ACJU/FRL/2024/37/420
2024.11.26 (1446.05.23)

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்!

கடந்த சில நாட்களாக நாட்டின் சில பாகங்களில் கடுமையான காற்று வீசி வருவதுடன் சீரற்ற காலநிலையும் காணப்படுவதுடன், எதிர்வரும் நாட்களிலும் இது தொடரலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதிப்புக்களுக்குச் சாத்தியமுள்ள இடங்களில் உள்ள மக்கள் அரசாங்கம் விடுக்கும் அறிவுறுத்தல்களை எடுத்து நடக்குமாறும், ஆலிம்கள் தத்தமது பிரதேச மக்களுக்கு இது போன்ற நிலைகளில் எவ்வாறு செயற்பட வேண்டுமென வழிகாட்டுவதுடன் இஸ்திஃபார், தௌபா, ஸதகா, தொழுகை, நோன்பு போன்ற நல்லமல்களின் மூலம் மக்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பி, அவனது உதவிகளை பெற்றுக் கொள்ள வழிகாட்டுமாறும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.

அத்துடன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கும் சீரற்ற காலநிலையும் நீங்கும் வரையில் ஐவேளைத் தொழுகைகளில் குனூத்துன் நாஸிலா ஓதி பிரார்த்திக்குமாறு மஸ்ஜித் இமாம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டிக் கொள்கின்றது.

குனூத்துன் நாஸிலாவில் ஓதப்பட வேண்டிய துஆக்கள்:

 

اللَّهُمَّ حَوَالَيْنَا ولَا عَلَيْنَا، اللَّهُمَّ علَى الآكَامِ والظِّرَابِ، وبُطُونِ الأوْدِيَةِ، ومَنَابِتِ الشَّجَرِ


اللَّهُمَّ إنا نَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ ما فِيهَا، وَخَيْرَ ما أُرْسِلَتْ به، وَنَعُوذُ بكَ مِن شَرِّهَا، وَشَرِّ ما فِيهَا، وَشَرِّ ما أُرْسِلَتْ به


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ، وَالْحَرَقِ، وَالْهَرَمِ


اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا مِنْ قَبْل ذَلِكَ

 

கூடிய விரைவில் சீரான காலநிலையை ஏற்படுத்தி, நாட்டையும் நாட்டு மக்களையும் எல்லா விதமான பேராபத்துக்களில் இருந்தும் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா பாதுகாப்பானாக!

 


முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

 


அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்

செயலாளர் - ஃபத்வாக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை