2022 செப்டம்பர் மாதத்திற்கான கிளைச் செய்திகள்

டிச 06, 2022

2022.09.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கொட்டாரமுல்லை பிரதேசக் கிளையின் ஒன்பது மஸ்ஜித்களின் நிர்வாகங்களையும் ஒன்றிணைத்து மஸ்ஜித் சம்மேளனம் ஒன்றை உருவாக்கல் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்ச்சி தும்மோதர ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இதில் வளவாளராக அஷ்-ஷைக் அர்ஷத் புர்கானி அவர்கள் கலந்துகொண்டார்.


2022.09.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சிவெளி பிரேசக் கிளையின் புதிய நிர்வாகக் குழுவின் முதலாவது கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம்.ரியாழ் (இஹ்ஸானி) அவர்களின் தலைமையில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.


2022.09.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் மாதாந்த செயற்குழுக் கூட்டம் அஷ்-ஷைக் அனீஸ் (யூஸுபி) அவர்களின் தலைமையில் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மூதூர் பிரதேசக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் நடைபெற்றது. இதில் இதுவரை ஜம்இய்யாவின் அங்கத்துவம் பெறாதவர்களுக்கான அங்கத்துவ ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.


2022.09.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொத்துவில் பிரதேசக் கிளையின் 'அல்குர்ஆன் மத்ரஸாக்களை ஒழுங்கமைத்தல்' எனும் அதன் வேலைத்திட்டத்தின் கீழ் அல்குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி அதன் தலைவர், செயலாளர் மற்றும் பொத்துவில் ஜம்இய்யாவின் கல்விக் குழு ஆகியோர் தலைமையில் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 65 ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.


2022.09.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மடலஸ்ஸ, தொரணேகெதர பிரதேசக் கிளையின் ஒன்றுகூடல் அதன் தலைவர் இல்யாஸ் அஸ்ஹரி அவர்களின் தலைமையில் பகள மடலஸ்ஸ மஸ்ஜிதில் நடைபெற்றது.


2022.09.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகலை மாவட்டம் குருணாகலை நகரக் கிளையின் ஒன்றுகூடல் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.நூர் முஹம்மத் (நூரி) அவர்களின் தலைமையில் மல்லவபிடிய ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகலை மாவட்டக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.ஸுஐப் (தீனி) அவர்களின் தலைமையில் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.


2022.09.05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் அதன் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம்.ரமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் பதவி தாங்குனர்கள் மற்றும் உடுநுவர பிரதேசக் கிளையின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் முஜீபுர் ரஹ்மான் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் அதன் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் சிறார்களின் அல்குர்ஆன் மத்ரஸா தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


2022.09.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அதன் காரியாலயத்தில் நடைபெற்றது.


2022.09.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் பிரதேசக் கிளையின் புதிய நிர்வாகக் குழு தெரிவுக்குப் பின்னரான முதல் ஒன்றுகூடல் தலைவர் கே.ஆர்.எம்.இன்ஸாப் மௌலவி அவர்களின் தலைமையில் இலாஹிய்யா ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மூதூர் பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் எம்.எம்.அப்துஸ் ஸபூர் (பத்தாஹி) அவர்களின் தலைமையில் ஆனைச்சேனை ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கஹட்டோவிட்ட பிரதேசக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் அதன் தலைவர் அஷ்-ஷைக் அக்ரம் அப்துல் ஸமத் அவர்களின் தலைமையில் ஷாபி ஸென்டரில் நடைபெற்றது.


2022.09.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வத்தளை பிரதேசக் கிளையின் மாதாந்த செயற்குழுக் கூட்டம் (கன்னி அமர்வு) உப தலைவர் அஷ்-ஷைக் அனஸ் ஹாஷிமி அவர்களின் தலைமையில் பேலியகொடை பைத்துல் முகர்ரம் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் கே.ஆர்.எம்.இன்ஸாப் (இன்ஆமி) அவர்களின் தலைமையில் கிண்ணியா பிரதேசக் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.


2022.09.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகலை மாவட்ட கிளைத் தலைவர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிக்கவெரட்டிய பிரதேசக் கிளைக்குட்பட்ட நம்முவாவ பிரதேச உலமாக்கள் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நிக்கவெரட்டிய பிரதேசக் கிளை தலைவர் அஷ்-ஷைக் ரிஸ்மி (காஸிமீ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2022.09.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளையின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அஷ்-ஷைக் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி அவர்களின் தலைமையில் சம்மாந்துறை பிரதேசக் கிளை கட்டிடத்தில் நடைபெற்றது.


2022.09.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மடலஸ்ஸ, தொரணேகெதர பிரதேசக் கிளையின் பொதுக்கூட்டம் மௌலவி இல்யாஸ் அவர்களின் தலைமையில் அல் மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இக்கிரிகொல்லாவ பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அஷ்-ஷைக் ஆதம் யாஸீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் இக்கிரிகொல்லாவ முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.


2022.09.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டம் மல்வானை பிரதேசக் கிளையின் புதிய நிர்வாகத்தின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் எம்.எஸ்.எம்.நிஸாம்தீன் ரஹ்மானி அவர்களின் தலைமையில் மல்வானை அஹதிய்யா பணிமனையில் நடைபெற்றது.


2022.09.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் பொதுக்கூட்டம் அஷ்-ஷைக் அனீஸ் (யூஸுபி) அவர்களின் தலைமையில் நீர்கொழும்பு அயன்டெக்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் நழீர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் முர்ஷித் முளப்பர் (ஹுமைதி) அவர்கள் கலந்துகொண்டார்.


2022.09.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்கு கிளையின் கூட்டம் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் கொழும்பு 14, ஜாமிஉல் பலாஹ் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.


2022.09.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பண்டுவஸ்நுவர பிரதேசக் கிளையின் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் ஸித்தீக் (காஸிமீ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2022.09.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகலை மாவட்டம் இப்பாகமுவ பிரதேசக் கிளையின் ஒன்றுகூடல் அதன் தலைவர் அஷ்-ஷைக் ஹபீழ் (ரவ்ழீ) அவர்களின் தலைமையில் கும்பலங்க ஜாமிஉல் ஹைராத் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அப்புத்தளை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஐ.எம்.யமீன் (மதனி) அவர்களின் தலைமையில் அப்புத்தலை ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இதில் அப்புத்தலை, தியதலாவ, கஹகொல்ல ஆகிய பிரதேசக் கிளைகளின் உலமாக்கள் கலந்துகொண்டனர்.


2022.09.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்ஸரை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் மௌலவி அப்துஸ் ஸலாம் அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.


2022.09.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு பிரதேசக் கிளை பலஹத்துரை பெரிய பள்ளிவாசலுக்கு வருகைதந்த பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவூட்டல் நிகழ்ச்சியை பலஹத்துரை பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்துடன் இணைந்து நடாத்தியது. இதில் நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு மற்றும் பிரசாரக் குழுவின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


2022.09.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தம்பிடிய பிரதேசக் கிளையின் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் றாஸிக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2022.09.24 ஆம் திகதி சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பு டவுனில் நடைபெற்ற சர்வமத கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு மற்றும் பிரசாரக் குழுவின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


2022.09.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உக்குவலை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் மௌலவி றயீஸ் அவர்களின் தலைமையில் ஸபீலுஸ்ஸலாம் மத்ரஸாவில் நடைபெற்றது.


2022.09.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மருதமுனை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் பிரதித் தலைவர் எம்.எச்.ஜெலீல் (ஹாமி) அவர்களின் தலைமையில் மஸ்ஜித் அந்நூர் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.25 ஆம் திகதி தெஹிவளை மஸ்ஜித் சம்மேளனத்தின் அனுசரணையுடன் 'மஸ்ஜித் இமாம்களை கௌரவிப்போம்' எனும் தொனிப்பொருளில் இமாம்களுக்கான கௌரவிப்பு நிகழ்ச்சி தெஹிவளை பெரிய பள்ளிவாயலில் நடைபெற்றது. இதில் கொழும்பு தெற்கு கிளைக்குட்பட்ட அனைத்து மஸ்ஜித் இமாம்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டதோடு ஜம்இய்யாவின் கௌரவ பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் அவர்கள் சிறப்புரையாற்றினார்.


2022.09.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் பிரதேசக் கிளையின் பொதுக்கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் சரஜீல் நத்வி அவர்களின் தலைமையில் செல்வ நகர் அபூபக்கர் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.


2022.09.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பண்டுவஸ்நுவர பிரதேசக் கிளையின் பொதுக்கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஸித்தீக் (காஸிமீ) அவர்களின் தலைமையில் கொட்டம்பிட்டி ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.25ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மல்வானை பிரதேசக் கிளையின் இம்மாதத்துக்கான இரண்டாவது கூட்டம் தலைவர் எம்.எஸ்.எம்.நிஸாம்டீன் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் மல்வானை அஹதிய்யா பணிமனையில் நடைபெற்றது.


2022.09.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் சூடுவந்தபுலவு பிரதேசக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் கே.எம்.நபீஸ் (நஜாஹி) அவர்களின் தலைமையில் ரஹ்மத் நகர் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் சிலாபம், மாதம்பை ஆகிய பிரதேசக் கிளைகளின் மாதாந்தக் கூட்டம் அதன் காரியாலயத்தில் நடைபெற்றது.


2022.09.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் கிளையின் ஒன்றுகூடல் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம்.ரமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் அல் அக்ஸா பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்களுக்கும் பட்டாணிச்சூர் கிளைக்குட்பட்ட அனைத்து பள்ளிவாயல் நிர்வாகிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் பட்டாணிச்சூர் ஜம்இய்யாவின் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம்.ரமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


2022.09.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு விஷேட பயான் நிகழ்ச்சி அஷ்-ஷைக் முஸய்யிப் (இஹ்ஸானி) அவர்களால் மாளிகாவத்தை முனவ்வரா ஜுமுஆ மஸ்ஜிதில் நிகழ்த்தப்பட்டது.


2022.09.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு ஷமாஇலுத் திர்மிதி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவவர்களின் குணாதிசயங்களை மக்கள்மயப்படுத்தும் நோக்கில் பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிவாயல்களில் மாத்திரம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாக தீர்மானிக்கப்பட்டது.


2022.09.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு விஷேட பயான் நிகழ்ச்சி உப தலைவர் அஷ்-ஷைக் இர்ஷாத் (இன்ஆமி) அவர்களால் தெமட்டகொட பிளேஸ் கனீமத்துல் காஸிமிய்யா ஜுமுஆ மஸ்ஜிதில் நிகழ்த்தப்பட்டது.


2022.09.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டாணிச்சூர் கிளையின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி அக்ஸா பள்ளிவாயலில் நடைபெற்றது. இதில் வளவாளர்களாக ஜம்இய்யாவின் உப தலைவர்களுல் ஒருவரான அஷ்-ஷைக் எச்.உமர்தீன் (ரஹ்மானி) மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவின் இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.