22.11.2018 (13.03.1440)

ஜுமுஆ நாள் ஒரு சிறப்பான நன்நாளாகும். அந்நாளில் ஆற்றப்படும் பிரசங்கங்கள்  பயனுள்ளதாக அமைத்துக் கொள்வது கதீப் மாரின் கடமையாகும். குத்பாவை சுருக்கியும் தொழுகையை நீட்டியும் செய்வது தான் ஒருவனது சன்மார்க்கத் தெளிவுக்கு ஆதாரமாகும் என்ற பொருள் பட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை கவனத்திற்கொண்டு எமது குத்பா பிரசங்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். குத்பாவுக்கு சமுகமளிப்போரில் நோயாளிகள். வயோதிபர்கள் மற்றும் பிரயாணிகள் முதலியவர்கள் காணப்படுகிறார்கள் என்பதை நாம் கவனதிற்கொள்ள வேண்டும்.

இந்த மாதங்களில் லுஹருக்குரிய பாங்கின் நேரம் நேரகாலத்தோடு இருந்து வரும் அதே வேளை பாங்கு சொல்லப்பட்டு சுமார் பத்து நிமிடங்களில் ஆரம்பிக்கப்படும் குத்பா ஒரு மணி வரை நீடிப்பது எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பலர் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர். எனவே குத்பாக்களை அரைமணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ள கதீப் மார்கள் முன்வர வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகங்களும் இதனை கவனத்திற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.

மேலும் குத்பாவுக்கு வருகை தரும் காரியாலயங்களில் தொழில் புரிவோர்களதும்; அரச உத்தியோகத்தர்களதும் பகல் போசனத்திற்கும், ஜுமுஆ தொழுகைக்குமான நேரத்தை கவனத்திற் கொள்வது கதீப் மார்களின் கடமையகும். ஆதலால் வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கங்களை நிகழ்த்துபவர் ஜுமுஆவில் கலந்து கொள்ளும் மக்களின் வசதிகளையும் கவனத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலும் இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்  க.பொ.த (சாஃத) பரிட்சைக்குத் தோற்றும்  மாணவர்கள் குறித்த நேரத்தில் பரிட்சைக்கு செல்லவேண்டிருப்பதால் குத்பாக்களை அதற்கேற்றவாறு அமைத்துக் கொள்வது தொடர்பாகவும் கதீப்மார்கள் கவனத்திற்கெடுப்பது முக்கியமாகும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ள முறையீடுகளையெல்லாம் முன்வைத்து இந்த ஊடக அறிக்கை கதீப் மார்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் அனுப்பப்படுகின்றது.

அஷ்-ஷைக் எச். உமர்தீன்

செயலாளர் - பிரசாரக் குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

13.08.2018 (01.12.1439)

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் “எனவே, உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (108:02) என்று குறிப்பிட்டுள்ளான். 

இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுது தான் உழ்ஹிய்யாவின் சிறப்புக்களை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் “உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வைப் போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.” (22:37) என்று குறிப்பிட்டுள்ளான். அதேநேரம் இலங்கையில் காணப்படும் விலங்குச் சட்டம் (Animal Act No. 29 of 1958)கூறும் விடயங்களையும் கவனத்திற் கொண்டு இதனை நிறைவேற்ற வேண்டும்.

இஸ்லாம் எல்லா உயிர்களையும் மதிக்கின்றது, அவைகளுக்கு நோவினை செய்வதைத் தடுக்கின்றது, ஜீவ காருண்யத்தை ஏவுகின்றது. ஒரு மிருகத்திற்கு உணவு கொடுக்காது சிரமப்படுத்திய  மனிதரைப் பார்த்து நபி சல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்கள் வாய் பேச முடியாத இப்பிராணியின் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

இவ்வணக்கத்தை நிறைவேற்றும் பொழுது  பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:

 1. ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.
 2. உழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும் தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.
 3. மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையும் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
 4. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.
 5. அறுப்பதற்காகப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.
 6. அறுப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள கொட்டில்களையே குர்பானிக்காகப் பயன்படுத்துவது சிறந்ததாகும். குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.
 7. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை ஒன்றுக்கு முன் ஒன்று கிடத்தி அறுக்கக் கூடாது.
 8. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத் தெளித்து சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
 9. நம் நாட்டின் சட்டத்தை இந்நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற் கொண்டு, மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
 10. அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
 11. பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.
 12. நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்து கொள்ள ஏனைய நாட்களை இதற்காக பயன்படுத்துவது சிறந்ததாகும்.
 13. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
 14. உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்புவோர் அப்பிரதேச ஜம்இய்யாவின் கிளைகள், பள்ளிவாசல்கள், ஊர் சம்மேளனங்களோடு தொடர்பு கொண்டு கூட்டாக தம் கடமையை நிறைவேற்றுவது பொருத்தமானது.

பள்ளிவாசல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லினங்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

குறிப்பு : மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரும் ஜும்ஆத் தொழுகையின் பின் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டி, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பார்வைக்கிடுமாறு மஸ்ஜித் நிர்வாகிகளை ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கிறது. மேலும் உழ்ஹிய்யா தொடர்பான மேலதிக விளக்கங்களை உள்ளடக்கிய “தியாகத்தை பறைசாற்றும் உழ்ஹிய்யா ஒரு விளக்கம்” எனும் கையேடு ஜம்இய்யாவின் இணையதளமான www.acju.lkஇல் மேலதிக வாசிப்புக்காக பதிவேற்றப்பட்டுள்ளது.

29.08.2017 / 06.12.1438

மியன்மாரில் வாழும் முஸ்லிம்களுக்காகப் பிரார்த்திப்போம்!

மியன்மாரில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களது நிலை மிகவும் வேதனை தரக்கூடியதாகவுள்ளது. அம்மக்கள் கொலை, கற்பழிப்பு போன்ற அநியாயங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். மியன்மார் இராணுவத்தினாலும் சில தீய சக்திகளினாலும் பல துன்பங்களை அனுபவித்து, உயிரையும் தீனையும் பாதுகாக்க முடியாமல் காணப்படுகின்றனர்.

இந்த மிலேட்சத்தனமான தாக்குதல்களையும் அநியாயங்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாக கண்டிப்பதுடன் இதனை நிறுத்துவதற்கு உலக நாடுகள் பொதுவாகவும் முஸ்லிம் நாடுகள் குறிப்பாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்து வருவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு உதவுவதற்காகவும் அவர்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொடுக்கவும் சகல உலக நாடுகளும் முன்வர வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது.

இவர்களது உண்மை நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்வதில் ஊடகங்களும் தமது பணியை நிறைவேற்றாதது கவலைக்குரிய விடயமாகும். எது எப்படியிருப்பினும், முஸ்லிம்கள் ஒரு உடம்புக்கு ஒப்பானவர்கள். அவர்களில் ஒருவருக்கு ஏற்படும் துன்பம் ஏனையோரையும் பாதிக்கும் என்ற நபிமொழியின் கருத்துக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் செயற்பட கடமைப்பட்டுள்ளோம்.

எனவே உலகளாவிய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் தீரவும் ரோஹிங்யா முஸ்லிம்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவும் நம்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பாக கதீப்மார்கள் மக்களுக்கு இவற்றை தெளிவுபடுத்தி, அவர்களுக்காக ஜும்ஆக்களில் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கின்றது.

வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

23.08.2017 (30.11.1438)

வாக்காளர் பதிவில் கவனம் செலுத்துவோம்!

வாக்குரிமை இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜையினதும் உரிமையாகும். அதனை பெற்றுக்கொள்வதும், உரிய முறையில் பயன்படுத்துவதும் நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இந்த விடயத்தில் நம்மில் சிலர் பொடுபோக்காகவும் கவனக்குறைவாகவும் நடந்து கொள்கின்றனர். அதன் காரணமாக உத்தியோகப் பூர்வமான சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு சிரமப்படுவது மட்டுமல்லாமல், அதற்காக அரச உத்தியோகத்தர்களை குறை கூறுவதையும் சில சமயங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்தல், காணி மற்றும் வீடு போன்றவற்றை பதிவுசெய்தல் போன்ற பல விடயங்களிலும் வாக்காளர் பதிவு அவசியப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் நாம் கூடுதல் கரிசனையோடு நடந்து கொள்ள வேண்டும்.

