2021.12.09

 

நேற்று (2021.12.08) ஆம் திகதி விஹார மகாதேவி பூங்காவுக்கு அருகில் 'தஹம் பஹன' மற்றும் 'சுரகிமு ஸ்ரீ லங்கா' (இலங்கையை பாதுகாப்போம்) எனும் அமைப்புகளினால் ஒழுங்குபடுத்தப்பட்ட 'சகோதரர் பிரியந்த குமாரவுக்கும் அவரது குடும்பத்துக்கும் அனுதாபம் தெரிவித்தும் நீதி வேண்டியும்' ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அவர்களது அழைப்பின் பேரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு உறுப்பினர்களும் ஜம்இய்யாவின் கொழும்பு மாவட்டக் கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத் தலைவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஊடகப் பிரிவு