2022.07.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்கரகம பிரதேசக் கிளையின் காரியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் ஹாலித் ஷரபி அவர்களின் தலைமையில் நூரானிய்யா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
2022.07.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்ட திஹாரிய பிரதேசக் கிளையின் நிர்வாகக் குழு ஒன்றுகூடல் மௌலவி ஸைபுல்லாஹ் இஹ்ஸானியின் தலைமையில் அதன் காரியாலயத்தில் நடைபெற்றது.
2022.07.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் மெதடிஸ்த சபையின் பாதிரியார்களான திரு.ஜோஸப், திரு.நிரசங்க மற்றும் ஜெர்மனி நாட்டின் முகாமையாளர் ஹல்பே ஆகியோர்களுடனான சுமுகக் கலந்துரையாடல் கிளைக் காரியாலயத்தில் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.பீ.எம்.முஸ்தபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2022.07.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்ட வத்தலை பிரதேசக் கிளையின் நிர்வாகக் குழு உறுப்பினர் கூட்டம் அஷ்-ஷைக் நுஃமான் அல் இன்ஆமி அவர்களின் தலைமையில் வெலேகொடை இப்னு மஸ்ஊத் இஸ்லாமிய கலாசாலையில் நடைபெற்றது.
2022.07.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்ட பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் அக்கிளைக்குட்பட்ட உலமாக்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சி வழங்கப்பட்டது.
2022.07.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரக்குவானை பிரதேசக் கிளையின் மாதாந்த குழுக் கலந்துரையாடல் அதன் உப தலைவர் அஷ்-ஷைக் முனீப் புர்கானி அவர்களின் தலைமையில் இரக்குவானை முஹியத்தீன் பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
2022.07.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்கரகம பிரதேசக் கிளையின் காரியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் ஹாலித் ஷரபி அவர்களின் தலைமையில் பங்கரகம அல் ஹிக்மா மத்ரஸாவில் இடம்பெற்றது.
2022.07.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இக்கிரிகொல்லாவ பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த ஷரீஆ மற்றும் ஹிப்ள் பிரிவு மாணவர்களுக்கான தர்பியா கருத்தரங்கு மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை அதன் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாஸீம் ரஹ்மானி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அல்ஹமீதியா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும் தஃவா பணியாளருமான அஷ்-ஷைக் அலாஉத்தீன் நூரி அவர்கள் இதன் வளவாளராகக் கலந்துகொண்டார்.
2022.07.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி மாவட்டம், இரக்குவானை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் பட்டம் பெற்று வெளியாகிய அப்பிரதேசத்தைச் சேர்ந்த உலமாக்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒரேன்ச்பீல் அந்நூர் ஜுமுஆ பள்ளிவாயல் மற்றும் உகுவத்தை ரஹ்மானிய்யா ஜுமுஆ பள்ளிவாயல்களில் நடைபெற்றது.
2022.07.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மன்னார் மாவட்ட நகரக் கிளையின் விஷேட பொதுக் கூட்டம் அதன் தலைவர் மௌலவி அஸீம் அவர்களின் தலைமையில் புதுக்குடியிருப்பு ஜுமுஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
2022.07.16ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகலை மாவட்டம், மடிகே மிதியால பிரதேசக் கிளையின் உலமாக்களுக்கான பொதுக்கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் வாரிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
2022.07.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்தறை மாவட்டக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான் பஹ்ஜி அவர்களின் தலைமையில் ஸூம் ஊடாக (Zoom) இடம்பெற்றது.
2022.07.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் மாதாந்த குழுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் இஸ்மத் ஷர்க்கி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
2022.07.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம், பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் ஒன்றுகூடல் அதன் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.றமீஸ் ஹாஷிமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2022.07.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் 2019 ஆம் ஆண்டு முதல் இதுவரை அறிமுகப்படுத்தப்படாத அனைத்து உலமாக்களையும் அறிமுகம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் கிளையின் உப தலைவர் மௌலவி தாஹிர் காஷிமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
2022.07.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம், கொட்டாரமுல்லை பிரதேசக் கிளையின் மாதாந்த நிர்வாக ஒன்றுகூடல் கிளைத் தலைவரின் தலைமையின் கீழ் கொட்டாரமுல்லை மஸ்ஜித் யூஸுபில் நடைபெற்றது.
2022.07.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை மாவட்டம், பஸ்ஸரை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் மௌலவி அப்துஸ்ஸலாம் அவர்களின் தலைமையில் ஜம்இய்யா கட்டிடத்தில் இடம்பெற்றது.
2022.07.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை மாவட்டக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.எம்.அலாஉத்தீன் பலாஹி அவர்களின் தலைமையில் முஸ்லிம் கொலனி, மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
2022.07.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெளிமடை பிரதேசக் கிளையின் மாதாந்த கூட்டம் அதன் தலைவர் அஷ்-ஷைக் ஹிதாயதுல்லாஹ் மஹ்மூத் பஹ்மி அவர்களின் தலைமையில் வெளிமடை பகல தம்பவின்ன ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.