2022.08.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை மாவட்டக் கிளைக்கான மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் ஹிதாயதுல்லாஹ் மஹ்மூத் (பஹ்மி) அவர்களின் தலைமையில் ஸூம் (Zoom) ஊடாக நடைபெற்றது.
2022.08.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை மாவட்டக் கிளையின் மாதாந்த ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் ஹிதாயதுல்லாஹ் மஹ்மூத் (பஹ்மி) அவர்களின் தலைமையில் அன்வர் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
2022.08.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறக்கியாளை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.டி.ரினோஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் ஸுலைஹா பெண்கள் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
2022.08.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் லங்காபுர பிரதேசக் கிளையின் காரியக் குழுக் கூட்டம் அஷ்-ஷைக் இர்ராக் நஹ்ஜி அவர்களின் தலைமையில் தம்பாளை ஜாமிஉல் ஹிலால் மஸ்ஜிதில் நடைபெற்றது.
2022.08.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹொரவபொத்தானை பிரதேசக் கிளையின் மாதாந்த மாதாந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
2022.08.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரக்குவானை பிரதேசக் கிளையின் மாதாந்த கலந்துரையாடல் அதன் உப தலைவர் அஷ்-ஷைக் முனீப் (புர்கானி) அவர்களின் தலைமையில் முஹியத்தீன் பெரிய ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
2022.08.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தர்கா நகர் கிளையின் தலைவர் முப்தி நிப்ராஸ் அவர்களின் தலைமையில் ஊர் நிர்வாகிகளுடனான சந்திப்பு தர்கா நகர் பெரிய பள்ளிவாயலில் நடைபெற்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டிய பிரதேச மக்களுக்காக சேகரிக்கப்பட்ட பணம் மற்றும் உலர் உணவுப்பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டது.
2022.08.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் ஒன்றுகூடல் நடைபெற்றது. இதில் புதிய உலமாக்களுக்கான அறிமுகம் இடம்பெற்றதோடு பகல் போஷனமும் வழங்கப்பட்டது.
2022.08.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கற்பிட்டி பிரதேசக் கிளையின் மாதாந்த காரியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் யு.று.ஆ.ஜெமீல் கான் ரஹ்மானி அவர்களின் தலைமையில் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
2022.08.21 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தறை மாவட்டக் கிளையின் மாதாந்தக் குழுக் கூட்டம் பழையதெரு ஜம்இய்யா அலுவலகத்தில் நடைபெற்றது.
2022.08.21 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மூதூர் பிரதேசக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் அதன் தலைவர் அஷ்-ஷைக் ஸபூர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2022.08.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் கே.எம்.முக்ஸித் அஹ்மத் அவர்களின் தலைமையில் கொழும்பு தெற்கு காழி அலுவலகத்தில் நடைபெற்றது.
2022.08.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டம் தும்பர பிரதேசக் கிளையின் கலந்துரையாடல் அதன் உப தலைவர் அஷ்-ஷைக் முர்ஷித் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் ஹிஜ்ராபுர அந்நூர் தைக்கியா மஸ்ஜிதில் நடைபெற்றது.
2022.08.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்ஸரை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் மௌலவி அப்துஸ்ஸலாம் அவர்களின் தலைமையில் வன்வே பள்ளிவாயலில் நடைபெற்றது.
2022.08.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு தெற்குக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் பாயிஸ் (ரஷாதி) அவர்களின் தலைமையில் கௌடான ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
2022.08.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை பிரதேசக் கிளையின் காரியக் குழுக் கூட்டம் அஷ்-ஷைக் முனவ்வர் {ஹஸைன் ஹிழ்ரி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
2022.08.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை மாவட்டம் ஹப்புத்தளை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் ஐ.ஆ.யமீன் மதனி அவர்களின் தலைமையில் தியத்தலாவை அல் மஸ்ஜிதுர் ரஹ்மானிய்யா ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
2022.08.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பண்டாரவளை கிளையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் யாஸின் ஹாஷிமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2022.08.28 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை மாவட்டக் கிளை நிர்வாகிகளை, முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பிரதிநிதிகள் மற்றும் அகில இலங்கை மத்திய அஹதியா சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கிண்ணியா பிரதேசக் கிளை அலுவலகத்தில் சந்தித்தனர். இதில் அஹதியா வகுப்புகளின் முக்கியத்துவம் குறித்தும் திருகோணமலை மாவட்டப் பாடசாலைகளில் அதனை ஆரம்பிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
2022.08.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்தக் கூட்டம் அஷ்-ஷைக் ஷுகுர்தீன் இஹ்ஸானி அவர்களின் தலைமையில் மஸ்ஜிதுல் காதிர் ஹனபி ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
2022.08.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் பதவி தாங்குனர்கள் மற்றும் கம்பளை பிரதேசக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ரியாஸ் நளீமி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் காரியாலயத்தில் நடைபெற்றது.