2022.06.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்கரகம பிரதேசக் கிளையின் காரியக் குழுக் கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஹாலித் ஷரபி அவர்களின் தலைமையில் நூராணிய்யா ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்றது.
2022.06.05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் அஷ்-ஷைக் நுஹ்மான் இன்ஆமி அவர்களின் தலைமையில் திஹாரிய மஸ்ஜித் ரவ்ழா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
2022.06.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரக்வானை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கலந்துரையாடல் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் பாரிஸ் அர்கமி அவர்களின் தலைமையில் இரக்வானை முஹியத்தீன் பெரிய ஜுமுஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
2022.06.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் உயர் தரம் படிக்கும் மாணவர்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி பட்டாணிச்சூர் மொஹிதீன் ஜுமுஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
2022.06.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்ட திவுரும்பொல பிரதேசக் கிளையின் 2022 ஜூன் மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் புஹாரி அவர்களின் தலைமையில் திவுரும்பொல மஸ்ஜிதுல் ஹுதா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
2022.06.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்ஸர பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் அஷ்-ஷைக் அப்துஸ் ஸலாம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2022.06.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் ணுழழஅ ஊடாக நடைபெற்றது. இரத்தினபுரி, எஹலியகொட, குருவிட்ட, இரக்வானை, கஹவத்தை என ஐந்து பிரதேசக் கிளைகளிலிருந்து மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
2022.06.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் புதிய சாளம்பைக்குளம் மஸ்ஜிதுல் அக்ஸா ஜுமுஆப் பள்ளிவாசளில் தலைவர் என்.பீ. ஜுனைத் மதனி தலைமையில் நடைபெற்றது.
2022.06.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெலிமட பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் வெலிமட ஜுமுஆ மஸ்ஜிதில் வெளிமட நகரக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஹிதாயத்துல்லாஹ் மஹ்மூத் (பஹ்மி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2022.06.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அட்டாளைச்சேனை பிரதேசக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் உப தலைவர் அஷ்-ஷைக் ஏ.எச். அஹ்மத் அம்ஜத் (நளீமி) அவர்களின் தலைமையில் அஷ்-ஷைக் ஏ.ஆர். ஸப்ரீன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
2022.06.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெலிகம பிரதேசக் கிளையின் மாதாந்த காரியக் குழுக் கூட்டம் அஷ்-ஷைக் பாயிஸ் (கிழ்ரி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2022.06.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்ட பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் பெண்களுக்கான குறிப்பாக இவ்வருடம் கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் மற்றும் உயர்தரம் படிக்கும் மாணவிகளுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி பட்டாணிச்சூர் மொஹிதீன் ஜுமுஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
2022.06.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்ட வத்தெகெதர, உடதலவின பிரதேசக் கிளையின் மாதாந்த மஷூரா கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஹிதாயதுல்லாஹ் (ரஹ்மானி) அவர்களின் தலைமையின் நடைபெற்றதோடு அதில் 18 அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.
2022.06.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் தஃவாப் பிரிவின் ஏற்பாட்டில் நாட்டின் நிலைமைகள் சீராக நோன்பு நோற்று, இஸ்திஃபார் மற்றும் துஆப் பிராத்தனைகள் இடம்பெற்றன. இதில் ஜம்இய்யாவின் முன்னாள் செயலாளர் அஷ்-ஷைக் அப்துர் ரஷீத் (ஷர்கி) அவர்களினால் விஷேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
2022.06.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்ட செயற்குழுக் கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஷுஐப் (தீனி) அவர்களின் தலைமையில் மாவட்டக் காரியாலயத்தில் நடைபெற்றது.
2022.06.24 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தறை மாவட்டக் கிளையின் ஒன்றுகூடல் அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் (மழாஹிரி) அவர்களுடைய தலைமையில் மாத்தறை முஹ்யித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
2022.06.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் ஒன்றுகூடல் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம். றமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் அல்-அக்ஸா பள்ளிவாசலில் இடம் பெற்றது. இதில் ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் உலமாக்கள் எதிர் கொள்ளும் சவால்கள் ஆராயப்பட்டதோடு சமூக நலன் கருதி பல செயற்திட்டங்கள், திட்டமிடல்கள் ஆலோசனை செய்யப்பட்டது.
2022.06.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொடை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கலந்துரையாடல் எஹலியகொடை பஸார் ஜுமுஆப் பள்ளிவாசலில் கிளைத் தலைவர் 40 நாட்கள் ஜமாஅத்தில் சென்று இருப்பதால் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஸல்மான் (மழாஹிரி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2022.06.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொத்துவில் பிரதேசக் கிளையினால் 2021ஃ2022 க.பொ.த சாதாரன தரப் பரீட்சைக்குத் தோற்றிய மற்றும் தரம்-11 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்ச்சி பிராந்தியத்தின் மிகச் சிறந்த வளவாளர்களால் நிகழ்த்தப்பட்டதுடன் எதிர்காலம் குறித்த வழிகாட்டல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சுமார் 160 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
2022.06.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி பிரதேசக் கிளையின் 18 வது நிர்வாக ஒன்றுகூடல் பள்ளிவாசல்துறை பெரிய பள்ளியில் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஜெமீல்கான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2022.06.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொடை பிரதேசக் கிளை மற்றும் எஹலியகொடை பஸார் ஜுமுஆப் பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் எஹலியகொடை பிரதேசத்தில் 40 வருட காலம் பேஷ் இமாமாக கடமையாற்றிய அஷ்-ஷைக் கலீலுர் ரஹ்மான் (நத்வி) அவர்களுக்கான விஷேட கௌரவிப்பு நிகழ்வு எஹலியகொடை பஸார் ஜுமுஆப் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாகவும் சிறப்புச் சொற்பொழிவாளராகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப பொருளாளரும் களுத்துறை மாவட்டக் கிளையின் தலைவரும் அடுலுகம ஜாமிஆ இன்ஆமுல் ஹஸன் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
2022.06.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வரக்காமுறை பிரதேசக் கிளையின் ஜூன் மாதத்திற்கான கூட்டம் அஷ்-ஷைக் நஸ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்றதோடு அதில் 09 அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.
2022.06.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய பிரதேசக் கிளையின் மாதாந்த மஷூரா மாளிகாவத்தை மஸ்ஜிதுல் ஹனீபா பள்ளிவாசலில் அஷ்-ஷைக் ஷுகுர்தீன் (இஹ்ஸானி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.