2022 மார்ச் மாதத்திற்கான கிளைச் செய்திகள்

ஜூலை 25, 2022

2022.03.05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொட பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் எஹலியகொட பிரதேசத்திலுள்ள அல்குர்ஆன் மத்ரஸாக்களை மேம்படுத்துவது தொடர்பான விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி எஹலியகொட மோரகல அந்நூர் ஜுமுஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கௌரவ அதிதிகளாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம்.எம் முர்ஷித், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாழில், சமூக சேவைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷைக் எம்.எச்.எம். பவாஸ், அல் குர்ஆன் மத்ரஸா விவகாரங்களின் ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷைக் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டதோடு எஹலியகொட பிரதேச பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், இமாம்கள், ஆலிமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எஹலியகொட பிரதேசக் கிளையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

2022.03.05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திவுரும்பொல பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் 2022 மார்ச் மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் கிளையின் உப தலைவர் அஷ்ஷைக் ஹலீம் அவர்களின் தலைமையில் அகதியா நகர் தக்வா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2022.03.05 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்திலுள்ள அரபுக் கல்லூரிகளின் அதிபர்களுடனான சந்திப்பு மாவட்ட காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பாடசாலை கல்வி, மாணவர்களின் உள அபிவிருத்தி, மாணவர்களின் ஆத்மீகத் துறை முன்னேற்றம் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்வதென முடிவும் செய்யப்பட்டது.

2022.03.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த மஷூரா தெமடகொட ஸ்கூல் லேனில் அமைந்திருக்கும் அஷ்ஷைக் நபீல் இம்தியாஸ் அவர்களின் வீட்டில் அஷ்ஷைக் ஷுகுர்தீன் (இஹ்ஸானி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.03.09 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்திலுள்ள அரபுக் கல்லூரிகளின் உஸ்தாத்மார்களுக்கான தர்பிய்யா நிகழ்ச்சியின் முதற்கட்ட நிகழ்ச்சி அக்குரணை ஜாமிஆ ரஹ்மானிய்யாவில் நடைபெற்றது. இதில் அக்குரணை, கல்ஹின்ன, உடதலவின்ன, மடவல மற்றும் கலகெதர பகுதி அரபுக் கல்லூரிகளின் 87 உஸ்தாத்மார்கள் கலந்து கொண்டார்கள்.

2022.03.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொத்துவில் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் பொத்துவில் ஜம்இய்யாவின் 2022 மார்ச் மாதத்திற்கான பொதுச் சபை மஷுரா பிரதித் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எல். அப்துல் ஷுகூர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.03.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் 2022 ஆம் ஆன்டு க.பொ.த உயர் தர பரீட்சை மாணவர்களுக்கான தொழில்துறை வழிகாட்டல் நிகழ்ச்சி தெமடகொட கனீமதுல் காஸிமியா ஜுமுஆ மஸ்ஜிதில் கிளைத் தலைவர் அஷ்ஷைக் ஷுகுர்தீன் (இஹ்ஸானி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் வளவாளராக அஷ்ஷைக் நுஸ்ரத் நௌபர் (ஹக்கானி) அவர்கள் கலந்து கொண்டாதோடு ஜே.ஜே. பவுன்டேஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

2022.03.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அபுக்காகம பிரதேசக் கிளை மற்றும் பள்ளி நிர்வாக சபை இணைந்து நடாத்திய கூட்டம் அஷ்-ஷைக் ஹாஜா முஹ்யித்தீன் அவர்களின் தலைமையில் சைத் பின் ஸாபித் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.

2022.03.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்ட பொத்துஹர உலமாக்களுக்கான ஒன்றுகூடல் பொத்துஹர நூரானிய்யா ஜுமுஆ மஸ்ஜிதில் கிளையின் உப தலைவரும் மஸ்ஜிதின் தலைவருமான அப்துஸ் ஸத்தார் (தீனி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.03.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த பொதுக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் என்.பீ. ஜுனைத் (மதனி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.03.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மருதமுனை பிரதேசக் கிளையின் அனைத்து உலமாக்களுக்கான கூட்டம் பிரதித் தலைவர் அஷ்ஷைக் எப்.எம்.எஸ்.ஏ. மௌலானா (நளீமி) அவர்களின் தலைமையில் அஷ்-ஷைக் ஏ.ஆர். ஜெரீர் (பஹ்மி) அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

2022.03.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட கொட்டராமுல்லை பிரதேசக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் நடைபெற்றதோடு கிளை உறுப்பினர்கள் மற்றும் கிளைக்குட்பட்ட மஸ்ஜித் இமாம்களும் கலந்து கொண்டனர்.

2022.03.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் அனைத்து உலமாக்களுக்கான கூட்டம் தலைவர் மௌலவி என். இஸ்மத் (ஷர்கி) அவர்களின் தலைமையில் ஹக் பள்ளிவாயலில் நடைபெற்றது.

2022.03.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்ட பட்டாணிச்சூர் கிளையின் மார்ச் மாதத்திற்கான ஒன்று கூடல் மன்பஉல் உலூம் ஹிப்ழு மத்ரஸாவில் கிளைத் தலைவர் அஷ்ஷைக் ஏ.ஆர்.எம். றமீஸ் (ஹாஷிமி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் எதிர்வரக்கூடிய புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஜம்இய்யாவின் செயற்பாடுகள் பற்றி ஆராயப்பட்டதோடு சமூக நலன் கருதி பல செயற்திட்டங்கள் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.

2022.03.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்ட தம்பிடிய பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான ஒன்றுகூடல் தம்பிடிய மிஸ்பாஹிய்யா ஜுமுஆ மஸ்ஜிதில் கிளைத் தலைவர் அஷ்ஷைக் அப்துர் ராஸிக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.03.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் மாதாந்த மஷூரா தலைவர் அஷ்ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் அவர்களின் தலைமையில் கொழும்பு கிரேண்ட் பாஸ் லெயாட்ஸ் புறோட்வே ஜுமுஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

2022.03.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் கைராத் மஹல்லாவைச் சேர்ந்த வாலிபர்களுகான வழிகாட்டல் நிகழ்வொன்று நீர்கொழும்பு மத்ரஸதுன் நூர் கட்டிடத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் நீர்கொழும்பு கிளையின் உறுப்பினர்கள், இளைஞர் விவகாரப் பிரிவின் உறுப்பினர்கள், கைராத் மஹல்லாவாசிகள் என 60 இற்கும் மேற்பட்ட வாலிபர்கள் கலந்து பயனடைந்ததோடு இதில் விஷேட வளவாளராக சகோதரர் ரம்ஸி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

2022.03.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு வடக்குக் கிளையின் மாதாந்த மசூரா லெயாட்ஸ் புறோட்வே ஃபுர்கானிய்யா மத்ரஸா வளாகத்தில் தலைவர் அஷ்ஷைக் அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.03.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட கற்பிட்டி பிரதேசக் கிளையின் மாதாந்த மசூரா ஆலங்குடா பெரிய பள்ளிவாசலில் தலைவர் அஷ்-ஷைக் ஏ.டப்.எம். ஜெமீல் கான் ரஹ்மானி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


2022.03.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளையின் நிறைவேற்றுக் குழு ஒன்றுகூடல் மாவட்ட காரியாலயத்தில் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ. சுஐப் தீனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.