1444.06.05 | 2022.12.30

கண்ணியத்துக்குரிய கதீப்மார்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

 

மஸ்ஜித்கள் அல்லாஹுதஆலாவின் இல்லமாகும். அவற்றை கண்ணியப்படுத்துவதும் பேணிப்பாதுகாப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.

 

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “…மூன்று மஸ்ஜித்களுக்கே அன்றி நீங்கள் புண்ணிய பயணம் மேற்கொள்ள வேண்டாம். அவை, மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் எனது இந்த மஸ்ஜிதுந் நபவி என்பனவாகும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹு முஸ்லிம்).

 

இப்புனிதத் தலங்கள் மூன்றையும் பாதுகாப்பதும் பராமரிப்பதும் முஸ்லிம் உம்மத்தின் நம்பிக்கைக் கோட்பாடு (அகீதா) ரீதியான கடமையாகும்.

 

எனவே, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்ற அத்தனை மஸ்ஜித்களுக்காகவும் உலக முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் ஜுமுஆ பிரசங்கத்தின் போது துஆ செய்யுமாறு கண்ணியத்துக்குரிய கதீப்மார்களிடம் ஜம்இய்யா வேண்டிக்கொள்கிறது.

 

அல்லாஹு தஆலா உலகளாவிய முஸ்லிம்களையும் மஸ்ஜித்களையும் மத்ரஸாக்களையும் பாதுகாப்பதோடு எம்மனைவரையும் பொருந்திக் கொண்டு அவனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வானாக.

 

اللَّهُمَّ احْفَظْ أَهْلَ الْحَقِّ وَالْإسْلَامَ وَالْمُسْلِميْنَ. وَارْحَمِ المُسْتَضْعَفِيْنَ مِنَ الْمُسْلِمِيْنَ. وَقَوِّ شَوْكَتَهُمْ وَثَبِّتْ أَقْدَامَهُمْ وَاحْفَظْ مُقَدَّسَاتِهُمْ خُصُوصًا الحَرَمَيْنِ الشَّرِيْفَيْنِ وَالْمَسْجِدِ الأَقْصَى. وَانْصُرِ الْمَظْلُوْمِيْنَ وَأَدِمِ الأَمْنَ وَالاِسْتِقْرَارَ فِي الْعَالَمِ كُلِّهِ يَارَبَّ العَالَمِيْنَ. اللّهُمَّ انْصُرْنَا وَلَا تَنْصُرْعَلَيْنَا. اللّهُمَّ احْفَظْ بِلَادَنَا سِرِيْلَانْكَا وَأمْوَالَنَا وَأوْلَادَنَا وَبَارِكْ لَنَا فِيْ أرْزَاقِنَا وَاجْعَلِ الرَّاحَةَ لَنَا مِنْ كُلِّ أَمْرٍ مِنْ أُمُوْرِنَا. اللّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ.

 

 

அஷ்-ஷைக் முப்தி எம்.ஜ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான்
செயலாளர் - பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா