2022.07.23 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் இளைஞர் வழிகாட்டிகளுக்கான பயிற்சி நெறி போகவன்தலாவை ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 14 பேர் (YOUTH MENTORS) பங்குபற்றியதோடு வளவாளர்களாக ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரக் குழுவின் இணைப்பாளர் சகோதரர் ரம்ஸி மற்றும் ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர் அஷ்-ஷைக் ஸல்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.