ஊடக அறிக்கை
2016.07.25
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுவுக்கான தெரிவும்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவுக்கான மத்திய சபைக் கூட்டமும் நேற்று 2016.07.24 (1437.10.19) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டி பெரிய ஜும்ஆ (கண்டி லைன்) மஸ்ஜிதில் கௌரவ தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஜம்இய்யாவின் 25 மாவட்டக் கிளைகளினதும், 120 பிரதேசக் கிளைகளினதும் பதவிதாங்குனர்களான தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் உதவிச் செயலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
காலை 10:00 மணியளவில் ஆரம்பமான கூட்டம் பிற்பகல் 2:00 மணி வரை நடைபெற்றது. கிறாஅத்துடன் ஆரம்பமான நிகழ்கவுளில் வரவேற்புரையை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்- ஷைக் எச் உமர்தீன் அவர்கள் கண்டி மாவட்டத்தில் இம்மாநாடு நடைபெறுவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதாகவும் இம்மாவட்ட உலமாக்கள் வருகை தந்த அனைவரையும் பெருமனதோடு வரவேற்பதாகவும் கூறினார்.
அதனையடுத்து பொதுச்செயலாளர் அஷ்- ஷைக் எம்.எம்.ஏ முபாறக் செயற்பாட்டறிக்கையை சமர்ப்பித்தார். கடந்த மூன்றாண்டுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா செய்த சமய சமூக சேவைகளை மிகவும் விரிவாக எடுத்துக் கூறி அஹ்லுஸ் ஸஷுன்னா வல் ஜமாஅத்தினரின் மகத்தான சொத்தான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பேணிப் பாதுகாப்பது நம் எல்லோரினதும் கடமையாகுமென்றார். முன்னாள் தலைவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவூடன் எப்போதும் ஒத்துழைக்கும் பரோபகாரிகளுக்கும் நன்றி கூறினார்.
தொடர்ந்து பொருளாளர் அஷ்- ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்கள் ஜம்இய்யாவின் கடந்த மூன்றாண்டுகளுக்கான வரவு செலவுகளுக்கான கணக்கறிக்கையை வாசித்தார்.
அத்துடன் 2012 ஆம் ஆண்டு முதல் அமுலிலிருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையூடன் உப தலைவர் அஷ்- ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் சபையினரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இறுதியாக தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில் ஜம்இய்யாவுக்குட்பட்ட பலரையும் நினைவு கூர்ந்து, வருகை தந்துள்ள சகலரும் ஜம்இய்யாவின் பெறுமதியை நன்குணர்ந்து மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உலமாக்களின் புரிந்துணர்வுகள் மூலம் தான் சமூகத்துக்கு நல்ல பணியைச் செய்ய முடியும் என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாகரக் குழுவின் செயலாளர் அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் நன்றியுரையினை வழங்கினார்.
ஐந்நூறு பேருக்கும் மேற்பட்ட பதவி தாங்குனர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு பிற்பகல் 2 மணியளவில் ழுஹர் தொழுகையுடனும் பகல் போசனத்துடனும் நிறைவுபெற்றது.
பகல் போசன இடைவேளைக்குப் பிறகு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிறைவேற்றுக் குழுவைத் தெரிவு செய்யும் மத்திய சபையின் அமர்வு பள்ளியின் முதலாம் மாடியில் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக முன்னாள் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தமது சிற்றுரைகளை வழங்கி தமது பதவிக் காலத்தை நிறைவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய யாப்பின் பிரகாரம் தற்காலிகத் தலைவராக அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். குறித்த தெரிவும் பதவி தாங்குனர்களின் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்ற அதே வேளை தற்காலிகத் தலைவருக்கு உதவியாளர்களாக அஷ்- ஷைக் ஏ.எல்.எம் ரிழா மற்றும் அஷ்- ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தெரிவின் போது புதிய நிறைவேற்றுக் குழுவில் பின்வருவோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
1) அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி கௌரவ தலைவர்
2) அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் கௌரவ செயலாளர்
3) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம். அகார் முஹம்மத் கௌரவ பிரதித் தலைவர்
4) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் கௌரவ பொருளாளர்
5) அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக் கௌரவ உப தலைவர்
6) அஷ்-ஷைக் எம்.எச்.எம் யூசுப் கௌரவ உப தலைவர்
7) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா கௌரவ உப தலைவர்
8) அஷ்-ஷைக் எஸ.எச் ஆதம்பாவா கௌரவ உப தலைவர்
9) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம் கௌரவ உப தலைவர்
10) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம் கௌரவ உப செயலாளர்
11) அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முh;ஷித் கௌரவ உப செயலாளர்
12) அஷ்-ஷைக் எம்.கே அப்துh;றஹ்மான் கௌரவ உப பொருளாளர்
13) அஷ்-ஷைக் எச் உமறுத்தீன் கௌரவ உறுப்பினர்
14) அஷ்-ஷைக் எஸ்.எல்.நவ்பா;; கௌரவ உறுப்பினர்
15) அஷ்-ஷைக் எம்.எல்.எம்.இல்யாஸ்; கௌரவ உறுப்பினர்
16) அஷ்-ஷைக் எம்.எப்.எம்.பாஸில் கௌரவ உறுப்பினர்
17) அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்; கௌரவ உறுப்பினர்
18) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர் கௌரவ உறுப்பினர்
19) அஷ்-ஷைக் அர்கம் நூறமித் கௌரவ உறுப்பினர்
20) அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் கௌரவ உறுப்பினர்
21) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில் கௌரவ உறுப்பினர்
22) அஷ்-ஷைக் ஏ.பி.எம். அலியார் கௌரவ உறுப்பினர்
23) அஷ்-ஷைக் எஸ்.எம்.எம் ஜுனைத் கௌரவ உறுப்பினர்
24) அஷ்-ஷைக் எஸ்.ஏ.பி.ஏ.எஸ் சுப்யான் கௌரவ உறுப்பினர்
25) அஷ்-ஷைக் எஸ்.எச் ஸறூக் கௌரவ உறுப்பினர்
அல்லாஹுதஆலா எம் அனைவரினதும் நல்லமல்களைப் பொருந்திக்கொள்வானாக!
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா