2019.06.12 ஆம் திகதி புதன் கிழமை தெஹிவளை முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்ற இலங்கையிலுள்ள மத்ரஸாக்களின் அதிபர்கள், நிர்வாகிகளுக்கான மாநாட்டின் தீர்மானங்கள்
ஓவ்வொரு மதத்தினரும் தத்தம் மதத்திற்கான மதகுருமார்களையும் போதகர்களையும் உருவாக்குவதற்கென தனியான கலாபீடங்களையும் பயிற்சி நிலையங்களையும் கொண்டிருப்பது போலவே இஸ்லாமியப் போதகர்களையும் மதத் தலைவர்களையும் உருவாக்கும் நோக்குடன் கடந்த 150 வருட காலமாக இலங்கையில் இயங்கி வரும் கலா பீடங்களே அரபு மத்ரசாக்களாகும்.
இலங்கையின் முதல் அரபுக் கல்லூரி 1870 ஆம்; ஆண்டு ஸாவியதுல் மக்கிய்யத்துல் பாஸிய்யத்துல் ஷாதுலிய்யா என்ற பெயரில்; காலி தலாபிடியிலும் 1884ஆம் ஆண்டு அல் மத்ரசதுல் பாரி வெலிகமயிலும் 1894 ஆம் ஆண்டு பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா காலியிலும் 1931ஆம் ஆண்டு கபூரிய்யா அரபுக் கல்லூரி மகரகமயிலும் 1954 ஆம் ஆண்டு கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி அட்டாளைச் சேனையிலும்; 1955 ஆம் ஆண்டு காத்தான்குடி அல் பலாஹ் அரபுக் கல்லூரியும் 1959ஆம் ஆண்டு மகளிருக்கான கல்எலிய மகளிர் முஸ்லிம் அரபுக் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டன.
அரபு இஸ்லாமிய கற்கை நெறிகள் இலங்கையின் கல்வித் திட்டத்திலும் மிக ஆரம்ப காலம் முதலே உள்வாங்கப்பட்டுள்ளமை இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். அரச பாடசாலை மட்டத்திலும் கல்வியற் கல்லூரிகள், பல்கலைக் கழக மட்டங்களிலும் அரபு மொழி உட்பட இஸ்லாமிய கற்கை நெறிகள் காலாகாலமாக போதிக்கப்பட்டு வருகின்றன. 1940களின் ஆரம்பத்திலேயே பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு இஸ்லாமிய நாகரிகத் துறை ஸ்தாபிக்கப்பட்டது.
பாடசாலை மட்டத்தில் அரபு இஸ்லாம் பாடங்களைப் போதிப்பதற்காக மௌலவி ஆசிரியர்கள் கடந்த பல தசாப்தகாலமாக அரசினால் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் அனைத்தும் அரபு மொழியில் இருக்கின்ற காரணத்தினால் மத்ரசாக்களில் அரபு மொழியும் ஏனைய இஸ்லாமிய கலைகளும் போதிக்கப்படுகின்றன. அவற்றோடு சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. பெரும்பாலான மத்ரசாக்களில் மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கும் தயார் செய்யப்படுகின்றனர்.
2013ஆம் ஆண்டு முதல் அரச அங்கீகாரம் பெற்ற அரபு இஸ்லாமிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு பரீட்சைகள் பரீட்சைத் திணைக்களத்தினூடாக நடாத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரச அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மத்ரசாக்களில் பாடப்போதனைகள் நடைபெறுகின்றன.
நாட்டுக்கும் சமூகத்துக்கும் சமயத்துக்கும் சேவை செய்யக் கூடிய நல்லொழுக்கமும் பண்பாடும் கொண்ட இறையடியார்களையும் நற்பிரஜைகளையும் உருவாக்கும் மகத்தான பணியிலேயே அரபு மத்ரசாக்கள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்;பாக அண்மைக் கால இன முரண்பாடுகளைக் கவனத்திற்கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் சக வாழ்வையும் கட்டியெழுப்பத் தேவையான வழிகாட்டல்களையும் மத்ரசாக்கள் மாணவர்களுக்கு வழங்குகின்றன என்பதையும் ஈண்டு குறிப்பிட விரும்புகின்றோம்.
குறித்த மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
21.04.2019
இன்று நாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது
இன்றைய தினம் 21.04.2019 நாட்டில் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. கிறிஸ்தவ சகோதரர்களின் முக்கிய தினங்களில் ஒன்றான இன்று அவர்களது மதஸ்தலங்களை இலக்கு வைத்து தாக்கப்பட்டிருப்பதானது எந்தவிதத்திலும் ஏற்க முடியாத ஒன்றாகும்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் இந்த தாக்குதல்கள் தொடர்பான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
இத்தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வருமாறும், குறிப்பாக வைத்திய சாலைகளில் இரத்தப் பற்றாக்குறை நிலவுவதால் தேவையான இடங்களுக்கு இரத்தத்தை தானமாக வழங்க முன்வருமாறும் அனைவரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
அனைத்து மத, சிவில் தலைவர்களும் ஒன்றிணைந்து தத்தம் பிரதேச மக்களை சரியாக வழிநடாத்துவதினூடாக சமூகங்களுக்கிடையிலான இன வாதப் பிரச்சினைகளில் இருந்து எமது நாட்டு மக்களை பாதுகாக்க முன்வருமாறும், சமூக ஊடகங்களில் வலம் வருகின்ற வதந்திகளை பரப்புவதிலிருந்து சகலரும் தவிர்ந்து நடக்குமாறும் அன்பாக வேண்டிக் கொள்கின்றது.
அதே நேரம் அரசாங்கமும் பாதுகாப்புத்துறையும் நாட்டில் உள்ள அனைத்து மதஸ்தலங்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் வேண்டிக் கொள்கின்றது.
முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
கௌரவத் தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2018.11.12 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். சர்வமதத் தலைவர்களை சந்தித்து வரும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திக்க நேரம் கோரப்பட்டதையடுத்து குறித்த சந்திப்பு இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் இடம் பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
தனதுரையில் 1924ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து எமது நிறுவனம் நாட்டில் மார்க்க பணிகளை செவ்வனே செய்து வருவதுடன் சமூக நலன்களிலும் அக்கறை செலுத்தி வருகின்றது. அதே நேரம் எவ்வித அரசியல் சாயங்களையும் பூசிக் கொள்ளாத ஒரு அமைப்பாகவும் ஜம்இய்யா இயங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் அவர்கள் அனுமதி கோருகின்ற போது ஜம்இய்யாவை சந்திப்பதற்கான நேரங்களை வழங்கி வருவது ஜம்இய்யாவின் வழமைகளில் ஒன்றாகும். இந்த வகையில் உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் நம்மை சந்தித்துள்ளனர். அச்சந்திப்புக்கள் மிக சினேகபூர்வமானதாகவே அமைந்திருந்தன.
பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் நீங்கள் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் பல அபிவிருத்திகளை நாட்டிற்கு செய்துள்ளீர்கள். இன்றைய நாட்களில் நாட்டில் அரசியல் ரீதியான நெருக்கடி நிலை ஒன்று நிலவி வருகின்றது. இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரம், சமாதானம், ஐக்கியம், ஜனநாயகம் ஆகியவற்றிற்கு பாரிய பாதிப்பு ஏற்படும் அதே நேரம் வெளிநாடுகளில் எமது நாட்டைப் பற்றிய தப்பான எண்ணங்கள் தோன்றவும் காரணமாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்நிலையை அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியுமெனவும் இதனால் நாட்டு மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தவிர்க்க முடிவதோடு நாட்டில் ஜனநாயகத்தையும், சட்டத்தையும் நிலைநிறுத்த முடியுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம்புகிறது என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் முப்பது வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டிய தலைவர் என்ற வகையில் நீங்கள் இந்நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகமும், சமாதானமும் ஓங்கி நிற்க முயற்சிப்பீர்கள் எனவும் நாட்டு மக்களிடையே இனவாதம் ஒழிந்து அனைவரும் இலங்கையர் என்ற ஒரே குடையில் தொடர்ந்தும் பயணிப்பதினூடாக எமது தாய் நாட்டை கட்டியெழுப்புவதில் பங்காளியாக மாறுவீர்கள் எனவும் எதிர்பார்க்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார். சர்வமதத் தலைவர்களை சந்தித்து வரும் இத்தொடரில் இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திப்பதற்கு அனுமதி வழங்கியதற்காக முதலில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு சகல தரப்பினரும், சகல இனங்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் தான் ஆட்சியில் இருந்த போது இன, மதஇ பேதமின்றி தனது செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும், இனவாத செயற்பாடுகள் நாட்டில் தலை தூக்காமல் இருக்க தன்னாலான செயற்பாடுகளை முன்னெடுத்;தாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிச்செயலாளர் அஷ்-ஷைக் முர்ஷித் அவர்கள் நன்றியுரையை நிகழ்த்தினார்கள். அவர் தனதுரையில் நாம் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நீங்கி நாட்டின் ஜனநாயகமும், சட்டமும் மேலோங்கி நிற்க பிரார்த்திக்கின்றோம் எனக் கூறி நன்றியுரையை நிறைவு செய்தார்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2018.03.16
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை
(http://acju.lk/news-ta/acju-news-ta/item/1254-2018-03-06-09-27-04)
Special Media Communique from ACJU
முஸ்லிம் அமைப்புகளின் கூட்டறிக்கை
(http://acju.lk/news-ta/acju-news-ta/item/1262-2018-03-07-10-57-34)
Joint Statement of Muslim Organizations
(http://acju.lk/en/news/acju-news/item/1263-joint-statement-of-muslim-organizations)
ஜும்மா தொடர்பான முக்கிய அறிவித்தல்
(http://acju.lk/news-ta/acju-news-ta/item/1264-2018-03-08-07-48-52)
Important Announcement from ACJU
(http://acju.lk/en/news/acju-news/item/1265-important-announcement-from-all-ceylon-jamiyyathul-ulama)
(https://www.youtube.com/watch?v=wYf6SQKlKHI)
(https://www.youtube.com/watch?v=cg97M9KePJ4)
கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்
(http://acju.lk/news-ta/acju-news-ta/item/1266-2018-03-08-13-05-37)
Let’s help those affected by turmoil against Muslim Community
(https://www.youtube.com/watch?v=DAv1iQYxfGE)
(https://www.youtube.com/watch?v=oBCWsq9IiUs)
(http://acju.lk/news-ta/acju-news-ta/item/1270-2018-03-14-10-14-28)
(http://acju.lk/news-ta/acju-news-ta/item/1269-2018-03-14-10-03-47)
பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்தார்……….
இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள தாய்லாந்து நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,அந்நாட்டுப் பிரதமரின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் நேற்று (2017/09/12ம் திகதி செவ்வாய் கிழமை) மாலை 6:00 மணியளவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவர்,உபதலைவர்,செயலாளர் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.அதன் போது அவர் உரையாற்றுகையில் தாய்லாந்து நாட்டின் அறிமுகத்தை வழங்கியதோடு அங்குள்ள முஸ்லிம்கள் பற்றியும் குறிப்பிட்டார்.இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் கவலை அளிப்பதாகவும் தெரிவித்த அவர் சமூக ஒற்றுமையை வலியுறுத்திக் கூறியதோடு பிறமதத்தவருடனான சகவாழ்வின் முக்கியத்துவம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.இஸ்லாத்தின் மீது குறை கூறுபவர்கள் அல்குர்ஆனையும் குறை கூறுவதாகவும் குறிப்பிட்ட அவர் அது அல்குர்ஆனை சரிவர விளங்காத காரணத்தால் தான் நடப்பதாகவும், அல்குர்ஆனில் அல்ல பிழை இருப்பது குறை கூறுபவர்களிடம் தான் என்று கூறியது கோடிட்டு காட்ட வேண்டிய ஒன்றாக அமைந்தது.
தொடர்ந்து அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் சார்பில் உரையாற்றிய அதன் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி அவர்கள் அண்மைக் காலமாக உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் சந்திக்கும் அவல நிலைகள் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும்,ரோஹின்யா முஸ்லீம்கள் விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டதோடு ஒற்றுமை பற்றியும்,சகவாழ்வு பற்றியும் எடுத்துக் கூறினார்.
இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு 1000 வருடங்களுக்கு முன்னிருந்து ஆரம்பிப்பதை தெளிவாகக் கூறிய அவர் இந்த நாட்டின் மீது முஸ்லிம்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும்,நாட்டுக்காக அன்று தொடக்கம் போராடி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பற்றிய பேராசிரியர்/கலாநிதி கநோக் வுன்ங்டன்கோன் அவர்களின் கேள்விக்கு தலைவர் பின்வருமாறு பதிலளித்தார் ”இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் 1924ம் ஆண்டு எமது முன்னோர்களால் திட்டமிட்டு இலங்கை முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாகவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பிக்கப்பட்டு பல பகுதிகளாக இன்றுவரை செயற்படுவதாக குறிப்பிட்டதோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒவ்வொரு பிரிவு பற்றியும் ஒரு தெளிவை வழங்கினார் ”தலைவரின் உரையில் வேற்றுமையில் ஒற்றுமை எனும் விடயத்தை வலியுறுத்திப் பேசியது குறிப்பிடத் தக்க விடயமாக அமைந்தது.
சுமார் 2மணி நேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி,உபதலைவர் அஷ்ஷைக் அப்துல்ஹாலிக் ,பொதுச்செயளாலர் அஷ்ஷைக் முபாரக் ,உட்பட அதன் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா