Print this page

அஷ்ஷைக் காலிப் அலவி பின் அஷ்ஷைக் முஹம்மத் அப்துல்லாஹ் (அலவியத்துல் காதிரி) (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

ஜூலை 21, 2022

ACJU/NGS/2022/221
2022.07.21 (1443.12.21)


பேருவலை கெச்சிமலை தர்காஷரீப் அஷ்ஷைக் காலிப் அலவி பின் அஷ்ஷைக் முஹம்மத் அப்துல்லாஹ் (அலவியத்துல் காதிரி) (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அன்னார் இன்று (2022.07.21) தனது 93 ஆவது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார், அஷ்ஷைக் ஹம்ஸா பின் அப்துல்லாஹ் ஆலிம் (அலவியத்துல் காதிரி) மற்றும் அஷ்ஷைக் ஷுஐப் பின் அப்துல்லாஹ் ஆலிம் (அலவியத்துல் காதிரி) ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் அலவிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவையும், கெட்சிமலையில் நடைபெறும் புகாரி, முஸ்லிம் மஜ்லிஸையும் கடந்த 16 வருடங்களாக தலைமை தாங்கி நடாத்திய சிறப்புக்குரியவராவார்கள். முஸ்லிம் சமூகத்தை ஆன்மீக ரீதியாக வழிகாட்டுவதில் அன்னாரின் பங்களிப்பு பாரியதொன்றாகும். அன்னாரின் மகன் அஷ்ஷைக் கே.எம். ஸகீ அஹ்மத் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவ நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், முஹிப்பீன்கள், முரீதீன்கள்; மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.


أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله


(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)

 


முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onவியாழக் கிழமை, 21 ஜூலை 2022 10:20