளையின் (கஹட்டோவிட்ட, ஒகொடபொல, உடுகொட) இரண்டாவது நிர்வாக அமர்வு கிளைத் தலைவர் அஷ் ஷைக் அக்ரம் அப்துல் ஸமத் அவர்களின் தலைமையில் ஷாபி சென்டரில் நடைபெற்றது.


2022.10.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இக்கிரிகொல்லாவ பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் அஷ் ஷைக் ஆதம் யாஸீம் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் இக்கிரிகொல்லாவ முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.


2022.10.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை மாவட்டம் ஹாலிஎல பிரதேசக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் தீன்புர மஸ்ஜிதில் நடைபெற்றது.


2022.10.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மதவாக்குளம் பிரதேசக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கிளையின் தலைவர் றிஸ்வி (ஷரபி) அவர்களின் தலைமையில் மதவாக்குளம் ஹஸனாத் பள்ளிவாசலில் நடைபெற்றது.


2022.10.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொட பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் எஹலியகொட தலாவிடிய அல்ஹஸனாத் அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை சரிதை தொடர்பான செயலமர்வு அல்ஹஸனாத் ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் வளவாளராக எஹலியகொட பிரதேசக் கிளையின் செயலாளர் அஷ்ஷைக் நஸ்ரின் (ரவ்ழி) அவர்கள் கலந்துகொண்டார். தொடர்ந்து அறிவுக் களஞ்சியம் போட்டி நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது.


2022.10.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்யால பிரதேசக் கிளையின் விஷேட காரியக் குழுக் கூட்டம் கிளைத் தலைவர் அஷ் ஷைக் எம். என். ரபாஸ்தீன் அவர்களின் தலைமையில் ஜாபிஉல் ஹுதா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.


2022.10.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் ஹிஜ்ரி 1444 ஆம் ஆண்டு புனித ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு, குணாதிசயம் போன்ற விடயங்களை மக்கள் மயப்படுத்தப்படுவதற்கான விஷேட பயான் நிகழ்ச்சி ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் மர்கஸ் மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாசலின் தலைவரும் பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் உறுப்பினருமாகிய அஷ்ஷெய்க் அமீனுத்தீன் (ஹாஷிமி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


2022.10.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு விசேட பயான் நிகழ்ச்சி புதுக்கடை முஹியத்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வா பிரிவின் உதவிச் செயலாளர் அஷ் ஷைக் ஸல்மான் (தப்லீஃகி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


2022.10.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு விசேட பயான் நிகழ்ச்சி புறக்கோட்டை அல் மகாமுஸ் ஸெய்புத்தீன் மஸ்ஜிதில் நடைபெற்றது. இதில் கொழும்பு இஹ்ஸானியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ் ஷைக் பரூத் (இஹ்ஸானி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


2022.10.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொத்துவில் பிரதேசக் கிளையின் வழிகாட்டலில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு ஷமாஇலுத் திர்மிதி தொடர் நிகழ்ச்சி பொத்துவில் நூராணியா மஸ்ஜிதில் நடைபெற்றது.


2022.10.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு விசேட பயான் நிகழ்ச்சி மருதானை முஹ்யத்தீன் மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜம்அய்யாவின் கொழும்பு மத்திய கிளை உறுப்பினர் அஷ் ஷைக் யாஸீன் (பாரி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


2022.10.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு விசேட பயான் நிகழ்ச்சி மருதானை சின்ன பள்ளி ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கொழும்பு மாதம்பிட்டி உஸ்மானியா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ் ஷைக் ஆஷிக் (ரஷாதி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


2022.10.05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் அவசர கலந்துரையாடல் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.


2022.10.05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு விசேட பயான் நிகழ்ச்சி புதுக்கடை மீரானியா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜம்அய்யாவின் கொழும்பு மாவட்ட கிளையின் உறுப்பினர் அஷ் ஷைக் அப்துல் கரீம் (ஜவாதி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


2022.10.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலில் திஹாரிய பிரதேசக் கிளையின் ஒருங்கிணைப்பில் திஹாரியில் அமைந்துள்ள மஸ்ஜித் ரவ்ழா பெரிய பள்ளிவாசல், மஸ்ஜித் பத்ஹ் - நாபிரித்த, ஜாமிஹ் தௌஹீத் - கண்டி வீதி ஆகிய மூன்று மஸ்ஜித்கள் மூலம் திஹாரி வாழ் மக்கள் ஊடாக சேகரிக்கப்பட்ட ஸதக்காக்கள் தலைமையகத்திடம் கையளிக்கப்பட்டது.


2022.10.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு விசேட பயான் நிகழ்ச்சி புறக்கோட்டை உம்பிட்சி ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் கொழும்பு மாவட்ட கிளையின் உறுப்பினர் அஷ் ஷைக் நிஜாம் (ஸாஃதி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


2022.10.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் காரியக்குழு கூட்டம் அஷ் ஷைக் அனீஸ் (யூசுபி) அவர்களின் தலைமையில் பலஹத்துரை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.


2022.10.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு விசேட பயான் நிகழ்ச்சி கொம்பன்னவீதிய அக்பர் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அஷ் ஷைக் கலீலுர் ரஹ்மான் (உமரி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


2022.10.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மூதூர் பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் அஷ் ஷைக் எம். எம். அப்துஸ் ஸபூர் (பத்தாஹி) அவர்களின் தலைமையில் ஆனைச்சேனை ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.


2022.10.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் ஜம்இய்யாவின் உப தலைவர்களில் ஒருவரும் கண்டி மாவட்டக் கிளையின் தலைவருமாகிய அஷ் ஷைக் உமர்தீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் அதன் காரியாலயத்தில் நடைபெற்றது.


2022.10.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை மாவட்ட கிளையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் அஷ் ஷைக் அலாவுதீன் (பலாஹி) அவர்களின் தலைமையில் முஸ்லிம் கொலனி மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.10.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அட்டாளைச்சேனை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை உலமாக்கள் கௌரவிப்பும் சிறப்பு மலர் வெளியீடும் கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் பி.ரி.எம். அபுல்ஹஸன் (ஷர்கி) அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை ஜுமுஆ பெரிய பள்ளிவாயல் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அ.இ.ஜ.உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷைக் எம். அர்கம் நூராமித், கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் (நளீமி), விஷேட அதிதிகளாக ஜம்இய்யாவின் நிறைவேற்று குழு உறுப்பினர் அஷ் ஷைக் எஸ்.எல். நௌபர் (கபூரி), அம்பாறை மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி), மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் 30 மூத்த உலமாக்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 100 வருட வரலாற்றுக் காலப்பகுதியில் வாழ்ந்து மரணித்த அட்டாளையூர் மண்ணின் முதுசம்களான மர்ஹூம்களான உலமாக்களின் (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) விபரங்கள் அடங்கிய சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. அம்மலரில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட உலமாக்களின் தகவலும் உள்ளடக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.


2022.10.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு விசேட பயான் நிகழ்ச்சி மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தாருல் ஹஸன் பெண்கள் அரபுக் கல்லூரியின் உப அதிபர் அஷ் ஷைக் யுஸ்ரி அஹ்ஸன் (ஹாஷிமி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


2022.10.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு பிரதேசக் கிளை, நீர்கொழும்பு அல் ஷபாப் சங்கத்துடன் இணைந்து இரத்த தான நிகழ்வொன்றை அல் ஹிலால் தேசிய பாடசாலையில் நடாத்தியது.


2022.10.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு பிரதேசக் கிளை, நீர்கொழும்பு அல் ஷபாப் சங்கத்துடன் இணைந்து மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு விஷேட பயான் நிகழ்ச்சியொன்றை நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடாத்தியது. இந்நிகழ்வில் அஷ் ஷைக் அம்ஜத் (ரஷாதி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


2022.10.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மல்வானை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் எம். எஸ். எம். நிஸாம்டீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் ரக்ஷபான ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.


2022.10.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த மஷூரா அதன் உப தலைவர் அஷ் ஷைக் இர்ஷாத் உவைஸ் (இன்ஆமி) அவர்களின் தலைமையில் பெட்டா அல் மகாமுஸ் ஸெய்புத்தீன் மஸ்ஜிதில் நடைபெற்றது.


2022.10.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெளிமடை சிட்டி கிளையின் மாதாந்த ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் அஷ் ஷைக் ஹிதாயதுல்லாஹ் மஹ்மூத் (பஹ்மி) அவர்களின் தலைமையில் வெளிமடை ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.


2022.10.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையானது கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட சிங்கள தர்ஜமத்துல் குர்ஆன் மற்றும் ஏனைய வெளியீடுகளை கொழும்பு மாநகர சபையின் மாற்று மத உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வொன்றை கொழும்பு மாநகர சபை மன்டபத்தில் நடாத்தியது. இந்நிகழ்ச்சிக்கு ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ் ஷைக் பரூத் (இஹ்ஸானி) அவர்கள் தலைமை தாங்கியதோடு நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ் ஷைக் முர்ஷித் முழப்பர் (ஹுமைதி) அவர்களினால் இஸ்லாம் தொடர்பாக மாற்று மத சகோதரர்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற சந்தேகங்களுக்கான தெளிவுரையும் வழங்கப்பட்டது.


2022.10.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரக்வானை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் புனித ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு இரக்வானை அந்நூர் அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான ஸீரத்துர் ரஸூல் செயலமர்வு அஸ்ஸலாம் முஸ்லிம் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் தரம் 03 முதல் தரம் 11 வரையிலான மாணவர்கள் கலந்துகொண்டதோடு வளவாளராக ஜம்இய்யாவின் இரத்தினபுரி மாவட்டக் கிளையின் துணைச் செயலாளர் அஷ் ஷைக் நஸ்ரின் (ரவ்ழி) அவர்கள் கலந்துகொண்டார்கள்.


2022.10.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை பிரதேசக் கிளையின் பொதுக்கூட்டம் அதன் தலைவர் அஷ் ஷைக் ஏ.எல்.ஏம். ஹுஸைன் (ஹிழ்ரி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது திருகோணமலை மாவட்ட ஜம்இய்யாவின் தலைவர் அஷ் ஷைக் இன்ஸாப் (இன்ஆமி) அவர்களினால் ஜம்இய்யாவின் உப குழுக்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிய தெளிவு வழங்கப்பட்டதோடு உப குழுக்களும் தெரிவு செய்யப்பட்டன.


2022.10.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்ஸரை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அஷ் ஷைக் அப்துஸ்ஸலாம் மௌலவி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.


2022.10.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் புதுக்கடை பகுதி வாலிபர்களுக்கான நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்யும் நோக்கில் ஸஃத் பின் அபீ வக்காஸ் மஸ்ஜிதின் நிர்வாகம், ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ் ஷைக் ரிபா மற்றும் பிரஜைகள் விவகாரப் பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பாளர் அஷ் ஷைக் நுஸ்ரத் நௌபர் ஆகியோர்களுடனான கலந்துரையாடலொன்று ஸஃத் பின் அபீ வக்காஸ் மஸ்ஜிதில் நடைபெற்றது.


2022.10.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையானது கொழும்பு ஹமீத் அல் ஹுசைனீ பாடசாலயின் பழைய மாணவர்கள் குழுவுடன் இணைந்து தரம் 06 தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு 'சுத்தமும் சூழலும்' எனும் தலைப்பில் ஆன்மீக வழிக்காட்டல் நிகழ்ச்சியொன்றை கொழும்பு ஹமீத் அல் ஹுசைனீ பாடசாலயின் பௌசி மண்டபத்தில் நடாத்தியது. இதன் வளவாளராக ஜம்இய்யாவின் பிரஜைகள் விவகாரப் பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பாளர் அஷ் ஷைக் நுஸ்ரத் நௌபர் அவர்கள் கலந்துகொண்டார்கள்.


2022.10.21 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொட பிரதேசக் கிளை மற்றும் எஹலியகொட அஸ்கங்குல அந்நூர் புராதன பள்ளிவாசல் நிர்வாக சபை இணைந்து அஸ்கங்குல ஹதரகோரலயில் அமைந்துள்ள பௌத்த விகாரைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதான விகாராதிபதியுடனான கலந்துரையாடல் விகாரை வளாகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் விகாராதிபதி அவர்களுக்கு சிங்கள மொழி மூல அல்குர்ஆன் பிரதி மற்றும் சிங்கள மொழியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய அறிமுக நூல் வழங்கி வைக்கப்பட்டது.