தற்போது வாக்காளர் பதிவு விபரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது (http://www.slelections.gov.lk/web/index.php/en). இதில் தங்களது பெயர் இடம்பெறாதவர்களும் இதுவரை வாக்காளராக பதிவு செய்து கொள்ளாதவர்களும் அவசரமாக தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களை அணுகி அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் கதீப்மார்கள் எதிர்வரும் குத்பாவில் இதனை நினைவுபடுத்துமாறும் ஜம்இய்யா கேட்டுக்கொள்கின்றது.
வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
கௌரவ பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

2017.08.17 / 1438.11.24

இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்!

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் 'எனவே, உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.' (108:02) என்று குறிப்பிட்டுள்ளான்.

இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுது தான் உழ்ஹிய்யாவின் சிறப்புக்களை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் 'உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வைப் போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.' (22:37) என்று குறிப்பிட்டுள்ளான். அதேநேரம் இலங்கையில் காணப்படும் விலங்குச் சட்டம் (யுniஅயட யுஉவ ழே. 29 ழக 1958) கூறும் விடயங்களையும் கவனத்திற் கொண்டு இதனை நிறைவேற்ற வேண்டும்.

இஸ்லாம் எல்லா உயிர்களையும் மதிக்கின்றது, அவைகளுக்கு நோவினை செய்வதைத் தடுக்கின்றது, ஜீவ காருண்யத்தை ஏவுகின்றது. ஒரு மிருகத்திற்கு உணவு கொடுக்காது சிரமப்படுத்திய மனிதரைப் பார்த்து நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய் பேச முடியாத இப்பிராணியின் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

இவ்வணக்கத்தை நிறைவேற்றும் பொழுது பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:

1. ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.

2. உழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும்; தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.

3. மிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையும் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.

5. அறுப்பதற்காகப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.

6. அறுப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள கொட்டில்களையே குர்பானிக்காகப் பயன்படுத்துவது சிறந்ததாகும். குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.

7. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை ஒன்றுக்கு முன் ஒன்று கிடத்தி அறுக்கக் கூடாது.

8. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத் தெளித்து சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

9. நம் நாட்டின் சட்டத்தை இந்நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற் கொண்டு, மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

10. அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

11. பல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.

12. நாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்து கொள்ள ஏனைய நாட்களை இதற்காக பயன்படுத்துவது சிறந்ததாகும்.

13. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

14. உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்புவோர் அப்பிரதேச ஜம்இய்யாவின் கிளைகள், பள்ளிவாசல்கள், ஊர் சம்மேளனங்களோடு தொடர்பு கொண்டு கூட்டாக தம் கடமையை நிறைவேற்றுவது பொருத்தமானது.

பள்ளிவாசல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லினங்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.

அஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

குறிப்பு : மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரும் ஜும்ஆத் தொழுகையின் பின் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டி, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பார்வைக்கிடுமாறு மஸ்ஜித் நிர்வாகிகளை ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கிறது. மேலும் உழ்ஹிய்யா தொடர்பான மேலதிக விளக்கங்களை உள்ளடக்கிய 'தியாகத்தை பறைசாற்றும் உழ்ஹிய்யா ஒரு விளக்கம்' எனும் கையேடு ஜம்இய்யாவின் இணையதளமான றறற.யஉதர.டம இல் மேலதிக வாசிப்புக்காக பதிவேற்றப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1438.11.09 (2017.08.02)

ஊடக அறிக்கை

சந்திரக் கிரகணம்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்; 07.08.2017 ஆம் திகதி திங்கட்கிழமை பகுதியளவு சந்திரக் கிரகணம் (Partial Lunar Eclipse) ஏற்படவுள்ளதாகவும் இதனை கொழும்பு (நேர வலையம் 5.5) நேரப்படி திங்கட்கிழமை இரவு 10:53 மணி முதல் செவ்வாய்க்கிழமை மு.ப. 12:48 மணி வரை இலங்கையில் பார்க்கலாம் எனவும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி - 1044)

எனவே கிரகணங்கள் ஏற்படும்போது வீண் பராக்குகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை கடைப்பிடித் தொழுகுமாறு நாட்டு முஸ்லிம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு கேட்டுக்கொள்வதோடு அன்றைய தினம் கிரகணம் ஏற்படும்போது கிரகணத் தொழுகையை அனைத்து மஸ்ஜிதுகளிலும் நிறைவேற்றுமாறும் சம்மந்தப்பட்டோரை கேட்டுக்கொள்கிறது.

அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத்
பிறைக் குழுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா