2023.11.09 (1445.04.24)

 

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு தேசிய கண் வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர்கள் மற்றும் 'Vision-23' அமைப்பினரால் மதத் தலைவர்களுக்கென விஷேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீரிழிவு நோயால் ஏற்படும் கண்பார்வை பாதிப்புகளை இனங்கண்டு, அவற்றிற்கான சிகிச்சைகளை வழங்கும் இலவச பரிசோதனை முகாம் எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 08 மணி தொடக்கம் பிற்பகல் 01 மணி வரை தேசிய கண் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.


தேவையுள்ள ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் இந்த வைத்திய பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்வதோடு ஜம்இய்யாவின் மாவட்ட, பிரதேச கிளைகளின் பிரதிநிதிகள் தத்தம் பகுதிகளில் உள்ள ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்களுக்கு குறித்த விடயம் தொடர்பில் எத்திவைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.


குறிப்பு - தேசிய கண் வைத்தியசாலை பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமையவே ஜம்இய்யா இவ்வேண்டுகோளை விடுக்கிறது.

 

 


அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்
செயலாளர் - ஆலிம்கள் விவகாரப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா