2021.08.21

 

எமது சமூகத்தின் கல்விக்கான பங்களிப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வகிபாகம் எனும் தொனிப்பொருளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்விப் பிரிவினால் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று 2021-08-21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 08.30 மணிக்கு Zoom ஊடாக நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் முதற்கட்டமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்பான அறிமுகமும் அதன் சேவைகள் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கலந்து கொண்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா செய்ய வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்தனர். எனினும் நேரம் போதாமையால் இக்கூட்டத்தின் தொடர்ச்சியை இன்னொரு நாளில் நடாத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

குறித்த இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.