மர நடுதல் வேலைத் திட்டத்திற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்பை வேண்டி விமானப் படை அதிகாரி மற்றும் இத்திட்டத்திற்கு பொறுப்பாகவிருக்கின்ற கௌரவ எம்பிலிபிடிய ஆனந்த ஹாமதுரு ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை அதன் தலைமையகத்தில் இன்று (2022.06.02) காலை 10:30 மணிக்கு சந்தித்தது.
ஆக்கப்பூர்வமான இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயளாலர் அஷ்ஷைக் எம் அர்கம் நூராமித், உதவிப் பொதுச் செயளாலர் அஷ்ஷைக் எம்.எஸ்.ஏம் தாஸீம், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்ஷைக் எம்,எச்.எம். புர்ஹான் மற்றும் பணியாளர்களான அஷ்ஷைக் எம்.எப்.எம். ஃபர்ஹான், அஷ்ஷைக் எம்.எச்.எம். பவாஸ், எம். அஷ்ஷைக் சல்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.