2022.11.02

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உத்தியோகபூர்வ கடிதம் (லெட்டர் ஹெட்), உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் கௌரவத் தலைவர் அவர்களின் கையொப்பத்தை போலியாகப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது. இச்செய்தி போலியானது என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற ஒரு போலி செய்தியினை வெளியிட்டமை தொடர்பாக ஏளவே 2022.10.26 ஆம் திகதி ஸைபர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதோடு கூடிய விரைவில் இது சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா