2021.12.06 (1443.05.01)

 

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தூதுக் குழு இன்று (2021.12.06) ஜம்இய்யாவின் தலைமையகத்திற்கு சிநேகபூர்வ விஜயமொன்றை மேற்கொன்டது. இச்சந்திப்பின் போது ஜம்இய்யாவின் செயற்பாடுகள் பற்றிய அறிமுகம் அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு இடையில் இருக்கும் ஒத்துழைப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

 

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன், திருச்சி மாவட்ட அரச காழி மவ்லவி ஜலீல் சுல்தான் உட்பட அதன் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். ஜம்இய்யா சார்பில் அதன் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல், உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் ஸூரி ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது ஜம்இய்யாவின் வெளியீடுகளும் அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

 

ஊடகப் பிரிவு