2022.05.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொலன்னறுவை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித்களில் கடமை புரியும் முஅத்தின்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்வு அஷ்-ஷைக் அலாஉத்தீன் தலைமையில் நடைபெற்றது.
2022.05.02 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்ட பட்டாணிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடத்துக்கான ஸகாத்துல் ஃபித்ர் சேகரிப்பு நடைபெற்றதோடு அதை பெற்றுக் கொள்ள வேண்டிய தகுதியானவர்களை இனங்கண்டு விநியோகமும் செய்யப்பட்டது.
2022.05.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்கரகம பிரதேசக் கிளையின் பொதுக்கூட்டம் அக்கிளைத் தலைவர் அஷ்-ஷைக் எஸ்.எல். ஹாலித் (ஷரபீ) அவர்களின் தலைமையில் விஷேட பகல் உணவுடன் நடைபெற்றது. இதில் 40 உலமாக்கள் பங்குபற்றினார்கள்.
2022.05.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இக்கிரிகொல்லாவ பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இக்கிரிகொல்லாவயைச் சேர்ந்த ஷரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவு மாணவர்களுக்கான தர்பியா கருத்தரங்கு மற்றும் விஷேட துஆப் பிரார்த்தனை அக்கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாஸீம் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில் அனைத்து உலமாக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இத்தர்பியா நிகழ்ச்சிக்கு வளவாளராக அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு மற்றும் மகளிர் விவகாரப் பிரிவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் அப்துல் வஹ்ஹாப் (ஹுமைதி) அவர்களால் நிகழ்தப்பட்டது.
2022.05.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்கரகம கிளையின் ஏற்பாட்டில்; உலமாக்களுக்கும் ஷரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவு மாணவர்களுக்குமான கிரிக்கெட் சுற்றுப்போட்டி கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஹாலித் ஷரபி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
2022.05.07 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பஸ்ஸர பிரதேசக் கிளையின் காரியக் குழுக் கூட்டம் பஸ்ஸர வன்வே பள்ளியில் நடைபெற்றது.
2022.05.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிண்ணியா பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு கிண்ணியா பிரதேச அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றும் சகோதர சமூகங்களை சேர்ந்தவர்கள் மற்றும் ஆலங்கேணி வெள்ளை மணல் கிராம சகோதர சமயத்தவர்கள் உடனான சமூக நல்லிணக்க கலந்துரையாடல் மற்றும் மதிய போஷன விருந்து பிரதேச சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து கிண்ணியா விஷன் வளாகத்தில் நடைபெற்றது.
2022.05.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெலிகம பிரதேசக் கிளையின் பங்கேற்பில் சர்வ மதத்தலைவர்களுடனான சந்திப்பு வெலிகம புராதன அக்ரபோதி விகாரையில் 'அதிஸ்டான பூஜா' என்ற மகுட வாசகத்தில் நடைபெற்றது. இதில் ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தர் ராஹுல தேரர், வெலிகம மகா சங்க சபை தலைவர் நந்தஸிரி தேரர், செயலாளர் இந்திர ஸிரி தேரர் மற்றும் இன்னும் பல தேரர்களோடு மாத்தறை மாவட்ட ஆயர் ஷால்ஸ் ஹேவாவஸம, மாவட்ட ஜம்இய்யா செயலாளர், மாவட்ட மற்றும் கிளை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
2022.05.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் பிரதி பொலிஸ் பரிசோதகர் (மாத்தறை) தலைமையில் தெனிபிடிய ஸோரத தேரர் மஹா விகாரையில் வெலிகம பொலிஸ் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இனவாத செயற்பாடுகள், வெளிசக்திகளின் சூழ்ச்சிகள் என்பன இடம்பெறாதிருக்க மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி ஆலோசனையும் செய்யப்பட்டது.
2022.05.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொட பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் எஹலியகொட வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ மதஸ்தலத்தின் மதகுருமார்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் கிறிஸ்தவ மதஸ்தலத்தில் நடைபெற்றது. இதில் எஹலியகொட கிளை ஜம்இய்யாவின் உப தலைவர்களான அஷ்-ஷைக் ரிபா ஹஸன் மற்றும் அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் மூலம் பிரதான மதகுரு தெம்யன் பாதர் அவர்களுக்கும் மதஸ்தலத்தின் வாசிகசாலைக்கும் அல்குர்ஆன் சிங்கள மொழி மூல பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
2022.05.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கலகெதர பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இன நல்லுறவை மேம்படுத்தல் நிகழ்வும் பிரதேசத்திலுள்ள மூன்று விகாரைகளின் மத குருமார்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றது. இச்சந்திப்பில் வாலிபர்கள் தொடர்பாகவும் அவர்களை வலுப்படுத்துவதன் மூலம் சிறந்த சமூக அமைப்பையும் இன நல்லுறவையும் எவ்வாறு கட்டி எழுப்பலாம் என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
2022.05.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்குடா பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் கல்குடாத் தொகுதி சர்வமத அங்கத்தவர்கள் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இணைந்து வாழைச்சேனை நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் தலைமையில் கூட்டமொன்று நடாத்தியது. இதில் கல்குடா பிரதேச கிளையின் தலைவர், மஹிந்தானந்த அலங்கார தேரர், இப்பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ மத போதகர் சுனில் மற்றும் இந்து மதம் சார்பாக குருக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
2022.05.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட அரபுக் கல்லூரிகளின் கல்வி கற்கும் க.பொ.த சாதாரண தர - 2021 மாணவர்களுக்கான கருத்தரங்கு மீரா மகாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அறபு, அறபு இலக்கியம், இஸ்லாம் பாடங்களை அஷ்-ஷைக் ரிபாஸ் ஹக்கானி அவர்கள் நிகழ்த்தினார்கள். இதற்கு 6 மத்ரஸாக்களைச் சேர்ந்த 84 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
2022.05.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பண்டாரவல பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் பண்டாரவல ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பண்டாரவல கிளைக்குட்பட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் அழைக்கப்பட்டு ஸூம் ஊடாக நடைபெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டதுடன் அவ்விடத்தில் மசூரா செய்து இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவ மாணவிகளுக்கான விசேட துஆ பிரார்த்தனை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
2022.05.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பண்டாரவல பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வருடம் சாதாரண தர பரிட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவ மாணவிகளுக்கான துஆ பிராத்தனை பண்டாரவல ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
2022.05.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்தியக் கிளையின் மாதாந்த மஷூரா புதுக்கடை ஸஃத் பின் அபீ வக்காஸ் மஸ்ஜிதில் அஷ்-ஷைக் ஷுகுர்தீன் (இஹ்ஸானி) அவர்களின் தலைமையில நடைபெற்றது.
2022.05.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தறை மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் வெலிகம பாரி அரபுக்கல்லூரியில் நடைபெற்றுது.
2022.05.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் அதன் தஃவாக் குழுக் கூட்டம் தஃவாக் குழுத் தலைவர் அஷ்-ஷைக் ஏ. மாக்கான் (ரஹீமி) அவர்களின் தலைமையில் ஜம்இய்யாக் காரியாலயத்தில் நடைபெற்றது.
2022.05.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மருதமுனை பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் மத்திய பள்ளிவாசல் மேல்மாடியில் நடைபெற்றது.
2022.05.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொத்துவில் பிரதேசக் கிளையின் ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்தக் கூட்டம் அதன் உப தலைவர் அஷ்-ஷைக் அப்துஷ் ஷுகூர் அவர்களின் தலைமையில் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்து கொண்டனர்.
2022.05.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்ட நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ஷுஐப் (தீனி) அவர்களின் தலைமையில் ஸூம் ஊடாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
2022.05.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புளிச்சாக்குளம் பிரதேசக் கிளையின் மாதாந்த நிர்வாகக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் தமீம் அவர்களின் தலைமையில் புதுக்குடியிருப்பு ஜுமுஆப் பள்ளியில் நடைபெற்றது.