2024.07.23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவினரின் ஒன்றுகூடலொன்று குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பிரச்சாரக்குழு பற்றிய பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு எதிர்காலங்களில் அக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உபதலைவரும் பிரச்சாரக் குழுவின் செயலாளருமான அஷ்-ஷைக் எச். உமர்தீன், பிரச்சாரக்குழுவின் துணைச் செயலாளர் அஷ்-ஷைக் ஏ. யாஸீன், குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் அப்துல் ஹலீம் ஷர்கி, அஷ்-ஷைக் ரிபாய், அஷ்-ஷைக் ரம்ழான், அஷ்-ஷைக் உமர், அஷ்-ஷைக் இர்ஷாட், குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் பஸால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

- ACJU Media -