2022 பெப்ரவரி மாதத்திற்கான கிளைச் செய்திகள்

ஜூலை 25, 2022

2022.02.01 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தறை மாவட்டக் கிளையின் மாதாந்த செயற்குழுக் கூட்டம் அல்பாரி அரபுக்கல்லூரியில் நடைபெற்றது.

2022.02.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திவுரும்பொல பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 74 வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு ஒரு நிகழ்வொன்று அஹதிய்யா நகர் தக்வா மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.

2022.02.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளைக்குட்பட்ட கொழும்பு மத்திய பிரதேசக் கிளை மற்றும் பெட்டா மஸ்ஜித்கள் சம்மேளனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான 74 ஆவது சுதந்திரத் தின விழா கொழும்பு-12 வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.

2022.02.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பஹா மாவட்டக் கிளைக்குட்பட்ட திஹாரி பிரதேசக் கிளை திஹாரி பெரிய பள்ளிவாசலின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான 74 ஆவது சுதந்திரத் தின விழா மஸ்ஜித் ரவ்ழா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திஹாரி பிரதேசக் கிளை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் திஹாரிய ஈமானிய்யா அரபுக்கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

2022.02.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தம்பிட்டிய நிதுல்லகஹபிட்டிய பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 74 வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நிகழ்வொன்று தம்பிட்டிய ஜுமுஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.

2022.02.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தும்பர பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் தும்பர மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் தும்பர ஜம்இய்யாவுக்கு உட்பட்ட உலமாக்களுக்கிடையிலான சினேகப்பூர்வ கலந்துரையாடல் ஒன்று ஹிஜ்ராபுர கலாச்சார மண்டபத்தில் கிளையின உப தலைவர் அஷ்-ஷைக் மிஸ்பாஹி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் கலந்துகொண்டு இந்நாட்டிற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

2022.02.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74 ஆவது சுதந்திரத் தின நிகழ்வு குருணாகல மாவட்ட ஜம்இய்யா காரியாலயத்தில் கௌரவப் பொருளாளர் அஷ்-ஷைக் நௌபர் (மனாரி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.02.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுராதபுர மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தலும் மேம்படுத்தலும் தொடர்பான கலந்துரையாடல் ரம்பாவ சிசில ஹோலில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சிங்கள மொழிபெயர்ப்புடனான அல்குர்ஆன் பிரதியை இன நல்லிணக்க மேம்பாட்டுக் குழுத்தலைவரிடம் மாவட்டக் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் யாஸீன் ஆதம் (ரஹ்மானி) அவர்கள் வழங்கிவைத்தார்கள்.

2022.02.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அடுலுகம பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் அடுலுகம வாழ் அனைத்து உலமாக்களுக்கான பொதுக்கூட்டம் அன்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

2022.02.10 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அபுக்காகம பிரதேசக் கிளையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் அஷ்-ஷைக் ஹாஜா முஹ்யுத்தீன் தலைமையில் நடைபெற்றது.

2022.02.11 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திவுரும்பொல பிரதேசக் கிளையின் 2022 பெப்ரவரி மாதத்திற்கான மாதாந்த ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் புஹாரி ஹஸ்ரத் அவர்களின் தலைமையில் திவுரும்பொல ஹுதா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2022.02.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல மாவட்ட திவுரும்பொல பிரதேசக் கிளையின் 'பிற மதங்களை அறிவோம் சகவாழ்வை கட்டியெழுப்புவோம்' எனும் செயற்திட்டத்தின் மற்றொரு நிகழ்வு திவுரும்பொல குளிஃ காசிம் வித்தியாலய கௌரவ அதிபரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது கிளை சார்பாக வித்தியாலய கௌரவ அதிபரிடம் பாடசாலை நூலகத்திற்கு ஜம்இய்யாவின் சிங்கள மொழியிலான அல்குர்ஆனின் விளக்கவுரை மற்றும் வெளியீடுகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் பாடசாலையில் கற்பிக்கின்ற பிறமத ஆசிரியர்களுக்கு ஜம்இய்யாவின் வெளியீடுகளான சமாஜ சங்வாத மற்றும் இஸ்லாம் பீத்திகாவ நூற்கள் வழங்கி வைக்கப்பட்டன.

2022.02.14 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர்கொழும்பு பிரதேசக் கிளையின் மாதாந்த செயற்குழுக் கூட்டம் மௌலவி பர்ஸான் ஈமானி அவர்களின் தலைமையில் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

2022.02.15 மற்றும் 16 ஆம் திகதிகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்தியக் கிளையின் இவ்வருட வேலைத் திட்டத்திற்கான மஷூரா பேருவல தர்கா நகர் ரிஸ் ரிவர் ரிஸோட்டில் நடைபெற்றது. இதில் கொழும்பு மத்திய பிரதேசக் கிளையின் 23 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

2022.02.15 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தர்கா நகர் பிரதேசக் கிளையின் செயலாளர் அஷ்-ஷைக் ரிஸ்வி, களுத்துறை மாவட்டக் கிளையின் செயலாளர் அஷ்-ஷைக் பர்ஹான், அல் ஃபலாஹ் சமூக சேவை அங்கத்தவர்கள் பேருவல, மொரகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சமாதானப் பேரவை, சனச வங்கி, சங்க சபை ஆகியவற்றின் உறுப்பினரும், ஏசியன் லங்கா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரும், உல்லாசப் பிரயாண சபையின் ஆலோசகருமான பௌத்த மத சகோதரர் உபாலி அவர்களை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்ததுடன் அவருக்கு அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பையும் வழங்கினர்.

2022.02.16 ஆம் திகதி எஹலியகொட பிரதேசக் கிளையின் கலந்துரையாடல் எஹலியகொட பஸார் ஜுமுஆ பள்ளிவாசலில் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஸவாஹிர் (கபூரி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.02.16 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எஹலியகொட பிரதேசக் கிளையின் கூட்டத்தில் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட மூன்று அஹதிய்யாக்கள் பற்றி ஆராயப்பட்டு ஹமீம்போர்ட் அஹதிய்யா நிலைமைகளை நேரடியாக சென்று விசாரித்துவர ஐந்து உலமாக்கள் நியமிக்கப்பட்டார்கள். நியமிக்கப்பட்ட ஐந்து உலமாக்களும் ஒரு குழுவாக இணைந்து 2022.02.17 ஆம் திகதி ஹமீம்போர்ட் கிராமத்துக்கு பயணம் மேற்கொண்டு ஹமீம்போர்ட் முஹியத்தீன் ஜுமுஆ பள்ளிவாசலில் நிர்வாக சபை மற்றும் பேஷ் இமாமுடன் அஹதிய்யா தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

2022.02.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தறை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலமாக்களுக்கான கருத்தரங்கு மாத்தறை கொடுவேகொட ஜுமுஆ பள்ளிவாசலில் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் (மழாஹிரி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பாணந்துறை ஜாமிஆ இப்னு உமர் கலாபீடத்தின் அதிபர் அஷ்-ஷைக் முப்தி அஹ்மத் மபாஸ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

2022.02.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் பிரதேசக் கிளையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் ஹக் பள்ளிவாயலில் தலைவர் என். இஸ்மத் (ஷர்கீ) அவர்களின் தலைமையில்; இடம்பெற்றது.

2022.02.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகாலை மாவட்டக் கிளையின் கூட்டம் அஷ்-ஷிபா பெண்கள் அரபுக்கல்லாரி மண்டபத்தில் அஷ்-ஷைக் அக்ரம் ஜுனைத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.02.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மல்வானை பிரதேசக் கிளையின் வாராந்தக் கூட்டம் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது.

2022.02.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் கூட்டம் சூடுவெந்தபுலவு பிரதேசக் காரியாலயத்தில் தலைவர் என்.பீ. ஜுனைத் (மதனீ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.02.20 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட கற்பிட்டி பிரதேசக் கிளையின் மாதாந்த செயற்குழு ஒன்றுகூடல் அஷ்-ஷைக் ஏ.டப்ளியு.எம். ஜெமீல் கான் (ரஹ்மானி) தலைமையில் ஆண்டான்கேணி மினன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

2022.02.21 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; பஸ்ஸற பிரதேசக் கிளையின் கீழ் இயங்கும் பிஸ்மி முன்பள்ளி பாடசாலை அபிவிருத்திக் குழுவுடனான கலந்துரையாடல் அஷ்-ஷைக் அப்துஸ் ஸலாம் (ஷர்கீ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.02.21 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; பொத்துவில் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் கிளை உறுப்பினர்களுடனான சந்திப்பு மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடல் பொத்துவில் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் ஜம்இய்யாவின் கிளை பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்ததோடு இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் உலமாக்களுக்கு மத்தியில் சகவாழ்வை கட்டியெழுப்புவது தொடர்பாக சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்கள். அதேநேரம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவப் பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எச். உமர்தீன் மற்றும் பொத்துவில் பிரதேசக் கிளைத் தலைவர் ஏ. ஆதம் லெப்பை (ஷர்கீ) ஆகியோர் கிளை உலமாக்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

2022.02.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; இரத்தினபுரி மாவட்டக் கிளையின் பொதுக் கூட்டம் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் ஹிஷாம் (றவ்ழி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

2022.02.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; கொழும்பு மத்திய கிளையின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவின் மூலம் வெளியிடப்பட்ட 'மன்ஹஜ்' மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான ஜம்இய்யாவின் நிலைபாடுகளும் வழிகாட்டல்களும் எனும்; உலமாக்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி கொழும்பு மத்திய பிரதேசக் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஷுகுர்தீன் அவர்களின் தலைமையில் மருதானை சின்ன பள்ளி ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் அவர்களும் ஜம்இய்யாவின் கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் முக்ஸித் அஹ்மத் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

2022.02.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; கேகாலை மாவட்ட கிருங்கதெனிய பிரதேசக் கிளையின் மாதாந்த ஒன்றுகூடல் கிளைத் தலைவர் அஷ்-ஷைக் அஹ்மத் ஹுஸைன் நூரி தலைமையில் கிருங்கதெனிய ஜவ்ஹரிய்யா மத்ரஸா மண்டபத்தில் நடைபெற்றது.

2022.02.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; கொழும்பு வடக்குக் கிளையின் மாதாந்த மஷூரா உப தலைவர் அஷ்-ஷைக் ஹாரிஸ் அவர்களின் தலைமையில் நைன் ஹாட்ஸ் ஜுமுஆ பள்ளியில் நடைபெற்றது.

2022.02.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்; கொழும்பு கிழக்குக் கிளையின் 2022 பெப்ரவரி மாதத்திற்கான கூட்டம் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் இர்பான் முபீன் (ரஹ்மானி) அவர்களின் ளதலைமையில் மீதொட்டமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜிதுஸ் ஷபாவில் நடைபெற்றது.

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.