2024.07.23ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழு மற்றும் ஜம்இய்யாவின் அரபிக் கல்லூரிகள் விவகாரக் குழு ஆகியவற்றிற்கிடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இவ்வொன்று கூடலில் அரபிக் கல்லூரிகள் தொடர்பிலான பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன், அஷ்-ஷைக் எம்.ஜே அப்துல் ஹாலிக், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உப செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர், துணைச் செயலாளர்களான அஷ்-ஷைக் என்.எம். ஷைபுல்லாஹ் மற்றும் அஷ்-ஷைக் ஏ.எம். ஆஸாத், ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.டி.எம். ளரீஃப், அரபிக் கல்லூரிகளுக்கான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஹலீமுல்லாஹ், குழு உறுப்பினர் அஷ்-ஷைக் இஸ்மாஈல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

- ACJU Media -