2022.10.27


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உத்தியோகபூர்வ கடிதம் (லெட்டர் ஹெட்), உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் கௌரவத் தலைவர் அவர்களின் கையொப்பத்தை போலியாகப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் 2022.10.26 ஆம் திகதி (நேற்று) ஸைபர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.


இதில் ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர், செயலாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சார்பாக நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ் ஷைக் எம். ரிபா ஹஸன் மற்றும் மூன்று சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்று இம்முறைப்பாட்டை சமர்ப்பித்தனர்.


இது தொடர்பாக கூடிய விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

 

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா