ஹலால் சான்றிதழ் தொடர்பான ஊடக அறிக்கை

07.01.2016 (26.03.1437)

இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட நுகர்வோர் பெருமக்களுக்கு ஒரு முக்கிய விடயம் பற்றிய தெளிவுரையை வழங்கும் நோக்கில் இவ்வூடக அறிக்கை வெளியிடப்படுகின்றது.

அண்மைக் காலமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷெய்க் முப்தி M.I.M றிஸ்வி அவர்களின் பெயரில் (SMS) குறுஞ்செய்திகள், Whatsapp மற்றும் சமூக வலைத்தளங்களில் சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இவற்றில், சில நிறுவனங்களின் உற்பத்திகள் சிலவற்றை ஹலால் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்க மறுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவையனைத்தும் பொய்யான செய்திகள் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றௌம். 

இது போன்ற பொய்யான தகவல்கள் பொருட்களின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் என நாம் உறுதியாக நம்புகின்றௌம். எனவே, சில தீய சக்திகளால் முன்வைக்கப்படும் இவ்வாறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றௌம்.

அத்துடன் 2013.12.31 முதல் ஹலால் சான்றிதழ்களை வழங்கும் செயற்பாட்டில் இருந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முற்றாக நீங்கியுள்ளது என்பதையும், தற்சமயம் நுகர்வோர் பொருட்களுக்காக ஹலால் சான்றிதழ்களை வழங்கும் செயற்பாடு Halal Accreditation Council (Guaranteed) Limited என்ற நிறுவனம் மூலமே மேற்கொள்ளப்படுகின்றது என்பதையும் அறியத் தருகின்றௌம்.

மேலும் ஹலால் தொடர்பான சந்தேகங்களுக்கு 0117425225 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றௌம்.

அஷ்-ஷைக் பாழில் பாரூக்
செயலாளர் – ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா