அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப குழுக்களின் செயற்பாடுகளை கிளைகளுக்கு முன்வைக்கும் நோக்கில் ஜம்இய்யாவின் மாவட்ட மற்றும் பிரதேச கிளைகளின் பதவிதாங்குனர்களுக்கான நிகழ்ச்சித் தொடர் அதன் கிளைகள் விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் ஸூம் (Zoom) ஊடாக நடைபெற்றது. 2022.07.19 ஆம் திகதி இளைஞர் விவகாரப் பிரிவின் செயற்பாடுகள் பற்றிய அறிமுகமும் 2022.07.21 ஆம் திகதி ஃபத்வா பிரிவின் செயற்பாடுகள் பற்றிய அறிமுகமும் 2022.07.25 ஆம் திகதி ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான பிரிவின் செயற்பாடுகள் பற்றிய அறிமுகமும் 2022.07.27 ஆம் திகதி பிறைக் குழுவின் செயற்பாடுகள் பற்றிய அறிமுகமும் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜம்இய்யாவின் கெளரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.