2022.10.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டம் தும்பர பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் உப தலைவர் அஷ் ஷைக் முர்ஷித் (மிஸ்பாஹி) அவர்களின் தலைமையில் அம்பகஹலந்த ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.


2022.10.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்டக் கிளையின் அவசர ஒன்றுகூடல் தலைவர் அஷ்ஷெய்ஹ் கே.ஆர்.ஏம். இன்சாப் (இன்ஆமி) அவர்களின் தலைமையில் கிண்ணியா பிரதேசக் கிளையின் அலுவலகத்தில் நடைபெற்றது.


2022.10.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மருதமுனை பிரதேசக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் பிரதித்தலைவர் அஷ் ஷைக் குஆளுயு. மௌலானா (நளீமி) அவர்களின் தலைமையில் மருதமுனை மத்திய பள்ளிவாயலில் இடம்பெற்றது.


2022.10.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பாணந்துரை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் மாநாடொன்று கிளைத் தலைவர் அஷ் ஷைக் அபுல்கலாம் (தீனி) அவர்களின் தலைமையில் பாணந்துறை ஜீலான் தேசிய பாடசாலையின் உம்மு மலீஹா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.


2022.10.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்தறை மாவட்டக் கிளையின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் அஷ் ஷைக் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் தர்ஹா நகர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலில் இடம்பெற்றது.


2022.10.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் உப தலைவர் அஷ் ஷைக் எம். சபீர் அவர்களின் தலைமையில் கொழும்பு புதுக்கடையில் நடைபெற்றது.


2022.10.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மல்வானை பிரதேசக் கிளையின் காரியக் குழு கூட்டம் அதன் தலைவர் மௌலவி எம்.எஸ்.எம். நிஸாமுத்தீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் கராபுகஸ் சந்நி மல்வானை ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.10.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்தறை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் மத்ரஸாவில் கல்வி பயிலும் சில வறிய மாணவர்களுக்கான அரபு பாட நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன.


2022.10.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாளிகாவத்தை பகுதி வாலிபர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றை நடாத்தும் நோக்கில் மஸ்ஜிதுந் நூர் ஜுமுஆ பள்ளிவாயலின் நிர்வாகம் மற்றும் ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ் ஷைக் ரிபா, ஃபத்வா பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ் ஷைக் மபாஹிம் ஆகியோர்களுடனான கலந்துரையாடல் மஸ்ஜிதுந் நூர் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.10.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் வேண்டுகோளுக்கிணங்க மடவளை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் மன்ஹஜ் மற்றும் குர்ஆன் மத்ரஸா மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் ஜாமிஉல் கைராத் ஜுமுஆ பள்ளிவாயலில் அதன் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் நாஜிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரும் கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் தலைவருமான அல்ஹாஜ் அஷ் ஷைக் உமர்தீன் (ரஹ்மானி) உட்பட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


2022.10.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்டத்தின் இரத்தினபுரி மாவட்ட நிர்வாக உறுப்பினர்களின் கலந்துரையாடல் அதன் அஷ்-ஷைக் முப்தி தாரிக் (ரவ்ழி) அவர்களின் தலைமையில் எஹலியகொட பதுவத்தை முஹியத்தீன் ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் இரத்தினபுரி, எஹலியகொட, குருவிட்ட, கஹவத்த, இரக்வானை ஆகிய ஐந்து பிரதேசக் கிளைகளின் மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


2022.10.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ. சுஐப் (தீனி) அவர்களின் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.


2022.10.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் கே.ஆர்.எம். இன்ஷாப் (இனாமி) அவர்களின் தலைமையில் இலாஹியா ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.10.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை பிரதேசக் கிளையின் காரிய குழுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் முனவ்வர் ஹுஸைன் (ஹிழ்ரி) அவர்களின் தலைமையில் அதன் காரியாலயத்தில் நடைபெற்றது.


2022.10.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டம் மினுவன்கொடை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் எம்.ஆர்.எம். ரிஸ்வான் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் கல்லொலுவ ஜுமுஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.


2022.10.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை மாவட்டம் பதுளை நகரக் கிளையின் விஷேட கூட்டம் நகரக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் அஸ்மத் (பின்னூரி) அவர்களின் தலைமையில் பதுளை பிரதான ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.