அனர்த்தம் தொடர்பாக குத்பாப் பிரசங்கம் நிகழ்த்தும் கதீப்மார்களுக்கான தொகுப்பு
அனர்த்தங்களின் போது அல்லாஹ்வின் பக்கம் மீளுவோம்;!
- அனைத்து நிகழ்வுகளும் (மழை, வெள்ளம், நில நடுக்கம், சுனாமி, சூறாவளி, போன்ற அனைத்தும்) அல்லாஹ்விடத்திலிருந்துதான் வருகின்றன. இதனை உறுதி கொள்வது ஈமானுடையவர்களின் அடையாளம்.
- مَا أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّـهِ وَمَن يُؤْمِن بِاللَّـهِ يَهْدِ قَلْبَهُ وَاللَّـهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ - التغابن: ١١
- ஏன்?; இந்த உலகம் ஒரு சோதனைக் கூடம், குறிப்பாக ஈமான் உடையவர்களை சோதிக்கின்றான். அவர்களின் ஈமான் எந்த தரத்தில் இருக்கின்றது என்பதற்காக.
- أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ العنكبوت :٢
- இந்த சோதனைகள் பல வடிவங்களில் வெளியாகும்.
- وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ - البقرة: ١٥٥
- சிலவேளை மனிதர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறுசெய்வதாலும் சிரமமான நிலைமைகள் ஏற்படலாம்.
- ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ الروم: ٤١
- உலகத்தில் ஏற்படும் இவ்வாறான நிகழ்வுகளை மூன்றாகப் பிரிக்கலாம்.
01.நல்லவர்களுக்கு இது ஒரு சோதனை.
02.பாவிகளுக்கு இது ஒரு தண்டனை.
03.பாதிக்கப்படாதவர்களுக்கு இது ஒரு படிப்பினை.
- எவ்வாறாயினும் எல்லாக் கட்டங்களிலும் மக்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதையே அல்லாஹ் விரும்புகிறான்.
-
- ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ الَّذِي عَمِلُوالَعَلَّهُمْ يَرْجِعُونَ - الروم: ٤١
- وَقَطَّعْنَاهُمْ فِي الْأَرْضِ أُمَمًا مِّنْهُمُ الصَّالِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَٰلِكَ وَبَلَوْنَاهُم بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ - الأعراف: ١٦٨
- وَأَنِيبُوا إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ - الزمر: ٥٤
- ஒரு ஊருக்கு பிரச்சினை வருகின்றது. ஆதலால் அவர்கள் பாவிகள் என்றும் மற்ற ஊருக்கு பிரச்சினைகள் வராததால் அவர்கள் நல்லவர்கள் என்றும் அர்த்தம் கொள்வது தவறாகும். மாறாக சிலரை அல்லாஹ் பிரச்சினைகளில் சிக்க வைத்து அவர்கள் அப் பிரச்சினையின் போது எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். ஏனையோர் பிரச்சினையில் சிக்கியவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதனை அல்லாஹ் சோதிக்கின்றான்.
- எனவே நாம் அனைவரும் பாவங்களைத்தவிர்த்து அல்லாஹ்வின் பக்கம் தௌபா, இஸ்திஃபார், ஸதகாக்கள் செய்வதன் மூலம் திரும்ப வேண்டும்.
وَتُوبُوا إِلَى اللَّـهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ - النور: ٣١
وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَاعًا حَسَنًا إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِن تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ - هود: ٣
أَن لَّا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ, فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ - الأنبياء : ٨٧/ ٨٨
நபியவர்களும் சோதனைகளின் போது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவார்கள்.
- عن حذيفة بن اليمان رضى الله عنه قال : كان النبي صلى الله عليه وسلم «إذا حزبه أمر صلى») قال الشيخ الألباني: حديث حسن, ينظر: صحيح سنن أبي داود)
- எனவே இக்கட்டான இக்கால கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்படாதவர்கள் தம்மாலான உதவிகளை செய்ய முன்வரல் வேண்டும்.
- தக்வா உடையவர்களின் அடையாளங்களில் ஒன்று அவர்கள் எல்லா நிலைகளிலும் (செல்வம், வறுமை) அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பார்கள்.
- الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّـهُ يُحِبُّ الْمُحْسِنِينَ ﴿آل عمران: ١٣٤﴾
அல்லாஹ்வுக்காக செலவழிப்பவர்கள் யார் இருக்கின்றார்கள் என அல்லாஹ் கேட்கின்றான்.
- مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللَّـهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً وَاللَّـهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ - البقرة: ٢٤٥
- நபியவர்களின் தன்மைகளில் ஒன்றுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா நிலைமை களிலும் உதவுவது.
- فرجع بها رسول الله صلى الله عليه وسلم ترجف بوادره حتى دخل على خديجة فقال : زملوني ، زملوني فزملوه حتى ذهب عنه الروع قال لخديجة : أي خديجة ، ما لي لقد خشيت على نفسي فأخبرها الخبر قالت خديجة : كلا أبشر فوالله لا يخزيك الله أبدا ، فوالله إنك لتصل الرحم ، وتصدق الحديث ، وتحمل الكلَّ وتكسب المعدوم ، وتقري الضيف ، وتعين على نوائب الحق (من حديث طويل فى البخاري)
(குறிப்பு: நபியவர்களுக்கு நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்பே அவர்களிடம் சோதனைகளில் சிக்குண்டவர்களுக்கு உதவும் பண்பு இருந்துள்ளது.)
- இந்தப் பண்பு ஹழ்ரத் அபூ பக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமும் காணப்பட்டது. அதாவது ஹழ்ரத் அபூ பக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மக்காவில் தமக்கு ஏற்பட்ட கஷ்டங்களை முன்னிட்டு மக்காவை விட்டும் வெளியேற முனைந்த போது இப்னு துஃனா என்பவர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து தன் பொறுப்பில் எடுத்து குறைஷியர்களிடம் பின்வருமாறு கூறினார்கள்.
- فقال : أين تريد يا أبا بكر ؟ فقال أبو بكر : أخرجني قومي ، فأنا أريد أن أسيح في الأرض فأعبد ربي ، قال ابن الدغنة : إن مثلك لا يخرج ولا يخرج ، فإنك تكسب المعدوم ، وتصل الرحم ، وتحمل الكل ، وتقري الضيف ، وتعين على نوائب الحق ،
صحيح البخاري > كِتَاب : الْحَوَالَاتِ > بَاب : جِوَارِ أَبِي بَكْرٍ فِي عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَعَقْدِهِ
இது போன்ற பண்புகள் ஸஹாபாக்களிடம் பரவலாக காணப்பட்டன. அவர்கள் கஷ்டமான நிலைமைகளிலும் கூட மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்களாக இருந்தார்கள். அபு அகீல் அவர்கள் தான் சம்பாதித்ததை தர்மம் செய்த சம்பவம்.
- حدثني حدثني بشر بن خالد أبو محمد ، أخبرنا محمد بن جعفر ، عن شعبة ، عن سليمان ، عن أبي وائل ، عن أبي مسعود ، قال : " لما أمرنا بالصدقة كنا نتحامل فجاء أبو عقيل بنصف صاع ، وجاء إنسان بأكثر منه ، فقال المنافقون : إن الله لغني عن صدقة هذا ، وما فعل هذا الآخر ، إلا رئاء ، فنزلت الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم سورة التوبة آية 79 ، الآية "
صحيح البخاري > كِتَاب تَفْسِيرِ الْقُرْآنِ > سُورَةُ بَرَاءَةَ .
இறுதியாக தௌபா> இஸ்திஃபார், துஆக்களின் மூலம் அல்லாஹ்வின் பக்கம் மீளுவதுடன் ஸதகாக்கள் மூலமாகவும் அல்லாஹ்வினுடைய கோபப்பார்வையில் இருந்து நாம் எம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
- عن أبيه ، عن جده ، عن علي رضي الله عنهم ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إن صدقة السر تطفئ غضب الرب تعالى ، وإن الصدقة لتطفئ الخطيئة كما يطفئ الماء النار ، فإذا تصدق أحدكم بيمينه فليخفها من شماله فإنها تقع بيمين الرب تبارك وتعالى ، وكلتا يدي ربي سبحانه وتعالى يمين ، فيربيها كما يربي أحدكم فلوه أو فصيله حتى تصير اللقمة مثل أحد "
مسند زيد > كِتَابُ الزَّكَاةِ > بَابُ صَدَقَةِ السِّرِّ .
சமூக சேவைப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா