2022.06.08 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் உப செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் ஆகியோர் குவைத் நாட்டின் இலங்கை தூதரகத்திற்கு சென்று முன்னால் இலங்கைகான குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸிர் அல்-ஸனூஸி அவர்களின் மறைவையொட்டி இலங்கை உலமாக்கள் மற்றும் முஸ்லிம்கள் சார்பில் அனுதாபத்தை தெரிவித்ததோடு, தூதுவரின் பிரத்தியேக செயலாளர் அஷ்-ஷைக் ஃபிர்தவ்ஸ் அவர்களை சந்தித்து அனுதாபக் கடிதத்தை வழங்கி இருநாட்டு மக்களுக்கு மத்தியில் மார்க்க மற்றும் கலாச்சார ரீதியான உறவுகளை மேம்படுத்துவது பற்றியும் கலந்துரையாடினர்.