ACJU/NGS/2025/051
2025.03.31 (1446.10.01)
புனிதங்கள் நிறைந்த அருள் மிகு ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, அல்-குர்ஆன் ஓதி, இரா வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு பயனுள்ள முறையில் நாட்களை கழித்த எமக்கு அல்லாஹு தஆலா இந்த ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் பாக்கியத்தை வழங்கியிருக்கிறான்.
இந்நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்பெருநாள் தினத்தில் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும், சுபீட்சமும் ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவிடம் நாம் பிரார்த்திப்பதோடு குறிப்பாக பலஸ்தீன் காஸா பகுதிகளில் வாழும் அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வெகு விரைவில் நீதி கிடைப்பதற்கும் அவர்கள் மீது அமைதியும், சமாதானமும் நிலவுதற்கும் பிராத்திப்போம்.
மேலும், இந்த ஈகைத் திருநாளில் எமது குடும்ப உறவுகளோடு ஒற்றுமையையும் இணக்கத்தையும் பேணுவதோடு எம்மை சூழவுள்ள அயலவர்கள், ஏழை எளியவர்கள், தேவையுடையவர்களும் இப்பெருநாளை நல்லமுறையில் கொண்டாடிட எம்மாலான உதவிகளையும் ஒத்தாசைகளையும் செய்து கொடுப்போம்.
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நாம் நோற்ற நோன்புகளையும் எமது அமல்களையும் அங்கீகரித்து உயர்ந்த நற்கூலிகளைத் தந்தருள்வானாக!
تقبل الله منا ومنكم
முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா